கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் சன்னியாசி(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது முதியவர் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் […]
Category: கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியில் மேளக்காரரான புருஷோத்தமன்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா(22) என்ற பெண்ணுடன் புருஷோத்தமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேளம் அடிக்க செல்லும் இடமெல்லாம் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த புருஷோத்தமனை ஐஸ்வர்யா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக்கூறி புருஷோத்தமன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன […]
பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பூபதி, சங்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகைகள் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்தும் அதிகாரிகள் அபராதம் வசூல் செய்தனர். இவ்வாறு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மலையின் தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கி நின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை இந்திலியில் இருக்கும் டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இங்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. […]
போதை சாக்லேட் விற்பனை செய்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநறுங்குன்றம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவன் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்வதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக நண்பர்களுக்கு போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதியானது. கல்லூரி மாணவர்களும் அந்த மாணவரிடம் […]
பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் ஹேமந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதா தனது பாட்டி அஞ்சலியை பார்ப்பதற்காக பெருவம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிந்தனை செல்வன், மோகன் குமார், கல்யாணி, பழனியம்மாள், சக்திவேல் ஆகியோர் அஞ்சலியை கீழே தள்ளிவிட்டனர். இதனை பார்த்த அனிதா எனது பாட்டியை […]
கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிபாடு மையம் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகின்ற 22ஆம் தேதி நடத்த இருக்கின்றது. இந்த முகமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை […]
சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பட்டாசு வெடிக்கும் போது நீளமான பத்துக்குச்சியை பயன்படுத்த வேண்டும். கால்களில் காலணிகளை அணிந்திருக்க வேண்டும். நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது. அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு […]
மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாலகுப்பம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் அறிவழகன்(9). இந்நிலையில் அறிவழகன் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் சில வேலைகளை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டையம் பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மணிகண்டன் என்ற டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மணிகண்டனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும் சந்தியா, சௌமியா, யுவராஜ் என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மணிகண்டன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மேலும் வீட்டில் அவரது பிள்ளைகளும் மனைவியும் இருந்துள்ளனர். காலை 8 மணி ஆகியும் மணிகண்டன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை கனரக லாரி ஒன்று ஏற்றுக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லாரி நேற்று காலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியின் இடது பக்கம் முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் விதை உளுந்து கிலோவுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக லஞ்சம் ஒழிப்பு போலீசாருக்கு நேத்து முன்தினம் புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் அரசு மானியத்தை தவிர கிலோவுக்கு ரூபாய் 40 கூடுதலாக வசூலித்தது தெரியவந்துள்ளது. அதன்படி 10,468 கிலோ விதை உளுந்தை விற்றதன் மூலம் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் இவருடைய மனைவி மகேஸ்வரி நேற்று காலை அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூபாய் 64 ஆயிரத்து எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மகேஸ்வரியின் கையில் இருந்த பையைப் பிடிங்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வாழக்குழி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கம்பி வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டுமான கம்பிகளை வெட்டும் இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் நாராயணன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நாராயணனை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் கல்குவாரி கிரஷர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சரண்(20) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரண் சம்பவ […]
போலி மருத்துவர்கள் மருத்துவர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் போலி மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் பகுதியில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமலிங்கம்(60), ரமேஷ் காந்த்(53) ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் […]
கணவரை இழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புதூரில் கணவரை இழந்த 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012 -ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை, ரவி ஆகிய இருவரும் இணைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு பின்புரம் இருக்கும் மாட்டு கொட்டைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் […]
போலியான ஆவணம் தயாரிப்பு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் மேற்கு தெருவில் அண்ணாமலை(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அண்ணாமலை அதே பகுதியில் வசிக்கும் அண்ணன் தம்பியான சிவகுமார்(37), திருப்பதி(31) ஆகியோரிடம் 1 லட்ச ரூபாயை கடனாக வாங்கி தனது 2 சென்ட் இடத்திற்கான பாத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அண்ணாமலையின் மகனான அருள்(29) […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிருஷ்ணமூர்த்தியின் தாய் அமிர்தம்மாள், மனைவி கமலா, மகன்கள் தேவராஜ், தேவேந்திரன், மருமகள் ரம்யா மற்றும் ரம்யாவின் 2 கை குழந்தைகள் ஆகியோர் சென்றனர். திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து […]
மத்திய அரசு ஊழியர் என கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு கொட்டகை பகுதியில் விவசாயியான வேல்முருகன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் நிலத்தை சேர்ந்த வெங்கடேசன்(34) என்பவர் இன்னும் நிலப் பிரச்சனை முடியாத நிலையில் இங்கு எப்படி வேலை செய்யலாம்? என வேல்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் மத்திய அரசு ஊழியர் என கூறி வெங்கடேசன் வேல்முருகனை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியில் தைரியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணை அவரது தாய் சுபாமேரி சண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் கிராமத்தில் பெரியசாமி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் வரதட்சனை கேட்டு பெரியசாமி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக் கூறி பெரியசாமி உஷாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டகம் மேலன்விளை பகுதியில் கொத்தனாரான பிரேம்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சபிதா கணவருக்கு தெரியாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாலி சங்கிலி அவரது தாயாரிடம் அடகு வைக்க கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பிரேம்குமாருக்கும், சபீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சபிதாவும், உறவினர்களும் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரா சோழபுரம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கண்ணன் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியை வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 19 வயதுடைய இன்ஜினியரிங் மாணவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது புல் கட்டுகளை தலையில் தூக்கி விடுவதற்காக மாணவர் சிறுமியை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அருகில் வந்ததும் மாணவர் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லாமல் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி யுவராஜ் பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் படுகாயமடைந்து மின் கம்பியிலேயே தொங்கிக் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4 வருடங்களாக இந்த சிறுமியும், பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ராஜ்(19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றார் உடனடியாக அவரை மீட்டு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மலையடி குன்னத்தூர் கிராமத்தில் விவசாயியான நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடேசன்(30) என்ற மகன் உள்ளார். திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வந்த நடேசன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தந்தையிடம் நடேசன் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லதம்பி தனது மற்ற இரு மகன்களான பாக்கியராஜ், மகாவிஷ்ணு மற்றும் […]
போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சாராய கடத்தல்காரர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர்களையும் கண்டுபிடித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவருக்கு சாராய வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சட்டவிரோத […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட […]
மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிறு நாகலூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செண்பகம்(44) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாற்றுத்திறனாளிகளான முத்திஷ்குமார் என்ற மகனும், ரூபிணி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டதால் செண்பகம் தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். இதனால் 8-ஆம் வகுப்பு வரை படித்த […]
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமங்களில் வரலாற்று ஆய்வாளரான கோ.செங்குட்டுவன் என்பவர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கோ.செங்குட்டுவன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, செம்மணூர் கிராமத்தில் பூரணி பொற்கலை உடனுறை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிபி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்லில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஐயனார் சிற்பமும், கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காந்தி நகரில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலாஜி அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் பாலாஜி அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து […]
தம்பதிகள் ஏராளமானோர் மணி விழாவை கடந்து பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த 1977 முதல் 78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் மொத்தம் 150 பேர் கொண்ட இந்த குழுவில் தற்போது […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேவியானந்தல் கிராமத்தில் கூலி தொழிலாளியான பரசுராமன்(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவர் பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பேருந்தில் தாயுடன் ஆறு வயது சிறுமி பயணித்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறுமியின் தாயார் பரசுராமனுக்கு அருகில் தனது மகளை அமர வைத்துள்ளார். அப்போது பரசுராமன் தன்னிடம் […]
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 20,000 பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், உதவி ஆய்வாளர் போன்ற பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் நடராஜன்(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018- ஆம் ஆண்டு கடைக்கு சாக்லேட் வாங்குவதற்காக 6 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நிறைய சாக்லெட்டுகள் தருகிறேன் எனக்கூறி நடராஜன் சிறுமியை கடைக்கு பின்புறம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மாணவியின் மரண வழக்கு தொடர்பாக அவரது தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்துள்ளது.அதாவது மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை சிபிசிஐடி போலீஸ் யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பெற்றோருக்கு உத்தரவிட்டு உள்ளது.இதனைப் போலவே மாணவி […]
கள்ளக்குறிச்சி கனியாமூரில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் […]
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழி சாலை அருகே இருக்கும் கந்தசாமிபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கந்தசாமிபுரம் தனியார் பள்ளி பின்புறம் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பித்து […]
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்பு பணியின்போது சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பள்ளியில் மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்த நிலையில், […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய தந்தை இறந்து விட்ட நிலையில் இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆம் தேதி கோயிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இதன் பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இவர்களுக்கு திருமண வரவேற்பு நடை பெற்றுள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் வருகை தந்து மணமக்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்தினார்கள். இந்த நிலையில் நண்பர்கள் அறிவழகன் தந்தையை உருவப்படத்தை பேனர் அச்சடித்த கட்அவுட் […]
காதல் மனைவி தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாகுறிச்சி கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் பிரகாஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அருள் பிரகாஷ் தனது காதலியான 19 வயது இளம்பெண்ணை விருதாச்சலத்தில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு […]
கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் ஒரு பெண் தனது மகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டலத்தில் புகழ்பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 1987-ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி உள்காப்பு மற்றும் வெளிகாப்பு, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் மணி நதி அணைக்கட்டில் இருந்து பச்சை பரப்பி சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு போன்ற […]
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்து நேற்று பணிகளை தொடங்குவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதை அமைத்தால் அதன் உள்ளே […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய தலைமுறையினர் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பயந்தோ, குடும்ப பிரச்சினை காரணமாகவோ, பெற்றோர் கண்டிப்பதாலோ அல்லது காதல் தோல்வியாலோ தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் வடக்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். […]