பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள மயிலாம்பாறை காட்டுப்பகுதியில் உள்ள முட்தோப்பில் ஒரு பெண் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த பெண் சோழம்பட்டு கிராமத்தைச் சார்ந்த வெண்ணிலா என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவனான […]
Category: கள்ளக்குறிச்சி
கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் இருந்து 12 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தை சார்ந்தவர் அம்பிகாபதி-சுலோச்சனா தம்பதியினர். இவர்கள் சின்னசாமி நகரில் இருக்கும் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு கும்பாபிஷேக விழா முடிந்ததும் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் நகைகள் காணாமல் போனதை […]
வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் சதீஷ்குமார்-கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு திருமணம் நடக்கும்போது சதீஷ்குமாரின் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை கலைவாணியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதன்பின் தற்போது மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். அத்துடன் சதிஷ்குமார் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 2 லட்சம் ரூபாயை கலைவாணியின் பெற்றோர் தர வேண்டும் இல்லையென்றால் வேறு […]
சிறுமி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவரை அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும் கடத்திச்சென்ற தமிழ்செல்வனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கணவன் இறந்த சோகத்தில் தாய் மற்றும் மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அவருடைய கணவர் திடீரென உயிரிழந்துள்ளார். கணவன் இறந்ததால் திவ்யஸ்ரீ கடுமையான மாணவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து திவ்யஸ்ரீ தனது மகளுடன் சென்னை தாம்பரத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தந்து அத்தை மற்றும் நாத்தனார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
கணவர் இறந்த சோகத்தில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்தவர் தாமோதரன்-திவ்யா லக்ஷ்மி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் சாலிக்கியா என்ற ஒரு மகள் இருந்தார். தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தாமோதரன் இறந்த மன வேதனையில் திவ்யா லக்ஷ்மி அடிக்கடி அழுது கொண்டே இருப்பார். இதனால் உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால் கணவரை மறக்க […]
ரேஷன் கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தின் முன்பு நேற்று பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஸ்கேனிங் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது கைரேகை பதிவு மூலம் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டது. பயோமெட்ரிக் இயந்திரம் 2ஜி […]
அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து கேரளா நோக்கி கெங்கராஜன் என்பவரால் லாரி ஓட்டி வரப்பட்டது. தியாகதுருகம் புறவழிச்சாலையில் அந்த லாரி வந்தபோது எதிரே வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்பவருடைய கார் மீது மோதியது. பின்னர் அந்த லாரி எதிரே வந்த திருக்கழுக்குன்றத்தை சார்ந்த மாணிக்கம், ராணி, அமிர்தம்மாள் ஆகியோர் பயணித்து வந்த கார் மீது மோதியது. இந்த […]
போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சிறைக் கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் கிடைத்த தகவலின் படி சின்னசேலம் போலீஸ் ஏட்டுகள் முஸ்தபா, சிவராமன், சுப்பிரமணியண் ஆகியோர் நாமக்கல் கிளை சிறையில் இருந்த சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் ஆகியோரை விசாரணை செய்வதற்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளார். ஆத்தூர் பஸ் நிலையம் வந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கைதி சக்கரவர்த்தி […]
டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவச்சேரி கிராமத்தை சார்ந்தவர் ஞானபண்டிதன் இவருடைய மகன் ரவி என்பவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்து ஓர் ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். ரவி அனுஷாவின் தாய் வீட்டிற்கு சென்று அவரை விட்டுவிட்டு மூன்று நாட்களுக்குப் பின்பு அனுஷாவை காண்பதற்காக மஞ்சப்புத்தூர் […]
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]
ஓடிக்கொண்டிருந்த பஸ் கண்ணாடி மீது கல்லை வீசியதால் திருக்கோவிலூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை அரசு பஸ் திருக்கோவிலூர் பகுதியில் இருந்து நாசர்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தது அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் கல்லை எடுத்து பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் கூச்சலிட்டதையடுத்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கிராமத்தில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, பின் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியிடம் வீரபத்திரன் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் […]
கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானம் அடைந்ததாக கருதி மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாம்பாள். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது வீட்டில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கும் சகுந்தலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்தது […]
கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 15 வயதில் நாவுக்கரசி என்ற மகள் உள்ளார். நாவுக்கரசி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நாவுக்கரசியும் அவரது சகோதரி கவியரசி மற்றும் சகோதரர் தேவா ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். […]
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், கோபிநாத் மற்றும் ரகுநாதன் என்ற மகன்களும் உள்ளனர். அதோடு சுகந்தி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் […]
கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் துறையினருக்கு அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் வந்துள்ளது. தகவலின்பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்களை பார்த்தனர்.அவர்களிடம் விசாரிக்கச் சென்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த […]
நியாய விலைக்கடையில் வாங்காத பொங்கல் தொகுப்பு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதோடு 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொராசக்குறிச்சி கிராமப்பகுதியில் […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அதிகாலையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் கார் ஒன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியா(43) அவருடைய மகன் அபிஷேக்(16) ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரியாவின் கணவர் சௌந்தர்ராஜன் மற்றும் மகள் ஈஸ்வந்தினி(18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த […]
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரம் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சவுந்தர்ராஜன்(45)- பிரியா(43). இத்தம்பதியருக்கு அபிஷேக்(16) என்ற மகனும் எஸ்வந்தினி(18) என்ற மகளும் உள்ளனர்.எஸ்வந்தினி தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடுபத்தினர் அனைவரும் நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது […]
விளையாடும் போது அதிக அளவு மாத்திரையை உட்கொண்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குமரேசன்- கனிமொழி.இத்தம்பதியருக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு கனிமொழி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை எடுத்து அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதை பார்த்து […]
தாய் ஒருவர் சமையல் செய்துகொண்டிருந்த போது குழந்தை சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – கனிமொழி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கனிமொழி தன்னுடைய குழந்தையை விளையாட வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மாத்திரைகளை எடுத்து குழந்தை அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. ஆனால் கனிமொழி கவனிக்காமல் சமையல் வேலையில் மும்முரமாக இருந்துள்ளார். இதையடுத்து […]
கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் ஜோதிமணி-சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் 5 பேர் இணைந்து ஜோதிமணியின் வீட்டு கதவை தட்டிய சத்தம் கேட்டு வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் […]
அதிகாலையில் வியாபாரி வீட்டில் கத்தி முனையில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் ஜோதிமணி-சாந்தா. இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் ஜோதிமணியின் வீட்டுக்கதவை தட்டி உள்ளனர் . அந்த சத்தம் கேட்டு வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் தந்தை நந்தகோபால் எழுந்து […]
சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் சிக்கி 600 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருத்தபிள்ளை, பழனி, அஞ்சலை. இவர்கள் மூவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரிகரை ஓடை அருகே பட்டி அமைத்து அதில் 600க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அடைத்து வளர்த்து வந்தனர். தற்போது சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் […]
குட்டையில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் பாண்டியன்குப்பத்தில் உள்ள ஒரு குட்டையில் 40 வயது நிரம்பிய ஆண் நபர் தவறி விழுந்ததை கவனித்த ஊர்மக்கள் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த வீரர்கள் குட்டையில் விழுந்த நபரை இரண்டு நாட்கள் தேடி வந்த நிலையில் நேற்று அவர் பிணமாக மிதந்ததை கண்டு பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர். இதனைதொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவலியாங்குளம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் தனது மாமனாரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவுவாயிலின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய இரும்பு கேட்டை அவர் தொட்டார். […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் நேற்று காலை அவரது மாமனார் வீட்டிற்கு அருகிலுள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவு பகுதியிலிருந்த பழைய இரும்பு கதவை தொட்ட போது எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
கள்ளக்குறிச்சியில் பழனிசாமி என்பவர் 5 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சின்ன சேலத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பழனிசாமி (வயது 38) என்பவர் அச்சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவளது தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தவுடன் நடந்ததை கூறியுள்ளார். மகள் சொன்னதைக் […]
அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு பிரகதீஸ்வரன் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ்வரன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகதீஸ்வரன் தனது தந்தையுடன் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் பிரகதீஸ்வரன் மீது மோதி விட்டு நிற்காமல் […]
குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு 9 வயதில் சமீரா என்ற பெண் குழந்தையும் 7 வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று சமீராவும் யோகேஷும் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். குளத்தில் […]
வரதட்சணை கொடுமையால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு 4 வயதில் சூர்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலாவை அவரது கணவர் கணேசன் , மாமனார் சாமிநாதன் , மாமியார் கல்யாணி மற்றும் கணேசனின் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை […]
காலராவுக்கு தமிழகத்தில் ஒரு நபர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வசிப்பவர் கண்ணன்(60). இவருக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் […]
கள்ளக்குறிச்சியில் கணவனை இழந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செல்வம்- கண்மணி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு 11 வயதில் விஷ்ணு என்ற மகனும் 9 வயதில் சிவனேசன் என்ற மகனும் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்வம் இறந்துவிட்டார். இதையடுத்து கண்மணி திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
கள்ளக்குறிச்சி அருகே தாய்-மகள் தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன்-லலிதா. லலிதா அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்தார் . இவர்களது மகள் 18 வயதுடைய தர்ஷினி .இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். பாலமுருகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக உயிரிழந்தார். பாலமுருகனின் இறப்பிலிருந்து அவருடைய மனைவியும் மகளும் மீள முடியாமல் தவித்துள்ளனர் . […]
இருசக்கர வாகனம் மோதி மினி பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மினி பஸ் டிரைவராக உள்ளார்.சம்பவத்தன்று வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேல்முருகனின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேல்முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
நீச்சல் பழகுவதற்காக கிணற்றுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-அய்யம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும் தனுஷ் என்ற மகனும் உள்ளனர். தனுஷ் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக தனுஷ், பிரியதர்ஷினி மற்றும் மேலும் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து கிணற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது தனுஷிற்கு […]
ஆற்றை வேடிக்கை பார்த்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49). இவருக்கு அனுராதா (41) என்ற மனைவியும், மோகன்ராஜ்(19), அன்புமணி(14) என்ற 2 மகன்களும் உள்ளனர்.கோவிந்தராஜ் இறந்துவிட அனுராதா அவரது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார்.மோகன்ராஜ் ஒரு தனியார் கல்லூரியில் சுகாதார படிப்பு படித்து வருகிறார். அனுராதா குடும்பத்தினர், உறவினர்களுடன் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இக்கோவிலுக்கு அருகில் […]
வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்-தீபா.வெங்கடேசன் கூலித்தொழில் செய்து வருகிறார் .நேற்று முன்தினம் தீபாவை வெங்கடேசனின் தாயார் உண்ணாமலை வீட்டு வேலை செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த தீபா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்த போது அங்கு நஜீரா பானு என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இதனால் திருமணம் செய்யவும் […]
தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதால் புதுமண தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு செல்லூர் என்ற கிராமத்தில் 25 வயதுடைய ராமர் என்பவர் வசித்துவருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவி நதியா என்பவருடன் தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ராமர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊருக்கு […]
சொத்து தகராறில் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் மனைவி […]
கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் பெரியாப்பிள்ளை. இவர் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கும் முதியோர் , விதவை உதவித்தொகை பெற்றுத்தரவும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால் எடுத்தவாய்நத்தம் கிராம மக்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவையின் மாநிலத் தலைவரான ராமநாத அடிகளார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியாப்பிள்ளையை பணிநீக்கம் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் பிச்சையெடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடுத்தாவை நத்தம் கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர் பெரியாபிள்ளை முதியோர் விதவை உதவி தொகை பெற்று தர லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாங்கிய லஞ்ச பணத்தை திரும்ப வழங்க கோரியும் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரியும் […]
சண்டை காரணமாக தன் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் […]
குழந்தை இல்லாத வெறுப்பில் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . உளுந்தூர்பேட்டையில் உள்ள ப.கிள்ளனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் வெங்கடேசன்(வயது 31)-கஸ்தூரி(29) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் கஸ்தூரி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆட்டு சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி உள்ளாக்கினார். உளுந்தூர் பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறாமல் இருந்த ஆட்டுசந்தை இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் செம்பறி ஆடு, குறும்பாடு, வெள்ளாடு, மேச்சேரி ஆடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகனின் குடி பழக்கத்தை திருத்துவதற்காக மிச்சம் பிடித்து விட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தென் தொரசலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு வீரமணி என்ற மகன் இருக்கிறார். தொழிலாளியான வீரமணிக்கு திருமணமாகி சசி என்ற மனைவியும், கிஸ்வந்த், அஸ்வந்த் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். வீரமணியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பதால், அவரின் தாய் […]
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கல்லூரி மாணவியை திருமணம் செய்த தொடர்பான வழக்கில் மாணவி சௌந்தர்யா கணவர் பிரபுயுடன் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எ.ல்.ஏ திரு. பிரபு தியாகத் துர்க்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காததால் அவரை வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதை கண்டித்து சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை எனவும் புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் […]