ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த இருளர் இன மக்களான 7௦ நபர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 100 நாள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஊராட்சி பகுதியில் இருக்கும் இந்திரா நகரில் 70-க்கும் அதிகமான இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகின்றனர். அதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கலெக்டரிடம் […]
Category: காஞ்சிபுரம்
குடும்ப பிரச்சனை காரணத்தினால் கணவன் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி காமராஜர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அணு என்பவரை காதலித்து ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அணுவுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி […]
குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்ப்பால் பற்றிய கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாகனம் மூலமாக தாய்ப்பால் ஊட்டுதல் உறுதி செய்தல் பொறுப்பினை குறித்த விழிப்புணர்வை பிரச்சாரம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்பின் […]
கோழி கடை வியாபாரி ஒருவர் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்ததால் காவல்துறை அதிகாரி ‘ஷூ’ காலினால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்து இருக்கும் பெரும்பாக்கம் பகுதியில் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி பொருட்களை வாங்குகிறார்களா என கண்காணிக்க காவல்துறையினர் ஒருவர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே இருந்த கோழி கடைக்கு சென்ற போது ஊழியர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் வேலை பார்த்து […]
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 3/4 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 8 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணனின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு […]
அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாதத்தில் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாதம் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அதில் பல பகுதிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதன்பின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் முகாமில் மாற்றுத்திறனாளிகள் தேவையான தாழ்வான […]
வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டிக்காரத் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 3/4 பவுன் தங்க நகை மற்றும் 25,00,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்றவர்களை தேடும் பணியில் […]
சுங்கவாடி அருகில் வேர்க்கடலை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவரை கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்கவாடி அருகாமையில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சுங்கவாடி அருகில் நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் […]
உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு படப்பையில் இருக்கும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பணிகளை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து இருப்பில் இருக்கும் 1, 776 பெட்டிகளில் 50 சதவீதத்துக்கும் மேலாக தூய்மை பணி நடைபெற்றுள்ளது. […]
மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எருமையூர் பகுதியில் அமைந்திருக்கும் எம்.சேண்ட் கிரஷரில் வடமாநிலத்தை சேர்ந்த அபிநய் 2 வாரத்திற்கு முன்பாகவே வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் பிரசாந்த் அருகில் இருக்கும் தொழிலாளர் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது அபிநய் எந்திர கன்வேயர் பெல்ட்டுக்கு கீழ் […]
ஆட்டோவில் 1 1/2 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் அருகில் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களிடம் அவர்கள் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஆட்டோவை சோதனை செய்துள்ளனர். அதன்பின் சோதனையில் ஓட்டுநர் சீட்டுக்கு கீழே பிளாஸ்டிக் […]
தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்கும் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் குறைகேட்பு ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் தேசிய தூய்மைப்பணி ஆணையர் சார்பாக தமிழ் நாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அதன் […]
முதலமைச்சர் சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதிக்கின்ற எந்த திட்டங்களையும் அனுமதி வழங்கமாட்டார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கான கருத்து கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்கும் மற்றும் அரசாங்கத்தால் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை கண்டறிவதற்கும் […]
கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பாக 6 வயது மற்றும் 19 வயது வரை இருக்கும் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் போன்றோர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி வருகின்ற 31-ஆம் தேதி வரை கொரோனாவின் வழிகாட்டு விதி முறைகளை கடைபிடித்து மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் படப்பை அருகாமையில் […]
கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத் தரகரை கொல்ல முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சந்தவேலூர் மேட்டு தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத் தரகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய நண்பர் காமராஜர் பகுதியில் வசிக்கும் சிவராஜிடம் அவசர தேவைக்காக அய்யப்பனை 5 பவுன் தங்க நகையை வாங்கியுள்ளார். அதன்பின் சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காத காரணத்தினால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அய்யப்பன் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பக்தர்கள் […]
பெண் ஒருவரிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளம்பி ஏரிக்கரை பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மாடு மேய்த்து விட்டு வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மலரின் வாய் மற்றும் கழுத்தை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து மலர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பிச் […]
அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22-ம் வருடத்திற்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றுள்ளது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22 ஆம் ஆண்டில் குறுகிய கால பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடை பெற்றுள்ளது. இந்த விழாவுக்கு அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளரும் முதல்வருமான உமாபதி வரவேற்றுள்ளார். இதனை அடுத்து இந்த விழாவிற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் வேளாண்மை இயக்குனருமான லோகநாதன் […]
சீட்டு கம்பெனியில் போட்ட சீட்டு பணத்தையும், செக்யூரிட்டிகாக கொடுத்த சொத்து பாகப்பிரிவினை பத்திரத்தையும் திருப்பி தராமல் கேட்கப் போனாள் மிரட்டுவதாக ஒருவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த சீட்டு கம்பெனியில் இம்மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பலரும் சீட்டு செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து பெரிய காஞ்சிபுரம் ராயன் குட்டை பள்ளத்தெருவில் வசிக்கும் டிராவல்ஸ் உரிமையாளர் […]
போக்குவரத்தை சீர் செய்வதற்காக இருசக்கர ரோந்து வாகனத்தை காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்ய பொன்னேரி கரையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை, அதைப்போல் பெரியார் நகர் முதல் மூங்கில் மண்டபம் வரை இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலைகளில் தன்னிச்சையாக நிறுத்துவதை தடுப்பதற்காக புதிய இருசக்கர போக்குவரத்து ரோந்து வாகனங்களை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் கொடியசைத்து […]
பள்ளிக்கு செல்லும் வழியில் மதுபான கடை இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கு பிரச்சனை வருவதாக கூறி கடையின் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீரநல்லூர் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமானவர்கள் மதுபான கடையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கடையை மூட கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் […]
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் சூப்பிரண்டு சுதாகர் அறிவுறுத்தி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதன் படி பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி, கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டு தற்போது தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளான சுதாகர், மதிவாணன், தட்சிணாமூர்த்தி, புருஷோத்தமன் போன்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரை தொடர்ந்து […]
அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சி சார்பாக கண்டிகை கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு குழந்தை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுகாதார […]
தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்கு வார்டு வாரியாக 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்களை கலெக்டர் ஆர்த்தி தனது அலுவலகத்தில் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற போகும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக இம்மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சி வார்டு வாரியாக அமைக்கப்பட்டிருக்கும் 1292 வாக்குச்சாவடிகளில் வரைவு பட்டியலை தனது அலுவலகத்தில் வைத்து கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அதை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் […]
டிராக்டரில் வைக்கோல் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது மின்கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் குப்பன் என்பவரின் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென உயர் அழுத்த மின்கம்பி டிராக்டர் டிப்பர்யில் இருந்த வைக்கோலின் மீது உரசியதால் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கே […]
குடிசை மாற்று வாரியத்தின் 706 வீடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் திட்ட பகுதிகளில் 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு […]
கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்களுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதற்கான பிரச்சாரத்தை துவக்க விழாவை முதலமைச்சர் துவைக்கி வைத்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பதாகையில் கையொப்பமிட்டு பொதுமக்களுக்கு முக கவசம், கொரோனா தொற்றின் விழிப்புணர்வு பற்றியும் மற்றும் கபசுர குடிநீரையும் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இம்மாவட்டத்தின் பேருந்து நிலையத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள […]
கொரோனா பரவல் காரணத்தினால் கோவில்களில் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணத்தினால் பல தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதில் கோவில்களில் ஊர்வலங்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்தக்கூடாது எனவும் நாள்தோறும் வழக்கமாக நடைபெறும் பூஜைகளுடன் பொதுமக்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடித் திருவிழாவையொட்டி கோவில்களில் அதிகமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். இதனால் கொரோனா […]
தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மருதூர் பகுதியில் தி.மு.க. பிரமுகரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழன், தினகரன் என்ற 2 மகன்களும் திவ்யபாரதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சண்முகம் சாலவாக்கம் காவல் நிலையத்திலும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இந்நிலையில் […]
குடும்பத் தகராறில் மனைவி கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டி தெருவில் ஆட்டோ டிரைவரான நவ்ஷத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நவ்ஷத் மது மற்றும் கஞ்சா பழக்கங்களுக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடன் தொல்லையும் இந்த தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சோபனா என்ற மனைவியும், அக்ஷயா என்ற மகளும், கோவேஷ் சென்ற மகனும் இருக்கின்றனர். தற்போது கொரோனா விடுமுறை கால கட்டத்தில் அன்பழகன் தனது வீட்டிலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி […]
சிறுவன் தன்னைக் கடித்த பாம்பை அடித்து அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாம்பேட்டை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏழு வயதுடைய தக்ஷித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென கொடிய விஷமுள்ள பாம்பு ஓன்று இந்த சிறுவனை கடித்து விட்டு ஓடியது. இதனால் அந்த சிறுவன் அதனை துரத்தி சென்று […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகானாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு.இவரது மகன் தர்ஷித் (7). அதே பகுதி யில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். 16ம் தேதி அருகில் உள்ள வெள்ளகேட்டு கிராமத்தில் தன் பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது, தன்னை ஏதோ கடிப்பது போன்று உணர்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்துள்ளான். அடித்த பின், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு […]
ஆட்டோ டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்காளிமேடு பகுதியில் ஆட்டோ டிரைவரான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த ஆட்டோ டிரைவரான அன்பழகனிடம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மணி என்பவர் திடீரென தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். மேலும் மணி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அன்பழகன் காவல் நிலையத்தில் […]
ஆட்டோ ஓட்டுநரை தரக்குறைவாக பேசி தாக்கிய காரணத்தினால் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் அழகப்பன் என்ற ஆட்டோ ஓட்டுனர் வசித்து வருகிறார். அப்போது அப்பகுதியில் வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சத்யா நகரில் வசிக்கும் கற்பக மணி என்பவர் ஆட்டோ ஓட்டுனர் அழகப்பனை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். மேலும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடிகளை கட்டையால் உடைத்து சேதப்படுத்தி […]
சட்ட விரோதமாக மதுபாட்டிகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழம் தோட்டம் கிராமத்தில் வசிக்கும் முத்துவேல் மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் […]
தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்காவை மினி வேனில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவிலிருந்து பூந்தமல்லிக்கு தடைசெய்யப்பட்டிருந்த குட்காவை வாகனத்தில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேனை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அந்த வேனை […]
தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதனால் கோபம் அடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரஹ்மானியா பகுதியில் பிரம்மாயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் எதிர் பக்கத்தில் உள்ள முட்புதரில் தீ வைத்து எரிந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து […]
மன உளைச்சலால் வாலிபர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு மாங்காடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் வைத்து பூச்சி […]
சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ கவிழ்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தன்னுடைய மனைவி லட்சுமியுடன் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுங்கச்சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது முன்புறத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இவரது ஆட்டோ நிலைதடுமாறி லாரி மீது […]
சாலையை கடக்க முயற்சி செய்த பெண் ஒருவர் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை பகுதியில் அமைந்திருக்கும் பெற்றோல் நிலையத்தில் தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக மறைமலை நகர் பகுதியில் அமைந்திருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பத்மா மீது […]
கள்ளக்காதல் தகராறில் திருமணமாகாத கல்லூரி பேராசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அனிதா தனது அறையில் கடந்த 9-ஆம் தேதி மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
சாலைகள் அமைக்கும் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வண்ணம் இரு வழி சாலை மற்றும் நான்கு வழி சாலைகளை மாற்றுவதற்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலைகளை விரிவுபடுத்த வனத்துறையின் அனுமதி தேவைப் படுகின்றன என்பதால் அதற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து பணிகளை விரைவுபடுத்த […]
திருமணமாகிய ஒருவர் 17 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வினோபா பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அடுத்து இம்மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
14 வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்து மேடு தெருவில் வசிக்கும் அசாருதீன் என்பவர் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் […]
16 வயது சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலுசெட்டி சத்திரம் பகுதியில் 16 வயதுடைய சிறுமி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது செவிலிமேடு மிலிட்டரி கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது. […]
கள்ளக்காதல் காரணத்தால் பேராசிரியர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பகுதியில் அனிதா என்பவர் வசித்த வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி அவரின் வீட்டின் முன்புறத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
தொடர்ந்து பல குற்ற சம்பவங்களை செய்து வந்த 2 நபர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் லோகநாதன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைப்போல் பல கொலை மற்றும் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிகிருஷ்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் இம்மாவட்டத்தில் தொடர்ந்து 2 பேரும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இதை அறிந்த சூப்பிரண்டு […]
சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மீது கார் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பகுதியில் மரியாஜ் ஜெனிபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஸ்கூட்டியில் சாலையில் கரசங்கள் கலனி அருகாமையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் திருப்பத்தில் சென்று கொண்டிருக்கும் போது படப்பையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மின்னல் வேகத்தில் ஸ்கூட்டி மீது மோதியுள்ளது. இந்நிலையில் ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியாஜ் […]
பொருட்களின் விலையை குறைக்க கூறி 100-க்கும் அதிகமான கட்சியாளர்கள் சைக்கிள் ஊர்வலம் நடத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலை நாளுக்கு நாள் அதிகமாவதால் கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை ஏற்றத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமையல் கேஸ் மற்றும் பெட்ரோல்களின் விலைகளின் உயர்வு காரணமாக வைத்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று […]