கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் ஜெயராம்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயராம் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஜெயராம் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயராம் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் […]
Category: கன்னியாகுமாரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிற்றாறு, பெருஞ்சாணி, பேச்சுப்பாறை போன்ற அணை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை குலசேகரம், திருநந்திக்கரை, திற்பரப்பு, சுருளக்கோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் மழையின் காரணமாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மதியத்திற்கு மேல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் கோவையார், பேச்சுப்பாரை, பெருஞ்சாணி போன்ற இடங்களில் கன மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தது. மேலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக பாறை கற்கள், எம்சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதிக பாரத்தில் எம்சாண்ட் மணலை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்றது […]
கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னைநகர் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான 63 சென்ட் நிலம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அறநிலை துறை வட்டாட்சியர் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் நில அளவையர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு அதில் அறிவிப்பு பலகை வைத்தனர். […]
உறவினர் வீட்டில் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு கைதகம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரோன் (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்ற போது சாரோன் யாருக்கும் தெரியாமல் 7 பவுன் தங்க நகையை திருடிவிட்டார். இதுகுறித்து அறிந்த உறவினர் பொதுமக்களின் உதவியோடு சாரோனை சுற்றி வளைத்து பிடித்து […]
நில மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் வாழவிளை பகுதியில் மரிய ரத்தினபாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மரிய ரத்தினபாய்க்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் லாரன்ஸ், மேரி ஆகியோர் கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக முத்திரையை போலியாக தயார் செய்து, கையெழுத்து போட்டு அனுபவ சான்றிதழ் தயாரித்தனர். இதனை அடுத்து அந்த சான்றிதழை பயன்படுத்தி சார்- பதிவாளர் அலுவலகத்தில் […]
நகை வாங்குவது போல நடித்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூசாஸ்தான்விளை பகுதியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நகைகளை திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் அருகே அமைந்துள்ளது. அந்த கடையில் கருணாநிதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாநிதி கடையில் இருந்த போது நகை வாங்க சென்ற 2 வாலிபர்கள் ராசிக்கல் கேட்டுள்ளனர். இதனால் ராசி கல்லை எடுப்பதற்காக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மினி பேருந்தின் ஓட்டுனர் சிபின் என்பவர் சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சந்ததிகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் […]
அரசு பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து நேற்று அதிகாலை கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கேரளப் பகுதியான காராளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட 12 பேர் […]
விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் வாழைத்தோட்டம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், மிஸ்ரிதா பிரிதுயூஷி என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஜா தனது மகளுடன் நேற்று காலை வீட்டிற்கு அருகில் இருக்கும் சப்போட்டா மரத்தில் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீஜா துணி […]
கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை பகுதியில் இருக்கும் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த […]
காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வீராளி காட்டுவிளை பகுதியில் ஜாய்ஸ் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது “எனது கணவரான ஜேக்கப் கடந்த மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின் மறுநாள் அவர் திருப்பூர் சென்றடைந்ததாகவும் 10 நாட்களில் ஊருக்கு […]
13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரேனிபுரம் பகுதியில் ஜான் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2009- ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மரியா அந்தோணி என்பவர் ஜான் சதீஷ்குமாரை 2 பேருடன் இணைந்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதித்த போலீசார் மரிய அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மரிய அந்தோணி […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் வெட்டுக்காட்டுவிளை பகுதியில் நகை செய்யும் தொழிலாளியான சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுனில்குமாருக்கும், சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சுனில்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனில் குமாரின் […]
திறந்தவெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில் புரோட்டா கல்லை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திறந்தவெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு செய்த போது ஹோட்டல்களின் வெளியே […]
தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடகூர் மேல தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 15 வயதுடைய ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதால் தங்கம் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்காமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ரம்யாவை அவரது […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மினி பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாகூர் பகுதியில் பிளம்பரான ஆனந்த்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜிலா(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் சுசிலா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருசடி விளாகம் பகுதியில் கூலி தொழிலாளியான கிப்சன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷைனி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கிப்சனின் தாய் டெல்பி(65) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்பி தனது மருமகளுடன் மார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். ஒரே இருக்கையில் மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். இந்நிலையில் பேருந்து வெட்டுமணி நிறுத்தத்தில் நிற்க முயன்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் டெல்பியின் கழுத்தில் கிடந்த 2 1/2 […]
பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைமன் நகரில் தனியார் நிறுவன மேலாளரான சங்கரநாராயணன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்த சங்கரநாராயணன் உள்ளே […]
மருந்து கடைகளில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களும், வாலிபர்களும் போதை, கஞ்சா, புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின் படி போலீசார் காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய முக்கிய பகுதிகளில் இருக்கும் மருந்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் ஏதேனும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்குன்று பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டிற்கு சென்ற ஒரு பெண் தாலி தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்துள்ளார். அப்போது அந்த பெண் கூறியதை கேட்டு தங்கம் 30 பவுன் நகையை பூஜையில் வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தங்க நகைகளை துணியில் […]
பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து நேற்று மாலை 6 மணிக்கு குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோவாளை புதூர் அருகே சென்ற போது என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பெருந்தை நிறுத்திவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதற்கிடையில் அலறி சத்தம் போட்டபடி பயணிகள் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலு மூடு பகுதியில் கனகராஜ்-அனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டதால் அனிதா தனது மகன்களான அல்ஜின் ஷால்(22), ஆண்ட்ரோ ஷால் ஆகிருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ படித்து முடித்த அல்ஜின் ஷால் வேலை கிடைக்காததால் தற்போது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக […]
ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே. ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்தாமணி தனது கனவை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். கடந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி நடுத்தெருவில் சிதம்பரம் பிள்ளை(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாய் பார்த்து கொள்ளுமாறு முதியவரிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் […]
கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளத்தின் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது. அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் சிகர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை அடுத்து பரிவேட்டை மண்டபத்தை அடைந்த அம்மன் பாணாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதற்கு தீர்வு காண போலீசாரும், […]
பேன்சி கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ஷராம்(45) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவிட்டு பக்ஷராம் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 80 […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போன மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய மாணவி […]
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 ஹோட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்வதற்காக ரசம், மோர், சாம்பார் ஆகிவற்றை கட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று இரவு திருவட்டார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் திடீரென மழை பெய்தது. இந்நிலையில் ஆற்றூர், மாத்தார், மாத்தூர், சித்திரன்கோடு, இட்டகவேலி, புலியிறங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்கள் கழித்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பாலவிளை பகுதியில் தொழிலதிபரான எட்வின்சன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவரது தொழில் நிறுவனம் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 28 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எட்வின்சன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட எட்வின்சன் “உன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்” இதனை […]
பேருந்து சக்கரத்தில் சிக்கி நர்சின் தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் பகுதியில் ஜோசப்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோசப்பின் மகள் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோசப் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் முத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. இதனையடுத்து அவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கேரளாவிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை […]
வெடி விபத்தில் வியாபாரி உள்பட 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி திருவிழா தொடங்கியதால் கோவில் வளாகத்தில் தற்காலிகமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த போது வாணவேடிக்கை பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நிலையில் பட்டாசுகள் மேல்நோக்கி செல்லாமல் திடீரென சரிந்ததால் ஆலய வளாகத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் […]
நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கன்னியாக்குளம் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 76 ஆயிரத்து 500 ரூபாய் கடன் வாங்கி தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த புது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றதாக மதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை […]
கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மறவன்குடியிருப்பு பகுதியில் சோனியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சோனியா ஜெயராஜ்(38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அபினாஷ், அபி நிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேனம்விளை பகுதியில் பால் மகேர் பாலால் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் சிவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவருக்கும் சென்னையில் ஐடி ஊழியராக வேலை பார்க்கும் ஆர்த்தி சுரேஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்ற நிலையில் மண்டபத்தில் வைத்திருந்த ஒரு பேனர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது மணமகனின் நண்பர்களின் சார்பில் 90ஸ் கிட்ஸ் என்ற தலைப்பில் ஒரு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடியப்பட்டினம் மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் சங்கத்தில் இருக்கும் 250 உறுப்பினர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். உறுப்பினர்கள் சங்கத்திற்கு வழங்கிய 4 சதவீத பணத்தை வங்கியில் வரவு வைப்பது வழக்கம். ஆனால் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சங்க பொருளாளரின் கையெழுத்தை போலியாக போட்டு 80 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் பணத்தை […]
ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வடக்கூர் அம்மன் கோவில் தெருவில் முருகன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதமே ஆன மாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலை தொடர்பாக குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற முருகன் மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்த ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் […]
ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அஜித் குமார்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி மது போதையில் மாமனார் வீட்டிற்கு சென்ற அஜித்குமாரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்தில் அஜித் குமார் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2 நாட்களாக கதவு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பத்திர எழுத்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவில் முரளி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி மோட்டார் சைக்கிளில் பெரியவிளை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் முரளி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜ் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் அதிகமாக கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் பேருந்து நிலையத்திற்குள் நீண்ட நேரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் பேருந்து நிலையத்திற்குள் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாலக்குடி ஆற்றில் பாய்கிறது. மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று புகைப்படம் […]
கருங்கல் அருகே ராட்சத குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் ஆறு போல ஓடியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குளித்தலை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கான குழாய்கள் ஐரேனிபுரம், சடையன்குழி, கிள்ளியூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே மூலம் பதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்க முடியாமல் அடிக்கடி உடையும் சம்பவங்கள் நடக்கின்றது. இந்த […]
இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்விற்கான விண்ணப்பத்தை […]