வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் புது கிராமம் பகுதியில் கொத்தனாரான பிரவீன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு […]
Category: கன்னியாகுமாரி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலியக்காவிளை பகுதியில் மீன் வியாபாரியான யகோவா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி(26) என்றால் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யகோவா தனது மனைவி மற்றும் மகளுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]
நூதன முறையில் செல்போனை திருடி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி(21) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கரி நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகள் ரயிலில் செல்வது வழக்கம். நேற்று ரயிலில் சிவசங்கரி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் அருகில் ஒரு வாலிபர் […]
அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய பறம்புவிளை பகுதியில் மது(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மது வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த மதுவை மார்த்தாண்டம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் […]
கோழிகளை விழுங்கிய பாம்பை வாலிபர்கள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விலை சங்கிலிகோணம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் பின்புறம் தனித்தனியாக கூண்டில் வைத்து கோழி மற்றும் முயல்களை வளர்த்து வருகிறார். இதனையடுத்து நேற்று காலை சுரேஷின் மகன் கோழி கூண்டை திறந்துள்ளார். அப்போது கூண்டில் மலைப்பாம்பு ஒன்று 4 கோழிகளை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும் 2 கோழிகள் இறந்து […]
பார்சல் அனுப்பாத கூரியர் நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் 39 ஆயிரத்து 998 ரூபாய் மதிப்பிலான துணிகளை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பார்சல் எதுவும் வரவில்லை. இதனால் சுரேஷ்குமார் வக்கீல் மூலம் அந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விலியவிளாகம் பகுதியில் உன்னிகிருஷ்ணன் நாயர்-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனகா என்ற மகளும், ஆதித்யா தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். அனகா கல்லூரி படித்து வருகிறார். ஆனால் ஆதித்யா தேவ் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆதித்யா தேவ் அனகாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குலசேகரம் சாலையில் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞாறான்விளையில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் திருமாகுல சிங்கம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி(55) என்ற மனைவியும், 5 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருமாகுல சிங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் ரேஷன் கார்டை அடகு வைத்து மது குடித்ததால் மேரி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் […]
தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் சந்தை அருகே பாறையன்விளை பகுதியில் ஹோட்டலில் வேலை பார்க்கும் முகமது காஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இதில் முகமது காஜா வேலைக்காக திருச்சியில் தங்கி இருக்கிறார். இவருடன் செய்யது அலி பாத்திமாவின் தம்பி பயாஸ் அகமதுவும் தங்கி இருந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு […]
பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலயா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந்நிலையில் நேற்று இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் […]
வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா என்ற பெண் தன்னுடைய உறவினர்களுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் என்னுடைய கணவர் 12 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டதாகவும், நான் என் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். அதன்பிறகு என்னுடைய மருமகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என் மகனின் பள்ளி தோழன் ஒருவர் கூறினார். […]
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றியோடு அருகே கன்றுபிலாவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி எல்சிபாய் என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் எல்சிபாய் தன்னுடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக உடன் சென்றுள்ளார். அதன் பிறகு மண்டைக்காட்டு பகுதியில் […]
பொதுமக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழையின் அளவு 49.23 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]
மரம் விழுந்து கார் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே ஒருவர் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து காரின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் சாலையின் ஒரு பகுதியில் பட்டணம் என்ற கால்வாய் ஓடுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசூபாறை என்ற இடத்தில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து சீரமைத்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கால்வாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. […]
2 பேரை கொலை செய்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் . கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பவுலின் மேரி தனது தாயான தெரசம்மாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். […]
ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் மடத்து ஏலா பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சித்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஞ்சித் ராணுவத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு ராணுவ முகாமில் பயிற்சி முடித்த ரஞ்சித் உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலைக்கு செல்ல இருந்தார். […]
இன்ஜினியரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்காலை பழங்குடியின பகுதியில் மணி-உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷைனி, மோனிஷா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் மோனிஷா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதிய மோனிஷா தனது தோழிகளுடன் சென்னையில் அழகு கலை படிக்க விரும்பினார். ஆனால் மோனிஷாவின் பெற்றோர் சென்னையில் சென்று படிப்பதற்கான பொருளாதார வசதி […]
சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார் இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை நடத்திய வருகிறார். இந்த டீ கடையில் மூசா(47), சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த மாதம் 17-ஆம் தேதி கடையில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய செல்போன் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ் அபிராமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதன்புரம் பகுதியில் மாந்திரீக தொழில் செய்யும் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகுமார் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து […]
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டமாவு பகுதியில் விஜயகுமார்-சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுபா தனது தங்கையான சுஜி என்பவருடன் சேர்ந்து அழகியமண்டபம் சந்திப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து 1 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சுஜி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த […]
மணற்பரப்பு பகுதிகளை கடல் நீர் மூடி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அமர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடற்கரை பகுதியில் விலாசமான மணற்பரப்பு உள்ளது. இதனால் தினம் தோறும் மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை பார்த்து ரசிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அலையின் வேகம் அதிகரித்து மணற்பரப்பு பகுதி முழுவதையும் கடல் நீர் […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ் அபிராமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
மரம் முறிந்து விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் பிரம்மபுரத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென ஆலமரத்தின் ஒரு பெரிய கிளை முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக காரில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கேரளா குடும்பத்தினரும், நடந்து சென்று கொண்டிருந்த சில பேரும் அதிர்ஷ்டவசமாக […]
அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி காந்தாரியம்மன் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரவிளையில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சரண் உள்பட 2 மகன்கள் இருந்துள்ளனர். தற்போது மூத்த மகன் சரண் வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சரவணன் தன்னுடைய 2 மகன்களுடன் […]
மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. […]
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. இங்கு தினம்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அங்கு “குளு குளு” சீசன் நிலவுகிறது. இதனால் நேற்று தீற்பரப்பு அருவிக்கு கன்னியாகுமரி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து […]
ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பூனை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தற்போது இரட்டை ரயில்வே பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 16382 என்ற வண்டி என் கொண்ட கன்னியாகுமரி-பூனை எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 6,7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மும்பை சி.எஸ்.டி-நாகர்கோவில் சந்திப்பு ரயில் வருகின்ற 9-ஆம் தேதி பூனை சந்திப்பு-வாடி இடையே […]
ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் சாமியை தரிசனம் செய்வதற்காக தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமியை தரிசனம் […]
டச்சு படையை வென்று கடற்கரையில் அமைக்கப்பட்ட வெற்றி தூணிற்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை டச்சு படையினர் கைப்பற்று நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டு தங்கி இருந்தனர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா வேணாட்டின் தலைநகரான கல்குளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தனது தளபதிகளுடன் குளச்சல் கடற்கரைக்கு சென்றார். இதனையடுத்து அவர் தனது படைகளுடன் சேர்ந்து 2 மாதங்களாக டச்சு […]
குறைதீர்க்கும் முகாமில் 130 மனுக்களுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தக்கலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது தீர்வு காணலாம் என்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் புகார் மனுக்கள் குறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். மேலும் இந்த முகாமில் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், ஷேக் அப்துல் […]
இணையதளம் வாயிலாக திருமணம் செய்து கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் பகுதியில் வம்சி சுதர்ஷினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவரும் நானும் காதலித்து வருகிறோம். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார். நாங்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். […]
கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு குறிப்பாக விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதேபோன்று இன்று விடுமுறை தினம் என்பதால் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்து விட்டு பல இடங்களை சுற்றிப் பார்ப்பர். அதன் பிறகு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் […]
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குமரியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையின் […]
கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு ஒரு மணி நேரம் படகு சேவை தாமதமானது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன் பின்னர் படகில் சென்று கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு திரும்பி வருகின்றனர். இதற்காக […]
கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லடிவிளை சிவந்தமண் என்ற பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவர்களுடைய தாத்தா சந்திரன் பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து பிரபா […]
பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தெங்கம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளார். இதனால் கண்ணாடி உடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் […]
பிரசித்தி பெற்ற கோவிலில் பல வருடங்களுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் சுவாமியை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு பறிபோனது. இந்த கோவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் கடந்த 6-ம் […]
பெண் காவலருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண ரேகா ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நெதர்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கான தடகள போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், உயரம் தாண்டுதலில் கிருஷ்ணரேகா வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். இதன் […]
நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சிலர் பிச்சை எடுப்பது வழக்கம். அவர்கள் அந்த பகுதியில் தங்கியும் இருக்கிறார்கள். அவர்களுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த 55 வயது உடைய ஒரு நபர் பிச்சை எடுத்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூன் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அவர்களுடன் பிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி […]
சுசீந்திரம் அருகே உள்ள அக்கறை குத்துக்கல் பகுதியில் ஆனந்தம்(87) என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ஆனந்தம் வீட்டில் தனியாக இருந்துள்ள போது ஆபாச வார்த்தைகளால் தனக்குத்தானே பேசியதாக தெரிகின்றது. அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த அசோக்நாத் என்ற தொழிலாளி என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னைத்தான் அவர் திட்டுகிறார் என நினைத்த அசோக்நாத் வீடு புகுந்து ஆனந்தத்தை தாக்கி செங்களால் தலையில் அடித்ததாக கூறப்படுகின்றது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தம் நாகர்கோவில் அருகே […]
குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது கோதை ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்திருப்பதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்கின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக ஏராளமானோர் கார் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 16 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கூறிய தகவலை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சடைந்தனர். அதாவது மாணவியின் தாயார் கடைக்கு […]
வீட்டின் மேற்கூரையை உடைத்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அரிய வகை குரங்கினமான சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று காலை ரொட்டிக்கடை பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கவால் குரங்குகள் நுழைந்தது. இந்த குரங்குகள் கட்டிட தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவரது வீட்டு மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் சமையலறையில் இருந்த உணவுப் பொருட்களை தின்று […]
தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபின் மேரி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் கிளின்டன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகனான ரூபிக்சன் காஸ்ட்ரோ என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 […]
தந்தையை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு திருமன் தோட்டம் பகுதியில் குமரேசன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முருகேஷ்(31) என்பவர் கேரளாவில் இரும்பு பீரோ தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது […]
கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து குமரியில் கொட்டிய லாரிக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழி மற்றும் மீன் கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டுகின்றனர். நேற்று மாலை தேவசகாயம் மவுண்ட் நான்கு வழிச்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து மூட்டை முட்டையாக கழிவுகளை இறக்கியுள்ளனர்.இதனை அவ்வழியாக சென்ற ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பார்த்துள்ளார். இதனை அடுத்து […]
வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் தெருவில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் வாலிபர்கள் இரவு நேரத்தில் நான்கு வழி சாலை பணி நடைபெறும் பகுதியில் வைத்து மது குடிப்பது வழக்கம். நேற்று இரவு திடீரென அந்த இடத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]