கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணன் பணியில் இருந்த போது அதிகாரி போல உடை அணிந்து வந்த ஒருவர் நான் வருமானவரித்துறை அதிகாரி என கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக ஒரு அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணன் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
Category: கரூர்
கரூர் மாவட்டத்திலுள்ள கந்தபொடிகார தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் புலியூர் புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கணேசனிடம் ஆனந்த் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தர முடியும் என கணேசனிடம் தெரிவித்தனர். இதனை நம்பி கணேசன் ஆனந்த் மற்றும் சரவணன் ஆகியோரிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மதுமிதா கல்லடை தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல மதுமிதா இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதுப்பட்டியில் இருந்து குரும்பபட்டி சாலையில் சென்றபோது பின்னால் செல்வம் என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த மதுமிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு […]
கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திகுளம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அக்பரும் தையல்காரரான சந்திரசேகர் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 25-ஆம் தேதி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரசேகர் அக்பரின் மனைவி சைனம்பூவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனை அக்பர் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சந்திரசேகர் அக்பரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அக்பர் மருத்துவமனையில் […]
சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டி வருகிற ஜனவரி மாதம் 9, 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவிலிருந்து மட்டும்150-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரதீப் 800 மீட்டர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரை கல்லூரி முதல்வர் கௌசல்யா […]
கரூர் மாவட்டத்திலுள்ள வடிவேல் நகர் பகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், ஸ்ரீ அம்மன் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு இடத்தில் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த குப்பை கிடங்கில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், குடியிருப்பு வாசிகளும் சுவாச கோளாறு கண் எரிச்சல் ஆகியவற்றால் மிகவும் […]
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விலத்தூர் மேல தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது மகன் ஹரிகிருஷ்ணன்(16), தங்கை மகன் பாரதி(10) ஆகிய இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த […]
கரூர் மாவட்டத்திலுள்ள செல்லிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் குடும்ப செலவுக்காகவும், தனது மகளின் திருமணத்திற்காகவும் சசிகுமார் என்பவரிடம் 33 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். மேலும் குணசேகரன் தனது நிலத்தை சசிகுமாருக்கு முன்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்திற்கு சசிகுமார் போலி ஆவணங்களை தயாரித்து பெரியசாமி என்பவருக்கு விற்பனை செய்துவிட்டார். இதனையடுத்து பெரியசாமி அந்த நிலத்தை பாலமுருகன் என்பவருக்கு விற்றுவிட்டார். […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே தடகள போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டிகளில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவி கிருத்திகா 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கத்தையும், கரினா நல்லி 100 மீட்டர் மற்றும் தடை தாண்டுதலில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இதனையடுத்து மாணவி இலக்கியா வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், 400-100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தையும், ஆண்கள் பிரிவில் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மோகன்ராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மோகன் ராஜ் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மோகன்ராஜ் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் புது வீடு கட்டுவதற்கும் மோகன்ராஜ் சிலரிடமிருந்து கடன் வாங்கி உள்ளார். இதனால் கடனை செலுத்த […]
கரூர் மாவட்டத்திலுள்ள சின்னப்புளியம்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவேந்திரன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யுவந்திரன் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இதனையடுத்து அரவக்குறிச்சி+சின்ன தாராபுரம் சாலையில் இருக்கும் எலவனூர் பிரிவில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுவேந்திரன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]
கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கு விசாரணை நடத்தி வந்துள்ளார். அப்போது 10- ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்த 16 வயது சிறுமி ஒருவரை கண்டறிந்து சதீஷ்குமார் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் உறவினர் வீட்டில் தங்கி சிறுமி ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சித்தப்பா […]
கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் வீட்டில் 16 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்வதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபாடுபவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தி 3 பெண் தரகர்கள், 5 வாலிபர்கள் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 16 வயது சிறுமியை மீட்டு விசாரித்தனர். அந்த விசாரணையில் கரூர் பகுதியை சேர்ந்த மேகலா, மாயா, […]
35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்டவை அடங்கியிருந்தது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 36வது வார்டில், ‘மணக்களம் தெரு’ என்று பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு, ‘உதயநிதி முதல் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாவது […]
கரூர் மாவட்டத்தில் உள்ள முதலிகவுண்டனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி தேவி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண், 1 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக காயத்ரி தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறகும் காயத்ரி தேவி வராததால் கார்த்திக் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து […]
கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கப்பகவுண்டன் வலசை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபினேஷ்(19)கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று மாலை அபினேஷ் தனது நண்பர்களான அசோக்குமார், சதீஷ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேருடன் நங்காஞ்சி ஆற்று தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபினேஷ் தடுப்பணையின் தண்ணீரில் விழுந்து தத்தளித்ததால் அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். அதற்குள் அபினேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து […]
கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலூர், ஆண்டிப்பட்டி கோட்டை, வேலம்பாடி, பள்ளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இந்நிலையில் விவசாய பயிர்கள் தெரியாத அளவிற்கு பனி மூடியதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து உடலை வருத்திக்கொண்டு அதிகாலையில் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சாலையில் செல்கின்றனர். கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் விவசாயியான வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதிபாளையம் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பாலு தான் ரயில்வேயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என வெள்ளியங்கிரியிடம் தெரிவித்தார். இதனை நம்பி வெள்ளியங்கிரி தனது மகன் மற்றும் மருமகளுக்கு வேலை வாங்கி கொடுக்க 18 லட்சத்து 85 […]
கரூர் மாவட்டத்தில் உள்ள வில்லாபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் சபரி(18) என்ற மகன் உள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அரவிந்த் சபரி செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி வளாகத்தில் வைத்து அவர் புகையிலை பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் உனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என கல்லூரி […]
கரூர் மாவட்டத்தில் உள்ள ராச்சாண்டார்திருமலை பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி வரகனேரியில் வசிக்கும் ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் என்பவரிடம் குளிர்பான நிறுவனம் தொடங்கி நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பெஸ்டின் மற்றும் அவரது நண்பர்களான ஞான சௌந்தரி, சகாயராஜ் ஆகியோர் தலா 8 லட்ச ரூபாய் வீதம் 24 லட்சம் ரூபாய் பணத்தை குளிர்பான நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மேலும் மூலப்பொருட்கள் வாங்குவதற்காக பெஸ்டின் மேலும் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். […]
கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 16 சென்ட் நிலம் இருக்கிறது. இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனால் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் விசாரணை நடத்திய போது தனிநபர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது. அந்த நிலத்தை மீட்குமாறு தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரப்பின்படி திருக்காம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் குறுந்தொகை, வருவாய் துறையினர் சம்பவ […]
கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை பகுதியில் சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். கடந்த 13-ஆம் தேதி செல்போன் மூலம் சுரேந்தரை தொடர்பு கொண்ட நபர் தன்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து உங்களது செல்போன் எண் ஆபாச படம் பிடிக்கும் whatsapp குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு நீங்கள் சென்னைக்கு வராவிட்டால் கரூர் போலீசாரை வைத்து கைது செய்து விடுவேன் […]
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை குறிஞ்சி நகரில் கார் டிரைவரான சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், தனது பெயர் முருகன் எனவும், தான் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உங்களது செல்போன் எண் குழந்தைகள் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த நீங்கள் சென்னை வரவேண்டும் என சுரேந்தரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாள் கோவில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காதலிப்பதாக கூறிய கிருஷ்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் […]
தொழிலாளி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆதனூரில் கூலி தொழிலாளி பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிச்சாமி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பழனிச்சாமியின் மனைவி சங்கீதா பணம் இல்லை என கூறி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் பழனிச்சாமி வீட்டில் இருந்த […]
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதற்கு திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும், குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]
கரூர் மாவட்டத்திலுள்ள பிள்ளபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இந்நிலையில் முட்டைகள் பொரிந்து அடுத்தடுத்து பிறந்த 10 கோழிக்குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூரில் கூலி தொழிலாளியான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பலமுறை பாஸ்கர் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாஸ்கர் அப்பகுதியில் இருக்கும் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த […]
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே குத்து சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்றனர். இந்த மாணவர்கள் ஒட்டுமொத்த ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். இந்நிலையில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டியுள்ளனர்.
லாரி கவிழ்ந்த விபத்தில் 250 வாத்துகள் உயிரிழந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் வாத்து வியாபாரியான மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குச்சனூரில் இருந்து 2500 வாத்துகளை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் குளித்தலையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் லாரியில் வாத்துகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மேரி அவரது, மகன் செல்வகுமார் ஆகியோர் இருந்தனர். அதேநேரம் சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை புருஷோத்தமன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அதில் […]
வங்கி ஊழியர் 37 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கோவை செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 2017-2020 ஆம் ஆண்டிற்கான கணக்கு வழக்குகளை மண்டல மேலாளர் பல்ராம்தாஸ் தணிக்கை செய்துள்ளார். அப்போது வங்கியில் வேலை பார்த்த தற்காலிக பணியாளர் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பள்ளப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற வங்கி ஊழியர் 36 லட்சத்து 62 ஆயிரத்து 892 ரூபாயை மோசடி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியில் மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களான சின்னதுரை, வடிவேல் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்காக காவல்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கன்னிமார்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஆட்டோவை சின்னதுரை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே நிலக்கரி லோடு […]
கரூர் மாவட்டத்திலுள்ள மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டும், உடைகள் அணியாமலும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றி திரிகிறார். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் யாராவது உணவு கொடுத்தால் முதியவர் அதனை வாங்கி சாப்பிடுவார். இந்நிலையில் ஒரு மர்ம கும்பல் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தர் எனக்கூறி நாகம்பள்ளி பிரிவு அருகே குடிசை போட்டு அவரை அமர வைத்தனர். மேலும் முதியவருக்கு அருகே அவர்கள் ஒரு உண்டியலை வைத்து பணம் வசூல் […]
அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பெரியபாலம் அருகே ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டைமேடு பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் எம்.எஸ்சி பட்டதாரியான ஜெயலட்சுமி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பழைய சித்துவார்பட்டி சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹரிஹரன்(24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]
கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே வாழைமண்டி அமைந்துள்ளது. இங்கு லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கற்பூரவள்ளி, ரஸ்தாலி, பூவன் உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கற்பூரவள்ளி வாழைத்தார் ஏலத்திற்கு வந்தது பொதுவாக வாழைத்தாரில் 10 சீப்புகள் வரை இருக்கும். ஆனால் 6 அடி உயரமுள்ள இந்த வாழைத்தாரில் 16 சீப்புகள் இருந்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.
தமிழ்நாடு அமைச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவி சினேகா 65 கிலோ எடை பிரிவிலும், மகுடேஸ்வரி 50 கிலோமீட்டர் எடை பிரிவிலும் வெற்றி பெற்று வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதே போல் கிருத்திகா மற்றும் மனோஜ் 55 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு வெண்கல பதக்கங்களை வென்றனர். […]
செங்கல் சூளையில் வேலை பார்த்த 3 சிறுமிகள் உட்பட 11 பேரை அதிகாரிகள் மீட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் சத்தீஸ்கர் மாநில சமூக நல அலுவலர்கள் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக கழுத்தில் பெல்ட் அணிந்த ஒரு நாய் சுற்றி திரிகிறது. யாரோ ஒருவர் இந்த நாயை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாகனத்தில் செல்பவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் இந்த நாய் துரத்தி கடிக்கிறது. கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்து குதறியது. இதனால் காயமடைந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி […]
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது […]
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேட்டுதிருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் 10 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு மாணவிகள் தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் அமுதா, […]
மினி லாரி மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து கல் தூண்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்களான முரளி, மூர்த்தி, மணி, சேகர் ஆகிய 4 பேரும் மினி லாரியின் பின்புறம் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அரவக்குறிச்சி கோட்டப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் […]
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு […]
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் ரவுண்டு டேபிள் இணைந்து ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக ஆங்கில மொழியை கற்று கொடுக்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ஆங்கில மொழியை மாணவர்கள் எளிதாக கற்று கொள்ளும் […]
கருப்பூரில் எம்பி ஜோதிமணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், ஆட்சியருடன் மோதல் என பரபரப்பாக பேசப்பட்டார்.இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஜோதிமணி பயணித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அவரின் […]
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரில் முத்துக்குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான பிரவீன் குமார்(20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் முத்துக்குமார் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் அருகே நடந்து சென்ற போது பிரவீன் குமார் அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் பிரவீன் குமார் முத்துக்குமாரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]
உயிருக்கு போராடிய பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் பசுபதி நகர் முதல் தெருவில் விவசாயியான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய விவசாய கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட […]
கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் ச.மகாலட்சுமி, 8- ஆம் வகுப்பு படிக்கும் ம.ஹர்ஷினிபிரியா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனர். இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். […]
கரூர் மாவட்டத்தில் உள்ள கோம்புபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு இளநீர், சந்தனம், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
இடைவிடாது மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனைய்டுத்து நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை இடைவிடாமல் மலை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.