Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1 1/2 கிலோ…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 வாலிபர்ககளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சாவை ஒலிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் 2.0 ஒரு மாதம் நடத்த வேண்டும் என தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் கும்பலுக்கு பெரும் பீதி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பக்தவச்சலம் நகர் அருகாமையில் ஏரிக்கரை பகுதி போன்ற இடங்களில் கஞ்சா விற்பனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிஷ்டவசமாக தப்பிய ஓட்டுனர்…. சாலையில் கவிழ்ந்த லாரி…. கரூரில் பரபரப்பு….!!

ரசாயன பவுடர் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு ரசாயன பவுடர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரியை பிரபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தகரக்கொட்டகை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் பிரபு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் காரணத்தினால் அப்பகுதியில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி…. வாலிபரின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் அறிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அறிவானந்தம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் 8 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்பின் சிறுமியிடம் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இன்று கிடையாது…. பொதுமக்கள் அவதி…. செயற்பொறியாளர் தகவல்….!!

இன்று மின் வினியோகம் இருக்காது என கிராமிய மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ராஜபுரம் மற்றும் ஆண்டிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் துணை மின் நிலையங்களில் தற்போது புதிய மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் 22 பகுதிகளில் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என கிராமிய மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. கல்லூரி மாணவரின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கடத்தி சென்ற கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கல்லூரி மாணவரான ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 27-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி ஆகாஷ் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மது பாட்டில்கள் விற்பனை…. வசமாக சிக்கிய முதியவர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 முதியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர்மலை பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு பல புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ராமசாமி மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கி தருகிறேன்” பொருளாதார குற்றப்பிரிவில் புகார்…. கரூரில் பரபரப்பு….!!

கல்வி அமைச்சரின் உறவினர் என கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பட்டி பகுதியில் தாமஸ் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஆனந்தகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்தகுமார் தாமஸ் ஆல்பர்டிடம் கல்வி அமைச்சரின் உறவினர் எனக்கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறியுள்ளார். இதை உண்மை என […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கடைவீதியில் விற்பனையா…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கடைவீதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கல்லடை ஊராட்சி கீழவெளியூர் கடைவீதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விற்பனை நடக்குதா…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வேலுசாமிபுரம் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபடும் போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சரன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 50 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளியில் நடக்கப்போகுது…. நேரில் அழைப்பு…. ஆசிரியர்களின் செயல்….!!

மேலாண்மை குழு கூட்டத்திற்கு மாணவர்களின் பெற்றோர்களை தலைமையாசிரியர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களின் பெற்றோரிடம் பள்ளி தலைமையாசிரியர் அன்னம்மாள் மற்றும் ஆசிரியர்கள் தங்கப்பாண்டி, பரமேஸ்வரன் ஆகியோர் பள்ளி மேலாண்மை கூட்ட அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அலைமோதிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் செயல்….!!

ஊராட்சி சமுதாயக் கூடத்தில் வைத்து ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடசேரி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் வைத்து ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், ஆண்டு, மாதம், பிறந்த தேதி மற்றும் புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் வடசேரி ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். மேலும் இதற்கான […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனங்கள் மோதல்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கரூரில் பரபரப்பு….!!

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் காயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மூலிமங்கலம் கிழக்குத் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் காகித ஆலையில் ஒப்பந்த கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரவி மற்றும் அவரது மனைவியும் புன்னம்சத்திரம் காகித ஆலை சாலையில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த மலர்கொடி, தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மறியலில் ஈடுபட்ட நபர்கள்…. அனுமதியின்றி வைத்த சிலை…. போலீஸ் நடவடிக்கை….!!

மறியலில் ஈடுபட்ட 30 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபாளையம் அண்ணாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்ட புகழூர் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் உள்பட 30 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

செலவிற்கு காசு கொடு…. புகார் அளித்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

காசு கேட்டு மனைவியை அடித்த கணவனை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வை.புதூர் நடுத்தெரு பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுசெல்வி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இளையராஜா செலவிற்கு தனது மனைவியிடம் பணம் கேட்ட போது அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இளையராஜா தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது பற்றி அழகுசெல்வி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதி…. கணவனுக்கு நடந்த கொடூரம்…. கதறி அழுத மனைவி….!!

கார் நிலைதடுமாறி பேருந்து உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாங்கோவில் அம்பாள் நகரில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தின் உரிமையாளர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ரேவதியின் தம்பி பேரனுக்கு பெயர் வைக்கும் விழாவிற்காக ஜெகதீசன் தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார். அப்போது ஆசாரிபட்டறை அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் ஜெகதீஷ்க்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதணி விழாவிற்கு சென்ற வாலிபர்கள்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

காதணி விழாவிற்கு சென்ற வாலிபர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பராயன்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணா தனது நண்பரான கரிகாலனுடன் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பிறகு அவர்கள் இருவரும் திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது பால் சொசைட்டி அருகில் சென்ற நிலையில் எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராவிதமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறு…. கடை உரிமையாளர்களின் செயல்…. அதிகாரிகளின் உத்தரவு….!!

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மணப்பாறை-குளித்தலை நெடுஞ்சாலை மற்றும் பாதிரிப்பட்டி பிரிவு சாலை வரை மெயின் ரோட்டில் கடை உரிமையாளர்கள் சிலர் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளை அமைத்திருப்பதாக பல புகார் வந்தது. இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் மூன்று நாட்களுக்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் தரிசனம்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கரூரில் பரபரப்பு….!!

லாரி மீது கார் மோதி 4 பேர் காயம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக சுமதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தை மற்றும் தாயுடன் கும்பகோணத்தில் இருக்கும் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு கரூர் வழியாக திருப்பூருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது தேசிய நெடுஞ்சாலையில் ஏமூர் பகுதி ரயில்வே மேம்பாலத்தின் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தம்பதியினருக்கு கொலை மிரட்டல்…. தலைமறைவாகிய குற்றவாளி…. போலீஸ் வலைவீச்சு….!!

கணவன்-மனைவியை கத்தியை காட்டி மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அரசின தெருவில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேனகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ், கலைமணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. அதன்பின் தினேஷ் மற்றும் கலைமணி ஆகியோர் மேகனா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கணவன்-மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” பல்வேறு கோரிக்கைகள்…. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…‌.!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சடையாண்டி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு செயலாளர் ராமசாமி, மாவட்ட மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜவஹர் மற்றும் பொருளாளர் தங்கவேலு என பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி உள்ளனர். அப்போது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கண்டிக்கிறோம்…. நீதியை காற்றில் பறக்க விட்ட கர்நாடக அரசு…. கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

கர்நாடக அரசை கண்டித்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதில் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் பற்றி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது, காவேரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரியில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எங்க இவரை காணும்…. கிணற்றில் கிடந்த சடலம்…. கரூரில் பரபரப்பு….!!

கிணற்றில் முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குள்ளம்பாளையத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி தோட்டத்து வேலைக்கு வராததால் ராஜமணி அவரை தேடி சென்ற போது கிணற்றின் அருகில் ரங்கசாமியின் வேட்டி மற்றும் துண்டு கிடந்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கசாமியை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற பெண்…. வாலிபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

மாடு மேய்க்க சென்ற பெண்ணிடம் வாலிபர்கள் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் தாலுகா பாலப்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செஞ்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செஞ்சியம்மாள் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்து அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பலியான காவலாளி…. கரூரில் பரபரப்பு….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி மருத்துவமனையின் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் இவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பால்நடைப்பட்டி பகுதியில் சிட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிட்டு சொந்த வேலைக்காக பாளையத்திற்கு சென்று விட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் ரங்கசாமி என்பவருடன் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் சிட்டு உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர்…. அதிர்ச்சியில் நண்பர்கள்….. கரூரில் பரபரப்பு….!!

 பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோதசிரா சாட்டேகான்பரப்பு ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சஜயன். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையத்தில் வாடகை வீட்டில் அப்துல் நசீர், ராஜேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோருடன் தங்கி ஒரு கம்பெனியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு சஜயன் தூங்கியுள்ளார். பின்னர் நண்பர்கள் எழுந்து பார்த்த போது சஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அப்பா-அம்மாவை பார்க்க போறேன்” நிலைதடுமாறிய ஸ்கூட்டி…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஸ்கூட்டி நிலைதடுமாறிய தனியார் நிறுவனத்தின் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமணப்பட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்துள்ளார். அதன்பின் செல்வராஜ் தனது தாய், தந்தையை பார்ப்பதற்காக பேருந்தில் கரூர் வந்துள்ளார். அப்போது காந்தி கிராமத்தில் இருக்கும் தனது நண்பரின் ஸ்கூட்டரை வாங்கிக்கொண்டு ஏமூர் சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது வேகத்தடை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற பந்தயம்…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. கரூரில் பரபரப்பு….!!

மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மணத்தட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பாக மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்தப் பந்தயத்தில் தேன்சிட்டு எனப்படும் சிறிய மாடு, ஒற்றை மற்றும் இரட்டை மாடு, சிறிய குதிரை, பெரிய குதிரை எனத் தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இவை குளித்தலை-மணப்பாறை சாலையில் தொடங்கி வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் மற்றும் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதனையடுத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வினியோகம் இருக்காது…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. பொதுமக்களுக்கு அதிர்ச்சி….!!

துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்வினியோகம் தடைசெய்யப்பட இருக்கிறது. கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி துணை மின் நிலையங்களில் வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் உயர் அழுத்த மின் கம்பித் தொடர் நிறுவும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதலால் துணை மின் நிலையத்தின் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்ட ஜவகர்பஜார் பகுதி உள்பட 19 பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீர்த்தம் எடுக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அணியார் காலனியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பகவதி தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து செல்வதற்காக பிரபு உள்ளிட்ட சிலர் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்தனர். அப்போது அவர்கள் ஆற்றில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குறைந்த விலையில் தருகிறோம்” சைபர் கிரைம் போலீசில் புகார்…. கரூரில் பரபரப்பு….!!

நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிமெண்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது அலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் பிரபல சிமெண்ட் நிறுவனத்தின் மேலாளராக இருப்பதாகவும், 850 சிமெண்ட் மூட்டைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி அதற்குரிய விலைப்பட்டியலை முகமது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மலைவிதி பேருந்து நிறுத்தம் அருகாமையில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜகண்ணு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அங்க விற்பனை செய்கிறார்களா…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பரளி ரோடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட சிவனந்தம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும்  அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பொதுமக்கள் சிரமம்…. அதிகாரிகளிடம் கோரிக்கை மனு….!!

ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை 4 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதனால் வெளியேறும் கழிவுநீர் அருகில் இருக்கும் ஆற்றுவாரிகளில் திறந்துவிடப்பட்டு பாசன குளங்களில் கலக்கிறது. இவற்றால் குளங்களில் வாழும் மீன்கள் அழிந்து விடுகிறது. இந்தத் தண்ணீரை அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்துவதால் பல தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. பின்னர் இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது மகசூல் வெகுவாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“விலை உயர்ந்து விட்டது” குறைந்து கொண்டே செல்லும் விளைச்சல்…. வியாபாரிகளின் தகவல்….!!

வாழைத்தார் வரத்து குறைந்து இருப்பதால் அவற்றின் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு விளையும் வாழைத்தார்களை கூலி ஆட்கள் மூலமாக வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், விற்பனை மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து ஏலத்தில் பூவன் வாழைத்தார் 200 ரூபாய்க்கும், பச்சைநாடன் 200 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 220 ரூபாய்க்கும், மொந்தன் 300 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சி அடைந்த தாய்…. போலீஸ் வலைவீச்சு….!!

10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ப.உடையாப்பட்டி தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோகிலாவுக்கு சில மாதங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் மீண்டும் ஆரோக்கியராஜ் தனது மனைவி மற்றும் குழந்தை, தாயுடன் கோவைக்கு திரும்பி சென்றுள்ளார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் எதிர்காலம்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. தலைவரின் செயல்….!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தலைவர் குணசேகரன் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய 70 பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு சேமிப்பு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் கோட்ட கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கி உள்ளார். இதில் துணை கோட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் வகித்துள்ளார். இதனையடுத்து அஞ்சலக அதிகாரி பிரியா வரவேற்றுள்ளார். பின்னர் நகராட்சித் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நான் முந்தப் போறேன்” எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நந்தன்கோட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் பாஸ்கர் தனது இருசக்கர வாகனத்தில் குளித்தலை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக பேருந்தின் பின்பக்கம் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சாலையில் விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வழக்குகளுக்கு தீர்வு…. சிறப்பாக நடைபெற்ற நீதிமன்றம்…. இழப்பீட்டு தொகை வழங்கல்….!!

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இதை நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்துள்ளார். இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நிதி நிறுவன கடன்கள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் உள்ளிட்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பழங்கால நாணயம்…. சிறப்பாக நடைபெற்ற கண்காட்சி…. ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்….!!

பள்ளியில் வைத்து நடைபெற்ற பழங்கால நாணைய கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளியின் தலைவர் ரவி மற்றும் பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். இவற்றில் பழங்கால நாணயங்கள் மற்றும் பல நாடுகளின் ரூபாய் நோட்டுகள், நூற்றாண்டு பழமையான கடிதங்கள் மற்றும் அஞ்சல் வில்லை உள்ளிட்ட அரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து மாணவ-மாணவிகள் மிகுந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இரு மொழியில் தகவல்” ஆட்கள் தேவை…. கரூரில் பரபரப்பு….!!

நிறுவனங்களில் பணிபுரிய இந்தி மற்றும் வங்க மொழியில் ஆட்கள் தேவை என அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, விசைத்தறி, பஸ் கூண்டு கட்டுதல் மற்றும் கொசு வலை போன்ற பல நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் பல தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது திருமாநிலையூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு பணிபுரிய ஆட்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பாண்டிலிங்கபுரம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் செந்தில் தனது இருசக்கர வாகனத்தில் கொளந்தாபாளையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆறுமுகத்திற்கு மருத்துவர்களால் தீவிர […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

1,565 மில்லியன் இருப்பு…. ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு…. அணை நீர்மட்டம் விவரம்….!!

அணையின் நீர்மட்டம் குறித்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் காலை 9 மணி நிலவரப்படி 57.29 கன அடி தண்ணீர் இருந்துள்ளது. இதில் வினாடிக்கு 18 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து அணையிலிருந்து ஆற்றுக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் அணையில் தற்போது 1,565 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ரத்து செய்ய வேண்டும்” அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கரூரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு மாவட்ட குழு சார்பாக ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்கள், தொழிற்சங்கம் தொடங்கிய காரணத்திற்காக வெளிமாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்தல் நிறுவனங்களை கண்டித்தும் மற்றும் பணியிட மாறுதல் இரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கியுள்ளார்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்..‌.. படுகாயமடைந்த 2 பேர்…. கரூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள வேலம்பாடி பகுதியில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இச்சிப்பட்டி பிரிவு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பசுபதிக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

1,159 பேர் மீது வழக்குப் பதிவு…. அதிரடி சோதனை…. இன்ஸ்பெக்டரின் தகவல்….!!

வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,159 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுயுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தினந்தோறும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது வேகமாக வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது போன்ற பல வாகன விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வசூல் செய்து வந்தனர். இந்நிலையில் வாகன […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள முத்துகாபட்டி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராமை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விவசாயத்தில் நஷ்டம்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் முதியவர் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் சுப்பிரமணிக்கு விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணத்தினால் பூச்சி மருந்து குடித்துள்ளார். அதன்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி வேண்டும்…. சிரமப்படும் பொதுமக்கள்…. பேரூராட்சித் தலைவருக்கு மனு….!!

அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் பேரூராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் பொதுமக்களுக்கு உரிய பாதை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கலெக்டர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்பட பலருக்கு மனு அளித்துள்ளனர். பின்னர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி தரவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தலைப் புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். […]

Categories

Tech |