சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தின் தோகைமலை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் தனியார் மெஸ் பின்புறமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த மதிவாணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Category: கரூர்
நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அலுவலகத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இந்த மனுவில் நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் மாதம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இருந்ததாகவும், அதனால் அவா் வன்னியர்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை வருகின்ற 10-ஆம் […]
செடி,கொடிகளை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. இதில் பஞ்சமாதேவி அணைக்கட்டு வாய்க்கால் பிரிந்து சோமூர் வரை செல்வதால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் அங்கங்கே செடிகள் வளர்ந்து முட்புதர் போல் படர்ந்து கிடக்கிறது. இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் […]
அரசு பள்ளியில் வைத்து நடைபெற்ற திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் இருக்கும் அரசு உயர் நிலைப்பள்ளியில் வைத்து பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக திறனாய்வு போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்டத்தில் வசிக்கும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் வடமங்கலம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் இவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். […]
வீட்டில் மேல் பகுதியில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமாரின் ஓட்டு வீட்டின் மேல் புறத்தில் சாரைப்பாம்பு ஓன்று பதுங்கி இருந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் பாக்கியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனிமையில் வசித்து வந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் அலறிய சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பாக்கியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு […]
கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் தொழிலதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி பாளையம் பகுதியில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை விஷயமாக தனது காரில் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காருக்குள் […]
சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவருக்கு கலைமகள்(31) என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் உயிரிழந்த ஜானகிராமனுக்கு சாமி கும்பிட்டு விட்டு திதி கொடுப்பதற்காக கலைமகள் தனது உறவினருடன் மேற்கு தவிட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கலைமகளின் உறவினர்களான சஸ்மிதா, ஹேம தர்ஷினி ஆகிய இரு பெண்களிடம் அதே பகுதியில் […]
காரின் கண்ணாடியை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை வெளியே நிறுத்தி விட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கார்த்திக் வெளியே வந்துள்ளார்.அப்போது காரின் […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. மேலும் வேட்பாளர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜேஷ் கண்ணன் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது இன்று எலி பெட்டியில் எலியுடன் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் […]
கரூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் இளைஞர் குமார் பல முறை உடலுறவு கொண்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை […]
கரூர் மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக கூறி கடிதம் எழுதி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
கரூரில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கு. மாணவி படித்த பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலையால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களே குற்றவாளியாக இருக்கக்கூடிய துயரமான சூழல் தற்போது நிலவி வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் நாள் கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு தமிழகத்தையே உலுக்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்யலர்களை […]
கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து […]
கரூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து, கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.. ஏற்கனவே கோவை மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே பரப்பானது.. நேற்று முன்தினம் உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாணவியின் […]
17 வயது சிறுமி பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் அருகே உள்ள அரசு காலனியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். 17 வயதுடைய சிறுமி வெண்ணைமலை தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்து பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் […]
கரூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல தனியார் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கணக்காளராக பணியாற்றும் பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளுக்கு தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை […]
குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1 மாதத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தகவல் தெரிவிக்கப்படும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் […]
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பட்டி பகுதியில் பெத்தான் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மகன் முனியப்பனுடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை-மைலம்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி பெத்தான் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து அக்டோபர் 10ஆம் தேதி ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் என்றும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் […]
பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்தில் உள்ள காருடையாம்பாளையம்- காளி பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மோளப்பாளையம் பகுதியில் பழைய பஞ்சு அரைக்கும் ஆலை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது பஞ்சு ஆலைக்கு அருகே உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
லாரி மோதி 4 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் லாரியில் பாரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் பஞ்சங்குட்டை நால்ரோடு அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி அங்குமிங்குமாக சென்று சாலையோரத்தில் இருந்த 4 மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 மின் கம்பங்களும் […]
அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இவற்றில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த […]
சரக்கு ஆட்டோ மோதி மின்கம்பம் இரண்டாக உடைந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு திருவானைக்காவலிருந்து டயர்களை ஏற்றி கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இந்த ஆட்டோவை விஸ்வநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் அருகாமையில் வந்த போது எதிரில் வந்த வாகனத்தின் மீது ஆட்டோ மோதியுள்ளது. இதனால் செயல்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் விஸ்வநாதன் விபத்தில் […]
கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை, வெள்ளியணை, புளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் அடைமழை பெய்தது இதன் காரணமாக பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் நீர் […]
கரூர் மாவட்டம், ராயனூர் என்ற பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மகனுக்கு பிறந்தது முதலே எலும்பு சிதைவு என்ற வினோதமான நோய் உள்ளது. எலும்புச் சிதைவு காரணத்தினால் இவருக்கு சுமார் 57 முறை கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பல லட்சங்கள் வரை செலவு செய்து சிகிச்சை […]
பணம் வைத்து சூதாட்டம் விளையாடியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான தீனதயாளன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அமராவதி ஆற்றுப் பகுதியில் சிலர் பணம் வைத்து விளையாடியதை பார்த்துள்ளனர். இதனை அடுத்து அமராவதி ஆற்றுப் பகுதியில் பணம் வைத்து விளையாடிய குற்றத்திற்காக ராசுக்குட்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் இந்த மூவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து […]
காணாமல் போன இளம் பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவிழி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற பூவிழி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் பூவிழியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
விஷ வண்டுகள் கடித்ததால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் இருக்கும் பூங்காவை சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 71 பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் இந்த பணியாளர்களை துரத்தி சென்று கடித்துள்ளன. இதனையடுத்து மாற்றுத்திறனாளியான கார்த்தி என்பவர் ஓட முடியாமல் இருந்ததால் விஷ வண்டுகள் அவரை சூழ்ந்து கடித்துள்ளது. […]
குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் சுப்பிரமணினுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சுப்பிரமணி பெரிய கல்லை எடுத்து […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார்பெண்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் பாலமுத்து என்ற கார்பெண்டர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் தோகைமலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பால முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த பாலமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
தமிழகத்தல் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோபாலபுரம், பழைய கலெக்டர் ஆபீஸ், Travellers bungalow, Town church, L.I.C, வடக்கு பிரதட்சணம் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்றும், நாளையும் இந்த இரண்டு நாட்களில் காலை […]
தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் […]
நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் அதிகமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுந்தம்பட்டி வனப்பகுதியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இறந்து கிடந்த மானை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனத்துறையினர் செல்வேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் […]
கரூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தினால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. பலரும் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தந்தை […]
காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகரில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் அனைத்து காவல்துறையினரும் […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஊரடங்கின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள […]
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றோருக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கபசுர குடிநீர், சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மதரஸா பாபு என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையம், பசுபதிபாளையம், சிண்டிகேட் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் […]
கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற கிருபா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிருபா ஸ்ரீ-யின் பெற்றோர் அவரை தோழியின் வீடு மற்றும் உறவினர்கள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் தளபதி கிச்சன் என்னும் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கும் புதிய திட்டத்தை […]
மின்மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காவல்துறையினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளனர். கரூர் மாவட்டத்தில் இருக்கும் பாலம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரான சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன்பின் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், முன்னிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மின்மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். […]
18 வயது முதல் 44 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மருத்துகளை மக்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் […]
பக்தர்கள் இன்றி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு மஞ்சள், இளநீர், பன்னீர், பால், சந்தனம், விபூதி, தயிர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கோவிலில் சுவாமிக்கு பக்தர்கள் இல்லாமல் சிறப்பு […]
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பரமத்தி பகுதியில் ரங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தர்ஷனா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் கூட்டுறவு பால் சொசைட்டியில் பாலை ஊட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனியப்பன் கோயில் […]
மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் சுந்தராபுரம் பகுதியில் மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் குளித்தலையில் உள்ள […]
பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 9 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தென்னிலை பகுதியில் முல்லை நகரில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகம், சிவக்குமார், ஆனந்த், குமார், ராஜேந்திரன், சாந்தகுமார், சண்முகம், பிரகாஷ், ரமேஷ் ஆகிய ஒன்பது பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர். இதையடுத்து […]
டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் வாங்கல் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். […]
தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படிக்கும் மாணவி திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுருதி அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து ஸ்ருதி திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சுருதியின் பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் […]