மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை கருதி அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்றத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு […]
Category: மதுரை
சூப்பர் மார்க்கெட்டில் திருடியதோடு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தை அடுத்து இருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருடர் ஒருவர் 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் 5,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றார். அதுமட்டுமன்றி திருடியதற்கு மன்னிப்பு கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார். அதில் “மன்னித்து விடுங்கள். நான் மிகுந்த பசியில் இருக்கிறேன். நீங்கள் ஒருநாள் […]
கிசான் நிதி முறைகேடு பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் குடும்ப அட்டை முதியோர் உதவி தொகை ரத்து செய்யப்பட்ட கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பேரையூர் உள்ளிட்ட தாலுகாக்களில் போலி கணினி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஒரே வீடுகளில் 2 முதல் 3 பேர் வரை கடன் வாங்கியிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனை அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையின் அருகே இன்று அதிகாலை நேரத்தில் நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டு இருக்கிறது. அதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனரான மோகன் என்பவர் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.அதன்பிறகு அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது […]
கல்லூரி மாணவி ஊரடங்கு காலத்தில் தனக்குப் பிடித்த செயலை செய்து சமூகவலைதளத்தில் பிரபலமாகியுள்ளார் மதுரையை சேர்ந்த ஜெனிஃபர் என்ற கல்லூரி மாணவி ஊரடங்கு நாட்களில் தனக்கு பிடித்தமானதை செய்து பிரபலமாகியுள்ளார். தூக்கி வீசப்படும் பாட்டில்களை எடுத்து அதில் கைவினைப் பொருட்களை தயார் செய்கிறார் ஜெனிஃபர். இதுதான் தனது சிறுவயது ஆசை என்று கூறும் அவர் தற்போது தான் இதனை செய்வதற்கு நேரம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தூக்கி எறியப்படும் பழைய பாட்டில்களை எடுத்து அதனை சுத்தப்படுத்தி பெயிண்ட் மற்றும் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]
மதுரை அருகே கள்ளந்திரி பாசன வாய்க்காலில் திடீரென ஒரு ஆண் சடலம் மிதந்தபடி வந்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டத்தில் ஒரு போக விவசாய பாசனத்திற்காக பெரியார் கால்வாய் மற்றும் பிரதான கால்வாயில் இருந்து கடந்த 27-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று இது போல் பலரும் அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது […]
மதுரை மாவட்டத்தில் எலி மருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு சாப்பிட கொடுத்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள மேலூர் அருகே உள்ள கோவில் பட்டியில் 27 வயதுடைய சத்திய பிரபு என்பவர் தனது மனைவி நிவேதா என்பவருடன் வசித்து வருகிறார். வேறுபட்ட சமூகத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே சண்டை […]
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பணம் கேட்டு குடிபோதையில் பெற்ற தாயை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைதுசெய்தனர். கொலை செய்யப்பட்ட பாண்டியம்மா வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர். இவரது கணவர் இறந்த நிலையில் தன் மகன்களான மணிகண்டன், பிரகாஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இரண்டாவது மகன் பிரகாஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாய் பாண்டிஅம்மாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு […]
மதுரையில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் கும்பலை கைது செய்ய கோரி வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள ரவுடிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். ரவுடிகள் அங்கு வந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரவுடி கும்பலை கைது செய்யக்கோரி பெரியார் பேருந்து நிலையம் அருகே வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது […]
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் வரத்தான் செய்யும் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்ததாக குறிப்பிட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பதவி வாங்கி உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு ஓடிய போதும் கட்சி தொண்டர்கள் தான் காத்தனர் என சுட்டிக்காட்டினார். திமுக என்ற […]
உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார். உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அண்ணா ஜோசப் மருத்துவமனையின் இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதியன்று, உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில், இருதய நோயாளிகளை ஆய்வு செய்தபோது, அவர்களில் பலர் கொரோனா அச்சத்தால், மருத்துவமனையை நாடாமல் இருந்ததன் காரணமாக […]
காதல் மனைவி உடற்பயிற்சி கூட உரிமையாளருடன் சென்றதால் கணவன் நிலைகுலைந்து புகார் அளித்துள்ளார் மதுரை மாவட்டத்தில் இருக்கும் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கனிமொழி மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவரது கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உள்ளார். அங்கு உரிமையாளர் யோகேஷ் என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது […]
மதுரையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு தாயும் தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, அவருக்கும் மனைவி தமிழ்ச்செல்விக்கும் அவ்வப்போது குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளான வர்ஷா ஸ்ரீ, வர்ணிகா ஸ்ரீ, ஆகிய குழந்தைகள் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொடூர […]
மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதில் வசித்துவருபவர் தமிழ்செல்வி. இரண்டு குழந்தையுடன் கணவருடன் வாழந்து வந்த இவரின் வீட்டில் நேற்று தகராறு நடந்ததாக தெரிகின்றது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து போன தாய் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்றார்.இந்த கொடூர சம்பவத்தில் குழந்தைகள் வாரணி ஜி, வர்ணிகா ஜி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற தாய் தமிழ்செல்வி மிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் […]
சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் பூக்களை குப்பையில் கொட்டி தங்கள் வேதனையை விவசாயிகள் வெளிப்படுத்தினர். மதுரை திருமங்கலம் அருகே அரசபட்டி, வலியகுலம், தும்பங்குலம், கப்பலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, முல்லைப் பூக்களை பயிரிட்டு உள்ளனர். சுபநிகழ்ச்சிகள் கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருப்பதால் ஏற்கனவே பூக்கள் விற்பனையாகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ 40 ரூபாய்க்கும் குறைவாக […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவத்தில் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த விவசாயி அக்னி வீரன் என்பவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல் வெளியை சுத்தம் செய்தார். அப்போது கீழே கிடந்த இரும்பு குழாய் ஒன்றை ஊன்றி நிறுத்தினார். அப்போது அந்த குழாயின் மீது தாழ்வாக இருந்த மின் கம்மி உராய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி […]
காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலன் விஷ மாத்திரைகளை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை மேலூருக்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் தன்னுடன் தங்க வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகள் […]
மதுரையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை விருந்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் திருப்பி அனுப்பாததால் மனைவி மீட்டுத் தரக்கோரி கணவர் சண்முக கண்ணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். மனைவியை அனுப்புமாறு கேட்டால் கொலை செய்துவிடுவேன் என பெண்வீட்டார் மிரட்டுவதாகவும், பெண் வீட்டார் விருந்துக்கு அழைத்து சென்று 20 நாட்களில் திருப்பி அனுப்புவதாக கூறினார்கள்அதில் எனக்கு விருப்பமில்லை அதனால் மனைவியை மட்டும் அனுப்பி வைத்தேன். மூன்று மாதமாகியும் பெண்ணை திருப்பி அனுப்ப மறுத்து விடுகிறார்கள். […]
தமிழகத்தில் நேரிட்ட சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]
பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் திரு மோகன் மீது காவல்நிலையத்தில் கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற சலூன் கடை உரிமையாளர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தை பயன்படுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியமைக்காக பிரதமர் மோடியால் மன்கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டு பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் உட்பிரிவில் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். […]
மதுரையில் நில உரிமை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் பகுதியில் ஒரே இடத்திற்கு ராஜா மற்றும் முருகன் ஆகிய இருவர் உரிமை கொண்டாடி உள்ளனர். இதனால் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்புக்கு இடையே மோதல் உருவாகி ராஜா குடும்பத்தாரை முருகன் தரப்பு கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் […]
தனியார்மயம் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து வரும் 29ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு செல்வம், வருகின்ற செப்டம்பர் 29-ஆம் தேதி அகில இந்திய அளவில் தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. தேசிய எதிர்ப்பு தின பிரதானமான கோரிக்கை புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். […]
கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவரை சாத்தூர் காவல் நிலைய சார்புஆய்வாளர் திரு ஜெயம் கண்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து மாணவர் மலை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் RV. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அமைக்கப்படயுள்ளது என்றார். கொரோனா காலகட்டத்தால் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்றார் அவர். உலக வங்கின் நிபந்தனைகள் நிறைவேற்றிய பிறகு எய்ம்ஸ் […]
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்றுவரை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர்கள் வழிப்பறி செய்யும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 10-ம் தேதி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை இரண்டு இளைஞர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது மற்றொரு பைக்கில் வந்த நபர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் இருவரையும் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த பகுதியில் உள்ள […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு, மாணவர்கள் நேர்மையாக எழுதுவார்கள் என நம்பிக்கை விடுகிறார். இறுதி பருவத்தேர்வு பல்கலைக்கழகங்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் நேர்மையாக ஆன்லைன் தேர்வுகளை எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் இறுதிப் பருவத்தேர்வு நாளில் தொடங்கி வரும் 30ஆம் […]
மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உயிர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை […]
மதுரையில் தங்க நாணயம் என கூறி கவரிங் நாணயங்களை கொடுத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் அம்சவல்லி. 45 வயதான இவர், ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்தார். கடன் தொல்லையும் அதிகமாக இருக்கவே, தன்னிடம் உள்ள நகைகளை அடகு வைக்க முடிவு செய்தார். இதற்காக தன்னிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அடகு கடைக்கு சென்றுள்ளார். நகைகளைக் […]
நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாவட்ட காவல் உதவியாளர் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நீட் தேர்விற்கான பயம் இன்னும் மாணவர்களை விட்டு விலகவில்லை. அதனால் தான் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தற்பொழுது தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளராக […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தண்ணி வசதி, கரண்ட் வசதி எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் இரவு நேரம் வந்தால் பாம்பு, விஷப்பூச்சிகள் வருகின்றது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வண்டிகள் எதுவும் செல்ல முடியவில்லை. அதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார்.
குழப்பத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூவை வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டணம் செலுத்தி இருந்தாலே அரியர் பாஸ் என்று செய்தியை வெளியிட்டு இருந்தார். ஊடகங்களில் அரியர் எக்ஸாம் பாஸ் கிடையாது என்று புரளி கிளம்பி வருகிறது. எங்களுக்கு ஒரு முடிவு […]
போதையில் இளைஞர்கள் மழையில் நனைந்தபடி திருப்பரங்குன்றம் மலையில் சறுக்கிக் கொண்டு விபரீத விளையாட்டில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலான கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது.. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலையின் மேல் அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு மதுபோதையில் உயரமான மலையிலிருந்து விபரீதமாக சறுக்கி விளையாடியதோடு மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக அபாயகரமான விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.. மழை பெய்யும்போது மலைக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் மதுகுடித்து விட்டு […]
மதுரையில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவி இறந்த முப்பதாவது நாளில் அவரை போலவே தத்துரூபமாக சிலை ஒன்றை உருவாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்னும் பிரபல தொழிலதிபர். அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவர் மனைவி பிச்சைமணி அம்மாள் என்றால் அவ்வளவு பிரியம். இந்நிலையில் இவரது மனைவி கடந்த 30 நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று உடல் […]
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்கப்படுகிறது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக டாஸ்மார்க் கண்காணிப்பாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதாக கடைக்கு வந்த மதுபிரியரிடம் கடையின் மேற்பார்வையாளர் பேசிய வீடியோ வைரலாகி […]
சுயதொழில் தொடங்க உதவுவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை சேர்ந்த புவனேஸ், உஷா தம்பதியின் மகனான கிஷோர் என்பவர் சென்னையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் டீலராக இருப்பதாகவும், மதுரையில் தான் தொடங்கும் கிளை நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி திருநகரை சேர்ந்த ராஜ குரு என்பவரிடம் 95 லட்சம் ரூபாய் […]
மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கின்ற விளாச்சேரி பசும்பொன் என்ற நபரின் தர்மர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 27 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கும் மேல் உரப்பனுர் சிவன்ராஜ் என்பவரின் 16 வயதுடைய மகளுக்கும் நேற்று விளாச்சேரி பகுதியில் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி திருப்பரங்குன்றம் சமூகநலத்துறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பஞ்சவர்ண என்பவருக்கு […]
மதுரையில் அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பணியாற்றி வீடு திரும்பிய செவிலியருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். மதுரை ஆலங்குளம் ராமலிங்க நகரைச் சேர்ந்த திருமதி மீனா, அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சேவையாற்றி வந்த மீனா பணி முடிந்து இன்று வீடு திரும்பினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் […]
திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பரபரப்பு போஸ்டர் ஒன்றை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ‘தமிழக முதல்வர் […]
நடிகர் சூர்யாவை பாராட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொண்ட பட்டாளம் ஆகும். நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவது உள்ளிட்ட நற்செயல்களில் சூர்யா அடிக்கடி தலையிடுவதால் அவர் […]
தர்மம் தலைகாக்கும் என்ற கூற்றின் படி 1,10,000 ரூபாய் கொரோனா நிதி உதவியாக பிச்சை எடுத்து ஒரு முதியவர் கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 70 வயதான பூல்பாண்டியனுக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். வயோதிக காலத்தில் பிச்சை எடுத்துதான் சாப்பிடக்கூடிய நிலை இருந்தாலும் தனக்குப் போக தான் தானமும் தர்மமும் என்ற கருத்திற்கு விதிவிலக்காக இவர் அமைந்துள்ளார். ஏனென்றால் இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர் […]
மதுரையில் ஜாதியின் பெயரை கூறி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டும் அவலம் நிகழ்ந்துள்ளது. மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் அருகே சாதியை காரணம் காட்டி திறந்தவெளி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தூர் சாணார்பட்டி கிராமத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் அரசு புறம்போக்கு இடத்தை மறைவிடத்திற்கு செல்லக்கூடிய திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
முக கவசம் அணிவதில்லை என சட்ட விரோதமாக பேசியதை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். மதுரையில் இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. செல்லூர் ராஜு கொரோனாவோடு வாழ பழகியதால் முக கவசம் அணியாமல் செய்தியாளரை சந்தித்து பேசுவதாக கூறினார். முக கவசம் அணியாமல் வெளியே வரும் மக்களுக்கு காவல்துறை அபராதம் விதிக்கும் நிலையில் அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சு பெரும் சர்ச்சையை […]
“விவேகானந்தரின் விஜயமே வருக” என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விஜயின் ரசிகர்கள் கடந்த வாரம் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.. இந்த போஸ்டர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது விவேகானந்தரின் அவதாரமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இந்த போஸ்டரில் விவேகானந்தரின் விஜயமே வருக… நல்லாட்சி தருக! […]
திரையரங்கில் ‘வலிமை’ திரைப்படத்தை மட்டும்தான் முதலில் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு படங்கள் இறுதிகட்ட பணிகள் முடிந்தும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்பட பணிகள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்தது. வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த […]
மதுரையில் டீக்கடை வியாபாரி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.புதூர் சூர்யா நகரிலுள்ள ஜெய் கார்டன் பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் தனது மகன் முருகனுடன்(50) வசித்து வருகிறார். முருகன் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் டீக்கடை மற்றும் எண்ணெய் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கடைக்கு புறப்பட்டுச் சென்று விடுவார். டீ கடையை திறந்து வைத்துவிட்டு, கடைக்கு தேவையான பால் […]
மதுரையில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக […]
நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் பிரபல நடிகர் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் அவர்களது திருமண நாள். இந்த நன்னாளை அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொண்டாடாமல், அவரது ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி விஜய் அவர்களுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இளையதளபதியின் ரசிகர் இயக்கம் ஒன்று இதற்கெல்லாம் ஒருபடி […]