மதுரை அருகே பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்த படத்தில் ரூபாய் ஒரு லட்சம் கொரோனாவுக்கான நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். மதுரை பகுதிகளில் யாசகம் பெற்று வரும் பூல்பாண்டியன் என்ற முதியவர் தனக்கு பிச்சையாக மக்கள் அளிக்கும் பணத்தை தன் உணவு தேவைக்கு போக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் பணம் உணவு தேவை போக, அதிகமாக வரும் பட்சத்தில், கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை அவர் […]
Category: மதுரை
திருமண ஆசைகாட்டி 17 வயது சிறுமியை சீரழித்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி.. ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் மற்றும் மகன் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 7ஆம் தேதியன்று மதியம் 2 மணியளவில் டியூசனுக்கு படிக்கச் சென்ற பால்பாண்டியின் மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.. எனவே மகள் காணாமல் போய்விட்டதாக நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பால்பாண்டி […]
பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி பாஜகாவை சேர்ந்த வழக்கறிஞர் […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான முழு விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய பருவத் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கள் விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரள மாநில தேர்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக தாய்-மகன் ஆகிய இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை பெத்தானியாபுரம் மாதா கோவில் பாஸ்கி நகர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா தனது கணவர் வெள்ளைச்சாமி மற்றும் மகன் முரளிதரனோடு வசித்து வரும் நிலையில் எதிர் வீட்டில் உள்ள லூர்துசாமி என்பவருடன் மாநகராட்சி இட ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற போவதாக லூர்துசாமிடம் எச்சரித்துள்ளனர். இதையடுத்து ரெஜினா குடும்பத்தினரிடம், லூர்துசாமி குடும்பத்தினர் தகராறில் […]
மதுரை அருகே பட்டப்பகலில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் தேதிமுகவின் முக்கிய பிரமுகர் ஆவார். மேலும் இவர் மேலூர் யூனியன் தொகுதியின் முன்னாள் கவுன்சிலரும் ஆவார். இந்நிலையில் நேற்று திருவாதவூர் பகுதிகளில் இருந்து மேலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் செந்தில் பாண்டியன் சென்று கொண்டிருக்கும் போது அவரை திடீரென வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக […]
மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் மூட்டைகள் வீதியில் கிடந்த வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். சிகிச்சை […]
தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் திரு. சங்குமணி தொடங்கி வைத்தார். […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்ரமங்கலத்தில் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள விக்ரமங்கலம் கிராமத்தின் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை சுற்றியுள்ள 8 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த கண்மாய் விளங்குகிறது. இந்நிலையில் சிலர் இந்த கண்மாயை ஆக்கிரமித்து விவசாய நிலமாக […]
மதுரையில் கிராம பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாட்சியர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கூட்டியார்க்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரிகள் கிரஸ்ஸர் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு அதிக அளவில் மாசுபடுவதால் அதனை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் […]
மதுரையில் கொரோனா நிவாரண நிதிக்காக எட்டாவது முறையாக பத்தாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள யாசகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பூல்பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். பொது சேவையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் யாசகம் பெறுவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் […]
மதுரையில் உள்ள சிவன் கோவிலில் கண்டறியப்பட்ட அரியவகை மண்ணுளிப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் இருக்கின்ற சுடுகாட்டில் மயான சிவன் கோயில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவிலின் கருவறையில் இருக்கின்ற சிலைக்கு பின்புறமாக ஒரு அரிய வகை மண்ணுளிப்பாம்பு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சிவன் கோயிலுக்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிலையின் பின்புறம் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்டு அதனை நாகைமலை […]
ஆடிமாத கார்த்திகை விழா ரத்து…!!
சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வெளி நிகழ்ச்சிகள், உற்சவ விழாக்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை கோவிலுக்குள் உள் நிகழ்ச்சிக்காக மட்டும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது […]
பொய் புகாரில் கைது செய்து ராஜா என்பவரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், என்னை பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு தாமரைக்குளம் […]
மதுக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதில் எந்த ஒரு பொது நலனும் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் அன்னை சத்யா நகரில் இருக்கும் மறுவாழ்வு மையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘டாஸ்மாக் கடைகளின் வருவாயில் நலத்திட்ட உதவிகள் செய்தாலும் மதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம், தனி மனித […]
கண் பார்வையற்ற பெண் ஒருவர் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மதுரை மணிநகரத்தை சேர்ந்த கே.முருகேசன் என்பவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஆவுடைதேவி. முருகேசன் – ஆவுடைதேவி இந்த தம்பதியின் மூத்த மகள் பூர்ணசுந்தரி. இவர் 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று, இந்திய அளவில் 286-வது இடத்தை பிடித்து வெற்றிபெற்று இருக்கிறார். பூர்ண சுந்தரிக்கு 5 வயதில் ஏற்பட்ட […]
கடந்த 45 நாட்களாக கொரோனா தொற்றிலிருந்து மதுரை மீண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நிலையில் தற்போது மதுரை கொரோனாவில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறது. ஜூன் 20ம் தேதிக்கு பின் மதுரையில் மிகத் தீவிரமான கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. தினம்தோறும் 400க்கும் மேல்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்காப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டது. தினமும் 5000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா […]
மதுரையில் பழமை வாய்ந்த மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் இருந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்குடி ஊராட்சிக்குடபட்ட செங்கமேடு பகுதியில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் செங்கமேடு பகுதியில் இருக்கும் பழமையான கிணறு ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் அங்கு […]
மதுரை மாவட்டத்தில் பசு மாட்டை காப்பாற்றுவதற்கு 70 அடி கிணற்றில் குதித்த இரண்டு பெண்களின் செயல் பாராட்டை பெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற கிராமத்தில் மாடசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். அவர் தனது பசுமாட்டை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்காக வழக்கம் போல் கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் கிணற்றின் அருகே மேய்த்துக்கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக மாடசாமியின் 70 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அதனைக் கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி […]
உசிலம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முருகன்.. விவசாயியான முருகன் தனது 5 மாத சினைவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரின் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துள்ளது. அதனைக் கண்ட கண்ணன் உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]
மதுரை மாவட்டம் விளாச்சேரி கிராமத்தில் இருக்கும் ஐஸ்வர்யம் அறக்கட்டளை இது. உணவு,உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் ஏற்படுத்தி தரும் ஆதரவற்றோர் இல்லங்களை தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் இங்கோ நோய்வாய்ப்பட்தால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றவர்களை பராமரித்து வருகின்றனர் ஐஸ்வர்யம் அறக்கட்டளைமருத்துவர்களே நடத்தி வருவதால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் இங்கு இருப்பவர்களுக்கு கிடைக்கிறது. வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த ஐஸ்வரியம் அறக்கட்டளை, சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருவதற்கு காரணம் விளாச்சேரியை சேர்ந்த ஜனார்த்தனன் ஜலஜா தம்பதி, மத்திய அரசு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]
மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கின்ற பெரிய உலகாணி என்ற கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை காலம் என்பதால் விருசங்குளம் கிராமத்தில் இருக்கின்ற ஃபுட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் […]
சாத்தான் குளம் தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் வழக்கு தொடர்பாக தாமாக விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம், அமர்வு சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுருந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சிபிசிஐடி தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் அறிக்கை […]
செம்பட்டி பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து நடத்தி வந்த போலி மருத்துவர்கள் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடப்பட்டி என்ற பகுதியில் பெருமாள் என்பவர் வசித்துவருகிறார்.அவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் சொந்தமாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில் இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மற்றும் செம்பட்டி […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர். மேலூர் அருகே கம்பர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது. […]
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறவன் குறத்தி நடனம் ஆபாச நடனங்களாக சித்தரிக்கப்படுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்று குறிப்பிட்டு அதை பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க வலியுறுத்தி குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை மற்றும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தவர்கள் கூறுகையில் “கிராமிய […]
மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டாவிற்கு மாஸ்க்கும் பிரியாணிக்கு சானிடைசரும் இலவசமாக வழங்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மதுரை திருநகரில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புரோட்டா வாங்குவோருக்கு மாஸ்க் மற்றும் பிரியாணி வாங்குவோருக்கு சானிடைசர் இலவசமாக வழங்கப்படுகின்றன. 12 புரோட்டாவுக்கு இரண்டு மாஸ்களும் மூன்று பிரியாணி பாக்கெட்டுகளுக்கு 50மிலி சானிடைசருடன் […]
மதுரையில் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த தமது மருமகளுக்கு 101 வகை உணவுடன் தலைவாழை விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார். மாமியார் மருமகள் என்றாலே கீரியும் பாம்பும் போல சண்டை இட்டுக் கொள்வதாக பலரும் கருதுவது உண்டு. ஆனால் மதுரையைச் சேர்ந்த அஹிலா என்பவர் மாமியார் மருமகள் உறவிற்கு புது இலக்கணம் ஒன்றை எழுதியிருக்கிறார். மூன்றும்மாவடியை சேர்ந்த அபுல்ஹாசனுக்கும் ஷப்னா என்ற பெண்ணுடன் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக புதுமண தம்பதிகள் […]
மதுரையில் கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இப்பகுதியில் தொழில் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உழைப்பட்டி கிராமத்தின் மலை அடிவாரத்தில் முதுமக்கள் தாழிகள், கல்வட்டங்கள்,குத்துக்கள், கற்பலகைகள் என இறந்தோரின் நினைவாக உருவாக்கப்படும் அனைத்து சின்னங்களும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலை ஒன்றும் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் கருப்பு நிறத்திலான […]
ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில், ஆரம்ப காலகட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் சில வாரங்களாகவே […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை போடி லையன், பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கண் செந்தில் மற்றும் முருகன் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர் இருவரும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தநேரி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி […]
மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள உறவு சுமூகமாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் உள்ள முன்றுமாவடி என்ற ஊரைச் சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் ஆகிய இரு தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கு, சென்ற 9ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா பயம் மற்றும் ஊரடங்கு காரணமாக திருமணமான மணமக்கள் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு செல்ல முடியாத நிலை […]
இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழக முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரிப்பு. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் எவ்வித தளர்வின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அத்தியாவசிய கடைகளைத் தவிர எந்த ஒரு கடைகள் இயங்காது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுக்கடை முன்பு குவிந்தனர். தாங்கள் விரும்பிய மதுக்களை ஆயிரக் கணக்கான பணம் கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் நேற்று மது விற்பனை […]
கொரோனா கால ஊரடங்கால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. பெரும் பொருளாதார இழப்பை சந்தித்வர்களுக்கு தமிழக தமிழக அரசின் அறிவிப்புகள் சற்று ஆறுதலை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பிரதமரின் […]
இன்று மதுரையில் பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது […]
மதுரையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கியமானதா விளங்கும் மதுரையில் இதன் தாக்கம் கற்பனையிலும் எட்டாத வகையில் இருந்து. தமிழக அரசின் தொடர்ந்து சுகாதார நடவடிக்கையால் மதுரை தற்போது மீண்டு வருகின்றது. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது இருந்த பாதிப்பை விட தற்போது குறைந்த அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
பாலமேடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த மனைவியால் இரு குழந்தைகளுடன் கணவர் விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார்.. வயது 42 ஆகிறது.. இவரது மனைவி உஷாராணி (36).. இவர்களுக்கு சித்தார்த் (6), கோப்பெருஞ்சோழன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த மஸ்தூர் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.. இந்த நிலையில், அங்கு […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில், 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
முன்விரோதம் காரணமாக மேல அனுப்பானடி பகுதியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மீது மதுரை மாநகர் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தநிலையில், இன்று அதிகாலை முத்துக்குமார் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முத்துக்குமாரை […]
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சிலதினங்களாக மெல்ல குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது.. கொரோனா வைரஸ் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் அதிக அளவில் பரவி வந்தது.. அதனை தொடர்ந்து மதுரையில் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வந்தது.. மதுரையில் கடந்த வாரம் முன்பு வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 200இல் இருந்து 300 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படதன் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் 245 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 8,103 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 228 […]
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]
வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதையடுத்து, பள்ளி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகள் கவிதா. இவருக்கு வயது 16 ஆகிறது.. இவர் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு 11ஆம் படிக்கவுள்ளார். இதற்கிடையே மாணவி கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் 23 வயது மகன் செல்லப்பாண்டி என்பவரை 2 ஆண்டுகளாக தீவிரமாக […]
மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், […]
பசுவை பிரிந்த காளையின் பாசத்தை காணொளியை பார்த்து உணர்ந்த துணை முதல்வர் மகன் தனது முயற்சியால் இரண்டையும் சேர்த்து வைத்துள்ளார். மதுரை பாலமேட்டை சேர்ந்த விவசாயி முனியாண்டி என்பவரது பசு மாடும், மஞ்சமலை கோயிலில் உள்ள காளையும் ‘நட்புடன்’ பழகி வந்தன. ஒன்றாக தண்ணீர் குடிப்பது உணவருந்துவது என இருந்த நிலையில் விவசாயி தான் வளர்த்து வந்த பசுவை ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் விற்க முடிவு செய்து 2 நாட்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதனை […]
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா அதிகமாக இருக்கிறது. சென்னை தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை விளங்கியதை போல மதுரையிலும் கொரோனா தொற்றில் தாக்கம், அதன் வேகம், அதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மதுரை தாலுகாவில் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியுள்ளார். மதுரையில் […]
மதுரை மாவட்டத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் மையமாக, கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னையில் முன் மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசின் கொரோனா நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]