மதுரையில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மார்ச் 23 ஆம் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் பலரும் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே உற்றித்திரிவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அந்த […]
Category: மதுரை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
மதுரையில் தனக்கு கொரோனா உள்ளதாக பக்கத்து வீட்டினர் வீடியோ பரப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தற்கொலை செய்துள்ளார். மதுரையை சேர்ந்த முஸ்தபா கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக மதுரை பிபி குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி உள்ளார். சளி இருமல் மற்றும் உடல்சோர்வு இருந்ததால் முஸ்தபாவிற்கு கொரோனா இருக்கலாம் என்று கருதிய அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
மதுரை மாவட்டம் மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளையும் உடனே மூட உத்தரவிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் சென்று திரும்பிய 9 பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில் 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை […]
மதுரையில் சாலையோர மக்களுக்கு 3 வேலையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வீடின்றி சாலையோரம் வாழ்பவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் ஆர் பி உதயகுமார் உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் மதுரை திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாலையோரம் மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் உணவின்றி தவிக்கும் […]
ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர். செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]
மதுரை அருகே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் காதலியை பார்க்க சென்றதால் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற கணிப்பில் அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விஜய் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே கண்காணிப்பில் இருந்து தப்பி சென்ற தனது காதலியை சந்தித்து விட்டு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார் விஜய். அப்போது […]
மதுரையில் கொரோனா குறித்து பொய்யான வதந்திகள் பரப்பி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருவதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பொய்யான தகவல்களை பரப்பி வருவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, மதுரை கரியமேடு பகுதியில் வசித்து வரும் கார்முகிலன் என்பவர் கொரோனா குறித்து தவறான […]
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பொது வழியில் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவையும் மீறி ஒரு சில பகுதிகளில் மக்கள் பொது வழியில் நடமாடி வந்தனர். மதுரையில் உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பினர்.
மதுரையில் தேவையின்றி வெளியே வந்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]
மதுரையில் மஞ்சள் தூளை தண்ணீர் லாரிகளில் போட்டு கலக்கி ரோடு முழுவதும் தெளித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். இந்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே மக்கள் வெளியில் வராமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் […]
கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மத்திய சிறையிலிருந்து 51 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவருக்கு குணமானது. இதனால் தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு இருக்கிறது என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று பேரில் இரண்டு பேர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மதுரையில் நாளை நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை சிறு சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் , முடிந்த அளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் நிலையில் தமிழக அரசும் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. அந்தவகையில் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் நாளை […]
கொரோனாவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுரை மாணவர்கள் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு என்பது உலக அளவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தட்டுப்பாடு காரணமாக விலை சற்று அதிகம் உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. மேலும் சானிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி பட கூடாது என்பதற்காக மதுரை பார்மஸி கல்லூரி மாணவர்கள் மாநகராட்சியுடன் இணைந்து நாளொன்றுக்கு […]
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. பொதுவாக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை விரட்டுவதில் அதிக கடுமையான முறையை பின்பற்றுகிறது இலங்கை கடற்படை. அதே போன்று சில சமயங்களில் வலைகளை அறுத்தல் மற்றும் படகுகளை குறிவைத்தும், மீனவர்களை குறி வைத்தும் துப்பாக்கிச்சூடு நடத்துவதையும் தொடர்ந்து ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மாயமாவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் கடந்த […]
மதுரையில் 40 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக போலி வதந்தியை பரப்பியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் நமது மக்களிடையே தாறுமாறாக அதிகரித்து உள்ள நிலையில், அதற்கேற்றபடி மேலும் அச்சத்தை பெருக்க வதந்திகளும் அவ்வப்போது கிளப்பி விடப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் சுமார் 40 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது. ஆனால் கள நிலவரப்படி மதுரையில் […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தங்களை தற்காத்துக்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்றும் , மால்கள் , பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூட அறிவித்தும் , மக்களை அதிகமாக ஒரு இடங்களில் கூட வேண்டாம் என்று […]
தமிழகத்தில் உசிலம்பட்டி அருகே தாய் தனது 3 மாத குழந்தையை குளிக்க வைக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (30) – காலாவதி (25) இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு யுவஸ்ரீ(2) மற்றும் மோனிஷா என்ற 3மாத குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்ததால் கலாவதி அவரவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]
மதுரை அருகே பெண் குழந்தை என்பதால் எருக்கப்பால் கொடுத்து கொல்லபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செக்கானூரணி அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சௌமியா , வயிரமுருகன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லோடு மேனாக இருக்கும் இவரின் மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பெண் சிசு பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாததை கண்ட அண்டை வீட்டார்கள் குழந்தை எங்கே ? என்று […]
மதுரையில் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளிக்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசு விழா ஒன்றிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை சென்றிருந்தார். அங்கு அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை, அத்துமீறி முதல்வரிடம் 7 தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரும், அவருடன் தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த […]
மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் 2000 ரூபாய் பொம்மை தாள் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பசுமலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் ரூபாய் 2000 எடுக்க ராஜசேகர் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்து சிறுவர்கள் விளையாடக்கூடிய 2000 ரூபாய் பொம்மைதாள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், அதனை புகைப்படம் எடுத்தும் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் […]
கமல்ஹாசனுக்கு அதிமுக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருவதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடந்தது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜா நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது என்றார். இதில் எந்தவித எந்தவிதமான புரட்சிகர திட்டத்தை கமல்ஹாசன் […]
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட மாணவர் அவை திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் பழனிபாபா மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இருவரை காவல்துறையினர் முன்கூட்டியே கைது செய்தனர். இதைத் தொடர்ந்து முழக்கம் எழுப்பியவாறு செல்லூர் ராஜுவின் வீட்டின் அருகே செல்ல முயன்ற மேலும் 4 பேரை கைது செய்தனர். அப்பகுதியில் […]
20 வயது இளம் பெண்ணை காதல் செய்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குலமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கூலி வேலை செய்யது வருகிறார் இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார். 17 வயதான சேவாக் ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை […]
மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]
மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூவலப்புரம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சமயத்தில் முட்டுதுறை என்று அழைக்கப்படும் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இங்கு தங்குவதற்கு இரண்டு அறைகள் […]
போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், புகார் அளித்த பெற்றோர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாலியல் புகார்கள், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஒழுக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். மேலூர் அருகே உள்ள வலையசேரி […]
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை, அரசுப்பள்ளிகள் அழிவின் விளிம்பில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்னர். ஆண்டிப்பட்டி அருகே 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கராஜ புரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பது புகாராகும். இதனால் பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூர் […]
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு 2 பேர் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சீனாவிலிருந்து தமிழ்நாடு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த காரணத்தால் நேற்று இரவு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 2 பேரும் கொரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் 24 மணி நேரமும் […]
கள்ளக்காதலில் ஈடு பட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்து போலீசில் சரணடைந்த கணவர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் சண்முகம் மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளன.ர் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ள நிலையில் ஒரு மகன் மட்டும் திருமணம் ஆகாத நிலை கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மாரியம்மாளின் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ”சென்னை […]
குடித்துவிட்டு வந்து தகராறு செய்த தம்பியை கொன்று எரித்த அண்ணன் மற்றும் குடும்பத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருக்கும் கூடகோவிலை சேர்ந்தவர் சுரேஷ். குடும்ப பிரச்சினையின் காரணமாக சுரேஷின் மனைவி பிரிந்து சென்றுவிட விரக்தியில் இருந்த சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாக தகவல் உள்ளது. வழக்கம்போல் நேற்றும் மது அருந்திவிட்டு கையில் கத்தியுடன் வந்து பொதுமக்களைகுத்தி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதை அறிந்த சுரேஷின் பெரியப்பா […]
கணவன் மனைவி இடையே தகராறு பெண் தற்கொலை செய்துகொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அயோத்தி பட்டி காலனியை சேர்ந்தவர் தினேஷ்வரன் மகாலட்சுமி தம்பதியினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எப்போதும் போல் நேற்றும் கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது . இதில் மன […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தால்தான் டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியில் நடைபெற்ற பொதுத்தோ்தலில் பாஜகவிற்கும் சங்பரிவாா் அமைப்பிற்கும் மக்கள் பாடம் புகட்டியுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலில் புறக்கணித்துள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனா். […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்தில் மாயமான விடைத்தாள் கட்டு மூன்று மாதம் கழித்து அதே பேருந்தில் இருந்தது சர்ச்சையாகி உள்ளது. திண்டுக்கல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் விடைத்தாள் கட்டுகள் கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் உள்ள பேருந்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் 138 விடைத்தாள்கள் அடங்கிய ஒரு கட்டு மற்றும் மாயம் ஆனது. இதனால் அந்த கல்லூரிக்கான தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. . இந்த நிலையில்விடைத்தாள் கட்டு மயமான அதே பேருந்தில் […]
திருக்குறளை மேற்கோள் காட்டி, விஜய் ரசிகர் திருமங்கலத்தில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி குறித்து எதுவும் விஜய் அறிவிக்காத நிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நிர்வாகிகள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பிற கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பிகில்’ பட விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர், கடந்த வாரம் திரைப்படத்தில் தொடர்புடையவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் நடிகர் விஜய்யை மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாக […]
காளவாசல் சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடைய நபர்களை அதிரடியாகக் கைது செய்தும் வருகிறது. இந்நிலையில் மதுரை காளவாசல் சந்திப்பு அருகேயுள்ள வணிக வளாகத்தின் முன்புறம் 17வயது சிறுவன் கஞ்சா விற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் […]
மோதலில் ஈடுபட்ட திருச்சி பிராட்டியூர் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மீதான எப்ஐஆர்ஐ ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி பிராட்டியூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 28 மாணவர்களை கைது […]
மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான். சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின் மோட்டார் சைக்கிள் மீது […]
பாஜகவினர் நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறி விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா கூறியிருப்பதாவது “நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரத்குமாரின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஒன்று ஏற்பட்டது அதன் பின்னர் அவ்விடம் சூட்டிங் எதுவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடந்ததால் பாரதிய […]
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி […]
மதுரையில் தட்ச்சு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்ற நிலையில் மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக மரகதம் என்ற பெண் சிக்கியுள்ளார். ஒரு பெண்ணிற்காக விக்னேஷ் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனடிப்படையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் […]
தஞ்சை பெரிய கோவிலில் இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குரூப் 4 பொது தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்றும் தினகரன் […]
மதுரை அருகே பத்திரிக்கையில் பெயர் போடாததால் வந்த தகராறில் பெண் ஒருவர் உயிரிழக்க மாப்பிளை கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை அடுத்த துள்ளகுட்டிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அதே பகுதியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவர்கள் இருவரும் சொந்தக்காரராக இருந்தாலும், இரு குடும்பத்தினர் இடையே நீண்ட காலமாக இருக்கும் சண்டை காரணமாக பேசிக்கொள்வதில்லை. இந்நிலையில் ராமரின் மகன் சதீஷ்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டார் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் சமயத்தில் சின்னச்சாமியின் பெயரை […]
பதிவாளர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் யாருக்கும் தகுதியில்லாததால், மீண்டும் விளம்பரம் செய்து குழு அமைத்துத் தேர்வுசெய்ய காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவுசெய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) சங்கர் இருந்துவரும் நிலையில், அப்பதவிக்கு பல்கலைக்கழகம் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 24 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என். ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லட்சுமிபதி, ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு […]
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் எட்டு படுக்கைகளை கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது கொரோன வைரஸ் சீனாவில் வேகமாக பரவி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளதால் உலகநாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவினை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கி வைத்தார். இங்கு கொரோன வைரஸ் அறிகுறிகளைக் கண்டறியும் கருவிகளுடன் இரு நுரையீரல் […]
மதுரையில் அரசு நிலத்தை தனி நபர்களுக்கு தாசில்தார் பட்டா போட்டு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்றையதினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், நாவினிப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம், மைதானம், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழக அரசிடம் தொடர்ந்து கிராம […]
தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால், அதற்கு தடை கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் தடைகோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சரவணன் தரப்பில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது. தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரியகோயில், குடமுழுக்கு விழாவை நடத்த தடைவிதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து […]
மதுரை அருகே பள்ளிக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி கிராமசபை கூட்டத்தில் துணிச்சலாக கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு மீனாட்சிபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது, இதனை பார்ப்பதற்கு சஹானா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி தனது தோழிகளுடன் சென்று இருந்தார். அப்போது திடீரென ஊராட்சி மன்ற தலைவரை நோக்கி ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் […]
சி.பி.ஏ. கல்லூரியில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தாக்கல்செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, உயர் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஏலத்தோட்ட விவசாயி முருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார். அதில், “போடியில் ஏலத் தோட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கல்லூரி (சி.பி.ஏ. கல்லூரி) ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியானது மதுரை காமராஜர் பல்கலைக்கழக மானியக்குழுவின் 100 விழுக்காடு […]