நாகூரில் நோயால் பாதிக்கப்பட்ட சமையல்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த முகமது இர்சாத் (27) என்பவர் சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார். தோல் நோய் பாதிக்கப்பட்ட இவர் இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட […]
Category: நாகப்பட்டினம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குத்தாலம்,ஆலங்குடி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த […]
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு வருடமும் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய […]
சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்து சிஐடியூ மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையின் முன்பாக கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சிஐடியு மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவரான […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள ஒருசில மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். […]
மின்னல் தாக்கி இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கள்ளிமேடு, கரியாப்பட்டினம்,குரவப்புலம், தோப்புத்துறை போன்ற பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் கரியாப்பட்டினம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இரவில் மின்னல் தாக்கியுள்ளது. இதனால் தென்னை மரங்களில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் தமிழ்ச்செல்வனின் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்து […]
மயிலாடுதுறையில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசெல்வம் என்பவர் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகே மளிகை கடை ஒன்றை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூபாய் 25,000 மதிப்புள்ள மளிகை […]
கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள புதுப்பள்ளி பகுதியில் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது பாலத்தின் அடியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர்கள் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), சிவசந்தன் (25) என்பதும், இருவரும் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை […]
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்த கேசவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் துக்கநிலையிலிருந்து மீள முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய மகள் பிரியா(35) சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று விட்டார். இதை […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . மயிலாடுதுறை 2-வது புதுத்தெருவில் மகாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதன் பின்னர் […]
நாகையில் அணில், புறாக்களை வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் தலா 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தம்பிதுரை பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்த புறாக்களை வேட்டையாடி உள்ளனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் புறாவை வேட்டையாடிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் காரைக்கால் அருகே கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவா(20) மற்றும் […]
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 13-ம் தேதி இரவு நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக 100 நாள் வேலை பார்க்கும் இடங்களில் தடுப்பூசி போட்டால் தான் வேலை […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பூதனூர் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை அடுத்த கீழப்பூதனூர் ஊராட்சியில் நத்தம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார். இந்த தடுப்பூசி முகாமில் முதலில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதோடு 130 […]
மருத்துவமனை மேலாளரிடம் பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்து தனியார் மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதியன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை கதவின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். இவர் திருட முயற்சி செய்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி ,சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அத்துடன் அன்றைய தினமே பகலில் […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி ,வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி மாவட்ட தனிப்படை போலீசார் அறிவழகன் ,பாலச்சந்திரன் மற்றும் போலீசார் ஆகியோர் நேரில் சென்று சோதனையிட்டனர் .அப்போது […]
நாகையில் திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தப் பொறியியல் கல்லூரியில் உள்ளூர் ,வெளியூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர் .மேலும் வெளியூரை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பொறியியல் கல்லூரி திருக்குவளை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து கல்லூரி வளாகத்திற்கு மாணவர்கள் […]
மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் மனைவி கண் முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் எலந்தங்குடியில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஆடுதுறைக்கு முகமது ரபீக்கும் அவரது மனைவி அபாரத் நிஷாவும் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை கண்ணாரதெரு […]
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார் . நாகை மாவட்டம் சீர்காழி அருகே நிம்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட தத்தங்குடி கிராமத்தில் பழைய ஓ.என்.ஜி.சி திடல் அருகே அனுமதியின்றி அதே கிராமத்தை சேர்ந்த சக்தி வீரன் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றி சென்றுள்ளார் .இதைக்கண்ட அப்பகுதி மக்கள் டிராக்டரை தடுத்து நிறுத்தினர் .இதுகுறித்து சீர்காழி தாசில்தாரான சண்முகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த போலகம் குருவாடி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமி பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகை அனைத்து மகளிர் காவல் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை […]
நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களான வெள்ளி ,சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்தது .இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் ,வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் நாகூர் தர்கா உட்பட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி மூன்று […]
அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி ஆற்றிலிருந்து 4 மூட்டைகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த மணல்மேடு […]
நாகையில் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவரான தியாகராஜன் தலைமை தாங்கியுள்ளார். இந்த தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி லியாகத்அலி நேரில் பார்வையிட்டார். இந்த முகாமில் 315 […]
நாகை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . நாகப்பட்டினம் மாவட்த்தில் வேதாரண்யம் ,கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதியில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்த முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி பிறகு வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடி அமாவாசை நாளில் கடலில் பொதுமக்கள் நீராட மாவட்ட […]
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டார் . மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை தாங்கியுள்ளார். மேலும் விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆட்சியர் வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி ,சனி , […]
இடப்பிரச்சினையால் விவசாயி ஒருவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன்(55) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரும் இதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமார்(29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வந்துள்ளனர் . இந்த நிலையில் ஜெயக்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் புருஷோத்தமன் கருவேலமரங்களை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]
நாகை அருகே மயங்கி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (90) என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இரவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பிடாமல் துங்கியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் பார்த்தபோது முதியவர் சண்முகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் […]
நாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் நாகூர் யூசுப்பியா நகரில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் , சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் ஒரு வீட்டில் இருந்த […]
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் […]
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது ,அதி வேகமாக சென்று விபத்துக்கள் ஏற்படுவது போன்ற புகார்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இந்தப புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு உத்தரவின்படி ,நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின்படி வட்டார போக்குவரத்து அலுவலரான வெங்கட கிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நாகை மற்றும் சுற்றுவட்டார […]
மயிலாடுதுறையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி மற்றும் தாசில்தார் சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். இந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து […]
கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 95 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த உமா(20) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற தன் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரின் புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு என்பவர் கணவரிடம் சேர்த்து […]
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைபோலீசார் திடீர் சோதனை நடத்திய போது கணக்கில் வராத ரூபாய் 21 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். நாகையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் நாகை தாலுகாவிற்கு உட்பட்ட 139 ரேஷன் கடைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களிடம் இருந்து வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் லஞ்ச ஒழிப்பு […]
முன்விரோதத்தால் அதிமுக பேச்சாளரை தாக்கிய சகோதரர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் தெற்கு வீதியை சேர்ந்த மணவைமாறன் என்பவர் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளார். இவருடைய சகோதரருக்கும், இவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று மணவைமாறன் வீட்டில் இருந்தபோது அவருடைய சகோதரர்களான சீதாராமன், சீனிவாசன் ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு திட்டி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த […]
கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பவுன் நகை, ரூபாய் 25,000 ஆயிரம் தீயில் எரிந்து சேதமடைந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேட்டை அடுத்துள்ள தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி மாரியம்மாள். இவர் நேற்று காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் கூரையில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். […]
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தாலி செயினை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பன்னாள்கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(70) என்பவரின் மனைவி நாகலட்சுமி (68).இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (32) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . […]
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் . மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் ரயிலடி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் .இவருடைய தம்பி சுரேஷ் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை தம்பி சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கடையூர் மெயின் ரோட்டில் வந்து […]
சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலச்சாலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்த எத்திராஜ்(70) என்பவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாலையில் சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில் வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ […]
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள மருதூர் தெற்கு ஆண்டியப்பன் காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் லாரி டிரைவராகவேலை பார்த்து வந்துள்ளார் . இவருக்கு ரம்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி ரம்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆகஸ்டு மாதம் 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் . நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்தப் பேராலயம் ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இந்தப் பேராலயத்தின் ஆண்டு விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி கிராமம் நடுபாலத்தில் அருகில் சந்தேகப்படும் படியாக 2 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர் . இதனால் அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேனாதிபதி(27), சங்கர் (23) என்பதும், இருவரும் […]
கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் . நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரனிருப்பு பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (27)என்பதும் ,அவர் பையில் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து […]
சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே கன்னியாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி விஜயா. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அதிகாலை நேரத்தில் அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு விஜயா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே […]
மணல்மேடு அருகே இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (31) என்பவர் கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற போது கரையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் கரைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மணல்மேடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் […]
குத்தாலம் அருகே 3 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு மெயின் ரோட்டில் வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரின் கூரை வீடுகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது இவர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீ எதிரே உள்ள சுரேஷ் என்பவரின் கூரை வீட்டிற்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது. இதில் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம் ,வீட்டு உபயோகப் பொருட்கள் […]
கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி பழனிசாமியை மடக்கிய ஆரோக்கியசாமியின் இரு மகன்களும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பழனிசாமி […]
அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாப்படுகை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது மாப்படுகை அண்ணாசாலை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் […]