திருவெண்காடு அருகில் பட்டவெளி வாய்க்கால் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக பட்டவெளி வாய்க்கால் இருக்கின்றது. இந்த வாய்க்கால் மணிகர்ணிகை ஆற்றிலிருந்து பிரிந்து எம்பாவை, நெருஞ்சிகொள்ளை, மங்கைமடம் போன்ற பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நில வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கின்றது. எனவே மணிகர்ணிகை ஆற்றிலிருந்து தொடங்கும் இடத்தில் வாய்க்கால் மதகு முழுவதுமாக சேதமடைந்து இருப்பதனால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத […]
Category: நாகப்பட்டினம்
மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினரும், பொதுமக்களும் ஒத்துழைக்க தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீ நாதா விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுகுணா சிங் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பதவியேற்றுக் கொண்ட சுகுணா சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் முழுமையாக செயல்படுவதற்கு […]
வாகன சோதனையின்போது குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் காவல்துறையினர் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தனது உறவினருக்கு […]
ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் காவல் அதிகாரி பால்ராஜ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செங்காதலை ரோட்டில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஸ்கூட்டர் மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் கடத்தி வந்த […]
சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரியாப்பட்டினம் காவல் எல்லை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கத்தரிப்புலம் கிராமம், கோயில் குத்தகை வடக்கு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் முதியவர் ராம்சிங் என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், ஊறல் போட்டு வைத்திருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.அதன்பின் வீட்டில் இருந்த 1 லிட்டர் எரிசாராயம் மற்றும் 2 […]
சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது உப்பனாறு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாராயம் காய்ச்சிய 3 பேரை மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் கொள்ளுதீவு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன், வெற்றி செல்வன் மற்றும் […]
பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை ஜெயிலில் அடைத்தனர். மயிலாடுதுறையில் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் மீது 2010- 2018 ஆம் ஆண்டு வரை அந்தப் பள்ளியில் படித்த மாணவி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி பாலியல் தொல்லை […]
பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாதர் சங்க மேலாளர் தேவகி, ஒன்றிய துணைச் செயலாளர் நீதிசோழன், விவசாய சங்க செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இளைஞர் மன்ற செயலாளர் பிரபாகரன் […]
சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மரம் முறிந்து வீட்டின் மேற்கூரையில் விழுந்ததில் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணியளவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிச்சைக்கட்டளை கிராமத்தில் தனது குடும்பத்துடன் பாஸ்கர் என்பவர் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இதனையடுத்து […]
ஊரடங்கு காலத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி ஒருவர் காய்கறி விற்பனையை நிறுத்திவிட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ஏக்கர்கணக்கான நிலப்பரப்பில் விவசாயிகள் தோட்டப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் ரசாயன உரங்கள் இல்லாமல் புடலை, பாகல், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, பீர்க்கங்காய், கத்திரி, வெண்டை போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் வேட்டங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி நந்தீஸ்வரன் தோட்டக்கலை துறையின் மூலம் விதைகள் வாங்கி சாகுபடி செய்துவந்தார். இவை இயற்கையாக […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்தவர்களின் 500- வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 60 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி திறந்து வைத்திருந்த கடை உரிமையாளர் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று கொள்ளிடம், ஆனைக்காரன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு காவல் எல்லைக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வேதாரண்யத்தில் படித்துக்கொண்டு தலைஞாயிறு பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான், பி. ஆர். புரம் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் இருக்கின்றது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி, கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரை […]
திருச்சம்பள்ளியில் சட்டவிரோதமாக சாராய ஊறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் ஆங்காங்கே சாராய ஊறல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, அந்தந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதிக்கு அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் காலை […]
போலீஸ் ஏட்டு வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு உரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு தேவை இன்றி யாரும் வெளியில் சுற்றக் கூடாது என அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் ஆட்டோ […]
மகன்கள் நுங்கு கேட்டதால் மரத்தில் ஏறி பறிக்கச் சென்ற தந்தை நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கலியபெருமாள் மகன்கள் இருவரும் அவரிடம் நுங்கு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதனால் கலியபெருமாள் அவரது வீட்டின் பின்புறம் […]
தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மனைவி ராஜகுமாரி கடந்த 22ஆம் தேதி பிரசவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 24 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயத்தில் ராஜகுமாரிக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் அவரும் அவருக்கு […]
சாராயம் குடித்ததால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி தென்பாதி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டரிடம் கடந்த 27ஆம் தேதி சாராயம் குடித்ததாகவும் அன்று முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கண் சரியாக தெரியவில்லை எனவும் பிரபு கூறியுள்ளார். இதனையடுத்து பிரபுவுக்கு மூச்சுத்திணறல் […]
காவல்துறையினர் 400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துவிட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓதவந்தான்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலியபெருமாள் அவரது வீட்டில் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி புதுப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் வீட்டில் இருந்த 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி அழித்துவிட்டனர். மேலும் […]
வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என நரிக்குறவர் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் ஊசி பாசி மணி என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வாழ்ந்து வரும் நரிக்குறவர்கள் […]
வாழ்வாதாரத்தை இழந்து தவிர்ப்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பேருந்து நிலைய பகுதிகளில் இருக்கும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கடையில் இருக்கும் பழங்கள், கூல்ட்ரிங்ஸ், தின்பண்டங்கள், பூக்கள் போன்ற அனைத்து பொருட்களும் வீணாவது. இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடை உரிமையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் […]
பொதுப்பணித்துறை சார்பில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியானது துவங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேல தேனூர் கிராமத்தில் இருக்கும் புதுமண்ணி ஆற்றில் பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பணி நடைபெறுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி பொறியாளர் சரவணன் என்பவர் தலைமை தாங்க சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் பிரபாகரன் பணியை துவங்கி வைத்துள்ளார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 65 […]
அக்னி நட்சத்திரத்தால் நாகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. அன்று முதல் நாகையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த வெயிலால் மதிய வேளையில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும் பகலில் வாட்டி வதைக்கும் இந்த வெயிலின் தாக்கமானது இரவிலும் தென்பட்டது. இதற்கிடையில் புயல் காரணமாக 14, 20, 21 ஆகிய தேதிகளில் மட்டுமே நாகையில் மழை பெய்து சற்று குளிர்ச்சி நிலவியது. […]
டத்தே புயலில் சிக்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நாட்டார் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “நாகையில் சமந்தான்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய தந்தை இடும்பன் மற்றும் அண்ணன் மணிவேல், நாகூர் பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ், […]
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து தர வேண்டி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றியம் பகுதியில் வெள்ளை ஆற்றிலிருந்து ஏர்வைகாடு என்ற இடத்தில் இருந்து பிரிந்து சந்திர நதி ஆறு செல்கிறது. இந்த ஆறு வேதாரண்யம் கால்வாயில் கலந்து கடலில் கலக்கிறது. இந்த சந்திரநதி ஆறு மூலம் அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனையடுத்து கருங்கண்ணி பகுதியில் சந்திரநதியின் குறுக்கே […]
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர் கிராமத்தில் மயில்வாகனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவருடைய வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி […]
ஊரடங்கை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 90 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பால் கடை, மருந்து கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு கடைவீதி, பஸ் நிலையம், வில்லியனூர், கடலங்குடி, […]
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 7 பேரை தேசிய புலனாய்வுத் துறையினர் கைது செய்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த கோவையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் […]
ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 104 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த முழு ஊரடங்கினால் உள் மாவட்டத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பேருந்து நிலையங்கள், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் […]
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ் மணியன் கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்படுவதாகவும், அதனை மறைத்து தமிழக அரசு குறைவான எண்ணிக்கையை வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
கொரோனா ஊரடங்கினால் சங்கீத கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் நிவாரணத்துக்காக அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை, ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகளின் போது நாதஸ்வரம், தவில் ஆகியவை இசைக்கப்படும். இதன்மூலம் சங்கீதக் கலைஞர்கள் வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோவில்களில் பக்தர்கள் […]
சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சீர்காழி மதுவிலக்கு காவல்துறையினர் ஆறுமுகம் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து ஆறுமுகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 105 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் நாகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை மேற்கு வங்காளம் மற்றும் வழக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த யாஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் […]
கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் பகுதிக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் கோடியக்கரை பகுதிக்கு ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. இந்த கப்பல் நீரிலும் நிலத்திலும் செல்லும் தன்மை கொண்டது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வேதாரண்யம், விழுந்தமாவடி, செருதூர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை போன்ற பல மீனவ கிராமங்கள் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள் முட்டைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் இந்திய கப்பல் […]
திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கும் நாகை மாவட்டத்திலுள்ள மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று ரேவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய உள்ளார். இதனை கண்ட அக்கம் […]
மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோட்டை கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் காளிதாஸ் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென கனமழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த காளிதாஸ் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது அருகில் இருந்த அவருடைய பேரன் லேசான காயங்களுடன் […]
நாற்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு மற்றும் தரங்கம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதிகளான நல்லாடை பரசலூர், மேமாத்தூர், கீழமாத்தூர், செம்பனார்கோவில், காலகஸ்தி, நாதபுரம், ஆறுபாதி, விளநகர், இலுப்பூர், சங்கரன்பந்தல் போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் அப்பகுதி விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து இருந்தனர். தற்சமயத்தில் நாற்றங்கால்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து நடவு செய்யும் […]
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொம்மலாட்ட கலைஞர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையிலிருந்தே ஊரடங்கு காரணமாக பொம்மலாட்ட கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி […]
தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி மற்றும் பொறையாறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழங்கும் சிகிச்சை, மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் ஆகியவற்றை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். மேலும் இரண்டு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர்களிடம் சிகிச்சை முறைகள், தேவையான அளவு மருந்துகள் உள்ளனவா? போன்றவற்றைக் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர் தடுப்பூசி போடும் பணியைகுறித்து […]
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரி அவருடைய கணவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி பகுதியில் முத்து-மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். மீனா கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மீனா கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய மீனாவுக்கு ஆறு நாட்கள் […]
மதுக்கடையின் சுவரை துளையிட்டு மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாதானம் கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு மதுக் கடையில் உள்ள 67 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த […]
பாதியில் நிற்கும் சாலை பணியை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் கிராமப்புற சாலைகள், பாலங்கள், மதகுகள் அமைப்பது தொடர்பாக 2019ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேம்படி மற்றும் வேட்டங்குடி சாலைகள் மட்டும் தார் சாலைகளாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் திடீரென அரைகுறையாக நிறுத்தப்பட்டு பணி கிடப்பில் […]
இலுப்பை மரத்தை அழிவிலிருந்து மீட்டு அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கீழாய், இழுப்பப்பட்டு, குறிச்சி, சுத்தமல்லி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் இலுப்பை மரங்கள் தோப்புகளாகவும் தனித்தனி மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்த மரம் முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த மரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு […]
பழுதடைந்த ரயில்வே மேம்பால கைப்பிடிச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த 45 ஆண்டுகளாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாலத்தின் மேல் வடக்கு பகுதியில் கைப்பிடி சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்பாலத்தின் மீது கனரக […]
குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் கிராமத்தில் விக்னேஷ் என்ற விவசாயி வசித்து வந்தார். இவருடைய மனைவி அபிதா கர்ப்பமாக உள்ளார். இவர்களுக்கு ஏழு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் கொண்டுள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விக்னேஷ் தனது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]
இ-பதிவு முறை அமலுக்கு வந்ததையடுத்து சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக உள் மாவட்டங்களிலும் வெளி மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய கடந்த 17ஆம் தேதி முதல் இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று முதல் இ-பதிவு முறை […]
டாஸ்மார்க் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை முழு ஊரடங்கு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கிறது. இந்தக் கடையில் மைக்கேல் ராஜ், அந்தோணி என்பவர்கள் காவலாளியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காவல்பணியில் இருக்கும் போது டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு கடந்த 14ஆம் தேதி […]
அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரூபாய் ஒரு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பலருக்கு தினமும் 200 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த […]
குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் பகுதியில் ஊத்தா வெட்டிகுளம் உள்ளது. இந்த குளம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாகும். தற்போது இந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் ஆகாயத்தாமரை குளம் முழுவதும் பரவி புதர் போல் காட்சி அளிக்கிறது. இவ்வாறு புதர்கள் மண்டி கிடப்பதால் குளத்தில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் […]