மயிலாடுதுறை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் பகுதியில் பார்த்திபன் மற்றும் செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் குழந்தையும், தாயும் உயிரிழந்து கிடந்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலஷ்மி 30 சவரன் நகைகளை வரதட்சணையாக […]
Category: நாகப்பட்டினம்
தமிழ் இசை வளர்த்த மூவர்களான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்த பிள்ளை பிறந்த ஊர் சீர்காழி. திரையிசையில் புகழ் பெட்ரா சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊரும் இது தான். நவகிரக தளங்களில் புதன் தலமான திருவெங்காடு, செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஆகியவை இங்கு உள்ளன. விவசாயம் மற்றும் மீன் பிடித்தல் பிரதான தொழில்களாக உள்ளன. சீர்காழி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறை […]
நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு கடந்த ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வரலாற்று மற்றும் ஆன்மிக சான்றுகளும், சைவ மற்றும் வைணவ ஆலயங்களும் நிறைந்த பகுதி மயிலாடுதுறை தொகுதி ஆகும். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த ஊர் இதுவாகும். பொன்னியின் செல்வன் தந்த கல்கி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோர் வாழ்ந்த ஊர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை அதிகபட்சமாக திமுக 6 முறை கைப்பற்றியுள்ளது. […]
தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய […]
மயிலாடுதுறை சீர்காழி அருகே ஆவணம் கொண்டு செல்லப்பட்ட 30 பவுன் நகையை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை […]
குழந்தையை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கம்பேட்டை பகுதியில் வசித்து வரும் செல்வகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 1/4 வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் கான்ட்ராக்ட் அடிப்படையில் பார்த்திபன் விருதுநகர் மாவட்டத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் […]
நாகையில் செங்கல் தயாரிப்பதற்கு உரிய மண் கிடைக்காததால் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடவூர் நிர்த்தனமங்கலம், சங்கமங்கலம், ஒரத்தூர் ஆகிய இடங்களில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் செங்கல் அதிக அளவில் தயாரிக்கப்படும். தற்பொழுது செங்கல் தயாரிக்க நாகை மாவட்டத்தில் மண் கிடைக்கவில்லையாம். இதனால் செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் அந்த தொழிலை […]
நாகை கோடியக்கரை அருகே பறவைகளை சுட்டு வேட்டையாடி கொண்டிருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் வனத்துறை அதிகாரிகள், வனச்சரகர் அயூப்கான், வன உயிரினக் காப்பாளர் கலாநிதி, தஞ்சாவூர் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் நாடேட்டி குளத்தில் வந்து அமரும் பறவைகளை ஏர்கன் மூலம் சுட்டு கொண்டிருந்தார். அதனைக் கண்ட வனக்காப்பாளர் முனியசாமி, வனவர் சதீஷ்குமார், […]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணியில் அடிக்கடி கடல் அலையில் சிக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வேலி அமைத்து தருமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகூர் தர்கா, எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பூங்கா தமிழக சுற்றுலா துறையின் […]
நாகை அருகே பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு பணியை முடித்து விட்டு வந்துள்ளார். அங்கு சென்று கொண்டிருந்த பிரவீனாவை நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவகுமார் […]
நாகப்பட்டினம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போன சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். விஜயலட்சுமிக்கு பத்து வருடங்களாக மனநிலை பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரை காணவில்லை. இதுகுறித்து அந்த விஜயலட்சுமி மகள் […]
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இருந்து விரைவில் கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமாகுடி, திருக்கடையூர், கிள்ளியூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அங்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை 5 நாட்களாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் பலத்த கனமழையால் நெல் பயிர்கள் சேதம் அடைந்ததால் மகசூலும் இல்லை. அதில் மிஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்து […]
கியாஸ் விலை உயர்ந்ததன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் டீக்கடை ஒன்றில் ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் குடிக்க தண்ணீர் கேட்டால் இலவசமாக தயக்கமின்றி கொடுப்பார்கள். மேலும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சூடான வெந்நீரை டீக்கடைக்காரர்கள் தயக்கமின்றி பிடித்துக் கொடுப்பார்கள். இன்னும் இந்த பழக்கத்தை டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கல கடைவீதியில் பிரபல டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு […]
நாகை அருகே கடலில் மிதந்து வந்த இரண்டு கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரத்தில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இரண்டு பாலித்தீன் பை பொட்டலங்கள் காமேஸ்வரத்திலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் மிதந்து வந்துள்ளது. அதை பார்த்த மீனவர்கள் அந்த பாலித்தீன் பை பொட்டலங்களை எடுத்து கீழையூர் பகுதியில் உள்ள கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் அந்த பைகளை பிரித்து பார்த்தபோது இரண்டு பையிலும் 2 கிலோ […]
நாகையில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 சேலை முட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். […]
மயிலாடுதுறை மாவட்டம் திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சம்ப்பள்ளி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு நவக்கிரக யாகம், கலச பூஜை, கணபதி யாகம், லட்சுமி யாகம் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. […]
நாகபட்டினம் வேளாங்கண்ணியில் சுற்றுலாவிற்கு வந்தவர்களில் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் சிலம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், பரத் என்ற மகனும் உள்ளனர். சண்முகம் அவருடைய உறவினர் மகன் தீபக் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் 12 பேரையும் அழைத்துக்கொண்டு நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளார். […]
மயிலாடுதுறை சீர்காழியில் கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காளியம்மன் எனும் கோமளாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 5-ஆம் தேதி இந்த கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து அலகு காவடிகள், பால்குடம் எடுத்து, கரகம் எடுத்து பக்தர்கள் மேளதாளத்துடன், வானவேடிக்கையோடு ஊர்வலமாக தேர் வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், பிடாரி கீழவீதி, தெற்கு […]
மயிலாடுதுறை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கூட்டில் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. அந்த காம்ப்ளக்ஸ் கிடங்கல் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமானது. அந்த காம்ப்ளக்சில் ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக செம்பனார் கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை […]
நாகையில் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பியமனகொடி கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ்-க்கும், ஜெயபிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயபிரியா மனவேதனையில் இருந்த வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாராவது நேரத்தில் ஜெயப்பிரியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை […]
மயிலாடுதுறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் மழையின் காரணமாக நாசமான வேதனையில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடைகாரமூலை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி. கிருஷ்ணமூர்த்தி கடன்வாங்கி 4 ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8000 வீதம் அரசு […]
நாகையில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றம்பொருந்தானிருப்பு மதகடி பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக […]
நாகையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பஷீர் முகமது என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பஷீர் முகமது மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு சென்றுள்ளார். திருப்பூண்டி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முதியவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பஷீர் […]
நாகையில் திருமணம் ஆன 1 1/2 வருடங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பண்டாரவாடை பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகவள்ளி என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்காரியை வைக்குமாறு மாமியார் விஜயலட்சுமியிடமும், கணவர் பக்கிரிசாமியிடமும் கனகவல்லி தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். […]
நாகையில் அரசு பேருந்தில் மோதியதில் வியாபாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள பரவை சந்தை சாலையோரத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜா அலாவுதீன் என்பவர் வளையல் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மொபட்டில் கடைக்கி தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த அரசு பேருந்து மீது […]
மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 2017-18 ஆம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மடிக்கணினியை உடனே வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாணவி கீர்த்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் […]
மயிலாடுதுறையில் சாலைகளில் குளம்போல் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் 2007-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப் படாததால் ஆங்காங்கே குழாய்கள் வெடித்து பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதில் ஆரோக்கியநாதபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலையில் அதிக அளவு சாக்கடை […]
நாகப்பட்டினத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் காவல்நிலையத்திற்கு பிரதாபராமபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதாபராமபுரம் பகுதியில் ஒரு புதரில் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 110 லிட்டர் சாரத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். […]
நாகை தலைஞாயிறு பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் […]
நாகையில் பழுதான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாகை மாவட்டம் சேஷமூலை ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி 30,000 கொள்ளளவு கொண்டது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால் ரூ.30,800 செலவில் சீரமைக்கப்பட்டது. […]
மயிலாடுதுறையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏரவாஞ்சேரி பகுதியில் சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் புனிதாவிற்கும், சோமுவிற்க்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புனிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]
நாகையில் இரண்டாவது நாளாக கரை ஒதுங்கிய 3 ஏலக்காய் மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்காடு, வாணவன்மகாதேவி ஆகிய பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் கடற்பகுதி வழியாக மஞ்சள் மற்றும் கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதை காவல்துறையினர் அடிக்கடி பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று முனங்காடு கடற்கரை பகுதியில் 25 கிலோ ஏலக்காய் கொண்ட இரண்டு மூட்டைகள் கரை ஒதுங்கி […]
மயிலாடுதுறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானதில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கீழவெளி கிராமத்தில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தராம்பாள் என்ற மனைவியும், ராஜேந்திரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தங்கராசின் மனைவி சுந்தராம்பாள் ஒரு கூரை வீட்டிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஒரு கூரை வீட்டில் அருகருகே வசித்து […]
மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மற்றும் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்துபிவருகிறார். இவர் எஞ்சினியராக வெளிநாட்டில் சென்ற 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், சிவானி, சௌமியா என்ற மகள்களும் உள்ளனர். சாந்தகுமார் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் விளநகர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். […]
மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தையும் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த தம்பதிகள் சாந்தகுமார் – ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் சாந்தகுமார் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். மேலும் அவரது மனைவி தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வருகின்றார். இதனையடுத்து அவர்கள் தனது மூத்த மகளின் திருமணத்திற்க்காக 100 பவுன் நகையையும், 8 லட்ச ரூபாய் பணத்தையும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]
நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் வாக்கு எண்ணும் மையமான இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியை ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கீழ்வேளூர், மயிலாடுதுறை, நாகை, வேதாரண்யம், பூம்புகார், சீர்காழி என 6 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றது. நாகையில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் கீழவேளூர், நாகை, வேதாரண்யம், ஆகிய தொகுதிகளில் பதிவாகும் […]
மயிலாடுதுறையில் இரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னங்குடி தெற்கு சுனாமி நகரில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருக்கிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் செல்வி வீட்டில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் தமிழ்செல்வியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் […]
வேதாரண்யத்தில் அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது இயற்கை ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகையான ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரையோர பகுதிகளுக்கு வந்து குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகளின் ஆயுட்காலம் 400 வருடங்கள் ஆகும். ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டை இடுவதற்காக கடற்கரைக்கு, நடுகடலில் இருந்து வரும்போது கப்பல்களிலும், மீன்பிடி படகு என்ஜின் விசிறியில் அடிபட்டும், […]
மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளனர். அதன்படி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், செம்பனார் கோவிலில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை […]
மயிலாடுதுறையில் வாகன சோதனையின் போது வங்கி ஊழியர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறையில் உள்ள உளுத்துக்குப்பை மெயின் ரோட்டில் துணை தாசில்தார் வைத்தியநாதன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் […]
நாகையில் மீனவர்கள் 3 பேர் மீன் வலையில் பிடிபட்ட பாட்டிலினுள் இருந்த திரவத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக படகு ஒன்று உள்ளது. அந்த படகில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி, செல்வேந்திரன், வினோத், தோமஸ், போஸ் ஆகிய ஆறு பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரைக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். சென்ற 1-ம் தேதி மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு பெரிய படகில் […]
மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். இந்த அணிவகுப்பிற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரியா […]
மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு குங்குமபொட்டு வைத்து, மாலை அணிவித்து அவமதித்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து சென்ற வெள்ளிக்கிழமை அன்று இந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் […]
மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 1/2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மல்லியம் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற தந்தை உள்ளார். பாலமுருகன் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் […]
நாகையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளில் சமூக விரோதிகள் தீ வைத்ததால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல்-சங்கமங்கலம் பகுதிக்கு இடையில் சாலையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கொட்டப்பட்டு வருகிறது. தற்காலிகமாக இந்த குப்பைகள் சாலை வரை கொட்டப்பட்டுள்ளது. இதில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிக அளவில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புகையால் அப்பகுதியில் […]
நாகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய துணை ராணுவப் படையினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு நாகை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி பதற்றமான […]
மயிலாடுதுறையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்திற்கு முன்பு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் […]
மயிலாடுதுறையில் நிலக்கடலை அறுவடையில் மழை காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீனி கரும்பு, நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி, பயிர் வகைகள், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீர்க்கங்காய், பனங்கிழங்கு, கேழ்வரகு, புடலை, பூசணி, கத்தரிக்காய், சுரைக்காய், மிளகாய், பாகற்காய், வாழை, செங்கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொறையாறு பகுதிக்கு அருகே உள்ள சிங்கனோடை, தில்லையாடி, காழியப்பநல்லூர், செம்பனார்கோவில், கீழையூர், ஆணைகோவில், காலஹஸ்திநாதபுரம், மேலபாதி, கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம் ஆகிய பகுதிகளில் […]
நாகப்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் திருமணமானவர். இந்நிலையில் சம்பவத்தன்று அய்யாதுரை வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யாதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் […]
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர்கள் சாலையில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2007-ம் ஆண்டிலிருந்து பாதாளசாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் ஆங்காங்கே உள்நுழைவு தொட்டிகள் உடைந்து சாலைகள் உள்வாங்கியுள்ளன. மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஆள்நுழைவு தொட்டிகள் உடைந்து சேதமடைந்ததுள்ளது. மேலும் சில நாட்களுக்கு பின் அவை சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 16-வது இடமாக தரங்கம்பாடி பகுதியில் ஆள்நுழைவு தொட்டி உடைந்துள்ளது. […]