Categories
நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் சீற்றம் – 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்‍கச் செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம் கடல் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 500 பைபர் படகுகள் கடற்கரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நெல்லை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை மிரட்டும் ஊழியர்கள் …!!

நாகை மாவட்டம் வழுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நெல்லை கொள்முதல் செய்வதற்காக 149 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வலுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி அருகே திடுக்கிட வைத்த கோவில் திருட்டு பின்னணி…!!

சீர்காழி அருகே கஞ்சாவுக்கு அடிமையான சிறுவர்கள் இருவர்  கோவில் உண்டியல்களில் கைவரிசை காட்டிய நிகழ்வு பதற வைக்கிறது. சீர்காழி அருகே கோவில் திருட்டு போவதாக தொடர்ந்த சந்தேகத்தின் பேரில் தெட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை போலீசார் விசாரித்துள்ளனர். கிடுக்குப்பிடி கேள்விகளால் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் போலீசாரை பதற வைத்திருக்கிறது. கோவில் உண்டியல்களில் திருடி அந்த பணத்தை வைத்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர் சிறுவர்கள். கஞ்சா வாங்குவதற்காக, புத்தகம் படிக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கேம் விளையாடிய மகள்…. கண்டித்த பெற்றோர்…. இறுதியில் நேர்ந்தக சோகம்…!!

கேம் விளையாடுவதற்கு பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கொண்டல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு மாணவி ஆதித்யா. இவர் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள பெற்றோர் இவருக்கு செல்போன் புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆதித்யா அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி அவரது அறையில் வைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காய்கறி கடையில் வைத்து மதுபானங்கள் விற்பனை…!!

நாகை அடுத்த நாகூரில் காய்கறி கடைகள் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்த மூதாட்டி மற்றும் கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை அடுத்துள்ள நாகூர் அமிர்தா நகர் பகுதியில் காய்கறி கடையில் புதுச்சேரி மாநிலம் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் நாகை எஸ்.பி. உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் போலீசார் காய்கறி கடையில் மது விற்பனை செய்துகொண்டிருந்த மூதாட்டி மயில் அம்மாள் மற்றும் அதே பகுதியை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஆறு மாதம் தான் ஆகுது… மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… கணவர் கைது…!!!

கொள்ளிடம் அருகே உள்ள பகுதியில் திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே இருக்கின்ற நல்லூர் மெயின் ரோட்டில் 30 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். டீக்கடை நடத்திவரும் அவருக்கும்,ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா அவரின் வீட்டில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சூறாவளியுடன் பெய்த கனமழை அறுவடைக்காக இருந்த நெற்கதிர்கள் சேதம்..!!

நாகையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கடைமடை விவசாயிகள் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 40 முட்டைகள் வரை அறுவடை செய்யலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் நேற்று முந்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக செல்லூர், பாலையூர், சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், இளம்கடமனூர், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து சிறுமி கற்பழிப்பு போக்சோ சட்டத்தில் காமுகன் கைது

நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம்  தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வலசை வரும் பறவைகள் களைகட்டும் கொடியக்கரை…!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பிளமிங்கோ, கொசுள்ளான், செங்கால்நாரை, ஊசிவால் சிறவி, கடல் காகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பறவைகளை காண […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த பெண் அடித்துக்கொலை – கள்ளக்காதலியுடன் கொலையாளி கைது..!!

சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் சீர்காழியை சேர்ந்தவர் சித்ரா. சில நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடும் போது இவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நில அபகரிப்புக்கும் திமுக நிர்வாகிக்கும் என்ன சம்பந்தம் …!!

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகாரின்பேரில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழையூர் ஒன்றிய கழக செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது நாகை அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன் சில தினங்களுக்கு முன்பு நாகை நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் நாகை மாவட்டம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஒரு வாரமே ஆகும் நிலையில் கணவர் கடத்தல் – பெண் உண்ணாவிரதம்..!!

நாகையில் உறவினர்களால் கடத்தப்பட்ட கணவனை மீட்டுத் தரக்கோரி ஒரு வாரத்துக்கு முன்பு காதல் திருமணம் ஆன சுமதி என்ற பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுமதி இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனது கணவரை நான் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன். 17-ஆம் தேதி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண வரும் போது எனது கணவனை கடத்தி சென்றுவிட்டனர். போலீசில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து  கலந்து கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞரை   காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டணத்தின் திருமருகல் அருகே தெற்குனேரி ஜீவா நகரில் வசித்து வருபவர் ராஜேஷ்.29 வயதான அவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ராஜேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று சிறுமியின் பெற்றோர்கள் பணிக்கு சென்று விட்டனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராஜேஷ் அங்கு சென்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நியாய விலைக் கடையில் தரமற்ற பொருட்கள் விநியோகம் – மக்கள் போராட்டம்

கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் தேரழுந்தூரில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் தரமற்ற பொருட்களை விநியோகிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதை கண்டித்து நியாய விலை கடை, கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை புதிய மாவட்டப் பணிகள் – தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு  ராம சேயோன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உன் வயசு என்ன… அவங்க வயசு என்ன….? “பெற்றோர் கண்டிப்பு” திருமணம் நிச்சயமான பெண் தூக்கிட்டு தற்கொலை…..!!

மயிலாடுதுறை அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் மேலவெளி என்ற தெருவில் முத்துக்குமார் என்பவர் தனது 24 வயதுடைய சண்முகப்பிரியா என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார். எம்பிஏ பட்டதாரியான சண்முகப்பிரியா தான் ஒரு பட்டதாரி பெண் என்பதை மறந்து தினமும் அந்த தெருவில் இருக்கின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் விளையாடி தனது பொழுதை போக்கி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்வதற்கு அவரின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முகநூலில் பழகி கர்பமாக்கிய எஸ்.ஐ…. 18 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு …!!

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீது உயர்நீதிமன்ற உத்தரவின்படி 18 மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்ற காவல் உதவி ஆய்வாளர். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் முகநூல் மூலமாக பழகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் கருவுற்ற நிலையில் தன்னை திருமணம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பக்தர்களின்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்…!!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வு முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயதின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக தெருக்கோடி பாவனையானது ஆலயத்தை சுற்றி […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த அமைச்சரின் மனைவி..!!

அமைச்சர் ஓ எஸ் மணியனின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஓரடியம்புலம் கிராமத்தில்  ஓ.எஸ் மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக உள்ளார்.. இவரின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி…. அவற்றை காக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சாரம் தாக்கியதால் இரண்டு மாடுகள் உயிரிழந்தது அவற்றை காப்பாற்ற சென்ற பெண்ணும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் சீதாராமன். இவர் நேற்று காலை வீட்டில் வளர்ந்து வரும் இரண்டு பசுக்களை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மின் கம்பிகளை மிதித்து விட்டது. இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெண்கள் பாதுகாப்பிற்காக பிரத்தியேக காலனி : இருப்பிடத்தை பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்கும்

பெண்களின்  பாதுகாப்பிற்கு அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரத்தியேக காலனி ஒன்றை வடிவமைத்துள்ளனர். கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக காலணி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள்.  சரண், ஜெயவில்சன் ,ஜெகதீஸ்வரன்,தினகரன்  ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து இந்த  நவீன காலணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெண்களிடம் தவறாக நடக்க உற்பட்டால் இந்த காலனி மூலம் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் உயிர் மின் அழுத்தத்தை செலுத்தி அவரை நிலைகுலையச் செய்ய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோசமான சாலையால் விபத்துகள் அதிகரிப்பு ….!!

மோசமான நிலையில் காணப்படும் காரைக்கால் திருமணராயன்பட்டி புறவழிச்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் முக்கிய சாலையான திருமணராயன்பட்டி புறவழிச்சாலை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்க்கு அமைந்துள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் சாலையில் இரவு நேரத்தில் மின் கம்பங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிப்பதாகவும் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியருக்கு…. கொரோனா தொற்று உறுதி…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 1,570 நபர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதில் 16 நபர்கள் உயிரிழந்த நிலையில் 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 689 பேர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்… ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர்… ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்குட்பட்ட கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமத்தில் வசித்து வருபவன் இதயதுல்லா மகன் முகமது அப்ரீத்.. வயது  21 ஆகிறது..  இவன் அதே ஊரில் பணப்பரிமாற்றம் (money transfer) மற்றும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 12ஆம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் 85 வயதில் சிலம்பம் கற்றுத்தரும் தாத்தாக்கள்…!!

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை மயிலாடுதுறையில் உள்ள இளைஞர்களுக்கு 85 வயது முதியவர்கள் எந்தவித பிரதிபலனும் இன்றி இலவசமாக கற்றுத் தருகின்றனர். மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி காட்டுமன்னார்குடி சேர்ந்த ராமசாமி ஆகிய இரண்டு முதியவர்களும் தங்களின் சிறுவயதிலேயே சிலம்பம் கற்றதால், 85 வயதை எட்டிய போதிலும் உடலை உறுதியுடன் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலும் கொள்ளிடம் ஆற்றை கடந்து நாகை மாவட்டத்திற்கு வந்து ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதற்கு எதிர்ப்பு…!!

சொத்துப் பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக கூறி மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஜெயக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலையிட்டு பஞ்சாயத்து பேசியதோடு, மற்றொரு தரப்புக்கு ஆதரவாக மிரட்டல் விடுததால் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் 21 பேர், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டிக் டாக்கில் அறிமுகம்… நான் உன்னை காதலிக்கிறேன்… மயங்கிய 16 வயது சிறுமி… இளைஞர் செய்த செயல்..!!

மயிலாடுதுறை அருகே டிக் டாக்கில் அறிமுகமான 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியை தடை செய்து ஒரு மாதத்தை கடந்த போதிலும்  அதன் தாக்கம் இன்னமும் விலகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. ஆம், மயிலாடுதுறை அருகே 16 வயதுடைய  சிறுமி ஒருவர் டிக் டாக்கில் பாடுவது, நடனம் ஆடுவது என ஆக்டிவாக இருந்துள்ளார்.. அதிலேயே எப்போதும் மூழ்கி இருந்த நிலையில், தன்னை புகழ்ந்து பாராட்டி […]

Categories
நாகப்பட்டினம்

மீண்டும் தொடங்கியது உப்பு உற்பத்தி..!!

வேதாரண்யத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழை நின்றதை அடுத்து உப்பளங்கள் சீரமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் தொடங்கி உப்பு உற்பத்தி தொடக்கம் கொரோனா பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. பொது முடக்க தளர்விற்குபின்னர் மீண்டும் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை நிரம்பியதால் கொரோனா நோயாளிகள் வெளியேற்றம்…!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா படுக்கைகள் நிரம்பியதால் சிகிச்சை பெறுபவர்களை வெளியேற்ற முயன்ற போது ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது . நாகை மாவட்டத்தில் 1150 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறையில் 200 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை வளாகத்தில் இவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 55 பேர் புதிதாக கொரோனா தொற்றால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முதல்வரின் அறிவிப்பை மீறிச் செயல்படும் கெயில் நிறுவனம்…!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நாகையில் கெயில் நிறுவனம் மீண்டும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் சுற்று வட்டாரத்தில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. திரவக நிலையில் உள்ள, எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேட்டங்குடி, இட மடல், திருநகரி வழியாக 32 கிலோமீட்டர் தொலைவுக்கு எரிவாயு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் அலட்சியத்தால் தெருவில் நெல்லை குவித்துவைத்து காத்திருக்கும் அவலம் ….!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் சொந்த செலவில் கிடங்கு அமைத்துக் கொடுத்த விவசாயிகள் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீதிகளில் நெல்லைக் கொட்டி காத்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு பணம் இல்லை…. வலியில் துடித்த இளைஞர் தற்கொலை….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அடுத்த நாகூர் அருகே இருக்கின்ற வெங்கடகால் கீழ் தெரு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 21 வயதுடைய முருகன் என்ற மகன் உள்ளான். பட்டப்படிப்பு முடித்த இவருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் சென்னையில் இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் அவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு சென்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஜா புயலால் சேதமடைந்த கோபுரம் சீரமைக்கப்படாததால் மக்கள் பாதிப்பு…!!

நாகை மாவட்டம்  திருப்பூண்டி  அருகே  கஜா புயலால் சேதம் மடைந்த பிஎஸ்என்எல் கோபுரம் மீண்டும் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூண்டி அடுத்த கீழையூர் ஒன்றியத்தை சுற்றி ஈசனூர், வெண்மனஞ்சேரி, திருவாய்மூர், வாலை கரை, மடப்புரம், கருங்கண்ணி, மீனம்ம நல்லூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளனர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், காவல் நிலையம், கடலோர காவல் நிலையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் துறை அலுவலகம் திருக்கோவில் நிர்வாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் செண்டு பூக்கள் விலை வீழ்ச்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கால் சாமந்திப் பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்கானிருப்பு கிராமத்தில் சடையன் காடு, சல்லிக்குளம், நாட்டான் காடு உள்ளிட்ட இடங்களில், சுமார் 700 ஏக்கரில் செண்டு  பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கி உள்ள நிலையில், ஊரடங்கால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி பூ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மினி டிராக்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ள விவசாயி…!!!

கொரோனா ஊரடங்கால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் நாகை மாவட்ட விவசாயி ஒருவர் பழைய மோட்டார் இஞ்சினை கொண்டு மினி டிராக்டர்ரை உருவாக்கி சாதனை படைத்துள்ளர். நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள கிளைஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பி ராஜன் என்பவர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த டூவீலர் மெக்கானிக் தொழில் நடத்திவருகிறார். தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு, சோளம் பயிரிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் வயலில் களை வெட்டும், மண் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி பணிகள் தீவிரம்…!!!

நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளக்கை தாண்டி முழுமையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக நாகை மாவட்டத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது… திடீரென வீசிய சூறைக்காற்று… தவறி விழுந்து மீனவர் பலியான சோகம்..!!

நாகை மாவட்டத்தில் ஆல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் திருவளர்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் வீரக்குமார், சுபாஷ், ஜெயபால், பாஸ்கர் உள்ளிட்ட 9 மீனவர்களுடன் சென்ற 27-ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நாகைக்கு நேர் கிழக்கே 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வலையை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தர்பூசணி சாகுபடி: அமோக மகசூல் கிடைத்தும் ஊரடங்கால் விற்பனையாகாமல் அழுகும் அவலம் ….!!

சீர்காழி அருகே விவசாயம் செய்து வரும் பொறியியல் பட்டதாரி ஒருவர் தர்பூசணி சாகுபடியில் அமோக மகசூல் கிடைத்தும் கொரோனா ஊரடங்கால் விற்பனை இன்றி கடும் இழப்பை சந்தித்து உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். சீர்காழி தாலுக்கா திருக்காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராஜா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோடை கால பயிரான தர்ப்பூசணி சாகுபடி செய்தார். மூன்று மாத கால பயிரான தர்ப்பூசணி நல்ல மகசூல் கண்ட நிலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும் கொரோனா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

5 மாதங்களாக வருமானமின்றி வாடிவரும் நாட்டுப்புற கலைஞர்கள் – அரசுக்கு கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கு  காரணமாக ஐந்து மாத காலமாக வருமானமின்றி வாடி  வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சுதந்திர தின விழாவில் வாய்ப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், நாடக நடிகர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் திருவிழாக்கள் போன்ற சடங்குகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது தற்போது கொரோனா  காரணமாக, கடந்த ஐந்து மாத காலமாக அவர்கள் வருமானமின்றி வறுமையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தினமும் சிறுமிக்கு பாலியல் தொல்லை… மருத்துவமனை காவலாளி கைது..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் அடுத்துள்ள ராதாமங்கலம் தெற்காலத்தூர் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வசிக்கின்ற அதே பகுதியில் தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் 9 வயது சிறுமியை ராஜேந்திரன் தனது வீட்டின் சொந்த வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்தியா வந்தடைந்த ரஃபேல் விமானங்கள்… பூக்கள் தூவி வரவேற்ற பாஜகவினர்..!!

ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதை மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு பூக்களைத் தூவி வரவேற்றனர். பிரான்ஸ் நாட்டிலிருந்து அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்திருக்கின்றது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் விரைவில் சேர்க்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதை கொண்டாடக் கூடிய வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் […]

Categories
கொரோனா நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 685 ஆக உயர்வு..!!

நாகப்பட்டினத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. அதேசமயம் நேற்று 12 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா… ஒரே நாளில் 3 பேர்… பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனாவால் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் பரவை காய்கறி சந்தையில் 9 வியாபாரிகளும்,ஆயுதப் படையை சேர்ந்த 9 காவலர்களும், 4 கர்ப்பிணிகளும், 3 செவிலியர்களும் உட்பட 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குப்பைமேட்டில் விவசாயம் செய்யும் தினக்கூலி தம்பதி…. குவியும் பாராட்டு

நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும்  ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.     வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை சேர்ந்தவர் பாரதிதாசன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் பாரதிதாசனும் அதே ஊரைச் சேர்ந்த பொற்செல்வன், சிறுதலைக்காட்டை சேர்ந்த ஐயப்பன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும் மதியம் மீன்பிடிக்க சென்று உள்ளனர்.இவர்கள் தமிழக கடற்கரை பகுதியில் சுமார் ஏழு நாடில்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காம்பவுண்ட் சுவர் கட்ட முயலும் தனியார் பள்ளி… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்காலில் காம்பவுண்ட் சுவர் கட்ட தனியார் பள்ளி நிர்வாகம் முயன்றதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. நாகை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் தாலுகா பகுதியில் ஸ்ரீகண்டபுரத்தில் இருக்கின்ற நாட்டாற்றிலிருந்து நிம்மேளி என்ற வாய்க்கால் பிரிந்து 500 ஏக்கர் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலை ஒட்டி தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கின்றது. வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது பள்ளிக்கூட சுவர்மண் சரிந்தது. அதனைக் கண்ட பள்ளி நிர்வாகம் கான்கிரீட் சுவர் அமைக்க முடிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாயின் தவறான நடத்தை… குழந்தை பெற்ற 14 வயது சிறுமி… 4 பேர் அதிரடி கைது… அதிரும் நாகை..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில்  14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கின்ற மணல்மேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு ஊராட்சியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இச்சிறுமி அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு வருடத்திற்கு மேல் ஆளில்லாத வீடு…. 11,000 ரூபாய் மின்கட்டணம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!

ஒரு வருடத்திற்கும் மேல் பூட்டிக்கிடந்த வீட்டிற்கு மின் கட்டணம் ரூபாய் 11,000 வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை ஊரடங்கு முடிந்த பிறகு செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளக்கரையில் பதுங்கியிருந்து… பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல்..!!

மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் பாபு.. 45 வயதுடைய இவர் திமுக நகரசெயற்குழு உறுப்பினராவார்.. இவரின் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பிய போது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் பதுங்கியிருந்த […]

Categories

Tech |