Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அபாயம்: கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க தடை ..!!

நாகைபட்டினத்தில் கடல் சீற்றத்தால் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் வருத்தத்தில் உள்ளனர் . நாகப்பட்டினம் வேதாரண்யம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது .இதனை அடுத்து கடல் சீற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை . இதனால் கடற்கரை பகுதிகள் முழுவதும் 850-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதங்களிலேயே கணவரை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி…..!!

தரங்கம்பாடி அருகே மனைவியும், அவரது மாமனாரும் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமாரும். இவர் அப்பராசபுத்தூரைச் சேர்ந்த கலைமதியை காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு திருமணமான 5 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 14-ம் தேதி  தனது தந்தை வீட்டிற்கு சென்ற கலைமதி, பின் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனப் புகார் அளித்துள்ளார். இதனிடையே கலைமதியின் கணவர் டீசல் வாங்குவதற்காக தனது மனைவியின் ஊரான அப்பராசபுத்தூருக்கு சென்றுள்ளார். அப்போது சதீஸ்குமாரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்ட வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு…!!

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம்  தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. . இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள்  டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டம் எலிகளால் நாசமாகும் பருத்தி சாகுபடி…விவசாயிகள் வேதனை…!!

இருமருகல் அருகில் உள்ள கிராமங்களில் எலிகளின் தொல்லையால்  600 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை கடைமடை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால்  குறுவை நெல் சாகுபடி கடந்த ஏழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடக்கூடிய பருத்தி சாகுபாட்டில்  ஈடுபட்டனர் .ஆனால் எலிகளால் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அனைத்தும் நாசமாகி உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெல் சாகுபடியை அடுத்து பயிரிடப்படும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெயிலை தணிக்க நாகை மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை…!!

வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில் குறைந்த தண்ணீர் மூலம்  அதிக விளைச்சல் பெறக்கூடிய தர்பூசணிகள் ஏராளமாக  பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் தர்பூசணிக்கு எதிர்பார்ப்பு  இருப்பதால் விவசாயிகள் அனைவரும் தர்பூசணி அறுவடையில் ஈஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தர்பூசணிகலில் அதிக  நீர்ச்சத்து இருப்பதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல்சீற்றம் தணிந்தது …மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர் !!!

நாகை மாவட்டத்தில், மீனவர்கள் கடல் சீற்றம் குறைந்ததால் , மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நாகை மாவட்டத்தில், பானி புயல் முன்னெச்சரிக்கை காரணமாக  9 நாட்களுக்கும் மேலாக  நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருந்த நிலையில் , புயல் கரையை கடந்துவிட்டதால் இன்று மீன்பிடிக்க சென்றனர். இன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.  

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஜா புயலால் பாதித்த சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க கோரிக்கை விடுத்த நாகை பொதுமக்கள்…!!

கீழ்வேளூர் அருகில் கஜா புயலால் பழுதான சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க வேண்டி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  நாகப்பட்டினம்  கீழ்வேளூர் அடுத்துள்ள நாகை-தேவூர் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பாக சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைந்ததன் மூலம் அந்த ஊராட்சி பகுதி மக்கள், லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சோலார் மின்கோபுரம் பழுதடைந்தில்  சோலார் மின்விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பராமரிக்கப்படாத ஆற்றினை தூர்வார வேண்டும்” நாகை பொதுமக்கள் கோரிக்கை …!!

கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து  தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில், கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு,  பாண்டவையாறு ,தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலம், அகரகடம்பனூர்,  கீழ்வேளூர்,ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு…!!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து  வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நேற்று  முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்  290-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த குண்டு வெடிப்பினால்  இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.   இந்நிலையில் , வேதாரண்யம் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….2 பேர் கைது….நகை, பணம் பறிமுதல்…!!

பூம்புகார் அருகே மீனவர் வீட்டில் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.  நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையையும் , ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கத்தையும்  திருடி சென்றுள்ளனர். இந்நிலையில்நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“8 பேருக்கு அரிவாள் வெட்டு, 2 பேர் பலி” நாகை அருகே பதற்றம்…!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவுருகிறது.  நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அந்த ஊராட்சி  கிராமத்தின் நாட்டாமையாக உள்ளார். அரசியல் கட்சி ஒன்றின் செயலாளராகவும் அவர் இருக்கிறார்.ஆனால் அவர் நாட்டாமையாக இருக்க தகுதி இல்லை என்று , அதே பகுதி வேல்முருகன் மற்றும் அவரது  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புதிய பைக்… வாலிபர் பரிதாப பலி…!!

வேதாரண்யம் பகுதியில் புதிய பைக் வாங்கி வந்த இளைஞர் எதிரே வந்த பைக் மீது மோதியதில்  சம்பவ இடத்திலேயே பலியானார். நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் வீரப்பன். அவருடைய  மகன் சிவதாஸ் வயது 22 .  இவர் புதிய பைக் வாங்கி அண்டர்காடு சாலை வழியாக வேதாரண்யத்திற்கு ஒட்டிச் சென்றார். அப்போது எதிரே விஜயராகவனும் , ஞானவிக்னேசும் ஓட்டி வந்த பைக்  சிவதாஸ் மீது எதிர்பாரத விதமாக வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல் இருவர் கைது…மணல் லாரி பறிமுதல்…!!

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க  மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின்படி பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  கீழ்வேளூர் போலீஸ் சரகம்   அருகே  போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த லாரியை மறித்து நிறுத்தி அதில்  வந்த  2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   போலீசார் நடத்திய விசாரணையில்  லாரியில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கப்படுகிறது “சீமான் கடும் குற்றசாட்டு !!…

நாம் தமிழர் கட்சி மத்திய மாநில அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார் இது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் இந்தியா முழுவதும் பிரச்சாரம் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் சட்டமன்ற […]

Categories

Tech |