நாகை வெளிப்பாளையம் ஏழைப் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அல்லி முத்து மகன் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருக்கிறது. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பெயரில் சதீஷை குண்டச்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து அவரை […]
Category: நாகப்பட்டினம்
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் அரசு செயலாளர், ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது பெருநட்டாந்தோப்பு மேல தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தேவேந்திரன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த அமைச்சர், […]
கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாயும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலக்கோயில் கிராமத்தை சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இதழினி (2) என்ற பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பாண்டியராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சிக்கு திரும்பியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை […]
85 வயதிலும் ஆசிரியர் ஒருவர் சைக்கிளில் சென்று புத்தகங்களை வழங்குகிறார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேட்டை பகுதியில் கலியசாமி (85) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஆவார். இவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த பற்றின் காரணமாக தன்னுடைய பெயரை கலைவேந்தன் என மாற்றி வைத்துக் கொண்டார். இவர் தமிழில் ஏராளமான சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் மொத்தம் 102 தமிழ் நூல்களை எழுதியுள்ளார். இவர் ஓய்வு பெற்றாலும் கூட தொடர்ந்து நூல்களை […]
வாலிபரை கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதியக்குடி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன்,அவரது சகோதரர் ஆசைத்தம்பி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்கரன், ஆசைத்தம்பி ஆகிய 2 பேரும் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சத்தியமூர்த்தியை கட்டை மற்றும் கல்லால் […]
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். இந்நிலையில் இந்த வருடம் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் இன்று(ஜூலை 12) நடைபெற உள்ளது. எனவே நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(ஜூலை 12) நாகை தாலுகாவில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்றைய தினம் பள்ளிகளுக்கு மட்டுமே […]
என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு என்ற பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் சார்பில் நேற்று “என் குப்பை என் பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி, துணை தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜேந்திரன், செயல் அலுவலர் குகன், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இவர்கள் அரிச்சந்திரா நதியின் ஆற்றங்கரையில் இருந்த […]
தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபடுக்கை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாய் 45 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பொதுப்பணி துறை மூலம் தூர்வாரும் திட்டத்தின் கீழ் தரைப்பாலம் அமைக்காமல் தூர்வாரப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் இருந்து முத்தப்பன் காவிரி கால்வாய்க்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், செல்ல வேறு வழியின்றி அப்பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு புகுந்து விடுகின்றனர். […]
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். இந்நிலையில் இந்த வருடம் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 12ஆம் தேதி நாகை தாலுகாவில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்றைய தினம் […]
விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் அதிகாரிகளுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் பகுதியில் பாசன வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது. இதன் மூலம் கொடைக்காரமுலை, பழைய பாளையம், நல்லூர், ஆரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இது கடல் நீர் புகாமல் இருப்பதற்காக கட்டப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் […]
நாகை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையில் நின்று மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களிடம் தகராறு செய்து அவர்களுக்கு இடையூறாக இருக்கின்றனர். அதனால் பொதுமக்கள் […]
வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ ஆற்றில் பாய்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு அடுத்த மருதூர் ஆண்டியப்பன் காட்டுப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த நிலையில் நேற்று காலை தனது சரக்கு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு தகட்டூர் கடை தெருவில் இருந்து தென்னடாறுக்கு சென்று கொண்டிருந்த பொழுது பஞ்ச நதிக்குளம் மேற்கில் சென்ற போது ஆட்டோ அவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று முள்ளியாற்றில் பாய்ந்ததில் […]
வேளாங்கண்ணி அருகே தூக்கில் பிணமாக அழுகிய நிலையில் தொங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரபிடாகை வடக்கு ஸ்டாலின் நகர் பகுதியில் சேர்ந்த தெய்வராசு என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் இருக்கின்ற நிலையில் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றார்கள். இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று அவர் […]
பேரூராட்சி செயல் அலுவலர் காலரா நோய் தொற்றின் பரவல் காரணமாக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு செய்தார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தற்பொழுது காலா நோய் தொற்று பரவி வருவதன் எதிரொலியாக மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சியில் இருக்கும் ஹோட்டல்களில் செயல் அலுவலர் குகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் உணவுகளை சூடாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை செய்தார். மேலும் ஹோட்டல்களை தூய்மையாக […]
நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேத்தாக்குடி, பாகசாலை, கண்டமங்கலம், தென்னாலக்குடி ஆகிய பகுதிகளில் வனத்துறை மூலம் காப்புக் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காடுகளில் அரிய வகை மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கிருக்கும் புள்ளி மான்கள் சில சமயம் வழித்தவறி ஊருக்குள் வரும். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த ஒரு பெண் புள்ளி மான் வழித்தவறி வந்துள்ளது. இதனை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக […]
அழகுசாதனப் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண்ணிடம் 5 1/4 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஷமிமாபானு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி இவரது செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில் அழகு சாதன பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த பொருட்களை வாங்கினால் ஏற்கனவே செலுத்திய பணம் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் இருந்துள்ளது. இதனை […]
மது போதையில் மகனை தாக்கிய தொழிலாளியை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொற்கை கிராமத்தில் தொழிலாளியான மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மகாதேவன் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மகாதேவன் மனைவியிடம் பணம் வாங்கி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். […]
நகராட்சி அலுவலரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காடம்பாடி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த நகராட்சி பொறியாளரான ரவிச்சந்திரனிடம் வீட்டின் வரைபடம் குறித்து சந்தேகம் கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் கோவிந்தராஜனிடம் வீட்டின் வரைபடம் குறித்த சந்தேகத்தை உங்கள் வீட்டை […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் நாராயணபுரம், மாயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாப்படுகை ரயில்வே கேட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாநில […]
குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமருகல் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் தண்ணீர் வெளியேறி சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இந்த உடைப்பை சரி செய்வதற்காக அதிகாரிகள் அப்பகுதியில் […]
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐயாறப்பர் தெற்கு வீதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தே.மு.தி.க. நகர துணைச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷினி, சபரிநாதன், சாய்சக்தி என்ற 3 குழந்தைகள் உள்ளனர். […]
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்து அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் பாலசண்முகம், பானுதாசன், விஜயாபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகையை அரசு விரைந்து வழங்க வேண்டும். இதனையடுத்து வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்படட ஊதியத்தை வழங்க தமிழக அரசு உத்தரவுவிட்டது. ஆனால் […]
காரில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்திச் செல்வதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது 50 மூட்டைகளில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராயம் இருந்ததையடுத்து […]
நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் புத்தகத் திருவிழாவானது சென்ற 24ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகின்றது. இது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த புத்தக விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 110 பதிவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த திருவிழாவில் 114 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டு கவிதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம் ஆகிய […]
காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் விவசாயிகள் நெல்லை விதைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேல்பருத்திகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் குருவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 27-ஆம் தேதி விவசாயிகள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கூலி தொழிலாளர்கள் தகராறு செய்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 39 பேரை கைது […]
நாமக்கலில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டமானது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசியபின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன்களை வரும் 9-ஆம் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் […]
நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள். நாகையில் நடந்துவரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிர் கல்லூரி சாலையில் சிறிய பாலத்துடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்கள். இதையடுத்து […]
வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை மற்றும் 1 லட்சம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்ற 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்கால் சென்று விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் […]
லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி முதல் காரைமேடு வரை புறவழிச்சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நடேசன் என்பவர் வீட்டில் இருந்து வயல்வெளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை கவனிக்காமல் வந்துள்ளார். இதனால் லாரி பள்ளத்தில் இறங்கி […]
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இரணியன் நகர், தென்பாதி, கற்பக நகர், சின்னத்தம்பி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டுமென நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரனிடம் புகார் அளித்துள்ளனர். முதற்கட்டமாக நகராட்சி சார்பில் ஆணையர் ராஜகோபால் தலைமையில், சீர்காழி நகர்ப்பகுதியில் சுற்றித்திரிந்த […]
அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள இரும்பு கம்பிகிடையே பெண்ணின் கால் சிக்கியதை அடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள். காரைக்காலைச் சேர்ந்த உஷாராணி என்பவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தபொழுது மருத்துவமனையின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கம்பிகளுக்கு இடையே அவரின் கால் மாட்டிக்கொண்டது. அவர் எடுக்க முயற்சித்தும் அவரின் காலை எடுக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து […]
தமிழகத்தில் முதன்முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை நாகை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சீயாத்தமங்கை என்ற கிராமத்தில் 14 வீடுகளில் குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை அம்மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் சார்பாக இந்த விநியோகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போன்று எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு சமையலறைக்கு நேரடியாக எரிவாயு குழாய்கள் கொண்டு செல்லப்படுகிறது. […]
17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சாராய வியாபாரிகளிடம் தொடர்ந்து வசூல் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சித்திரவேல் தலைமையிலான காவல்துறையினர் மதுவிலக்கு காவல்நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூபாய் நோட்டுகள் சிறிய பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 75,630 ரூபாய் […]
காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாந்தை கிராமத்தில் ஓட்டுநரான ஜோஸ்வா(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுதியா என்ற பெண்ணை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜோஸ்வா பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நேற்று முன்தினம் சவுதியா தனது காதலன் வீட்டிற்கு சென்று திருமணம் […]
உயிருக்கு போராடி கொண்டிருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்ட நபரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கருகாவூர் கிராமத்தில் பழைய மீன்பிடி வலையை யாரோ வீசியுள்ளனர். அதில் சிக்கி ஒரு நல்ல பாம்பு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த பாம்பை பிடிப்பதற்கு பயப்பட்டனர். அப்போது புகைப்பட கலைஞரான பிரவீன் என்பவர் துணிச்சலாக வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார். அதன்பிறகு அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார். அவரது துணிச்சலான செயலை […]
முதல் அமைச்சரை தரக்குறைவாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் பகுதியில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது “டுவிட்டரில்”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை பார்த்த நகரசபை உறுப்பினர் மாசிலாமணி காவல் நிலையத்தில் விஜயராமன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராமன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எப்போது பேரை போலீஸார் கைது செய்தார்கள். நாகப்பட்டினத்தில் உள்ள புதிய பஸ் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபா தேவி தலைமை தாங்க செயலாளர் லலிதா முன்னிலை வகிக்க ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்களுக்கு […]
பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகள் ஊராட்சி கரையிருப்பு இல் திருமருகல்- மருங்கூர் இடையேயான வடக்குபுத்தாற்றில் நெடுஞ்சாலை துறை மூலமாக பாலம் கட்டும் பணியானது சென்ற மாதம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. சென்ற மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி காரணமாக கரையிலிருந்து வடக்குபுத்தாற்றுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதனால் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முருகானந்தம் நக்கம்பாடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே […]
வாடகை பாத்திரக்கடை வியாபாரி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வாடகை பாத்திரக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது குடும்பத்துடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தின் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காமராஜ் மற்றும் அவரது […]
பால் உற்பத்தியாளர்கள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம், கொண்டத்தூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பசும் பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக கொள்முதல் செய்வதற்கான தொகையை ஆவின் நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பாலையும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த படகுகளை மீட்டு தரக்கோரி கர்ப்பிணிப் பெண்ணொருவர் முதல்வரிடம் மனு அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கருவேலங்கடை பகுதியில் கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை சந்தித்து மனுக்களை அளித்தனர். இதையடுத்து முதல்வர் காரில் புறப்பட்டு சென்ற போது கர்ப்பிணி ஒருவர் முதலமைச்சரை சந்திக்க முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் கர்ப்பிணியை சந்திக்க விடவில்லை. இதையடுத்து […]
உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் அற்புதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணியரசி எந்த மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அற்புதராஜ் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அற்புதராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அற்புதராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு […]
கடலில் இருந்து கரை ஒதுங்கிய 3 1/2 அடி அம்மன் சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் பகுதியில் சன்னதி என்ற கடல் அமைந்துள்ளது. இங்கு நேற்று பலத்த காற்று வீசியதால் கடல் உள்வாங்கியது. அப்போது கடலில் காணப்பட்ட சேற்றில் சுமார் 3 1/2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
ஆற்றில் தலைகீழாக நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான வீரசோழன் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆற்றில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் பொதுமக்கள் கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து சோழன் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. […]
ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா சொத்துக்களை அறங்காவலர் குழு மீட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தர்கா அறங்காவலர் குழு ஆக்கிரமித்த சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் அனுபவித்து வந்த தர்காவிற்கு சொந்தமான 1 லட்சத்து 60 ஆயிரத்து 390 சதுர அடி நிலத்தை அறங்காவலர் குழுவிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தர்கா ஆலோசனைக்குழு தலைவர் […]
மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்னையை ரூகோஸ் என்ற புதிய நோய் தாக்குகிறது. இந்நிலையில் இந்த நோய் அதிக சேதத்தை உண்டாக்கும். இந்த பூச்சிகள் தாக்குவதால் ஆரம்ப நிலையில் ஏற்படும் பாதிப்பை தடுக்க மஞ்சள் ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 7 முதல் 10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். இந்த பூச்சிகள் மாலை 6 மணி […]
சிறுவன் தாலி கட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது வயது சிறுமி 8-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி காதலை ஏற்காமல் சிறுவனிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார். இந்நிலையில் சிறுமி அவரது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற சிறுவன் திடீரென சிறுமியின் கழுத்தில் […]
மின்சாரம் தாக்கி மயில் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி காளியம்மன் கோவில் அருகே மயில் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்நிலையில் உயரமாக பறந்தபோது மயில் எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் மோதியது. இதனால் மின்சாரம் தாக்கி மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயிலின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தி எடுத்து சென்றுள்ளனர். இதனை […]