நாமக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் துப்பாகியல் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் திமுகவின் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்தவர் டாக்டர் ஆனந்த். இவர் அதே பகுதியில் மருத்துவமனை அமைத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சில நாட்களாகவே ஆனந்த் மிகுந்த மன உளைச்சலுடன் சோகமாக இருந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் […]
Category: நாமக்கல்
பண்டிகைகள் மற்றும் தொடர் மழையின் காரணமாக முட்டை விலை சரிந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைமுன்னிட்டு நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், பண்டிகைகள் மற்றும் தொடர் கன மழையின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு அனுப்ப […]
நாமக்கல்லில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழரை சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருடைய மகள் சங்கீதா பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன் பகுதியில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியில் குமார் மற்றும் சாரதி இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். இந்த சூழ்நிலையில் குமார் யாருக்கும் தெரியாமல் லதா என்ற வேறொரு பெண்ணை கடந்த 3 ஆண்டுக்கு முன்பு 2-ஆவதாக திருமணம் செய்து தனியாக […]
நாமக்கல் மாவட்ட போலீசார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிடம் இருந்து 33 சவரன் தங்கத்தை மீட்டு, சேலம் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் சின்னார் பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிக்கிய நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது பள்ளிபாளையம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ரத்தின குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த துணிப் பையில் 17 சவரன் நகை […]
ராசிபுரத்தில் குழ்நதை விற்பனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த அமுதவல்லி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பின் ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், அமுதவல்லி ,அவரது கணவர் ரவிச்சந்திரன், மற்றும் அவர்களுக்கு உதவிய […]
தொடரும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கும் கொல்லிமலையில் அதிக மூலிகைகளும் கனிம வளங்களும் காணப்படுகின்றன. இதில் அரசு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான வனப்பகுதிகளிலும் இருக்கும் கனிம வளங்கள் தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக அப்ப்குதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ,இயற்கை அழகு சிதையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்ததோடு மாவட்ட நிர்வாகம் […]
இளைஞர்கள் சாதியை வெறுத்ததன் காரணமாகவே கலப்புத் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிவேதிதா மற்றும் பாலாஜி ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு வீட்டில் அனுமதி கேட்கும் பொழுது இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவருக்கும் பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க […]
நாமக்கல்லில் இறப்பு சான்றிதழ் வழங்க ருபாய் 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்னும் பகுதியில் சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் காந்திமதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 1995ம் வருடம் இறந்த தங்கம்மாள் என்பவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு ரூபாய் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு […]
நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர் . நாமக்கல் மாவட்டத்தில், போதிய மழை இல்லாததால் ஜனவரி மாதத்திலிருந்தே வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கிதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் அனல் காற்று வீசியது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் […]
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் மக்களுக்கு சிரமமேற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையத்தில் இருந்து, புறவழிச்சாலைக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது . அணைப்பாளையம் வழியாக புறவழிச்சாலைக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. சாலையில் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியானதை அடுத்து முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும், ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் […]
ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும், ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் […]
சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் நாகூர் பகுதி மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது நாகூரை அடுத்த காரைமேடு பகுதியை சேர்ந்தவர் கவியரசன் .இவர் நேற்று இரவு ஒரு சிறு பணிக்காக நாகூருக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் பொழுது நான் ஊருக்கு முன்பாக உள்ள தேரடி பகுதியில் உள்ள மெயின் சாலையில் வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் விபத்தை ஏற்படுத்திய […]