நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் “கே” பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணம் ஆன 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் மோகன கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் வசிக்கும் சிவசுப்பிரமணியம் என்பவர் தனது youtube சேனலில் இந்த சம்பவம் குறித்த செய்தியை வீடியோவாக வெளியிட்டு பாதிக்கப்பட்ட […]
Category: நீலகிரி
நீலகிரி மாவட்டத்திலுள்ள மாவனல்லா பகுதியில் காலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்ற போது திடீரென வந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாதனை பொதுமக்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த காமராஜர் என்பவரும், வெண்ணிலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பபாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் காமராஜர் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழம்பு சரியில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் காமராஜர் வேலைக்கு […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் கேரள மாநிலத்தில் உள்ள அம்பலவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை கட்டுமான பணி முடிந்ததும் ஐந்து தொழிலாளர்கள் ஜீப்பில் எருமாடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அம்பலவயல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
கேரள மாநிலத்தை சேர்ந்த மீன் வியாபாரி சுஜில் என்பவர் மொத்தமாக மீன்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் மீன் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சுஜில் முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவரது கார் லோயர் பஜார் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து தனியார் பள்ளி பேருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேங்கோரேஞ்ச் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியது. அதே நேரம் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவரான லாலு பிரசாத், கூடலூர் டேன்டீ தொழிற்பயிற்சி மையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களான அனீஸ், தீனதயாளன் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையத்திற்காக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மருத்துவமனை ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு பகுதியில் தெரு நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி நடமாடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் கரடி புதருக்குள் சென்று மறைந்தது. கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்து மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட், பேருந்து நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு இருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விலங்குகள் நல பாதுகாப்பு செயல்பாட்டாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து 2 வளர்ப்பு நாய்களையும் மீட்டு சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். ஒரு […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது 8 வயது சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அஜித் குமார் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஒருவரை கொலை செய்து உடலை மயானத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து நெற்கதிர்களை மிதித்து சேதப்படுத்துவதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் கூடலூர் வனவர் செல்லத்துரை […]
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெறவில்லை. இந்நிலையில் அனைத்து திருச்சபைகள் சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்துள்ளார். இதனையடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, […]
ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தன பிரியா, தோட்டக்கலை இயக்குனர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து […]
முதுமலையில் அட்டகாசம் செய்த புலி திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இருக்கும் புலிகள் காப்பகத்தில் சென்ற 2 நாட்களுக்கு முன்பாக ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை புலி ஒன்று கடித்துக் கொன்று அட்டகாசம் செய்தது. இதன்பின் விவசாயிகள் அங்கு ஓடி வந்து புலியை விரட்டினார்கள். இதுகுறித்து விவசாயிகளில் தெரிவித்ததாவது, புலி மிகவும் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டதாகவும் வேட்டையாட முடியாத நிலையில் ஆட்டை கடித்துக் கொன்றதாகவும் தெரிவித்தார்கள். […]
ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பிரதான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிகள் திகழ்கின்றது. இங்கு வருடம் தோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றார்கள். இதனால் இங்கே அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த போலீசார் முடிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் என 17 இடங்களில் அதிநவீன […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தோப்பன் லைன் பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோகிலா அடிக்கடி காந்தல் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று வருவது அவரது அண்ணன் அருண்குமாருக்கு(30) பிடிக்கவில்லை. இதனால் நீ வீட்டிற்கு வருவது தொந்தரவாக இருக்கிறது என அருண்குமார் தனது தங்கையிடம் கூறிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று மீண்டும் கோகிலா தனது தாய் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கூடலூர் குறிஞ்சி நகரில் ராபர்ட் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஜான் பிரிட்டோ என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜான் பிரிட்டோவின் தாய் இறந்துவிட்டார். அதிலிருந்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜான் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானின் உடலை மீட்டு […]
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் விதிகளை மீறி விடுதிகள், வணிக நிறுவனம் கட்டிடங்கள் இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஹேவ்லாக் சாலையில் விதிமுறையை மீறி நான்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது தெரிய வந்தது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் […]
ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பாக்கம் அருகே ஆணிக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் சென்ற 12-ம் தேதி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றார்கள். அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது. திடீரென மாலையில் கன மழை […]
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயதுடைய இளம்பெண்ணிடம் ரத்தினகுமார் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது ரத்தினகுமார் அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலையில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின் படி, துணை தாசில்தார் சதீஷ் நாயக் தலைமையில் வருவாய் அலுவலர் சகுந்தலா தேவி உட்பட அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். இதேபோல் மற்றொரு கடையில் இருந்தும் […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு எஸ்.ஆர் வெங்கடேஷ் என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வண்டிசோலை ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்றுள்ளது. அதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவிக்க வெங்கடேஷ் குன்னூரில் வசிக்கும் ஒப்பந்ததாரர் பாலனிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து பாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு […]
நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி 4ஆம் தேதி ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார. இந்த விடுமுறையை ஈடு செய்வதலதற்காக ஜனவரி 21ஆம் தேதி வேலைவாய்ப்பு நாளாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பங்களாபாடிகை பழங்குடியின கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சரக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் பழங்குடியின கிராமம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென காட்டு யானை வந்ததால் சரக்கு வாகன ஓட்டுநர் அபுதாகிர் உடனடியாக கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினார். பின்னர் யானை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தி காய்கறிகளை தின்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலைகளில் உலா வருகிறது. நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் முகாமிட்ட காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் காட்டெருமைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அந்த வழியாக […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் அந்த பெண்ணின் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுஹட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நடுஹட்டியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி அந்த காட்டெருமை தேயிலை தோட்டத்திற்கு பின்புறம் இருக்கும் வீட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையே தவறி விழுந்து வெளியே செல்ல வழி இல்லாமல் சிக்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]
குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீசார் கணவரை கைது செய்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த பர்ஷானாவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சமதுவுக்கும் சென்ற 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பர்ஷானா 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வழக்கு […]
காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மார்தோமா நகரில் இருந்து புத்தூர் வயல் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 25-ஆம் தேதி சிறுத்தை தாக்க முயன்ட்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் கூடலூர் அரசு கல்லூரியில் சுசிலா(18) என்பவர் படித்து வருகிறார். மாலை நேரத்தில் சுசீலா கூடலூரில் இருக்கும் ஜவுளி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்தது வருகிறார். கடந்த 2 […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி கல்லக் கொரை கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை பார்த்து நாய்கள் குரைத்தது. அப்போது வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை கவ்வி சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நாயை கவ்வி […]
கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவேனு கீழ்கேரி கிராமத்தில் சந்தானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்மிளா தனது மகளின் படிப்பு செலவிற்காக கோர்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதற்கு பூர்த்தி செய்யப்படாத இரண்டு காசோலைகள், ப்ரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பூங்கொடி அந்த […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா வாழவையல் பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்த போது வனப்பகுதியில் இருந்து வந்த யானை தாக்கியதால் பாப்பாத்தி உயிரிழந்தார். அவரது அண்ணன் படுகாயத்துடன் உயிர் துப்பினர். அந்த காட்டு யானை தொடர்ந்து வீடுகளை உடைத்து உணவு பொருட்களை தின்று நாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி […]
மெக்கானிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஷக்கீர் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடை உள்ளது. அதற்கு அருகே சிறிய ஹோட்டலும் இருக்கிறது. நேற்று முன்தினம் காலை மெக்கானிக் கடையின் மேற்கூரை வழியாக புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோக்குடல் கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இரவு நேரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவு நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். இதனால் சமுதாயக்கூடம் வீடுகள் உட்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டது என கூறியுள்ளனர். […]
பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய ரிசர்வ் வங்கி சார்பாக டிஜிட்டல் பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட இருக்கின்றது. இதில் பண பரிவர்த்தனையின் போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செய்திகளை […]
நிறுவனத்திற்கு சொந்தமான 5,315 ஏக்கர் நிலம் மற்றும் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அதை மத்திய அரசு ஏற்று நடத்த தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேன்டீன் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களையக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இது கண்டன ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா? […]
தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின் நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில், 55 ஆவது தேசிய நூலக வார விழா ஊட்டியில் உள்ள மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி தலைமை தாங்க, நூலகர் ரவி முன்னிலை வகித்துள்ளார். இதில் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு புத்தக கண்காட்சி […]
பாட்டவயலில் சாலையோரமாக அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே பட்டவயலில் தமிழக-கேரள எல்லை இருக்கின்றது. தேவர்சோலை, நெலாக்கோட்டை, நடுக்காணி, தேவலாலா, பந்தலூர், உப்பட்டி,முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், கல்பெட்டா, அய்யன்கொல்லிக்கு அரசு சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சுல்தான்பத்தேரியிலிருந்து பாட்டவயலுக்கு கேரளா அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாட்டவயல் பகுதியில் இருக்கும் சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் அரசு பேருந்துகள் […]
தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவி ஸ்ரீமதிக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதன்பின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் […]
தோட்டக்கலை துறை சார்பாக சூரிய சக்தியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வட்டார தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்தும் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமை தாங்கி தோட்டக்கலை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவரித்தார். இதன்பின் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் வேளாண்மையில் சூரிய ஒளி […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மணிஹட்டி பகுதியில் இருந்து லாரி ஒன்று நேற்று முன்தினம் தேயிலை இலைகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் கிளீனரான சிவகுமார் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பொள்ளாச்சி- வால்பாறை மலைபாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரைத் தாண்டி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அப்போது பள்ளத்தில் […]
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சூலூர் வட்டம் அடுத்த தும்பிப்பட்டி கிராமத்தில் பாலன் – ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீமதி (20). இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்களது மகள் ஸ்ரீமதி கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவராகி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பாப்டிப்ஸ் காலனியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சங்கீத்குமார், பாலா என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவி குடும்ப கஷ்டம் காரணமாக அண்ணன், தம்பியிடம் 30 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அவர்கள் 3 ஆயிரம் பிடித்தம் செய்து, 27 ஆயிரம் ரூபாயை கொடுத்து, மாதத் தவணையாக 3000 ரூபாய் தவறாமல் செலுத்த வேண்டும் […]
தூய்மை பணியாளர் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் துரைராஜ் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் சென்ற சில மாதங்களாக எனக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் என்னுடைய குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு செலவு, மருத்துவச் செலவு ஆகியவைக்கு பணம் இல்லாமல் தவிர்த்து வருகின்றேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி […]
நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது மரத்தை அகற்றாமல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணியானது சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வருகின்றது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலை ஓரம் கட்டப்படும் பாலம் மற்றும் தடுப்புச் சுவர்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சேலம் கண்காணிப்பு […]
நீலகிரியில் கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் பயிரிட்ட கொய்மலர்களை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருக்கும் கொய்மலர் மொத்த விற்பனை சந்தைக்கு கர்நாடக அரசு சீல் வைத்திருக்கின்றது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்த கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றார்கள். இது பற்றி நீலகிரி மாவட்ட […]