நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் எளியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபத்தில் காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியுள்ளது. மேலும் காட்டு யானைகள் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது. இந்நிலையில் சேரம்பாடி அரசு எண் 4 நாயக்கன் சோலையை ஒட்டி இருக்கும் […]
Category: நீலகிரி
14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை சேர்ந்த சேகர் என்பவர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகின்றார். இவரின் வீட்டில் அருகே வசிக்கும் தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் இருக்கின்றார். இவர்களால் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நேரங்களில் சேகர் தனது காரில் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஒரு […]
இயேசுவின் சொரூபத்தில் இருந்து எண்ணெய் வடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் கீழ்பாரத் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரெஜினா இம்மானுவேல் என்பவரின் வீட்டில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சொரூபம் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சொரூபத்தில் இருந்து திடீரென எண்ணெய் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவரின் வீட்டிற்கு சென்று ஏசுவின் சொரூபத்தை பார்த்தார்கள். இது குறித்து ரெஜினாவின் மகள் கூறியுள்ளதாவது, நாங்கள் இயேசுநாதரின் சிலுவையை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இதனால் நிலத்தில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் பெய்த மழையில் குஞ்சப்பனை பழங்குடியின கிராமத்தில் […]
மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் சித்திக் அலி என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். பின் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட சித்திக் […]
போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்ற 2-ம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல […]
ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வந்த கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதுபோலவே அனுமதிக்க படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போருக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. இது குறித்து பல […]
கூடலூர் காபி வாரியம் சார்பாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காபி வாரியம் சார்பாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா அலுவலக வளாகத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு காபி வாரியம் முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்க உதவி அலுவலர் ராமஜெயம் வரவேற்றார். இதன்பின் கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் சண்முகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் தூய்மை பாரதம் குறித்து […]
கூடலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் முக்கிய இடங்களில் மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகின்றன. இதனால் 10 கிலோமீட்டர் தூரம் பள்ளி கல்லூரிக்கு நடந்து சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கல்லூரியில் வகுப்பு முடிந்து மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அரசு பஸ் ஒன்று பந்தலூருக்கு பயணிகள் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்துறையினர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தனியார் அமைப்பு சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் கூறியதாவது, தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வாகன விதிமீறலுக்குரிய அபராதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியூஹோப் பகுதியில் கணவனை இழந்த முத்தம்மா(81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முத்தம்மா கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று வயதான காலத்தில் பிள்ளைகள் யாரும் கவனிக்காததால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கண்ணீர் மல்க பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது ஆர்.டி.ஓ இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டியிடம் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உணவு பொருள் வணிகர்களுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்த கூடாது. இதனை அடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் மற்றும் குட்காவை வணிகர்கள் விற்பனைக்கு வைக்கவும், சாப்பிடும் உணவு பண்டங்களின் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதிநகர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனை அடுத்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து […]
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் தனியார் தோட்டத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உடனே வழங்குமாறு தோட்ட அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகளும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் […]
நீலகிரி மாவட்டத்தில் அள்ளூர்வயல் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள தெய்வ […]
வாடகை செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1587 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து வியாபாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டும் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும் வாடகையை முழுமையாக செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூபாய் […]
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். ஊட்டி கடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கடநாடு பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப […]
அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை(என்.சி.சி) மாணவர்களுக்கு மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று காரணமாக பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு வெலிங்டனில் உள்ள அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படையில் உள்ள மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் முதல்கட்ட பயிற்சியாக அவாஹில் இருந்து 4 […]
சாலையில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. அப்போது சாலையோரம் கரடி ஒன்று வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கரடியை […]
விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளிக்கு 75 செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்தத் திட்டத்தில் தமிழகம் சார்பில் அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற 75 பேர் […]
சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரது வீட்டு விசேஷத்திற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருப்பூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மரம் […]
காட்டு யானையின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிக்குள் காட்டி யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற பெண்ணையும், ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரையும் இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானையை அடர்ந்த […]
காட்டெருமை தாக்கியதால் வனக்காப்பாளர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மசினகுடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உப்பள்ளா என்ற இடத்தில் புதர் மறைவில் நின்ற காட்டெருமை வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் தப்பி ஓடினர். ஆனால் காட்டெருமை வன காப்பாளரான சசிதரன் என்பவரை முட்டி தள்ளியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினர். […]
கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகளை 2 வேன்களில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் அருகே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பின்னால் வந்த வேன் ஓட்டுநர் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியதால் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த […]
வீடு தேடி கல்வி திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குன்னூர் தன்னார்வலர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அட்டடியில் இருக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் மையத்தில் நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தன்னார்வலர் ஒருவரை கல்வி அமைச்சரின் செல்போன் மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது பெயர், ஊர் குறித்து கேட்டார். இதன் பின்னர் […]
குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தார்கள். அப்போது பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதனால் பயணிகள் இது குறித்து நடத்தினரிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை என கூறியதாக சொல்லப்படுகின்றது. இதில் ஆத்திரம் […]
ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான மார்லிமந்து அணையில் 1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகருக்கு தண்ணீர் தருகின்ற மூன்றாவது முக்கிய குடிநீர் ஆதாரமாக மார்லிமந்து அணை இருக்கின்றது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணையின் தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருகின்றது. மேலும் தூர்வாரப்படாமல் இருப்பதால் அதிக தண்ணீரை சேர்த்து வைக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு சுத்திகரிப்பு […]
தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செவுடிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 7 வாலிபர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் இருக்கும் மாஹிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து விட்டு வாலிபர்கள் தர்மடம் அழிமுகம் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அகில்(24), சுனில்(25) ஆகிய இரண்டு பேர் ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முன்மொழி அகராதி நெலிகொலு அறக்கட்டளை சார்பில் படுக மொழி சொற்களின் அர்த்தங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்தனர். நேற்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைத்து அகராதி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நெலிகொலு அறக்கட்டளை தலைவர் ஆர்.தர்மன் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அகராதியை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அகராதியை […]
காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உள்ள வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராஜசேகர்(64) என்பவர் வீட்டில் இருந்து அதிகாலை நேரத்தில் வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டெருமை ராஜசேகரை துரத்தி சென்று முட்டி தாக்கியது. இதனால் ராஜசேகர் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று முன்தினம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த அரசு தையலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது பயங்கரமாக மோதி சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பெண் உள்பட இரண்டு […]
பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள புத்தூர் வயல் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். மறுநாள் காலை தனது மனைவியை காணவில்லை என மோகன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த உஷாவின் தம்பி காவல் நிலையத்தில் தனது […]
முதுமலை எல்லையோர கிராமங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி இருக்கின்றது. இங்கு வாழும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனத்துறை வருடம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் […]
நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசு மற்றும் பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் சட்டம் 1986 கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 36 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட தராசுகள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2013 கீழ் உரிய […]
அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பெரியசூண்டி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் ராஜகோபாலபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து கனகம்மாள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கனகம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பிக்கட்டி சிவசக்தி நகரில் மணிகண்டன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மணிகண்டன் செலவுக்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் விஷம் குடித்து குந்தா பாலம் அருகே மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
காட்டு யானைகள் 200-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழிக்கண்டி பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வாழை மரத்தை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் வாழை மரங்கள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வாழைகளை யானை சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை […]
சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறாவது மைல் பகுதியில் இருந்து அதிகரட்டி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இதில் 25 சென்ட் நிலத்தை கால்நடை துறைக்கு ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் சொப் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் சதீஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகரட்டி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் எட்டு காட்டெருமைகள் முகாமிட்டது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று குட்டிக்கு பால் கொடுத்தவாறு நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து காட்டெருமைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகே கோபத்துடன் தாக்குவதற்காக சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் நின்ற வாகனங்களை ஒதுக்கிய பிறகு காட்டெருமைகள் அந்த வழியாக தேயிலை தோட்டத்திற்குள் […]
அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சிறுமலர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊட்டி வடக்கு வனச்சரவு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறுமலர் குடியிருப்பு பகுதியில் ராட்சத கற்பூர மரங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும் நாட்களில் மரங்கள் குடியிருப்புக்கு மேல் விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு […]
குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கும் பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி அப்பகுதிக்குள் நுழைந்து வீட்டின் தடுப்பு சுவரை ஏறி உள்ளே குதித்து சென்றது. இதனை அடுத்து நாய் குரைக்கும் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வெளியே கரடி உலா […]
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேலாஸ் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆனந்தன் ஊட்டி-அச்சனக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி சென்றுள்ளார். கண்டக்டராக குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை. […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் கோத்திமுக்கு ஆதிவாசி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து கன மழைக்கு தாக்குபிடிக்காமல் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4100 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள கொளப்பள்ளி பகுதியில் மனோஜ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கை உள்ளார். இந்த சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு சென்ற படிப்பது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு தங்கையின் தோழி வீட்டிற்கு சென்ற மனோஜ் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே யாரிடமும் இதனை கூறக்கூடாது என மனோஜ் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் […]
நீலகிரி மாவட்டத்தில் ஆணைசெத்ததொல்லி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று புகுந்துள்ளது. அதன் பின் பொதுமக்களின் வீடுகளை யானை சுற்றி சுற்றி வந்தது. இந்நிலையில் அங்கு புகழேந்திறன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். அவருடைய வீட்டின் முன்பக்க சுவரை யானை இடித்து தள்ளியுள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புகழேந்திரனின் மகளான கர்ப்பிணிப் பெண் நந்தினி அதிர்ஷ்டவசமாக உயிர் […]
ஊட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 12 ஏக்கர் நிலம் மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கும் இடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்த வகையில் ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆடா சோலை பகுதியில் இருக்கும் மேச்சல் நிலம் என்று வகைப்பாட்டில் இருக்கும் புறம்போக்குநிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக […]
நீலகிரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடு தேடி குடிநீர் வந்திருப்பதாகவும் அலைச்சல் இல்லை எனவும் பொதுமக்கள் கருத்து கூறியுள்ளார்கள். நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக சென்ற 2019 ஆம் வருடம் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் படி வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கிராமங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. கிராமப்புறங்களில் இருக்கும் தனிநபருக்கு ஒரு […]
சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெடுகுளா ஒசட்டி கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட […]
ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து ஆட்டோ ஒன்று பயணிகளுடன் பாட்டவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாலவயல் பாலம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த ஜீப் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராணி(75), லெனின்(12), தேவராஜ்(70) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் குமரேசன்-பத்மினி தம்பதியினருக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்ட தம்பதி முடிவு செய்தனர். இதற்கான பணி அர்ஷத் என்ற ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக வீடு கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே தடுப்புசுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த […]