எச்.ஏ.டி.பி மைதானத்தில் தற்போது நான்கு உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எச்.ஏ.டி.பி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று மைதானத்தை மேம்படுத்துவதன் ஒருபகுதியாக உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றியுள்ள நான்கு இடங்களில் உயர் மின் விளக்குகள் […]
Category: நீலகிரி
கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் போராடி மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மன்சனக் கொரை மின் மயானம் அருகே விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த விவசாய தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள கால்வாயில் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை ஒன்று கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டது. இந்த கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்ததால் காட்டெருமையின் கால் மற்றும் கொம்பு பகுதி கால்வாய்க்குள் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
அப்பர் பவானி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிகளில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீ தடுப்பு குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பர் பவானி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் […]
முதுமலை வனப்பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குட்டை பக்கத்தில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து, தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். […]
கடும் வீழ்ச்சிக்குப் பிறகு தேயிலையின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டு உள்ளனர். இதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளும், கூட்டுறவு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. இந்நிலையில் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சைத் தேயிலையை விவசாயிகள் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். இதையடுத்து தொழிற்சாலைகளில் பச்சைத் தேயிலையை கொண்டு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் ஆன்லைன் மூலம் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுரேந்திரன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
சாலைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளாவை இணைக்கும் சாலையில் தேவாலா, நாடுகாணி, பந்தலூர், மரப்பாலம், சேரம்பாடி போன்ற முக்கிய பஜார்கள் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பந்தலூர் தாலுகா மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள கூடலுருக்கு சென்று வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுவதால் எப்போதும் […]
உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பிறகு தாவரவியல் பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி வனச்சரகத்தில் தாவரவியல் மைய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகை தாவரங்கள், பராமரிப்பு கூடம், திசு வளர்ப்பு மையம், பெரணி இல்லங்கள், பசுமை பள்ளத்தாக்குகள், வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள் கொண்ட கண்காட்சியகம் போன்றவை அமைந்துள்ளது. இந்த தாவரவியல் பூங்கா கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி சுற்றுலா மையமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனையடுத்து […]
கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து மைசூருக்கு சுற்றுலா வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் வாகனம் தாறுமாறாக ஓடியதால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டதால் கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து […]
தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டtதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்து லைன்ஸ், கார்வயல் மற்றும் கொள்ளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பாலவாடி லைன் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் தனது குட்டிகளுடன் பாலவாடி லைன்ஸ் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை இரவு நேரத்தில் முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]
முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி போன்ற பல்வேறு சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சுற்றுலா தளத்திற்கு வரும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு […]
தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 116 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த மாவட்டத்தில் பதட்டமான இடங்களாக கண்டறியப்பட்ட 51 இடங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் 543 துப்பாக்கி உரிமையாளர்கள் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் 489 பேர் துப்பாக்கியை ஒப்படைத்த நிலையில் 54 பேருக்கு விலக்கு அளித்து உள்ளனர். […]
முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ஆனந்தகுமாருக்கும், அப்பகுதியில் கணவரை இழந்து வசித்து வரும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து ஆயிஷா வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த ஆனந்தகுமார் […]
சிரட்டை மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கைவினைப் பொருட்களை தயாரித்து கிராமப்புற பெண்கள் அசத்தியுள்ளனர். தற்போதைய காலகட்டங்களில் பிளாஸ்டிக் அல்லாமல் பிற பொருட்களை கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு உறுதுணையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இவ்வாறு அன்றாடம் நாம் பயன்படுத்தி பின் தேவையில்லாமல் தூக்கி போட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கைவினைப் பொருட்கள் மிகுந்த […]
சட்டத்தை மீறி வனவிலங்குகளுக்கு உணவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டெருமைகள், மான்கள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பசுந்தீவனங்களை உண்ணும் வனவிலங்குகள் உணவு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காட்டெருமைகள் மற்றும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் […]
சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சிறுத்தை, கரடி, காட்டு யானை, புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீரை தேடி நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]
வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டுள்ள யானையை மர குண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்த யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் […]
கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நாயை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள எமக்குண்டு குடியிருப்பில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கட்டப்பெட்டு வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு நாய் திடீரென மாயமானதால் அந்த நாயின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளார். இவர்கள் அனைத்து சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, ஊட்டியிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைகுந்தா பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென அவரது காரில் பழுது ஏற்பட்டதால், அப்பகுதியில் […]
கோடை சீசனை முன்னிட்டு நேரு பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நேரு பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்க்க வருவர். இந்நிலையில் கோடை சீசன் தொடங்குவதை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே நிலத்தை பதப்படுத்தி பூங்காவில் புதிய மலர் நாற்றுகளை நடுவதற்காக பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காவிலிருந்து இயற்கை உரம் கொண்டு வரப்பட்டு போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 40 […]
வனப் பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம் பெயர ஆரம்பித்ததால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடை காலம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு அனைத்து மரங்களிலும் இலைகள் உதிர ஆரம்பித்து விட்டது. இதனால் ஒரு நாளுக்கு 250 கிலோ பசுந்தீவனங்கள் சாப்பிடும் பழக்கம் கொண்ட காட்டு […]
உரிய ஆவணமின்றி வைத்திருந்த 19, 22, 300 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கூடலூர்-கேரள எல்லைப் பகுதிகளிலும், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சோதனை […]
ஊருக்குள் புகுந்த காட்டு எருமை பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாதேவி காலனியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி தனது வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்காக வெளியே உள்ள குப்பை தொட்டிக்கு அருகில் சென்றபோது, அங்குள்ள புதரின் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்து சந்தானலட்சுமியை விரட்டி உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி […]
கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் நஷ்டமடைந்த விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், நூல்கோல், கேரட், பீன்ஸ் மற்றும் வெள்ளைப்பூண்டு போன்றவற்றை விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிரிட்டு அதனை சாகுபடி செய்கின்றனர். இவற்றில் கடந்த சில மாதங்களாக கேரட் கிலோவிற்கு 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள […]
சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வரும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிப்பவர் டாக்சி ஓட்டுனர் கார்த்தி. இவர் பல பெண்களை டிக் டாக் செயலி மூலமாக காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் டிக்டாக் செயலியானது தடை செய்யப்பட்ட நிலையிலும் வேறு ஒரு செயலி மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்துள்ளார். […]
ஆசிரியராக பணிபுரியும் தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 பள்ளிகள் மூடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. மேலும் மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து தம்பதிகள் இருவரையும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்நிலையில் தொற்று […]
கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் மட்டுமே நீலகிரிக்குள் நுழைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது 15-க்கும் கீழ் குறைந்து விட்டது. இந்நிலையில் கேரளாவில் வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர். இது பற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து […]
ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த யானை ஸ்கூட்டரை தாக்கிய வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி ஊராட்சி அருகில் உள்ள வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை ஓன்று நின்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பயத்தில் அங்கேயே நின்று விட்டனர். இதனையடுத்து அந்த காட்டுயானை மெதுவாக சாலையை கடக்க […]
குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டே திரியும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அந்த வனப்பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கையானது அதிக அளவில் காணப்படுகிறது. இந்த குரங்குகள் சுற்றுலா பயணிகள் உணவளிப்பதால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை சாலையில் அமர்ந்து கொள்கின்றன. இவ்வாறு சாலைகளில் அமரும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு […]
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள சோலையூர் கிராமத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற கூலி வேலை பார்க்கும் மகன் உள்ளார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும் போது, அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது […]
உதகை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் இளி துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம் தேதி அவரது மனைவி நாகமணிக்கு பிரசவத்திற்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் தனது மனைவியை பரிசோதிக்குமாறு அருள்நாதன் கேட்டுள்ளார். இதனையடுத்து நாகமணியை பரிசோதித்துவிட்டு […]
சீனாவை பூர்விகமாக கொண்ட கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார். கொடைக்கானலில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார். பாம்பார் புரத்தைச் சேர்ந்த ஆசிரி விவசாயி ஆன்லைன் மூலம் கருப்பு கேரட் பற்றி அறிந்து கொண்டு அதன் விதைகளை வாங்கி அவரது தோட்டத்தில் சுமார் 5 சென்ட் பரப்பளவில் பயிரிட்டுள்ளார். சீனாவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் கருப்பு கேரட்டின் ருசி நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள். […]
மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலைச்செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி பிரசவத்துக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அக்குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்நாதன் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்திலும், குழந்தையின் உடலை வாங்க மறுத்து […]
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டூர் பகுதிக்கு அருகே இளித்தொரை இந்திரா நகரில் அருள்நாதன் என்பவர் (18) வசித்து வருகிறார் . இவர் 108 அவசர ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நாகராணி ( 25) பிரசவத்திற்காக அங்குள்ள ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.இந்நிலையில் நாகராணி நேற்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது […]
காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, ஓவேலி, தோட்ட மூலா, முண்டகுன்னு போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிகமாக காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக கூட்டமாக முகாமிட்டு வருகின்றது. இப்பகுதியில் அட்டகாசம் செய்து மூன்று பேரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மர கூண்டில் அடைத்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். […]
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் 44 வயதான ஜவுளி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவி வெளியே சென்ற சமயத்தில் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த […]
கடும் குளிர் மற்றும் பனியின் தாக்கத்தால் நீலகிரியில் பயிரிடப்பட்ட விவசாய செடிகள் கருகியதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுபட்டரை குன்னூர் மற்றும் அருவங்காடு போன்ற இடங்களில் உறை பனியின் தாக்கமானது அதிகமாக உள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருக்கிறது. அப்பகுதியில் மாலை 3 மணியில் இருந்தே கடும் பனி நிலவுவதால் வியாபாரிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு […]
சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து தோடர் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ளார். அங்குள்ள தவிட்டுப் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து விட்டு, […]
உதகையில் புல்வெளிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் வெள்ளைக் கம்பளம் போற்றியது போல் உறைபனி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தொடங்கும் உறைபனி பருவம் பிப்ரவரியில் விலகத் தொடங்கும்.ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பனிப் பொழிவின் தாக்கம் நேற்றுமுதல் அதிகரித்து காணப்படுகிறது. உரைபனியின் தாக்கத்தால் தாவரவியல் பூங்காவில் குளிர் நிலை பூஜ்ஜியம் டிகிரியை தொட்டது. மிதமிஞ்சிய கடும் குளிரால் புல்வெளிகள், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. தலை கூந்தல் புல்வெளி வெள்ளை கம்பளம் போல் காட்சியளிக்கின்றது. […]
அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து மிகுந்த அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் […]
ஊட்டி அரசு ரோஜா பூங்கா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிக அளவு புதிய ரகங்களை கொண்ட ரோஜாவை பராமரித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறது என கலெக்டர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை துவங்கி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் உள்ள 31,500 வீரிய ரக ரோஜா செடிகளில் கவாத்து பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊட்டி மலர் […]
அதிகமான உறைப்பனி காரணமாக ஊட்டியில் தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் அங்கு உள்ள புல்வெளிகள், செடிகள் மற்றும் வனப்பகுதிகள் வேகமாக கருகி கொண்டே வருகின்றன. இந்நிலையில் கடுமையான உறைப்பனி காரணமாக கேத்தி, பாலாடா, சோலூர், லவ்டெல், வேலிவியூ போன்ற இடங்களில் பச்சைப் பசேலென காட்சி அளித்த தேயிலைத் தோட்டங்கள் பனியின் காரணமாக […]
கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களின் வசதிக்காக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தார் சாலை கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் வசதியுடன் அமைக்கப்படாததால், அங்குள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து […]
பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டு எருமைகள், சிறுத்தை, புலிகள், காட்டு யானைகள், கரடிகள், மான்கள், புலிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த இடத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தேவையில்லை என தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் மண்ணின் வளம் […]
சேரம்பாடியில் அட்டகாசம் செய்ததால் பிடிக்கப்பட்ட சீனிவாசன் என்ற யானை தற்போது கும்கி யானையாக மாற்றப்பட்டு, ஒற்றைக் கொம்பன் யானையை பிடிப்பதற்காக அதே பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடியில் 3 பேரை கொடூரமாகக் கொன்றுவிட்டு ஒற்றைக் கொம்பன் யானை அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அதன் பிறகு கேரள வனப்பகுதியில் இருந்த இந்த யானையை தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த யானை மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடிக்கு திரும்பி விட்டது. […]
மனிதர்களை விட நாங்கள் ஒற்றுமையானவர்கள் என யானை கூட்டங்கள் நிரூபித்துள்ளது. நீலகிரி மாவட்டம் காட்பாடியில் உள்ள சங்கர் யானை மூன்று பேரை கொன்றுள்ளது. ஆகவே அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நான்கு நாட்களாக முயற்சி செய்து வருகின்றனர். அவர்களது முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது நாளாக நேற்று புஞ்ச கொல்லி பகுதியில் சங்கர் யானை கூட்டத்துடன் நிற்பதை வனத்துறையினர் கண்டனர். அதன்பிறகு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். […]
ஒற்றைக்கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் வனத்துறையினருக்கும், டாக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒற்றைக் கொம்பன் யானை மூன்று பேரை அடித்துக் கொன்றுவிட்டு கேரளா பகுதிக்கு தப்பி ஓடியது. இதனை அடுத்து தமிழக-கேரள வனத் துறையினர் அதனை கண்காணித்து வந்துள்ளனர். அதன்பின் ஒற்றைக்கொம்பன் யானையானது மறுபடியும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடிக்கு வந்து விட்டது. இதனால் […]
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவானது தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள், பல்வேறு வகையான அலங்கார மற்றும் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளன. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் சிம்ஸ் பூங்கா படகு இல்லம் அருகே தற்போது பூத்து […]
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை ஒற்றை கொம்பன் யானை கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றுவிட்டது. மேலும் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் இதன் ஒரு தந்தம் உடைந்து இருப்பதால் இதனை களப்பணியாளர்கள் ஒற்றைக்கொம்பன் என்றும், வனத்துறையினர் சங்கர் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக […]