தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குந்தா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழைப் பெய்து வருகிறது.இதன் விளைவாகப் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதுஎனவே, இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், உள்ளூர் தீயணைப்புத்துறையினருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.விளக்கம்இதில் நிலச்சரிவு, இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, […]
Category: நீலகிரி
கனமழை காரணமாக குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமைழையானது தொடங்கி பெய்து வருகின்றது. கடந்த 3 நாட்களாகவே தமிழகம் முழுவதுமே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது இதன் காரணமாக அங்குள்ள குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பூச வைத்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாம்பே கேஸ் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் பிரசங்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் இரண்டு பேரும் அங்கிருக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி சுற்றிவளைத்தனர். பின்னர் […]
நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தண்ட நாடு பகுதியில் பேரிக்காய் விளைச்சல் அதிகமாக ஏற்பட்டு கொத்துக் கொத்தாக மரத்தில் தொங்கி வருகிறது. இதனை சாப்பிடுவதற்காக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் தேயிலை பறிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த காட்டெருமைகள் மனிதர்களை தாக்கும் முன்பு அவற்றை […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு பகுதிகளிலும் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர் […]
அழகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசியப் பூங்கா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. தொடர் மழையால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பவானி மற்றும் மாயாறு ஆறுகளில் […]
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மெஷின் காம்பொன்ட் குடியிருப்பு பகுதியில் கரடி புகுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரப்பகுதியான மெஷின் காம்பொன்ட் குடியிருப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக அடிக்கடி கரடி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பகல் நேரங்களில் தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் உள்ள ரெப்ட்டிக் கடைகளை உடைத்தும் வருகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தோட்டம் மற்றும் ரெப்ட்டிக் கடைகளின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு கொண்டு வந்து அதிகமாக நடமாட்டம் இருக்கும் பகுதியில் […]
வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் மேலும் இந்த முடிவுகளை மாற்ற வேண்டும் என்றும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது குறித்து போலீசார் அவர்களிடையே […]
தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் விதமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக 18 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனை கருத்தில்கொண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோரிடம் சி.பி.எஸ்.சி தரத்திற்கு இணையான தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்துள்ளனர். மேலும் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தின் […]
கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக ஓடி காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 5 நிறமாக மாறும் ஜப்பான் நாட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா 2-வது சீசனுக்கு தயாராக இருப்பதால் அங்கு மலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மினி படகு இல்லத்தின் ஓரங்களில் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ‘ஹைட்ராஞ்ஜியா ‘ ( Hydrangea ) எனும் தாவரவியல் பெயர்கொண்ட நிறம் மாறும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன. 7 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இச்செடிகள் நான்கு நாட்கள் செல்ல செல்ல […]
உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்துவருபவர் உமா. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்டுவந்த பிரச்சனையின் காரணமாக கணவரை பிரிந்து, தனது 2வது மகன் அபிஷேக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பிய அபிஷேக் வீட்டின் படுக்கை அறையில் தன் தாயார் கழுத்து அறுப்பட்ட நிலையில் […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுற்றுலா பயணிகள் யானை சவாரியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் . கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க வனப்பகுதிக்குள், யானை சவாரி மற்றும் வாகன சவாரியை வனத்துறை நடத்தி வருகிறது . இந்நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் , வாகனங்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கையை 6 ஆக வனத்துறை, உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள பணம் மற்றும் மது பாட்டில்களை சூறையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு இருந்த 31 ,000 ரூபாய் பணத்தையும்,மதுபாட்டில்களையும் சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும் கைது செய்தனர்.
உதகைமண்டல கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும் கோடைகால விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். 123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட […]
குன்னூரில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் ஒரு குடம்தண்ணீர் 10ரூபாய் கொடுத்துவாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிக முக்கியமான நீராதாரமாக ரேலியா அணை, விளங்கி வருகிறது .இதில் தற்போது 32 அடிக்கு நீர் குறைந்துள்ளதால் , 4 தடுப்பணைகளில் இருந்து குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த அணைகளிலும் , போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. […]
மலைப்பாதையில் பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும் சாமர்த்தியமாக பஸ்யை ஓட்டியதால் பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 64 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சின்னசாமி என்பவர் ஓட்டினார். பிற்பகல் 2.30 மணியளவில் காட்டேரி பகுதியில் பஸ் சென்ற போது பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திடீரென டிரைவர் சின்னசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வழியை […]
ஊட்டியில் கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருக்கி ஊட்டி என்று அழைக்கப்பட்டது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். தற்போது கோடை கால சீசன் ஆரம்பித்துள்ளதால், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த […]
கோத்தகிரி வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சண்முகம் இவர் கோத்தகிரி அருகில் உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் ஆறு வயது. இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சக்திவேல் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் விளையாடசென்றுள்ளான் . ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. […]