தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் சுமை தூக்கும் தொழிலாளியான மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையம் அருகே தகரக் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மணிகண்டன் வீட்டில் தூங்கியுள்ளார். அந்த வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கு […]
Category: நீலகிரி
இறைச்சியில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பாட்டவயல் பகுதியில் நெஸ்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் மாடு இறைச்சி வாங்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது இறைச்சியில் புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்திடம் பேசிய போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நெஸ்னா மாவட்ட உணவு […]
தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்துக் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தன்னுடன் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் 16 வயது மகளிடம் மகேந்திரன் பேச்சு கொடுத்து பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருமணமானதையும் மறைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மகேந்திரன் சிறுமியை கோயம்புத்தூர் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் மணிகண்டன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் கூடலூர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அனிதா மகாத்மா காந்தி பொது சேவை மைய உறுப்பினராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். எனவே அனிதா தனது தலை முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதனை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மகாத்மா […]
பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அப்சல்ஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஜாமுதீன்(41) என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீனின் ஆட்டோவில் பந்தலூரில் வசிக்கும் காசிராணி என்பவர் பயணம் செய்துள்ளார். இதனை அடுத்து இறங்கும்போது மணிபர்சை ஆட்டோவில் வைத்துவிட்டு காசிராணி சென்று விட்டார். பின்னர் ஆட்டோவில் மணிபர்ஸ் இருந்ததை பார்த்த நிஜாமுதீன் மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியின் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக […]
யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் 2 பேர் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளப்படி அம்பலக்காடு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தது. இதனை எடுத்து சதாசிவம் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அப்போது சதாசிவத்தின் குடும்பத்தினர் பின்புற […]
வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாளை அதிரடித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் யானை ஒன்று தட்டபள்ளம் பகுதியில் இருக்கும் சாலையின் குறுக்கே நின்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டனர். அந்த யானை நீண்ட நேரமாக சாலையில் அங்கும் இங்கும் உலா வந்ததால் இருபுறமும் வாகனங்கள் […]
பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பெண் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரால் நடக்க இயலவில்லை. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பெண் 2 மாதங்கள் அவர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர் அந்த பெண்ணை […]
காட்டு யானை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் காட்டு யானை செம்மக்கொல்லை கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் காட்டு யானை மாறன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பின்னர் ஆதிவாசி மக்கள் இணைந்து காட்டு […]
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் சஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் ஆறு பேருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் ஊட்டி- கூடலூர் சாலை காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் திரும்ப முய ன்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதனால் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர்போஸ்டில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையரின் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் 14 முதியவர்களுக்கு வழங்கியுள்ளார். முதியவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தொடர்ந்து உங்களது பங்களிப்பை நாட்டிற்கு அளிப்பது மகிழ்ச்சி […]
அடுத்தடுத்த வீடுகளில் பணம் மற்றும் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் ஊட்டியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து தனது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது 8 பவுன் தங்க நகை மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் ஊட்டி மத்திய போலீஸ் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து இயற்கை பாதுகாப்பு மைய கால்நடை மருத்துவர்கள் பாரத் ஜோதி, சுகுமாரன் ஆகியோர் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களை தெருக்களில் விடக்கூடாது. கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு இல்லை. […]
கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை என மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் குறித்து பேசுவது போல் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேலும் ஊராட்சி துணைத்தலைவர் கூறியுள்ளதாவது, ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தர வேண்டும் […]
கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா தொழில் வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக கூடலூர் திகழ்வதால் வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 350 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் சொகுசு காரர்கள் பெருகி வருவதால் சுற்றுலா வாகனத் தொழில் நலிவடைந்து […]
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும் என நீலகிரி ஆட்சியர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க 102 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து துண்டு […]
கோடநாடு காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருக்கும் கோடநாடு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கொடநாடு காட்சி மழை கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்திலும் இருக்கிறது. இங்கு தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் இருக்கும் மேட்டுப்பாளையம், பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். கடந்த […]
ஊட்டியில் 13 கோடியில் ஆவின் பாலாடை கட்டி தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும் என சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் தலைமையிலான உறுப்பினர்கள் பார்வையிட்டார்கள். அதன் பிறகு தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவிற்கு பெறப்பட்ட மனுக்களில் ஐம்பது மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் […]
கூடலுரில் இருந்து தாளூருக்கு கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் தாளூர் தனியார் கல்லூரியிலும் பல பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றார்கள். கூடலூர் போக்குவரத்து கழக கிளையிலிருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, கையுன்னி, எருமாடு வழியாக தாளூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் […]
ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ., சார்பாக மாவட்ட அளவிலான 12 வது செஸ் போட்டி இரண்டு நாட்களாக ஊட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டு பொதுப்பிரிவில் யோகேஷ், நபீலா, ரேவந்த், குயின் ஆப் ஷீபா, சால்மன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றார்கள். இதை தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி […]
கோத்தகிரி நேரு பூங்காவை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் உள்ள நேரு பூங்கா பிரபல சுற்றுலா தளமாக உள்ளது. இந்த நிலையில் சென்ற சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் பூங்காவில் இருக்கும் புல் தரைகளில் அதிக அளவு புற்கள் வளர்ந்தது. மேலும் மலர் செடிகளில் பூத்திருந்த மலர்களும் அழுக ஆரம்பித்தன. இந்த நிலையில் சென்ற சில நாட்களாக மழை பெய்யாமல் இருப்பதால் பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் […]
குடியிருப்புக்குள் புகுந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை கரடி சேதம் செய்வதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் உபதமலை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் பால் மாற்றம் தயிர் பாக்கெட்கள் சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதிக்கு உணவு தேடி வந்த கரடி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ருசித்தது. இது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் […]
ஜாமீன் மூலம் வெளியே வந்தவர் சிறுமியை கர்ப்பமாகியதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் சேபட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின் இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமின் மூலம் வெளியே வந்தார். இந்த நிலையில் அதே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]
தொட்டி பாலத்தில் குளிக்க கூடாது என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி இருக்கும் தொட்டி பாலம் இயற்கை எழில் சூழ்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இதனை கண்டு ரசிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் லோயர் கேம்ப் மின் நிலையம் அருகே 18-ஆம் கால்வாய் தலைமதவு பகுதியில் இருந்து கடந்த 14-ஆம் […]
பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பேருந்தில் 19 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தார்கள். பெங்களூருவிலிருந்து கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்கு பயணிகளுடன் கேரள பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது போலீசார் அங்கு திடீர்னு சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது பயணிகளின் பைகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும் படியாக ஒரு நபர் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி அருகே 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி நடந்தவற்றை கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா பகுதியில் கன மழை பெய்து வருவதால் வெள்ளேரிசோலாடி, பொன்னானி, விளக்கலாடி உள்ளிட்ட ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. ஆதிவாசி காலனிக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து பந்தலூர் வருவாய் துறை சார்பாக அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை தாசில்தார் நடேசன் […]
இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் இரண்டு பேர் தேர்வாகி இருக்கின்றார்கள். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 செயற்கைக்கோள்கள் ஏவும் இஸ்ரோவின் திட்டத்தில் தமிழகம் சார்பாக விண்ணிற்கு ஏவப்படுகின்ற அகஸ்தியர் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பும் செயற்கைகோள்குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை சேர்ந்த இருளர் பழங்குடியின மாணவர், மாணவி என இரண்டு பேருக்கு கிடைத்திருக்கின்றது. இது பற்றி உரைவிட பள்ளி தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன் கூறியுள்ளதாவது, […]
கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதால் 3415 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றார்கள். தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறுநாள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மகளிர் […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாகிய முதியவருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கே.கே மட்டம் பகுதியைச் சேர்ந்த புச்சித்தன் என்ற கன்னட தாத்தா சென்ற 2020 ஆம் வருடம் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விளையாடுவது போல பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். இதனிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் […]
ஊட்டியில் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் புகுந்தது. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்ற இரண்டு நாட்களாகவே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வானம் மேகம் கூட்டமாக காணப்பட்டு பின்னர் 12 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது பல இடங்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டி […]
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கீழ் கோத்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை கள இயக்குனர் சிங்கராஜ் தொடங்கி வைக்க வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முக்கியத்துவம், வங்கி கடன்கள், பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் என அரசு மானியங்கள் குறித்து பேசினார்கள். […]
உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். நேற்று முன்தினம் பெர்ன்ஹில் ரயில்வே விருந்தினர் மளிகை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை படுத்து கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]
கூடலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தினமும் காலையில் ஒரு மணி நேரம் லாரிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தமிழகம் கர்நாடகா கேரளா மூன்று மாநிலங்களை இணைக்கும் கூடலூர் நகரில் சாலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஈடுபடுகின்றது கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மூடப்பட்டிருப்பது சரக்கு லாரிகள் இரவில் காத்திருந்து காலையில் வருவதால் பெரும் போக்குவரத்து நடிப்பது ஏற்படுகின்றது. மேலும் […]
கனமழை காரணமாக கிராமங்களுக்கு வெள்ளம் புகுந்ததால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடந்தொரை, தேவச்சோலை, நெலாக்கோட்டை, பிதிற்காடு பாட்டாவயல் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. மேலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சென்ற பத்தாம் தேதி தொரப்பள்ளி, இருவயல் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதை அடுத்து பலத்த […]
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இங்கு கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை புல்வெளி போன்ற பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள். […]
தேயிலை பறிக்கும் போது பெண் தொழிலாளி பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோயில் மேடு பகுதியில் தோட்ட தொழிலாளியான ரெஜினா லூகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினா லூகாஸுக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் தேயிலை பறிக்கும் போது, சோர்வடையாமல் இருப்பதற்காக தனது இனிமையான குரல் வளத்துடன் பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை மற்ற தொழிலாளர்களும் உற்சாகமாக கேட்பது வழக்கம். இந்நிலையில் ரெஜினா லூகாஸ் சிட்டுக்குருவி […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள செங்கல்புதூர் கிராமத்தில் கூலித்தொழிலாளியான பொன்னுசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு ஆதிவாசியான பொன்னுசாமி மீது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவன் மீது வனத்துறையில் 7 வழக்குகளும், காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கிறது. விசாரணைக்காக பொன்னுசாமி குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் யானை தந்தம் கடத்தல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. […]
பாலியல் தொந்தரவு அளித்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் சரவணன்(50) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் போலீசாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சரவணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் உயர் அதிகாரிகள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மஞ்சூர் காவல் நிலையத்திற்கு […]
கூடலூர் சாலையில் காலை, மாலை நேரங்களில் ஒரு வழி பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் வேலியில் இருந்து கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹெல்த் கேர் வழியாக கூடலூர் நகருக்குள் ஒரு வழி பாதையாக வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்த நடைமுறையை சில வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது […]
ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ் என்பவரும் அவரின் மகன் யுவராஜ் என்பவரும் வியாபாரம் நிமிர்த்தமாக 32 லட்சத்துடன் திருச்சியிலிருந்து பேருந்தில் ஊட்டிக்குச் சென்ற நான்காம் தேதி வந்துள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் குத்தி ஒன்பதாயிரம் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றார்கள். இதுகுறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். […]
மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான ஹரிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஹரிஷ் மேச்சலுக்கு சென்ற மாடுகளை தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். மாலை நேரத்தில் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை கேட்டு ஹரிஷ் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதால் ஒயர்கள் அறுந்து கன்றுக்குட்டி மீதும், வளர்ப்பு நாய் மீதும் விழுந்திருப்பதை கண்டு […]
ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டெண்டாக வீரேந்திர வாட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் வெல்டிங்டெனில் ராணுவ பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும், இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் கல்லூரியின் கமாண்டெண்டாக பதவி வகித்த லெப்டினென்ட் ஜென்ரல் மோகன், தென் சூடான் நாட்டில் இருக்கும் ஐ.நா சபை அமைதிப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ராணுவ பயிற்சி கல்லூரி கமெண்டெண்டாக ஜெனரல் […]
கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் பெரிய வண்டிசோலை பகுதியில் இருக்கும் தனியார் தேவை தோட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அங்கு தற்காலிக கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டெருமை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. […]
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து அதிகாரிகள் மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஏலமன்னா பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் தனி நபர் ஒருவர் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அம்ரித், கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி அதிகாரிகள் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தனர். அப்போது 7 சென்ட் நிலம் […]
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் பொதுமக்கள், விவசாயிகளின் உடைமைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. ஓவேலி பேரூராட்சி அலுவலகம், அரசு தொடக்கபள்ளி, நூலகம், தபால் நிலையம் போன்றவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. சென்ற வாரம் காட்டுயானைகள் வளாகத்துக்குள் புகுந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகளை உடைத்தது. அத்துடன் பள்ளியிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானைகள் கூட்டம் அப்பகுதிக்குள் நுழைந்தது. அதன்பின் காட்டுயானைகள் பேரூராட்சி அலுவலக பொருட்கள் இருப்புவைக்கும் […]
தண்ணீரில் தத்தளித்த யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் காணப்படுவதால் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள மசினகுடியில் செந்நாய்கள், கரடிகள், புலிகள் மற்றும் காட்டு யானைகள் போன்றவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் பிரபலமான சுற்றுலா தளமான தொட்டபெட்டா மலைச்சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மலைக்கு நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி என்ற மூதாட்டி வந்துள்ளார். இவர் திடீரென 350 அடி பள்ளத்தில் குதித்து விட்டார். இவரை சுற்றுலாப் பயணிகள் பலர் தடுத்துள்ளனர். இருப்பினும் லீலாவதி கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துக் […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]