Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறவிட்ட நகை… சார் இந்தாங்க என் ஆட்டோல கிடந்திச்சு… ஓட்டுநருக்கு காவல்துறை பாராட்டு..!!

ஷேர் ஆட்டோவில், பயணி தவறவிட்ட நகைப் பையை காவல் துறையில் ஒப்படைத்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் பாராட்டி பரிசு வழங்கினர். சேலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன் பிவி. இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த 25ஆம் தேதி அன்று மாலை சேலம் செல்வதற்காக தனது அம்மா வீட்டின் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கையிலிருந்த மூன்று பைகளில் ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மர்மக்காய்ச்சல்… மருத்துவர்கள் அலட்சியம்… ஒரே வீட்டில் 2 குழந்தைகள் மரணம்..!!

மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரர்களுக்குள் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

மயிலாப்பூரில் பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூன்று பிச்சைக்காரர்கள் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பிளாட்பாரத்தில் ஐந்து பேர் பிச்சை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பிச்சை எடுக்கும் நான்கு பேர்களுக்குள் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அடித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் நேற்று அதிகாலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய கீதம் இசைப்பு…!!

பூந்தமல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” – திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி..!!

பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவலர்களை தள்ளிவிட்டு… வாக்குப்பெட்டி திருட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சிறுமி பலாத்கார வழக்கு… “சந்தோஷ் குமாருக்கு தூக்கு”… நீதிமன்றம் அதிரடி..!

கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  ,கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது . கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து  பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர்  கைது செய்யப்பட்டர். மேலும் […]

Categories
சென்னை பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயணி மேல் எறிய பஸ் …பொதுமக்கள் போராட்டம் …கோயம்பேட்டில் பரபரப்பு..!!

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பேருந்து  ஏறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.  இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து  நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார்  1 மணியளவில் திருச்சி  மற்றும்  கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத  காரணத்தினால்  பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு … சந்தோஷ் குமார் குற்றவாளி… நீதிமன்றம் அதிரடி ..!!

கோயம்புத்தூர்  அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  ,கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளி என நீதிமன்றம்   தீர்ப்பு வழங்கியுள்ளது . கோவை   துடியலூர் அருகேயுள்ள   பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம்  7   வயது சிறுமி    அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து  பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர்  கைது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு தாமதம்… கொள்ளிடத்தில் கொதித்தெழுந்த மக்கள்..!!

அடையாள மை இல்லாத காரணத்தால் கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில்  ஒரு 1 நேரம்  கால தாமதமாகி வாக்கு பதிவு தொடங்க பட்டது .  நாகப்பட்டினம்  மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சியில் உள்ள எடமணல், நல்லூர், ஆணைக்காரசத்திரம் , அரசூர், புதுப்பட்டினம், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம்,  உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் இன்று முதல் கட்டமாக தேர்தல்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை வாக்களிப்பதாற்காக பொதுமக்கள் நீண்ட நேரம்  வரிசையில் காத்திருந்தனர்.சுமார்   7 மணிக்கு […]

Categories
செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் பால் விநியோகம் தடை..!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் 5 மணிநேரம் தடைபட்டது. புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனம் குருமாம்பட்டில் இயங்கிவருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். நாளொன்றுக்கு காலையில் 60 ஆயிரம் லிட்டர் பாலும் மாலையில் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து புதுச்சேரி முழுவதும் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதுமட்டுமல்லாது ஐஸ்கிரீம், நெய், பன்னீர் போன்ற […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர்..!!

சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர். அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ எப்படி இங்க வேலை பார்க்கலாம்… உருட்டைக் கட்டையால் அடித்துக் காவலாளி கொலை!

அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் காவலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார் (53). இவர் தியாகராய நகர் திருமலை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாயிற்காவலாளியாக, கடந்த 19ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இதற்குமுன் இந்தக் குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒழுங்காக பணிபுரியவில்லை என பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சரவணன், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 158 வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி!

சென்னை: வாகனத் தணிக்கையின் போது அதிவிரைவாக சென்ற 158 வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. சென்னையில் சாலை விதிகளை மீறி அதி விரைவாகச் செல்லும் இருசக்கர வாகனங்களாலும், சாலையில் நடத்தப்படும் வாகன பந்தயங்களாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க காவல் துறையினரும் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து, நேற்று சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்  

கடல் காற்றின் திசை மற்றும் வேகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் உள்ளதால் வடகிழக்கு பருவமழை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட கால கட்டத்தில் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. அடுத்தடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்க கடல், அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல […]

Categories
தர்மபுரி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை..!!

ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து பார்க்கும் பழங்காலமுறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டது. சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் சூரிய கிரகணம் தொடங்குவதையும், சூரிய கிரகணம் முடிவதையும் அறிந்து கொள்ள ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. பண்டைய காலம் தொட்டு இன்று வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்ய கிராமங்களில் ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து கொள்ளும் முறைதான் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு!

பெரம்பலூர்: குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் குடிக்காட்டைச் சேர்ந்தவர் சரவணன் (35) – அன்பரசி (31) தம்பதி. இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெரம்பலூர் வடக்குமாதவி சாலை எம்ஆர் நகரில் வசித்து வரும் இவர்களுக்கு ஹன்சிகா (4), மேகாஸ்ரீ (எ) கோமதி (ஒரு வயது) என இரண்டு குழந்தைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் உயிரை காவு வாங்கிய சூதாட்டம்…… போலீஸ் விசாரணை….. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை கொடுங்கையூரில் சூதாட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தப்பி ஓட முயன்ற நபர் மாடியில் இருந்து குதித்து உயிர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி நகரில் கம்பெனி ஒன்றில் மேல்தளத்தில் அனுமதியின்றி சூதாட்ட விடுதி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 15 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு புறம் இருந்த நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

ரூபாய் 17,00,000 வழிப்பறி …7பேர் கொண்ட கும்பல் …போலீசிடம் சிக்கினர்…!!

17,19,000 ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்டு புகாரில் தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.பி.கே நகர் பகுதியில் வசிப்பவர் முகமது அபூபக்கர் சித்திக். இவர் தனது அலுவலகத்திலிருந்து 17,19,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்க வாகனத்தில் வந்து  கொண்டிருந்தார்.அவர் பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத நேரத்தில் பணத்தை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பியோடியது. இதனைத்தொடர்ந்து அங்கு ஜூஸ் கடை நடத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்..!!

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை..!!

பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசைக் கச்சேரி குழு மற்றும் இசைக் கருவிகள் விற்பனை செய்யும் நிலையமான லஷ்மன் ஸ்ருதியின் நிறுவனர்கள் முருகவேல், ராமன் மற்றும் லட்சுமணன். இதில் இரண்டாவது சகோதரரான ராமன், சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி நிர்மலா, மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். பைல்ஸ், நெஞ்சு வலி ஆகிய உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த ராமனுக்கு கடந்த ஒரு வார காலமாக பைல்ஸ் தொல்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறார் ஆபாச வீடியோ”…பதிவேற்றம் செய்த 30பேர்…அடுத்த பட்டியல் ரெடி…!!

சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம்  செய்த 30 பேர்கொண்ட பட்டியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த 30 பேரின் ஃபோனின் I.P முகவரியை வைத்து கண்டுபிடித்தனர்.இதில் உள்ள  12 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிவித்தார். மேலும், மீதம் இருப்பவர்களின் விவரங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவகிறது எனவும், துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மகளிர் மற்றும் சிறார்களுக்கு எதிராக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (53). இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும் ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை, அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டிக்க, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் விஜயகுமார் குடித்துவிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

’எங்கேயும் எப்போதும்’… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… 10 பேர் படுகாயம் – சிசிடிவி வீடியோ!!

மேட்டுப்பாளையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி ‘எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது..!!

அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களிடம் சில்மிஷம் …தர்ம அடி வாங்கிய வட மாநில இளைஞர்…போலீஸில் ஒப்படைப்பு…!!

குடிபோதையில் அடாவடி செய்த வட மாநில இளைஞரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு ,கொல்லம்பாளையத்தில் இன்று காலை போதையில் தள்ளாடிய வடமாநிலத்து இளைஞன் ஒருவன் இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளான் .அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மறித்து தகராறு செய்த அவன் தட்டி கேட்டவர்களை கற்களைக்  கொண்டு தாக்க முயன்றுள்ளார் .நிதானம் இழந்த அப்பகுதியினர் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞனை பிடித்து கட்டிப் போட்டு அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

Categories
திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விசாரிக்க சென்ற இடத்தில்… “15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… காவலர் மீது பாய்ந்தது போக்ஸோ..!!

புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்குத் திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் குடும்பத் தகராறு காரணமாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராகப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தித்திக்கும் பொங்கல்”…கரும்பு விளைச்சல் அமோகம் …!!

 கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது கரும்புதான் .அப்படிப்பட்ட சுவையான கரும்பு தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு  பயிரிடப்பட்டுள்ளது .பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன . கடந்த ஆண்டு 10கரும்புகள் கொண்ட 1கட்டு 300ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு 400ரூபாய்க்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட ஜெர்மனி மாணவர்… திருப்பி அனுப்பிய இந்தியா..!!

ஐஐடியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்றுவந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர், கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெர்மனியை ஹிட்லர் 1933ஆம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சேலம்  மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தலைமை தகவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் இந்த […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புர்கா அணிந்ததால் வெளியேற்றம்; தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திருப்பி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தைச் சேர்ந்தவர் ரபியா. இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தங்கப்பதக்கம் பெற இருந்தார். இதற்காக அவர் பல்கலைக்கழக நேரு ஆடிட்டோரியத்தில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… கழுத்து, வயிறு, தொடை என சரமாரியாக குத்திய கணவன்..!!

ஆவடி அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(37). இவரது மனைவி காமாட்சி(28). இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். காமாட்சிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக கணவர் குமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து, கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து காமாட்சி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திரைப்பட சங்க தேர்தல்” 235 வாக்கு வித்தியாசத்தில்…… TR அமோக வெற்றி…..!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக டி.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை  காஞ்சிபுரம் திருவள்ளூர்  மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தரர்களுக்கான தேர்தல் காஷ்மீர் திரையரங்கத்தின் அருகே மீரான் சாஹிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தன் அவர்கள் 235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து செயலாளர் பதவிக்கும் மன்னன். பொருளாளர் பதவிக்கு பாபுராவ். துணைத்தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சம்பா சாகுபடி…… மஞ்சள் நோய் தாக்குதல்…… நாகை விவசாயிகள் வேதனை….!!

நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகையை சுற்றியுள்ள பாலையூர், செல்லூர், உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட சில வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நோயானது காலம் செல்லச் செல்ல பயிர் முழுவதிலும் பரவி பின்னர் நோயாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் அறுவடை காலங்களில் மகசூல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கூறப்படுகிறது. எனவே மஞ்சள் நோய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய்லாந்து அரிய வகை உயிரினங்களை சென்னைக்கு கடத்த முயற்சி..!!

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் அரியவகை வன உயிரினங்களைக் கடத்தி வந்த நபரை வான் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்துள்ளார். அவரை அழைத்து அவரது உடைமைகளை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, அலுவலர்கள் திடுக்கிடும் விதமாக 12 கங்காரு எலிகள், 3 தரை நாய்கள், 1 சிவப்பு அணில், 5 பல்லிகள் உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..!!!

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு எதுவாக விடுமுறை தினம் என்பதால்,  ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன . பவானி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணையில் கடந்த நவம்பர் மாதம்  25-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையால்   தடை  விதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம்  வியாழக்கிழமை அன்று  இந்த தடை நீக்கப்பட்டது.   இந்த நிலையில், விடுமுறை தினமான   இன்று தடுப்பணையில் குளிப்பதற்கு  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணத்திற்கு பதில்…… 20 டன் வெங்காயம் பறிமுதல்…… தேர்தல் ஆணையம் அதிரடி….!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 200 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் வட்டாட்சியர் பெயர் மற்றும் காவல்துறை அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் இருவருடன் வெங்காயம் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் இருந்து ஏற்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 லிட்டர் எரி சாராயம்…… வீட்டுக்குள் கள்ள தொழில்…… உரிமையாளர் கைது….!!

திருப்பூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட செந்நெறி புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராயம் பதிக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழு பொள்ளாச்சி மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 10 லிட்டர் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல்… கோவை அருகே 11, 655 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..!!

பொள்ளாச்சி அருகே தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 655 லிட்டர் எரிசாராயத்தை மத்திய புலனாய்வுத்துறை நுண்ணறிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுபுணி ஆகிய பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, எரிசாராயம் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்பட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மத்திய புலனாய்வுத்துறையின் நுண்ணறிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு, பொள்ளாச்சி அருகே நெகமம் […]

Categories
மாவட்ட செய்திகள்

10 மாவட்ட மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி – முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை: காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவ – மாணவியருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலையில்லா மிதிவண்டிகளை திங்கட்கிழமை வழங்குகிறார். பள்ளிகளுக்கு நீண்டதூரம் செல்லும் மாணவ – மாணவியரின் சிரமத்தைத் தவிர்க்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுவருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள்

பேசவோ, எழுதவோ கூடாது! – மாநிலத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி… ஒலிபெருக்கிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடித்து பயன்படுத்த வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

32 குளங்கள் எங்கே? – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருத்துறைப்பூண்டி வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 32 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குள்பட்ட நெடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக விளங்கிவருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செய்வதற்கும் பயன்பட்டுவருகிறது. இந்நிலையில், நிலத்தடி நீரின் அரணாக விளங்கும் இக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்! – நளினி

சென்னை: அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளதாக, ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மாற்றதால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு…

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள்  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் வாக்குச்சாவடியை மறு சீரமைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   காயாமொழியில் ஏழாவது வார்டு வாக்குச்சாவடி    ஐந்தாவது வார்டிற்கும் ஐந்தாவது வார்டு வாக்குச்சாவடி ஏழாவது வார்டிற்கும் மற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து  வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள்  கூறியுள்ளனர்.    

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 9 முதல் புத்தக கண்காட்சி…!!

புத்தகப் பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 13 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.  இந்த புத்தக கண்காட்சியில் பல லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்காக வாசகர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டுக்கு வா …மனைவியைக் கொன்று துக்க வீடாக்கிய கணவன் …!!

 திருமணம் ஆகி 4 மாதங்களில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை  செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்  . சென்னை பள்ளிக்கரணை,பெரும்பாக்கம் பசும்பொன் நகரைச் சேர்ந்த அய்யனார் என்ற அந்த நபர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி அஞ்சலியை அடித்து துன்புறுத்துவது வழக்கம் எனக்கூறப்படுகிறது .இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது .இந்தநிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு வருமாறு அஞ்சலி ,அய்யனாரை அழைத்துள்ளார் .அதற்கு அவர் வர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்லால் கடித்து….. தப்பியோடிய சாராய வியாபாரிகள்…… படுகாயமடைந்த 2 போலிஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் காவல்துறையினரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும் பல்லால் கடித்து காயப்படுத்தியும்  தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருவோணம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி  விற்ப்பதாக அருண்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் பற்றிய தகவல்காவல்துறையினருக்கு தெருவிக்கப்பட்டது. அதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும்  இளங்கோவன் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில்   கலந்து கொள்ள   இருப்பதை அறிந்து அங்கு சென்ற  காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வெறிநாய் அட்டகாசம்” குழந்தை…பெண்கள்… உட்பட 16 பேர் படுகாயம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் நாயொன்று வெறிபிடித்து திடீரென அப்பகுதியில் உள்ள பலரைக் கடித்து துரத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஓடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருமயம் நெடுஞ்சாலை வழியாக சுமார் ஏழு மீட்டர் தூரம் வரை பார்க்கும் எல்லோரையும் அந்த நாய் துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் ராயபுரம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி கோவில் உண்டியல் பணம் திருட்டு….. மூதாட்டி உட்பட 3 பேர் கைது…..!!

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது…..!!

மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ராபின் ராபர்ட் என்பவர் கடந்த 1983ம் ஆண்டில் இராமநாதபுரத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொழுது தமிழகத்தைச் சேர்ந்த கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள முகவரி கொண்டு ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற அவரை அவர் பேசும் […]

Categories

Tech |