ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் பகுதி அருகே மரவள்ளி கிழங்கை பயிரிடும் விவசாயி ஒருவர் ஏக்கருக்கு ரூ1,00,000 லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் பகுதியை அடுத்த ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஸ்வரி சுப்பிரமணியன் தம்பதியினர். சுப்பிரமணி பெரும்பாலும் வேலைக்காக வெளியூர் செல்பவர் என்பதால் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் மகேஸ்வரி தான் விவசாயம் செய்து வருகிறார். 4 ஏக்கரிலும் குச்சி கிழங்கு எனப்படும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளார் மகேஸ்வரி. 12 மாத கால பயிரான […]
Category: மாவட்ட செய்திகள்
புதுச்சேரியில் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் . பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்,செல்வி தம்பதியருக்கு 8மாத குழந்தை இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வி .திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்த செல்வி தனது கவனக்குறைவால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது .மொட்டைமாடியில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி கடந்த 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் தொடர்பாக எந்த பணியும் தொடங்கவில்லை என்றும், உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் […]
நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிராமண சாமி என்பவர் குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் நித்தியானந்தா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த குமார் என்பவரின் ஆட்கொணர்வு மனு கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மகன் பல் மருத்துவர் முருகானந்தம் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அசரமத்தில் அவருக்கு பிராண சாமி என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீடர்கள் மீது ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மகனை சந்திக்கச் சென்றபோது […]
தேனி மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பன் பக்தர்கள் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக கம்பத்திலிருந்து மாற்றுப்பாதையில் செல்ல திருப்பி விடப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலுள்ள சபரிமலைக்கு தேனி கம்பம் குமுளி வழியாக ஐயப்ப பக்தர்கள் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதன் காரணமாக கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்தில் முன்பாக திருப்பி விடப்பட்டு கம்பம் வழியாக மேலப்பாளையம் கூடகோயில் சபரிமலைக்கு செல்கின்றன. அதேபோல் சபரி மலையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் குட்டிகணம், பெரியாறு, குமுளி மற்றும் கம்பம் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த எட்டு குழந்தைகள் உட்பட 19 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முனியப்பன் பகுதியில் செயல்பட்டுவரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் விரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த கடலூர் […]
கடலூரில் குப்பை கொட்டுவதை தவிர்க்க அரிசி மாவு கொண்டு துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் குப்பைகளை அகற்ற நகராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் அரிசிமாவு கொண்டு குப்பை கொட்டாதீர்கள் என்று புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேல வீதியில் அமைந்துள்ள இந்த பள்ளியின் வளாகத்தில் மார்க்கெட் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் பழ கழிவுகளை கொட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அதை உண்ணுவதற்கு மாடுகள் […]
ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த மண்ணுளிப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காவல்துறையினர் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நகாவல்துறையினர் மோப்பநாய் பிரிவு பகுதிகளில் இருந்து வெளியேறிய 5 அடி நீளம் கொண்ட மண்ணுள்ளிபாம்பு அனைத்து மகளிர் காவல்நிலையம் நோக்கி சென்றது. இதனைக்கண்ட காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சென்னையில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த மண்டல அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தெருவோர வியாபாரிகள் எண்ணிக்கையை கணக்கிடுவது, அதன் அடிப்படையில் விற்பனை மண்டலங்கள் அமைப்பது தொடர்பாகவும், தெருவோர வியாபாரிகள் இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தெருவோர விற்பனை மண்டலங்களை கண்டறிந்து தெருவோர வியாபாரிகளுக்கு […]
சென்னை ராணிப்பேட்டை பகுதியை வாலாஜாவில் குடும்ப தகராறு காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி இறந்த நிலையில் அவரக்கு மறுமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. ஆனால் செல்வத்தின் உறவினர் காத்தவராயன் என்பவர் திருமணத்திற்கு இடையூறு செய்து பெண் கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பகை முற்றிய நிலையில் வாலாஜாபேட்டை வந்திருந்த செல்வத்தையும் அவரது தாயாரையும் காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் […]
புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன் காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]
மெரினாவில் கடை வைத்துள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், கோடிக்கணக்கான செலவில் பல நலத்திட்டங்கள் செய்யவும் சென்னை நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் சுரேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை 1962 கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு […]
போலீஸ் என கூறிக்கொண்டு போலி அடையாள அட்டையை காட்டி சென்னை காவல் ஆணையரை சந்திக்கச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். லேடி வில்லிங்டன் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க காவல் ஆணையரை அழைப்பதற்காக ஜான் ஜெபராஜ் என்பவர் அக்கல்லூரி முதல்வர் உடன் சென்றிருந்தார். அப்பொழுது தான் சாலை பாதுகாப்பு காவல்துறை அதிகாரி என்று கூறி அடையாள அட்டையை காண்பித்து உள்ளே சென்றார். பின் காவல் ஆணையரின் பார்வையாளர் அறையில் அமர்ந்திருந்த அவரிடம் சோதனை […]
குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய , இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போராட்டம் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல […]
சென்னையை ஆவடி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது. சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் உள்ள மத்திய ரிசெர்வ் காவல்படை பயிற்சி முகாமில் டிஜிபி பிரவீன் தலைமையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 407 காவலர்களுக்கு 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல் துப்பாக்கி சுடுதல் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், […]
பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்து தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்திட முடியாது என்று அவர் கூறியுள்ளார். வன்முறை செய்தது யார், குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி :இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கும் முறையாக பேணப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இந்தியாவில் […]
வேளாங்கண்ணியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வேற்று மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இயேசு பிறப்பு நிகழ்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாகவும் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நகை, பணத்திற்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை லிங்கப்பன் தெருவில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தவர் கதிஜா. இவருக்கு முகமது அப்பாஸ் என்ற மகன் உள்ளார். கதிஜாவின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் சயது இப்ராஹிம். இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய […]
அரசுப் பள்ளி ஆசிரியை கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சபவத்தில் ஒரு புதிய திருப்பம். சென்னை பெரம்பூரில் இருக்கும் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த […]
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டைத் தொழிலில் சுயமாக ஈடுபட்டு, தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாகத் தொழிலை நடத்தி வரும் பெண்மணி பற்றிய செய்தித் தொகுப்பு இதோ… திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் சங்கீதா ஹரி எனும் பெண் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளைக்கொண்டு தட்டுகள் தயாரித்து வருகிறார். இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன் சங்கீதா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கு மட்டைகள் தயாரிப்பது குறித்து சங்கீதா கூறுகையில், “கர்நாடக மாநிலத்திலிருந்து பெரும்பாலும் பாக்கு மட்டைகள் […]
பாவூர்சத்திரத்தில் குழந்தைப் பாக்கியம் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் சீனிவாசன், தினேஷ், கோகுல் ஆகியோர் சொகுசு காரில் வந்து, ‘ குழந்தை இல்லாத தம்பதியர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க, நாங்கள் மருந்து மாத்திரைகள் தருவதாக’ ஆசை வார்த்தையில் பேசி மயக்கியுள்ளனர். இதை […]
கடைவீதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 19 பவுன் தாலிச் செயினை பறித்த கொள்ளையனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மட்டக்கடை தெற்கு நாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி குளோரியம்மாள் (75). நேற்று அப்பகுதியிலுள்ள கடைக்கு குளோரியம்மாள் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குளோரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். அதிர்ச்சியில் குளோரியம்மாள் கூச்சலிடவே, அப்பகுதி […]
தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]
பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் மொலாகரம்பட்டி பகுதியிலிருக்கும் ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவிகளிடையே பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு சமைக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவில் பலவகையான சிறுதானியங்களைக் கொண்டு பலவகையான உணவுகளைச் சமைத்துக் காட்டி கல்லூரி மாணவிகள் அசத்தினர். நமது மூதாதையர்கள் நூறு வருடங்களுக்கும் மேல் உயிர் வாழ்ந்ததற்கு காரணம் பாரம்பரிய உணவு […]
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போனை பறித்து திருடிச்செல்லும் கும்பலை காவல் துறை கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை காவல் […]
மதுரை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நகை மதிப்பீட்டாளருக்கான தொகையை நிர்ணயித்து வெளியிட்ட அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் சங்கத்தின் சார்பில் நாகர்கோவில் சடகுட்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். மனுவில், “ தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் சங்கத்தில் 54 பேர் […]
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் சதீஷின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக்கடையில் நகை வாங்கிச் சென்ற திருவேற்காட்டைச் சேர்ந்த தனசேகரன், நகை போலியானது எனவும் தான் பத்திரிகையாளர் எனவும் மிரட்டி 15 லட்ச ரூபாய் பணம் பறித்தார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களான ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், ஸ்ரீ ராம் உள்ளிட்டோருடன் இணைந்து […]
ஓடும் ரயிலில் மகளீர் டிக்கெட் பரிசோதகரிடம் 4 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்து வரும் பெண்மணி ரெஜினி. இவர் தாம்பரம் போகும் ரயிலில் ஏறிய பயணிகளிடம் வழக்கம் போல் பயணச்சீட்டை பரிசோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெஜினியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் […]
பட்டப்பகலில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரிஷ்வானா பானு. கணவரை பிரிந்த இவர் கடந்த 2ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார் .இந்தநிலையில் வீட்டின் மேல்தளத்தில் உள்ள தனது அறையில் கழுத்தறுபட்ட நிலையில் ரிஷ்வானா பானு சடலம் கிடந்துள்ளது. இதனால் தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை மாயமாகி உள்ள […]
கேஸ் டேங்கர் லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம் மீது கவிழ்ந்த விபத்தால் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . செங்கல்பட்டு அருகே சென்னையில் இருந்து மதுராந்தகத்தை நோக்கி கேஸ் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது .பரளுரில் உள்ள சென்னை ,திருச்சி நெடுச்சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தடுப்பு சுவரின் மீது ஏறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டாடா எஸ் வாகனத்தின் மீது கவிழ்ந்தது . விபத்தின் […]
ஆட்டோவில் சென்ற நகை கடை வியாபாரியை வழிமறித்து, போலீஸ் என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார் . இவர் கோவையில் தங்க நகைகளை வாங்கி விட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது, பெரியகடை வீதி போலீஸ் நிலையம் அருகாமையில் சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 நபர்கள் , அந்த ஆட்டோவை […]
கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 2.25 கோடி வசூலாகி உள்ளது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப தீருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்றது. இந்த தீப திருவிழாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று காலை கோவிலில் அமைந்துள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள உண்டியல்கள் அனைத்தும் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது. உண்டியல்கள் கணக்கிடும் பணிகள் […]
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவான்மையூரில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவந்தது.இதில் பணம்,நகை மற்றும் செல்போன்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தரமணி துரைப்பாக்க உதவி ஆணையர் ரவி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர் . சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில் கிடைத்த […]
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு குறித்த சிறப்பு மூன்று நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய விளையாட்டுகளாக கேரம், ஜிம்னாஸ்டிக், தேக்வாண்டோ, கடல் கூடைப்பந்து, சதுரங்கம், உள்ளிட்ட 12 விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதற்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மூன்று மாவட்டங்களை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்திலுள்ள, கேரம் […]
பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை, பெற்ற தகப்பனே கொடூரமாக அடித்துக் கொன்று புதைத்த அம்பலமாகியுள்ளது.பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்த ஒட்டன் சத்திரம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (33). இவரது மனைவி நாகலட்சுமி (24). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இரண்டாவது பெண் குழந்தை […]
நித்யானந்தா வீடியோ ஒன்றைப் பதிவிட்டு சீமானை திமுக எம்.பி., செந்தில்குமார் கலாய்த்திருக்கிறார். சமீபகாலமாக நித்யானந்தாவின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிஸன்கள் நிதியின் வீடியோக்களை பல்வேறு விதமாக திரித்து பலரையும் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் நித்யானந்தா வீடியோ ஒன்றைப் பதிவிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலாய்த்திருக்கிறார். அதில் அவர், ‘ நீங்க வேற லெவல் தலைவா.. காமெடி கன்டென்ட் கொடுக்குறதுல… சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க’ […]
சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காரணத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம் சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணிடம், அப்பகுதியைச் சேர்ந்த முதியவரான கிட்டான் (62) , கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
சென்னையில் தேனீர் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம் அருகே பிரதீப் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடைக்கு வந்த நபர் டீ குடித்து விட்டு அதற்கான பணத்தை கொடுத்து விட்டு கடையை நோட்டம் பார்த்துள்ளார். பின்னர் பிரதீப் மற்ற வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுக்க வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து கல்லா பெட்டியில் […]
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனியார் மதுபான விடுதிக்கு பாதையாக பயன்படுத்திவரும் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஷாஜகான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” 1997ஆம் ஆண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள 22 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினேன். அதில் 11 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்ட நிலையில் 11 சென்ட் நிலத்தை […]
கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் இரண்டு மாதம் ஆன ஆண் குழந்தை விற்ற கும்பல்,குழந்தைக்கு எச்ஐவி சோதனை செய்ய தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குழந்தைகளை புரோக்கர்களான ஹசீனா உள்பட மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். கோவை சூலூர் பகுதியின் சாலையில் ஒரு ஆணுடன் இரண்டு பெண்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்,பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி சண்டையாகமாறியது.இதைப் பார்த்த அங்கிருந்த காவல் துறையினரும் பொதுமக்களும் அவர்களைப் […]
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் . இந்த கொலை அரக்கோணம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது .போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர் .அப்போது அங்கிருந்த […]
குடிப்பழக்கத்தை கண்டித்த பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேனியில் ,சமதர்ம புரத்தைச் சேர்ந்த கனகவேல் ஐயப்பன் என்ற அந்த இளைஞர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது பெரியப்பா பெத்தணசாமி கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கனகவேல் ஐயப்பன் உருட்டு கட்டையை எடுத்து பெத்தணசாமியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் பெத்தணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .அவர் உயிரிழந்ததைக் கூட தெரியாமல் இரவு முழுவதும் அவர் உடலுக்கு பக்கத்திலேயே […]
தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில்.பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 29 -ம் தேதி முடிய (17.12.2019 முதல் 14.01.2020 முடிய ) நடைதிறப்பு விவரம் நடைதிறப்பு […]
அரசுப் பள்ளி ஆசிரியை கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் . சென்னை பெரம்பூரில் இருக்கும் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை […]
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்த பயிற்சி கூட்டத்தில் பங்குபெறாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த […]
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கொடியம்பாளையம் என்ற தீவு கிராமம். இந்த கிராமம் மூன்று பக்கம் கடல் மற்றும் ஒருபக்கம் உப்பனாறாறும் சூழ்ந்துள்ளது. தீவு போல காட்சியளிக்கும் இக்கிராமத்தில் சுமார் 25 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. […]
தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு […]
மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், […]
உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]