மதுரையில் கந்து வட்டி செலுத்த வில்லை என்று கூறி குடியிருந்த வீட்டை இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை அருகே தத்தநேரியை சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே 3 லட்சம் ரூபாய் செலுத்திய குமார் தொடர்ந்து கடனை செலுத்த முடியவில்லை என்று நாகராஜிடம் கூறியுள்ளார். இன்னும் 7 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று […]
Category: மாவட்ட செய்திகள்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் விடுமுறை நாட்டகளில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் தற்போது மக்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு சென்று நீராடிச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரதான அருவியில் கூட்டம் அலை மோதுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து […]
குடி போதையில் குழந்தையை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து ஒப்படைத்தனர் . புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவமணையில் பிரசவவார்டுக்குள் நேற்று இரவு புகுந்த இளைஞர் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கி ஓட முயற்சித்தார் .இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர் .இதை அடுத்து மருத்துவமனையில் இருந்த காவல் மையத்தை சேர்ந்த போலீசார் இளைஞரை மீட்டு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . பிடிபட்ட நபர் வடசேரிபட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் […]
விழுப்புரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரத்தில் இருந்த பணம் அதிஷ்டவசமாக தப்பியது. அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுள் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. நேற்று மாலை இந்த மையத்தில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரண்யம் திருதுறைபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் வடியாமல் வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண் ஒருவர் ஏமாற்றும் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்தவர் கேபிள் ஆப்பரேட்டர் பாலாஜி. இவரை செல்போனில் தொடர்புகொண்ட பெண் குரல் ஒன்று ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி அதற்கான சான்று வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவை இல்லை எனில் 12,500 ரூபாய் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி […]
பரளச்சி அருகே விளைநிலத்தில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . விருதுநகர் மாவட்டம் ராணிசேதுபதி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் நேற்று தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மாலையில் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது பெண்ணின் செருப்பு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் பரளச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . பல இடங்களில் தேடப்பட்ட நிலையில் இன்று காலை விளைநிலத்திலேயே கழுத்தறுக்கப்பட்ட […]
பெண் ஒருவரிடம் 20,000 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு அவரது இரண்டு மகள்களை பின்னலாடை வேலைக்கு அழைத்துச் சென்ற பெண் புரோக்கர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் ,வெள்ளகுலத்தைச் சேர்ந்த கணவனை இழந்தவரான தனலட்சுமிக்கு 10 மற்றும் 11 வயதில் இரு மகள்கள் உள்ளனர். வறுமையில் இருந்த தனலட்சுமியை அணுகி கோவையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் அவர் மகள்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, நீடாமங்கலத்தை சேர்ந்த தரகர்கள் கனகம் ,சகுந்தலா ஆகியோர் 20,000 ரூபாய் கொடுத்துவிட்டு அழைத்துச் […]
செய்யாறு பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பலியானதால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ,புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் மனைவி வினித்ராவிற்கு அரசு மருத்துவமனையில் 2வதாக அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது .தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்த நிலையில் வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு வினித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது . தவறான சிகிச்சையே அவரது உயிர் இழப்பிற்கு காரணம் என்று […]
ஓசியில் சிகிரெட் கேட்டு பேக்கரி பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார் . திண்டுக்கல் அருகே ஓசியில் சிகிரெட் கொடுக்க மறுத்த பேக்கரி கடை பெண்ணிடம் கத்தியை காட்டி ஆபாச வார்த்தைகளால் மிரட்டியவன் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் .முத்தனம்பட்டியில்உள்ள அந்த பேக்கரியில் நாகலட்சுமி என்ற பெண் இருந்தபோது வந்த வேலடிச்சான்பட்டியை சேர்ந்த சரவணன் ஓசியில் சிகிரெட் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் .ஒருவன் கத்தியை காட்டி மிரட்டும் போது ஒருவர் எவ்வித […]
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அருண் (33). நகைக்கடைத் தொழிலாளியான இவருக்கு சிவகாமி (27) என்ற மனைவியும் பிரியதர்ஷினி (4), பாரதி (3), சிவஸ்ரீ (1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அருணுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து தனது வருமானம் முழுவதையும் அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி செலவழித்து வந்துள்ளார். […]
கேன்களில் அடைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான ஒழுங்குமுறை சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபிரபு தலைமையில் நடைபெற்றது . தலைவர் அனந்தநாராயணன், அன்பு, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு தரக்காட்டுப்பாட்டு ஆணைய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து […]
ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரத்தில் விளை நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது . கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 1/4லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால் இவ்வகை ட்ரோன்களை வைத்து மருந்து தெளிக்கும் போது 110மில்லி இருந்தாலே போதுமனதாக உள்ளது .இந்த முறையில் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 700 மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது. .உளுந்து ,மக்காச்சோளம் ,கம்பு போன்ற பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து தெளிக்கும் போது நல்ல முறையில் மகசூல் […]
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் வசூலிக்கும் ஸ்பாட் ஃபைன் முறையில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அதனை கையடக்க இயந்திரத்தில் வரவு வைக்காத வீடியோ வெளியாகியிருக்கிறது. இதனை பதிவு செய்திருக்கும் ஒருவர் வசூலித்த பணத்தை முறைப்படி கணக்கு காட்டவில்லை என்று கூறி உதவி ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை நிறுத்தும் போலீசார் ஹெல்மெட் […]
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் தலா ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்கின்ற பாட்டி ஒருவர் அவரது பேத்திகளையே ரூ 10,000 க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் குடவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை […]
சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே சிறுத்தை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே சின்னசெங்குன்றம்,அலமேலுமங்காபுரம் ஆகிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும்,கடந்த 4 நாட்களாக அந்த இடங்களில் இருக்கும் ஆடுகள்,நாய்களை கடித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டதிற்கான கால் தடங்கள் இருப்பதாகவும்,சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்து வந்த 10 பேர் கொண்ட வனத்துறையினர் அலமேலுமங்காபுரம் அருகே காப்புக்காட்டில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை எந்த ஒரு […]
நாகர்கோவில் அருகே கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார் . கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தச்சு வேலை செய்து வருகிறார் .இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார் .இந்நிலையில் தகவலறிந்த போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர் .ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது . ஐயப்பன் தினமும் குடித்து […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50ரூபாய்க்கு 2பார்சல் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை குடி போதையில் தாக்கிய 2ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர். பேரூந்துநிலையம் அருகே கலீம் என்பவர் காஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இங்கு குடிபோதையில் சென்ற 2ஆட்டோ ஓட்டுனர்கள் 240ரூபாயுடைய பிரியாணியை வெறும் 50ரூபாயை கொடுத்து விட்டு 2பிரியாணியை தரும்படி அதட்டலாக கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் முதலில் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னர் உரிமையாளரையும் தாக்கினர் பதிலுக்கு ஹொட்டல் […]
சென்னை கீழ்ப்பாக்கத்தில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்ற சித்த மருத்துவர் கைது செய்யபட்டார் . கார்டென் காலனி பகுதியில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வந்த அண்ணாதுரை என்பவரிடம் ஒரு தம்பதியினர் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற்றனர் .இந்நிலையில் புது மருந்து கிடைத்திருப்பதாக கூறி அந்த பெண்ணை இரவில் வரவைத்து பாலியல் அத்துமீறலில் அண்ணாதுரை ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இதுகுறித்து காவல் கட்டுப்பட்டு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு போலீஸ் […]
சாத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கிராம கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமாசுப்பு மனுதாக்கல் செய்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான இவர் தன்னை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ததற்காக ஊர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். கிராம மக்களின் ஒப்புதலைப் பெறாமல் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ராமசுப்பு மனு […]
விழுப்புரத்தில் ட்ரையல் பார்ப்பதாக கூறி விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் . விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது ப்ளூ ஸ்டார் ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலையம். அங்குள்ள தொலைபேசி எண்ணை 9 ஆம் தேதி தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனது பெயர் சஞ்சிவ் என்றும், தாம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் தனக்கும் […]
சென்னையில் ,அம்பத்தூரை அடுத்த மேனாம்பேட்டையில் 3 சவரன் நகையை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேனாம்பேடு புறவழிச் சாலையில் பச்சையம்மாள் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார்.இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வில்லிபாக்கத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரும் பொருள் வாங்குவது போன்று அந்த கடைக்கு சென்றனர். பச்சையம்மாள் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகள் பதிவான இரு சக்கர வாகன […]
மருதமலை வடவள்ளி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 21 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, 11 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மருதமலை வடவள்ளி சாலையில் டிசம்பர் 10ஆம் தேதி இரவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஐ.ஒ.பி காலனியில் பைக் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 21 இளைஞர்களை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின்அந்த […]
ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பார்ப்பவர்கள் பகிர்பவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுமார் 3,000 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு பிறகு கைது […]
பெரம்பலூர் அருகே விவசாயம் ஒருவரது வயலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் . செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ சின்ன வெங்காயத்தை தனது வயலில் பட்டறையம் வைத்திருந்தார் , விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முன் காய்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பது வழக்கம். நேற்று மாலைவழக்கம் போல் வயலுக்கு சென்று பார்த்தபோது பாதுகாப்பதற்காக வைத்திருந்த வெங்காய பட்டறையத்தை பார்த்தபோது […]
சென்னையில் இளைஞர் ஒருவரை அடித்து எரித்துக்கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ,மதுரவாயலில் இளைஞரை கொலை செய்து எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு ஜெகன்நாதன் என்பவரது எறிக்கப்பட்ட சடலம் பல்லவர் நகர் காலி மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சத்யராஜ் ,முருகன், சதீஷ்குமார், ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. முருகனின் மனைவிக்கும் ஜெகன்நாதனுக்கும் இடையே […]
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் 451 சவரன் தங்க நகைகள், 7 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் ,5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம், 2 லாரிகள்,மற்றும் 100 செல்போன்கள் உள்ளிட்டவை உரியவர்களிடம் வழங்கப்பட்டன. இதனை தேசிய கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா வழங்கினார் . மேலும் வீடுகள் கடைகளில் […]
கள்ளக்குறிச்சில் கார்த்திகை தீப விளக்கை ஏற்ற கோவில் கட்டிடத்தின் மேல் எறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் . சித்தேரி தெருவைச் சேர்ந்த 18 வயது குருமூர்த்தி என்ற இளைஞர் அங்குள்ள ராஜா ராஜேஸ்வரி கோவிலில் அர்ச்ஜகராகவும் ,போலீஸ் நண்பராகள் குழுவிலும் பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் புதன்கிழமை மாலை கோவில் கட்டடத்தின் மேலே ஏறி விளக்கேற்ற முயன்ற போது அவ்வழியாக சென்ற மின் கம்பி மீது கைப்பட்டு மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த […]
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள 501 கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன். சகோதரர்களான இவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பழமையான 501 கோயில்களுக்குச் செல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடுத்து கொண்டுள்ள மொத்தப் பயணத்தொலைவு 13,000 கி.மீ ஆகும். நவம்பர் 7ஆம் தேதி தங்கள் கின்னஸ் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், இதுவரை சுமார் 28 […]
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சென்னை அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள 12 கிராமங்களில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் வெளியான நிலையில் அந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு விவசாயிகள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். […]
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது நபரை இயற்கை முறையில் மறையும் வரை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்ததால் 12 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
மதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . மதுரை நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளராக பணிபுரிபவர் தனசேகரன் ஆவார் .இவர் மகளுக்கு கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது .இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார் .இதனை தெரிந்து கொண்ட திருடர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 80 […]
மனைவியை எரித்துக்கொன்று விட்டு நாடகம் ஆடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த இந்திரா கடையுடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் .இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வட்டிக்கு […]
தேனி மாவட்டம் போடி அருகே பாறைகள் உருண்டு தீடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் மூணார், போடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போடி,மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.போடி அருகே புளியுற்று என்ற இடத்தில் காலையில் பாறைகள் உருண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுவதும் பாறைகள் மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதை அடுத்து போடி, மூணார் சாலையில் கடுமையாக போக்குவரத்து […]
தேனி மாவட்டம் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஒட்டி வந்தவர் எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது . தேனி அருகே வீரபாண்டியை அடுத்து உப்பார்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து உள்ளது. […]
சென்னையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த குழந்தை சிறிய எலும்பு முறிவுடன்உயிர் தப்பியது . விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மைபால் என்பவர் தன குடும்பத்தினருடன்சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார் .அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது தளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் மைபாலின் மனைவி நீலம், ஜினிஷா என்ற 8மத குழந்தையுயன் தங்கியிருந்தனர் . செவ்வாய் கிழமை காலை 10மணி அளவில் வீட்டின் ஹாலில் உறவினர் இருந்த போது படுக்கை அறையில் இருந்த […]
முதன்முறையாக இளைஞருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேம்நாத் என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அவரது வலது காலை இழக்க நேரிட்டது .இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டது . மருத்துவர்கள் அளித்த ஊக்கத்தினாலும் ,தொடர் பயிற்சியின் மூலமாகவும் பிறரின் உதவியின்றி செயல்பட முடிவதாக தெரிவித்தார் இதற்கு உறுதுணையாக […]
செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பகுதியில் மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல் சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் . விரைந்து […]
திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன் வெங்காயத்திற்கு […]
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மீது மோதியது . பாவூர்சத்திரம் அருகே பனைமரம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் பனை மரத்தின் மீது மோதியது. இதில் ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டபள்ளிக் […]
மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை, தண்டவாள சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக, ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தண்டவாளங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அப்பணிகள் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீன் வெட்டிப்பாறை அருவியில் பல வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொட்ட தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையின் அழகை பெற்ற சுற்றுலா தளமான செண்பகத்தோப்பு பகுதியில் மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த தொடர் மழையால் . மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அருவியில் குளித்தும், சறுக்கி விளையாடியும், […]
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரள எல்லையான கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுநி மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சில சமூக விரோதிகள் கடத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் லாரியின் […]
குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பெய்த கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர், பாரதி நகர், கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுகதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமும் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் […]
திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் […]
17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி […]
ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்குத் தாலிகட்ட முயன்ற இளைஞரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கல்லூரியில் படிக்கும் போது பழகியுள்ளார். இது நாளடைவில் ஒரு தலைக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனையறிந் ஜெகன் அப்பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண் ஜெகனின் காதலை ஏற்க […]
மயிலாடுதுறை காய்கறி கடையில் இருந்து 60 கிலோ வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், ரொக்கப் பணம் கொள்ளையடித்த நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டபீர் தெருவைச் சேர்ந்த சேகர், இவருக்குச் சொந்தமான காய்கறி கடை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான வண்டிக்காரத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 60 கிலோ வெங்காயம், காய்கறிகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் […]
வெங்காயம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் புலனாய்வு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் தங்கம் – வெள்ளி விலையைப் போன்று வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விலை ஏற்றம் […]