செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் மிகவேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றது . இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.23 அடி கொள்ளளவை கொண்ட மதுராந்தகம் ஏரி, இப்போது 22 . 4 அடியை எட்டி இருக்கிறது .இதுபோலவே திருவண்ணாமலை மாவட்டத்தில்தொடர்ந்து பெய்து […]
Category: மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகின்றது. தென் மாவட்டமான திருநெல்வேலி , தூத்துக்குடி, விருதுநகர் மழையில் இருந்து தப்பவில்லை. அதே போல ராமநாதபுரம், கோயம்புத்தூர் , நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை […]
குற்றாலம் அருவியில் தொடர் மழையால் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் 2வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது .இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பெய்யும் மழை நீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் 2-வது […]
வேதாரண்யத்தில் பலத்த மழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை […]
15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள், அண்ணா சதுக்கம் போலீசாருடன் அங்கு சென்று காண்காணித்த போது சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரிந்தது.அந்த நபரை பிடித்து விசாரித்த போது […]
சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் அமுதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். உதயகுமார் கார் மெக்கானிக் ஆக பணியாற்றி தனது மனைவியுடன் சரஸ்வதி நகர் அவென்யூ பகுதியில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அமுதா […]
கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற வருடம் மழை பெய்யாததன் காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டதால் சென்னைவாசிகள் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வந்தனர். ஆகையால் சென்னைவாசிகள் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் வடகிழக்கு பருவமழை […]
கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் […]
கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் […]
கோவில்பட்டியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் குரும்பூர் பகுதி மாணவர்கள் அசத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாரதியார் மற்றும் குடியரசுதின விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கோவில்பட்டி VOC அரசுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் ஏராளமான பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் திருச்செந்தூர் தாலுகா குரும்பூரின் தமிழர் வீர […]
விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து […]
மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன் நிற்க வைப்போம் என தடயவியல் துறை இயக்குநர் உறுதியளித்துள்ளதாக பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் அலைபேசி கடவுச் சொல்லை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் தடயவியல் நிபுணர்களிடம் பதிந்து கொடுத்தார்.சென்னை ஐ.ஐ.டி விடுதி அறையில் கடந்த 8 ஆம் தேதி இரவு முதுகலை மனிதநேயம் (Humanities) முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பாத்திமா லத்தீப் […]
வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]
சவுகார்பேட்டையில் பஜ்ஜி சரியில்லை என்று கூறிய நபரை வட இந்திய ஊழியர் கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் சென்னை சவுகார்பேட்டை, கிருஷ்ண ஐயர் தெருவில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக 13 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு ஞானமணி தன் நண்பருடன் சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில், அமைந்துள்ள அமர ராம் என்பவருக்குச் சொந்தமான டீ […]
ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]
பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்திற்க்கு தலா ரூ 1000 வழங்கப்படுமென்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]
உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு […]
மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலம் […]
கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய […]
காவல்துறை பெண் உயரலுவலரை நாற்காலியில் அமர வைத்து காவல் துறையினர் தூக்கிச்சென்றனர். புதுச்சேரியில் வடக்கு பகுதி சட்டம் ஒழுங்கு கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ரச்சனா சிங் (ஐ.பி.எஸ்). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதிக்கு கண்காணிப்பாளராக பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஏனாம் பகுதியிலிருந்து மீண்டும் புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ரச்சனா சிங்-ஐ ஏனாமில் இருக்கும் காவலர்கள் நாற்காலியில் அமரவைத்து அவருடைய […]
இன்று நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]
முதலமைச்சர் நாராயணசாமி அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமிதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பல நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். அவருக்கு கணுக்காலுக்கு கீழ் சவ்வு சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து நடக்கும் போது வலி இருந்து வந்தது. மருத்துவரை அணுகியபோது அவருக்கு நிவாரணிகள் அளித்துள்ளனர். ஆனால், மருத்துவர்களின் நிவாரணிகள் பயனளிக்காத காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். இதையடுத்து, நேற்றிரவு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டார். […]
கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புகளும் பாதிரியார்களும் இந்திய கிறிஸ்துவ சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி வேலூரைச் சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை […]
சொகுசு வாழ்க்கை வாழ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவலர்கள் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் கடந்த 21ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்த 4 சவரன் நகை திருடு போனதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஒரு […]
ஒட்டன்சத்திரத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழும் குழந்தையைக் கால தாமதமின்றி 30 நொடிகளில் மீட்க புதிய கருவியைக் கண்டுபிடித்து, விவசாயி அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குழந்தையைக் காப்பற்றும் விதமாக 30 நொடிகளில் குழந்தையின் கையைப் பிடித்து தூக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக, மின்மோட்டார் மூலம் இயங்கும் […]
11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]
வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற மாபெரும் கந்தூரி விழாவில், மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய பள்ளி வாசலில் வருடந்தோறும் ரபியுல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், வேடசந்தூர் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கூட்டாக நன்கொடை வழங்கி 2,300 கிலோ கிராம் அரிசியில் சமையல் செய்து, அனைத்து மத மக்களுக்கும் காலை முதலே பிரியாணி […]
புதுக்கோட்டையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் – காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால், […]
இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை சதம் அடித்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு வெங்காயம் ரூ .70 முதல் ரூ .80 வரை விற்பனை ஆனது .ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையோ ஏறுமுகமாக உள்ளது . ஆந்திரா வெங்காயம் ரூ 60 முதல் 70ரூபாயாக உள்ளது சாம்பார் வெங்காயம் ரூ 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது . கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ .90 முதல் 100 வரை உயர்ந்துள்ளது .இதனால் தெருவோர கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் […]
பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ உலர் பழங்களைக் கொண்டு, 700 கிலோ கிராம் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த பழங்களான திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், அத்தி உள்ளிட்டவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் வெளிநாட்டு மதுபானங்களைக் கலந்து பிரத்யேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. இந்தப் பணியை பொள்ளாச்சி வருவாய் […]
தனது மனைவி என்றும் பாராமல் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்த சைக்கோ ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகேயுள்ள மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (42). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி கனகா (32), மூன்று குழந்தைகள் உள்ளனர். பத்து வருடத்திற்கு முன்பு கனகாவும், சண்முகமும் திருமணம் செய்து கொண்டனர். கனகாவிற்கு 17 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்து விட்டனர். பின்னர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். […]
டிக் டாக்கில் நடிப்புத்திறமையைக் காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாகச் சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தைப் பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி, கயல் தோழிகளான இவர்கள் இருவரும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை வெளிக்காட்டி வந்துள்ளனர். இருவரும் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் லைக்ஸ்காக அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. எதற்கும் பயன்படாத இந்த லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும், கயலும் […]
தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சான் பிளாஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் நேற்று நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை ஆனந்தன், பிரபாகரனை தேடி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது நிறுவனம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அவர், […]
வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் என ஆன்லைன் மூலம் உயர் ரக கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்து வந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து காபி பவுடா், பதப்படுத்தப்பட்ட மூலிகைகள் என்ற பெயரில் உலர் கஞ்சா பவுடா், உலர் கஞ்சா இலைகள் ஆன்லைன் மூலமாக பார்சல்களில் சென்னைக்கு வந்தன. அடிக்கடி இவ்வாறு வெளி நாடுகளிலிருந்து வரும் பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத் துறையினர் சோதித்துள்ளனர். காற்று புகாத வகையில் மிக நேர்த்தியாக […]
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் […]
வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]
தஞ்சாவூரில் 23 வயதான இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]
கரூர் மாவட்ட தான்தோன்றி மலை அருகே புறா பிடிக்க சென்றவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கரூர் மாவட்டம் தந்தோந்ன்றி மலைப் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேல்முருகனும் அவரது நண்பர் ராஜாவும் காட்டுப்பகுதிக்குள் புறா பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த மொட்டை கிணறு ஒன்றில் புறா ஒன்று இருந்துள்ளது. அதனை பிடிப்பதற்காக கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கியுள்ளார் […]
பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் பகுதியை அடுத்த புதுக்கீனுர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி காணப்படும். இந்த கிராமத்திற்கு சென்ற மாதம் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கால்நடைகளை தாக்கி வேட்டையாடியும் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே சிறுத்தை வனப்பகுதிக்குள் இருந்து தப்பி கிராமத்திற்குள் மீண்டும் புகுந்தது. […]
காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வனத்துறை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள வனப்பகுதியில் வன உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ராஜா அந்த பெண்ணிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், தன்னை […]
பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை […]
கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது. இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் […]
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு […]
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது வயது எண்பது. இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞரும் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டி வந்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது […]
சென்னையில் பிரபல ரவுடி கூறிய தகடு போன்ற பொருளால் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதில் அவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பல்சர் பாபு. இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி புத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக பல்சர் பாபு கைது செய்யப்பட்டு புத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். […]
பல்லாவரம் அருகே பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெரு அருகே மணிகண்டன், காந்தி, இன்பராஜ் ஆகிய மூன்று பேரும் மது அருந்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.அப்போது, அந்த இடத்தில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் பால்துரை இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் மது போதையில் தலைமை காவலர் […]