நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர், காவல் குடியிருப்புக் கட்டடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விமல்குமார் பணியாற்றி வந்தார். வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இன்று மதியம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமல்குமார் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா […]
Category: மாவட்ட செய்திகள்
தாசில்தார் செல்போனில் பேசியதைக் கண்டு நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோபமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நத்தம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்மா சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் […]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. பதினொன்றாம் வகுப்பு இடைநின்று வீட்டிலிருந்த ஜனனி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ராஜ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு முறை வீட்டை […]
திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அக்கட்சியின் தொண்டர்கள் 16 பேர் பலத்த காயமடைந்தனைர். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள காஞ்சி ரோடு, அன்வராபாத் கிராமப் பகுதி மக்கள் 18 பேர் மினி லாரியில் வந்தனர். திருவண்ணாமலை அருகேயுள்ள புனல்காடு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பள்ளி தாளாளர் ஒருவர் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையின் ஐந்தாவது வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் மரிய ஆண்டனி என்பவர் கல்வி தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் வந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு […]
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பழனிக்குமார். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிக்குமார் சென்னை மவுண்ட் காவலர் குடியிருப்புப் பகுதியில் தனது மனைவி விமலா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பழனிக்குமார் தனது பணியை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டிற்குச் செல்வதற்காக […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெண்ணிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செல்வி என்ற பெண் கடந்த 15 ஆம் தேதி நேரு வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் அறையில் இருந்து நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் இயந்திரத்தில் பணம் இல்லை ஆனால் கணக்கில் எவ்வளவு இருக்கிறது […]
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் திருமண மண்டபத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பதிவு செய்ய வந்த மாதேஷ் என்ற கேமரா மேன் அதிகாலை கேமராவுடன் கூடிய தனது தோல் பையை மண்டபத்திற்குள் வைத்துவிட்டு, தனது உதவியாளருடன் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மண்டபத்தில் இருந்த இளைஞன் ஒருவன் கேமரா வைத்திருந்த […]
உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர், ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் 12 நவீன ஏ.என்.பி.ஆர் கண்காணிப்பு கேமராக்கள், ஆயிரத்து 629 (1,629) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. இதில், கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி […]
மதுரையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வட்டியில்லா பணம் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை tpm நகரில் உள்ள பாண்டியன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த செல்வி என்பவர், அரசியல்வாதிகள் சிலரின் பினாமி என்று தனது அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர்களின் கருப்பு பணம் தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெள்ளையாக மாற்றவே வட்டியில்லாமல் கடன் கொடுப்பதாகவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு லட்சம் […]
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த மரவட்டி வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற ரம்யா அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக பதிவு […]
விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் அருகே முறையாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படும் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் எம் ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சாம் பிரேம் ஆனந்த் என்ற காவலர் முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த கொடியும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது முதல் மனைவி இறந்த உடன் இரண்டாவதாக வண்ணமயில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தை முதல் மனைவி மகளுக்கு சுப்பிரமணி எழுதி வைத்தால் இரண்டாவது மனைவி […]
விவசாயிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்கள் சிலர் தொடர்ந்து செல்ஃபோன் பயன்படுத்தியதால் விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மாதந்தோறும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடைக்கானல் சார்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், கொடைக்கானலில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]
அம்பத்தூர் ஏரியில் நச்சு கலந்த நீரில் உள்ள மாசினால் மீன்கள் செத்து மிதக்கின்றன. சென்னை மாநகராட்சி மண்டலம் ஏழுக்கு உட்பட்ட அம்பத்தூர் ஏரி சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. இந்த ஏரியில் முழு அளவு நீர் நிரம்பினால் கூட, 0.04 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கும். தற்போதுள்ள 0.04 டிஎம்சி நீரிலும் முக்கால் வாசி கழிவுநீர் கலந்து இருப்பதுதான் கொடுமை. இந்த ஏரியை சுற்றியுள்ள திருமுல்லைவாயல், அம்பத்தூர், அயப்பாக்கம் ஐ.சி.எப். காலனி […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, […]
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூரு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மண்ணூர்பேட்டையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் மருதுராஜ் (35), பிரபாகரன் (35) ஆகிய இருவரும் பெங்களூருவிலிருந்து மூன்று […]
தேனிலவுக்காக சிம்லா சென்ற புது மாப்பிள்ளை, பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தில் அதன் கயிறு அறுந்ததால் பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழந்தார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்களான அரவிந்த், பிரீத்தி ஆகியோருக்கு கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில தினங்களில் புது தம்பதி தேன் நிலவுக்காக சிம்லா சென்றுள்ளனர். சிம்லாவில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்த தம்பதி, பாராக்ளைடிங் எனப்படும் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக பாராசூட்டில் சாகசம் மேற்கொண்டுள்ளனர். இருவரின் பாராசூட்டிலும் தலா […]
மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார். இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து […]
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் ‘friend request ,chatting’ போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு ‘போக்சோ’ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சென்னை […]
ஐ.சி.எப் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (55). இவர் ஐ.சி.எப் இரயில் பெட்டித் தொழிற்சாலையில் சீனியர் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்த இவர், நேற்று முன்தினம் (நவ.17) பணிக்கு திரும்பினார். இந்நிலையில், தொழிற்சாலையின் அறையில் ராஜாமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். […]
முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாகக் குளிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மிதவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று தொடங்கி, வரும் 2020 ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதையொட்டி, பக்தர்கள் […]
ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொது மக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் […]
குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் […]
மாநில அளவிலான கியூப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதல் பரிசை வென்றார். கியூப் விளையாட்டானது மனிதர்களின் மூளையையும் கைகளையும் வேகமாக செயல்பட வைத்து உடலையும் சுறுசுறுப்பாக வைப்பது மட்டுமின்றி, முடிவுகளை சரியாக எடுக்கவும் உதவும். இந்நிலையில், மாநில அளவிலான கியூப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 98 மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த போட்டியில், சென்னையைச் […]
தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று, கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து […]
பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்துவந்த சின்னப்பொன்னு நாய்க்கு ஏற்பட்ட அவலநிலை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… பரபரப்பான சென்னை மாநகரின் சென்ட்ரல் அருகே உள்ள பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மத்தியில் தன் நண்பர்களான ரயில்வே காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினருடன் தன் கடமையை செவ்வனே செய்து வந்தாள் சின்னப்பொன்னு… ஆனால் அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழும் என எதிர்பார்த்திருக்க மாட்டாள்… அங்கிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் […]
பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை அசோக்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு சகஜமாக கஞ்சா கிடைப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர், அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவது […]
விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று […]
என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம், உங்களை தேடி நான் வருகிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு பலகை வைத்து புகார் மனு வாங்கும் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் கடந்த 7ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வாரநாட்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் முதியவர்கள், […]
அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்து நான்கு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த […]
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தற்காலி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் […]
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் […]
உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்று வருகின்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது . இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் , தேனி , விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறக் கூடிய மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சியை சேர்ந்த அதிகாரிகள் […]
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியிலிருந்து ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வந்தனர். அப்போது விமானத்தில் ஒருவரின் இருக்கைக்கு அடியில் கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் இருந்ததைக் கண்டு விமான நிலைய சுங்கத்துறைஅலுவலர்களுக்கு […]
அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் […]
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும், மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிலம்பம், டேக்வாண்டோ, […]
வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அறிந்த […]
திருமண ஆசை காட்டி 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் புதுகிராமம் காலனியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினரான சடையன்குளத்தை சேர்ந்த அசோக் என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். உறவினர் […]
பெற்றத்தாயை பார்க்கச் சென்ற 9 வயது மகளை அவரது தந்தை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத்தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான அப்துல் சமது (37) இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு அரப்புஸ்ரா (9) என்ற பெண் குழந்தையும், அகமது (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.அப்துல் சரிவர வேலைக்குச் செல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவ்வப்போது அவரது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மும்தாஜ் தன் தாய்வீட்டிற்குச் சென்றதும், […]
கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நெல்லை மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பெயின்டரான இவர் தொழில் செய்வதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் பத்து பைசா வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.நான்கு வருடங்களாக இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேலாக அவர் வட்டிக் கட்டி வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக […]
கோவை ராவூத்தர் பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் ஆழப்புழா – சென்னை விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று அதிகாலை கோவை தனியார் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கோவை இருகூர் அருகேயுள்ள ராவுத்தர் பாலத்தின் மீது தண்டவளத்தில் நடந்து சென்றுள்ளனர்.அப்போது ஆழப்புழாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு மாணவர்களும் உயிரிழந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
ஆதம்பாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5ஆவது தெருவில் வசித்து வருபவர் ராஜன் (40). அவரது மனைவி பஞ்சவர்ணம் (35). இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இதுபோன்று இருவருக்கும் இடையே நேற்று இரவு குடும்பச் சண்டை நடந்துள்ளது. இதில் மனமுடைந்த பஞ்சவர்ணம் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். இதனையடுத்து எரியும் உடலுடன் பஞ்சவர்ணம் […]
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல் துறைக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட முகிலனிடம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி […]
இளைஞரின் செல்ஃபோனை பறித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையம் வரவழைத்து இளைஞர்களை மிரட்டிய பெண் உதவி ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் உத்தராம்பாள். இவர் பணி முடிந்து புதுச்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்பாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதனைக் கண்ட உத்தராம்பாள் அந்த இளைஞரை வழிமறித்து செல்ஃபோனை […]
அண்ணன் , தம்பி , சித்தப்பா என்று சொல்லி பல ஆண்களுடன் நெருக்கம் வைத்திருந்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள், கவிதாவை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த கவிதாவிற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்துவந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து […]
அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று காலை அனுராதா வேலைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியாகச் செல்லும்போது, அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. இதை எதிர்பார்க்காத அனுராதா, உடனடியாக பிரேக் போட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து […]
கரூரில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். கருர் வடக்கு பசுபதி பாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் கோமதி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே […]
காங்கேயம் அருகே தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மூன்று லட்சம் மதிப்பிலான 350 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை தலைமையிலான அலுவலர்கள் காங்கேயம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில், திருவள்ளுவர் வீதியில் மொத்த வியாபாரம் […]
குற்றங்களைக் களைய பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண்சக்தி குமார் பதவியேற்றார். இவர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்றாலும், ஐபிஎஸ் ஆவதுதான் இவரது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. முன்னதாக திருநெல்வேலியில் பணியாற்றிய இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இவர், “அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு புதுக்கோட்டையில் […]