திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு பள்ளியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை அடுத்த நம்பியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் தலைமையாசிரியர் செல்வமணி உத்தரவின் பெயரில் வெட்டி சாய்க்கப்பட்டன. இதையடுத்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓ தங்கராஜ் ஆகியோர் […]
Category: மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட உதவி திட்ட அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தாக்கப்பட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேச்சூரி என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட உதவியாளர் சுசிலா ராணி உள்ளிட்டோர் டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பள்ளி […]
’அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட நிலையில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் இந்தக் கடத்தலில் தொடர்புள்ளதா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணிகள் யாராவது தங்கம் கடத்தி வந்தார்களா என்று விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்கள் கண்காணித்துவந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த தெரசா (45), பாத்திமா (40) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் […]
அரசு கலைக்கல்லூரியின் 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் கையேட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா என அச்சிடப்பட்டிருந்தது மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேலம் வின்சென்ட் பகுதியில் அரசுக்கு சொந்தமான தன்னாட்சிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கூடுதல் கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
காஞ்சிபுரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை நண்பன் எடுத்து குடித்ததால் ஆத்திரம் தாங்காமல் நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த நந்திவரம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் அதே நந்திவரம் பகுதி எழில் அவன்யூ தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் நீண்ட கால நட்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சீனிவாசன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதை சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றைய […]
குடிக்க பணம் தராததால் சொந்த தந்தையை மகனே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ரங்கராஜன் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவரது மகன் சசிகுமார் குடி போதை பழக்கம் உள்ளவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து குடிபோதை முற்றிய நிலையில் சில மாதங்களாகவே […]
கரூர் மாவட்டத்தில் தாய் இல்லாத உலகத்தில் நானும் வாழ மாட்டேன் என தாயுடன் மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. இவரது மகன் ரங்கராஜன் இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். அமுதவல்லி தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் ரங்கராஜன் அதே பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக […]
நாகர்கோவிலில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 850 ரூபாய் வாடகை தொகையை செலுத்தாமல் இருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி பாரபட்சமின்றி சீல்வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலைய அலுவலகங்கள் டீ கடைகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டு வருவது வழக்கம். அந்த கடைகளை ஏலம் எடுக்கும் கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் அங்குள்ள கடைகளில் ஆம்னி […]
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை கவுந்தம்பாடி பகுதியை அடுத்த பெருமாள் ஆலய தெருவை சேர்ந்தவர் பட்டத்தரசன். இவர் தனது மனைவி அமராவதி அமராவதியின் தங்கை சாந்தி மற்றும் உறவினர்கள் உட்பட மொத்தம் 20 பேருடன் சரக்கு ஆட்டோவில் உறவினரின் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கவுந்தம்பாடி பகுதியை அடுத்த வளைவு ஒன்றில் சரக்கு […]
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெள்ளி முதல் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கு அளிக்க உள்ளதாக அதிமுக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் என்றால் அது மதுரை மீனாட்சியம்மன் கோயில் தான். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மக்களைக் காட்டிலும் அதிகமாக வெளியூர் மக்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நிகராக பக்தர்கள் அதிகமாக வந்து செல்வதால் அங்கு வரும் பக்தர்களுக்கு நாள்தொறும் பிரசாதமாக லட்டு உள்ளிட்டவற்றை […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சாலையோர தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியில் உள்ள நூல் மில்லில் ஜீப் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். நாள்தோறும் மில்லில் பணிபுரிந்து வரும் வேலையாட்களை அவரவர் கிராமத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதே இவரது வேலை. அந்த வகையில் நேற்றைய முன்தினம் […]
தர்மபுரியில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வீரபுத்திரன் கோவில் தெருவில் லோகநாதன் தேவகி ஆக்கிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரே மகளான பரணி ஸ்ரீ அதே பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் அவருக்கு மாற்றி மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு […]
கடலூரில் வீடு மனை அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அதிகாரியாக சக்கரவர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வடலூர் மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை யும் சேர்த்து பொறுப்பேற்று பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குறிஞ்சிபாடி தானுர் கிராமத்தில் வசித்து வரும் மோகன் தாஸ் என்பவர் 25 […]
கோயம்புத்தூரில் பஸ்ஸில் தொங்கிய மாணவர்களை கண்டித்த கண்டக்டர் தாக்கபட்டத்தை கண்டித்து கல்லூரியை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் to கோயம்புத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 9 மணியளவில் சூலூர் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது சூலூர் பகுதியை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் பேருந்து பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்டது. அப்பொழுது படியில் சில மாணவர்கள் கம்பியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டே இருந்ததால் பிற பயணிகள் பேருந்தில் உள் நுழைய முடியாமல் தவித்தனர். […]
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 70 வெள்ளிப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உத்தம் சந்த் என்பவரிடமிருந்து, சுமார் 70 கிலோ வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் கட்டிகள் ஆகியவற்றை ஒரு கும்பல் வாங்கியுள்ளது. அதனுடன் நான்கு லட்சம் ரூபாயுடன் சேலம் செல்வதற்காக சவுகார்பேட்டையிலிருந்து ஆட்டோவில் (TN04 AF 6870) கோயம்பேடு வந்துள்ளார். மெட்ரோ அலுவலகம் அருகில் கே.பி.என். டிராவல்ஸ் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவ்வழியே ரோந்து சென்ற கோயம்பேடு காவல் துறையினர் […]
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதி அருகே எட்டு பிள்ளைகள் பெற்ற மூதாட்டி ஒருவர் பஸ்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மனைவி சுலோச்சனா. 90 வயதாகும் இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரன், ரங்கராஜன், மனோகரன் ஆகிய 3 மகன்கள் திருப்பூரிலும் இளங்கோவன், வீரராகவன் ஆகிய இரண்டு மகன்கள் கவுரபாளையத்திலும் கூலி வேலை செய்து வருகின்றனர். அவரது மூன்று […]
தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப்பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ. 5,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் நாகேஷ், ராஜ்குமார் துபேவை கைது செய்தனர்.
பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, காவி துண்டு, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவள்ளுவரை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் சார்பில் போராட்டம் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அழகர்மலை கோவில் நிர்வாகம் சார்பில் மலை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அழகர் மலை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் அழகர் மலை பாதுகாக்கப்பட வேண்டிய இடம் அங்கு மரம் வெட்டுதல் விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றனர். […]
தங்கம் விலை அதிரடியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 34 ரூபாயும், சவரனுக்கு 272 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272 குறைந்து […]
குரோம்பேட்டை சாலையில் வெளியேறும் கழிவுநீரால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல்பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்! சென்னை அடுத்த குரோம்பேட்டை போஸ்டல் நகர் பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட 22ஆவது வார்டு வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பாதள சாக்கடை கழிவுநீர் கடந்த நான்கு நாள்களாக சாலை முழுவதும் தேங்கியுள்ளது. வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து […]
சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளியான விஜய் என்பர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் விஜய். இன்று வீட்டிற்கு பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் சென்றுள்ளார். இருவரும் நண்பர்கள் என்பதால் வீட்டில் இருந்து இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டு உடனடியாக அங்கிருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது முகேஷ் தலையில் குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். இதையடுத்து குரோம்பேட்டை […]
வேலூரில் பழுதாகி நின்ற ரயிலை சரி பார்த்த ரயில்வே ஊழியர் மீது மற்றொரு ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கோதண்டபட்டி கிராமம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார ரயிலின் இன்ஜின் பகுதியில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் பாதி வழியில் ரயில் நின்று விட்டது. இதனால் சென்னையிலிருந்து சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் இதர ரயில்கள் காட்பாடி வாணியம்பாடி […]
சென்னையில் சாதி மாற்றி திருமணம் செய்ததால் இளைஞர் துடி துடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரத்தை அடுத்த கரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் முரளி. இவர் பணி முடித்து விட்டு வருகையில் தேனீர் கடை ஒன்றில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயமடைந்த முரளி […]
பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தால் துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன்-பார்வதி தம்பதி மகன் முகேஷ் (19). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே ஊர் பார்கவி தெருவைச் சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் ஒரே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி […]
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை தந்தையே தென்பெண்ணையாறு ஆற்றில் புதைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை அடுத்த சுந்தரேசபுரம் ஏரியாவை சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கும் சௌந்தர்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து 15 மாதங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்த வரதராஜன் குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். […]
ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது. வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. […]
மூடப்படாத ஆழ்துளைக் கிணறை மூடக்கோரி தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்த இளைஞரை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் வில்சன் 80 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டார். குழந்தையின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடக்கோரியும் அதில் […]
எண்ணுரில் இருந்து மதுரைக்கு எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரும் எரிவாயு பைப்லைன் மூலம் 215 கிலோ மீட்டர் தூரம் மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த தற்பொழுது பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாலூர் ஊராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் ஒருபுறம் எண்ணைய் நிறுவனம் அழைப்பை […]
சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் […]
முட்டை உற்பத்தி அதிகரிப்பால் தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 […]
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை அடுத்த மருதுவம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர்நேற்று மாலை வெளியே சென்று இருந்த பொழுது அவரது மனைவி ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாக விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது ராஜேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின் காவல்நிலையத்திற்கு தகவல் […]
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்பத்தூர்சத்திரம் என்கின்ற இடத்தில் மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் என்பத்துர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள். இவர் வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை அன்று இறந்து போனார். இதனையடுத்து இவரை அடக்கம் செய்வதற்காக இவரது உறவினர்கள் காவிரிக்கரையில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியில் உள்ள மயான சாலை தனியாருக்கு சொந்தமானதாக இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அந்த சாலையை கடக்கும் […]
விவசாயிகள், பொதுமக்களுக்கு அரசு நிதி உதவியுடன், பாதுகாப்பான முறையில் கூடிய மழைநீர் சேமிப்பு கிணறுகளாக மாற்றம் செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சுஜித் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதன் […]
அய்யம்பாளையத்தில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் இருந்த எரிவாயுவை பற்ற வைத்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மகனை நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது இளைய மகனான கார்த்திக் (27) வேலைக்கு எதுவும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தந்தை காசிலிங்கத்திற்கும், கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியில் சென்ற கார்த்திக் அதிகளவு […]
மேயராக இருந்த கார்த்திகாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கார்த்திகாயினி. இவர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்த்திகாயினி பின்னர் திடீரென பாஜகவில் இணைந்தார்.தற்போது அவர் பாஜக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் மேயர் கார்த்திகாயினி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் […]
தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், மேம்பால பக்கவாட்டில் மோதி கார் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ (20). இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை நாகர்கோவிலிலிருந்து தனது ஸ்கோடா காரில் பாண்டிச்சேரி நோக்கி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணப்பாறை அருகே இவரது காரின் டயர் வெடித்ததுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த […]
அமமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோரது தலைமையில் ஏராளமான அமமுகவினர் நாளை முதலமைச்சரை சந்தித்து தாய்க் கழகத்தில் இணைய சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. அதில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியினை தொடங்கினார். அதிமுகவினர் அனைவருமே தன்னுடன்தான் இருக்கின்றனர் என அவர் கூறி வந்தார். […]
ஈரோடு மாவட்டம் கல்ராமொக்கை என்னும் கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கிராமமக்கள் தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.26 அடியாக உள்ளது. ஆகையால் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அதேபோல் சித்தனக்குட்டை பகுதியை அடுத்த கல்ரா மொக்கை என்னும் கிராமத்தில் தார் சாலைகளில் முழங்கால் பகுதியைத் தாண்டி நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரக்கூடிய […]
மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]
சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை அடுத்த கோரிகாடு என்னும் கிராமத்தில் புதர் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இரவோடு இரவாக கொலை செய்யப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதனை கண்ட ஊர்மக்கள் பதற்றத்துடன் சேலம் காவல்துறையினருக்கு தகவல் […]
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிவாசகம் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி கேரளா வனப்பகுதியில் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் மணிவாசகத்தின் சொந்த ஊரான காடையாம்பட்டி ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். மணிவாசகத்தின் […]
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெற்கு தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கிருஷ்ணன் கோயிலுக்கு 20 மீட்டர் தொலைவில் மதுக்கடை அமைந்துள்ளது. மேலும் இந்த மதுக்கடை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையில் அமைந்துள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் […]
விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பாக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காக 6 அடியில் குழி தோண்டப்பட்டது. பின் மழை பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக […]
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு இல்ல நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. பின்பு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் […]
தார்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள சித்தன்குட்டை பகுதியில் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி கல்ராமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளதால் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சித்தன்குட்டையிலிருந்து கல்ராமொக்கை செல்லும் சாலையில் ஓரிடத்தில் உள்ள தாழ்வான பகுதியில் […]
வாக்குச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியைச் சேர்ந்த […]
சென்னை அருகே கஞ்சா பயன்படுத்தியது குறித்து தட்டிக் கேட்டவர் வீட்டிற்குள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் அதே பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் முருகன். இவர் வீட்டின் மாடியில் இருந்த குடிசை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் குடிசை வீடு மற்றும் அதிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா […]
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆழ்துளை கிணற்றில் மழை நீர் தொட்டி அமைக்க 22 ஆயிரம் ரூபாயும் […]
தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர்மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த கிராம பகுதிகளில் வெண்ணாறு கரையோரம் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராமத்திற்குள் மழைக்காலங்களில் ஆற்று நீர் புகுந்து செல்லும் அபாயம் ஏற்படுகிறது. பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக […]