பொய் வழக்குப்போட்டு நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியைத் தடுக்க காவல் துறை முயற்சி செய்வதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்குநேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியைச் சாராதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி எச். வசந்தகுமார், அவருடன் வந்த நான்கு பேரை காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, […]
Category: மாவட்ட செய்திகள்
டெங்கு மலேரியா சிக்குன்குனியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் சூழலில் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். என்னுடைய மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தப்பட்ட அபராதத் தொகை கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள சேலம் அரசு தலைமை மருத்துவமனையை சுற்றி எட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் […]
விக்கிரவாண்டியில் பாமக – தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]
சென்னையில் காதில் பிரச்சனை என்று சென்ற சிறுமிக்கு மருத்துவர்கள் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காது மடல்களில் சிறிய கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அம்பத்தூரில் உள்ள சர் ஐவன் ஸஃபோர்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அன்று சீரமைக்க தொடர் பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு […]
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், […]
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வெளிநாடுகளில் நம் மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையெனப் பேசினார். கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டன. அப்போது கனிமொழி பேசுகையில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனம் வேலை தரும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்விற்குச் செல்லவேண்டும், பல நேரங்களில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று தெரியமால் தவற விட்டுவிடுகிறோம் என்று […]
சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்தி வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு […]
புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. புதுவை மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மற்றும் அதிமுக கூட்டணி […]
எங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டுமென்று நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைபட்டி பேரூராட்சியில் உள்ள சுமார் 113 கிராம மக்கள் எங்களை தேவேந்திரகுள வேளாளர் என்று அறிவிக்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.மேலும் நடைபெறும் இடைத்தேர்தலை புறக்கணிக்க போகின்றோம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களிடம் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவாரத்தை நடத்தியும் அதில் […]
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வெளியானதில் குளறுப்பிடி என்று தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
புதுவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கே வாக்குப்பதிவு சற்று மந்தமாக நடைபெற்று வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் இன்று இந்த மூன்று தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் காங்கிரஸ் […]
நாமக்கல்லில் பியூட்டி பார்லரில் வேலை பார்த்துவந்த பெண் ஒருவர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வனிதா (எ) சோபனா. இவர், திருச்செங்கோட்டில் உள்ள சுபானா பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். 29 வயதான இவருக்கு தேவா, சச்சின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை சோபனா வேலைக்குச் சென்றுள்ளார். […]
காலை 7 மணிக்கு தொடங்கிய விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
காலை 7 மணிக்கு தொடங்கிய நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக […]
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இயந்திரக்கோளாறு காரணமாக 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் […]
வாக்குச்சாவடி அருகே நின்று திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறிவர்களை போலீசார் விரட்டியடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்கங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், […]
மழை பெய்து வரும் நிலையில் இடைத்தேர்தலுக்கு வாக்களிக்க பொதுமக்கள் குவிந்து வருகின்றேன். திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி , சிவகங்கை , கோவை மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் , கோவை மாவட்ட […]
தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை என திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆடலரசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், திருத்துறைப்பூண்டி தொகுதி சிக்கியது. இதனால் ஆறு மாத காலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மிகப்பெரிய ஒரு பேரிடரை சந்தித்துள்ளனர். மேலும் தொகுதி முழுவதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டபோதும் […]
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் […]
மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டையைப் பார்வையிடவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மாமல்லபுரம். இங்கு பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது.குறிப்பாக வெண்ணை உருண்டை பாறையை மக்கள் ஆர்வமுடன் […]
தீபாவளி பண்டிகைக்காக தி.நகரில் பொருள்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர். இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. […]
அரியலூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் வறட்சி காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை காக்கும் வகையிலும் 30 ஆயிரம் பனை விதைகளை மாணவா்கள் விதைத்தனா். அரியலூர் மாவட்டம் அருகே உள்ள தா.பழூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 30 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. வருங்காலங்களில் வறட்சியைச் சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏரியின் கரைகளிலும் பனை விதை நடும் திட்டம், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், தா.பழூரில் உள்ள கோரை […]
சென்னையில் கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் காஷ்மீர் 370 கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசினார். அதில்,காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்பட்டது உண்மை தான். ஆனால், அதை செய்தவர்கள் அங்கிருந்த அமைப்பைச் சார்ந்தவர்கள். ஈழத்தில் மக்கள் சாவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அமைப்புகள் என்று குறிப்பிடாமல் இஸ்லாமியர்கள் தான் பண்டிதர்களைக் கொன்றார்கள் என்று கூறுகிறார்கள். இதை நாம் […]
விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கின.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் போட்டியில், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட 14 கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் இந்த நீச்சல் போட்டியில், இறுதிப் போட்டியில் […]
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குந்தா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழைப் பெய்து வருகிறது.இதன் விளைவாகப் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதுஎனவே, இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், உள்ளூர் தீயணைப்புத்துறையினருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.விளக்கம்இதில் நிலச்சரிவு, இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, […]
நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப்பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன், தன் தொடக்க கல்வியை பயின்றார்.இந்தப் பள்ளியில் அமைந்துள்ள சத்துணவுக்கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. உடனடியாக பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த […]
வேலூர் வாணியம்பாடி அருகே தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கணவாய்புதூர் கிராமம். நேற்று இரவு இக்கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. பாம்பு குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாம்பை பார்பதற்காக ஒன்று கூடினர். அப்போது, அந்த மலைபாம்பு கூடியிருந்த பொதுமக்கள் மீது சீறிப் பாய்ந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பாம்பு […]
தேசிய அளவில் 19 மாநிலங்களுக்கு நேரடியாக சென்று குழந்தைகள் தொடர்பாக 5,000 குறைகள் கேட்டறியப்பட்டு, அவற்றில் 4,500 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்தவதை தடுக்க பயன்படும் வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், […]
அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை முன் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழைக் காரணமாக இப்பள்ளியில் உள்ள வகுப்பறை முன் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வகுப்பறைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது.மேலும் மழைநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் […]
தன்னை ஆளுநர் என்று அழைப்பதைவிட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புவதாக தெலுங்கானா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழிசை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவன தின விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழிசை, “நான் தமிழ்நாட்டிற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்னை சகோதரி என்று அழைத்தது […]
மாவட்ட நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புறங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 38 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓரளவிற்கு அனைவரும் பாதாளச் சாக்கடை இணைப்பை செய்து முடித்துவிட்டனர். தற்போது பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது. மழைக்காலங்களில் மட்டுமல்லாமல், வெயில் காலங்களிலும் இந்தக் கழிவு நீர் வெளியேற்றம் இருந்துவருகிறது.தற்போது டெங்கு காய்ச்சல் பரவ […]
கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து […]
ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை நடத்தும் மீன் உணவுத் திருவிழாவில், உணவுகளை ருசி பார்க்க அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அம்மாதம் முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அசைவு பிரியர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது மீன் உணவு திருவிழா. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு மீன்வளத்துறை நடத்தும் இந்த விழாவில் பொதுமக்கள் […]
ஜமாத் தலைவர்களை உதாசினபடுத்தியதாகக் கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொடைக்கானலில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசினப்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் […]
தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய லாலா இனிப்புக்கடைக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளது. சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோயில் அருகிலுள்ள தனியார் லாலா இனிப்புக் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குடோனில் 4 லட்சத்து 50 […]
கொடைக்கானலில் பெய்துவரும் கன மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவிகள், வில்பட்டி ஆறு, பெலாக்கெவை ஆறு என நான்கு ஆறுகள் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், கன […]
வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏஜென்சி உரிமம் பெற்றுத் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாகி தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்எம்வி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும், ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை […]
அண்ணா நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து சென்னை அடுத்துள்ள அண்ணா நகரில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர்களை திருமங்கலம் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பீர் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து முகமது ரியாஸிடம் கொடுப்பது தெரியவந்தது. […]
பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்கிய கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பார்வதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூட்ஸ் கால்களால் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி […]
பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு பணிகளில் 8 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இந்த விழாவை முன்னிட்டு பேனர் வைக்கவும், வாடகை வாகனங்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், […]
இறப்பதற்குள் ஒரு முறையாவது பெற்ற பிள்ளைகளை பார்க்க வேண்டும் என பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் புறம்போக்கு குடிசையமைத்து வாழ்ந்துவந்தவர் கணேசன்(70). இவரின் சிறுவயதில் ரயில் தண்டவாளங்கள் போடுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்தார்.பின்னர் ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் தங்கி குடை தைக்கும் தொழில்செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவருக்கு சரசு என்ற மனைவியும் லஷ்மி என்ற மகளும் சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர். […]
கனமழை காரணமாக குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமைழையானது தொடங்கி பெய்து வருகின்றது. கடந்த 3 நாட்களாகவே தமிழகம் முழுவதுமே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது இதன் காரணமாக அங்குள்ள குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]
வடகிழக்கு பரவுமழையால் சென்னையில் வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால் சென்னை வாசிகள் அச்சத்தில் உள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் சென்னை தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து […]
புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி கைகளை முன்பே பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த […]