நாகப்பட்டினத்தில் தரமற்ற மதுபானங்களை விற்பதாக அப்பகுதி குடிமகன்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் கோல்டன் சாய்ஸ் என்ற டீலக்ஸ் பிராந்தியை வாங்கியுள்ளார்.இதையடுத்து, அந்த பிராந்தியை குடிப்பதற்காக எடுத்தபோது மதுபான பாட்டிலின் உள்ளே கல்வடிவில் பசை போன்று ஒருபொருள் ஒட்டியிருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் […]
Category: மாவட்ட செய்திகள்
விருதுநகரில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தெப்ப குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையான்செட்டி தெருவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு அங்கமாக அப்பகுதி மக்கள் கோயிலிலிருந்து தெப்பக்குளத்திற்கு கரகம் எடுத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு கரகம் எடுத்துச் செல்லும் போது அப்பகுதியைச்சேர்ந்த ராமகிருஷ்ணன்(30) என்பவர் குடிபோதையில் நிலைதடுமாறி தெப்பத்திற்குள் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு […]
வேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு […]
அரியலூரில் டாஸ்மார்க் கடையை மூட கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டபோது, விக்கிரமங்கலத்தில் இருந்த டாஸ்மாக் கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையானது செங்குழி பெருமாள், தீயனூர் மலை மேடு பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.பொதுமக்கள் இதனால், இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இம்மையம் அக்டோபர்16 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும். மையத்தில் உள்ள 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் மீனவர்கள் தொடர்பு […]
பெயர் தெரியாத காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ், பழுதின் காரணமாக பாதி வழியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், காய்ச்சலால் அகஸ்தீஸ்வரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்குப் பெயர் தெரியாத காய்ச்சல் தீவிரமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 260 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் […]
முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர். புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம்- 113. 030 அடி அணையின் நீர் இருப்பு 82. 787 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 347 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5, 500 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96. 98 அடி அணையின் நீர் இருப்பு […]
தேனி மாவட்ட அணைகளில் உள்ள இன்றைய நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு அணை : அணையின் நீர்மட்டம் 124 அடி அணையின் நீர் இருப்பு 3, 420 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 2, 779 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை : அணையின் நீர்மட்டம் 127. 10 அடி அணையின் நீர் இருப்பு […]
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை : அணையின் முழு கொள்ளளவு 48 அடி அணையின் நீர் இருப்பு 30 அடி அணைக்கு நீர்வரத்து 281 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை கன்னியாகுமரி பெருஞ்சாணி அணை : அணையின் முழு கொள்ளளவு 77 அடி அணையின் நீர் இருப்பு 68. 95 அடி அணைக்கு நீர்வரத்து 214 கன அடி அணையில் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]
பிரபல தண்ணீர் நிறுவனத்தின் பாட்டிலில் சிலந்தி மிதந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நேற்று ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த விக்ரம் என்பவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பிரபல நிறுவனத்தின் குடிநீர் […]
குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை […]
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்து அவருடைய மனைவியே கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சீட்டாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், நேற்று நள்ளிரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல், ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அவருடைய பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளனர்.படுகாயமடைந்த ரஞ்சித் குமார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த […]
ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை இட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளர்களாக மீன்பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட […]
கன்னியாகுமரியில் கடந்த 2011ம் ஆண்டு லஞ்சம் வாங்கிய வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இதற்கான அனுமதி சீட்டு வழங்க மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து என்பவருக்கு ரூ 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளார். இதனால் கனிம வளத்துறை அதிகாரி அப்போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் உள்ள மெய்யப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தை நேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]
சென்னையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் முக்கியதுவத்தை மாவட்டஆட்சியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். உலக உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக ஆறு நிறங்களில் உருவாக்கப்பட்ட பயோ ஷாட் ஒன்றை அறிமுகப்படுத்தினார். மத்திய உணவு […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த தவிட்டுபாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு பூஜை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆடு சேவலை பலி கொடுத்து இழுத்துச் சென்ற பொழுது வீதிகளில் […]
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரண்டு மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்கள் இரண்டு பேரும் வெளியூரில் உள்ளனர். வாழ்வாதாரத்தை காக்க வீட்டு வேலை செய்துவரும் மரகதம் வயதான நிலையில் இரண்டு மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் […]
சென்னை வேப்பேரியை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியில் ஒப்பனை மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகமது என்பவர் நேரில் சந்தித்து தமக்கு தெரிந்தவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 100 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை 500 மட்டும் 2,000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். கூடுதல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தினேஷும் 80 லட்சம் […]
சென்னை அருகே சிக்கன் பிரியாணியில் புழுக்கள் இருந்ததால் சிக்கன் கடை உரிமையாளர் மீது நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் 99 பிரான்ஹிட் என்ற ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி ஒன்றில் சிக்கனில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் சிக்கனில் புழு இருந்ததை படமெடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை […]
தர்மபுரியில் டெங்கு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்த 4 நிதி நிறுவனங்களுக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வண்ணம் தூய்மைப் பணியை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுத்தம் செய்யும் பணியிலும் சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது […]
திண்டுக்கல்லில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்றைய தினம் தனது சொந்த தம்பியுடன் தேவாலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள புதரில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவர்களை வழிமறித்து அவரது தம்பியை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் பதற்றம் அடைந்த […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96. 51 அடி அணையின் நீர் இருப்பு 26 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 6, 429 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 100 கன அடி திருமூர்த்தி அணை : அணையின் நீர்மட்டம்- 36. 56/60 அடி அணைக்கு நீர்வரத்து 862 கன அடி […]
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை : அணையின் முழு கொள்ளளவு 48 அடி அணையின் நீர் இருப்பு 29. 70 அடி அணைக்கு நீர்வரத்து 130 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை கன்னியாகுமரி பெருஞ்சாணி அணை : அணையின் முழு கொள்ளளவு 77 அடி அணையின் நீர் இருப்பு 68. 95 அடி அணைக்கு நீர்வரத்து 214 கன அடி […]
தேனி மாவட்ட அணைகளில் உள்ள இன்றைய நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு அணை : அணையின் நீர்மட்டம் 123. 40 கன அடி அணையின் நீர் இருப்பு 3, 301 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 1, 976 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை : அணையின் நீர்மட்டம் 126. 54 அடி அணையின் […]
கோயம்பத்தூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பர் முருகன் மற்றும் ஆனைமலை நண்பர் ஒருவருடன் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். பின் போதை தலைக்கேறிய நிலையில் ஆனைமலை நண்பரின் வீட்டிற்கு […]
கோயம்பத்தூரில் நிதிநிறுவனம் ஒன்று அடமானம் வைத்த வீட்டுப்பத்திரத்தை மறு அடமானம் வைத்து ரூ70 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் களப்பட்டி லட்சுமி நகர் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருடைய மகள் தனது அம்மாவுடன் நேற்றையதினம் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்துள்ளார். அதில் ஐயா நான் மேல் படிப்புக்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூபாய் 14 லட்சம் கடன் வாங்கினேன். படித்து முடித்ததும் என்னால் அந்தப் […]
சென்னையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிபன் இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஆனந்த் இவர் இந்திரா நகரைச் சேர்ந்தவர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடை ஒன்றுக்கு சென்று மது வாங்கி சற்று தொலை தூரம் சென்று அவர்களது சொந்த […]
சென்னையில் மோசடி கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள் ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]
சென்னையில் நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப […]
சென்னை துரைப்பாக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு கிடைக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் வரை காவல் துறையினரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழு, சாலையில் சிக்னலில் போது நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வந்துள்ளார். காவல்துறையினரின் […]
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவியிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, ஜீசஸ் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சுபாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் ரஞ்சித்குமார் பேசிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற மர்ம கும்பல் ராஜ்குமாரின் மர்ம உறுப்பை துண்டித்ததோடு அவரை சரமாரியாக அரிவாளால் […]
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அருகே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் முயற்சியாக ஓமலூர் மோட்டார் வாகன அலுவலகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விளக்கங்களையும் […]
வேலூரில் பகலில் கட்டட மேஸ்திரியாகவும் இரவில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரில் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சுரேஷ், அஜித்குமார் என்றும் கட்டிட மேஸ்திரியான இருவரும் பகலில் கட்டிட வேலையிலும் இரவில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின் […]
மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட சகோதரனால் அவரது சகோதரி, மைத்துனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அதேப் பகுதி அருகேயுள்ள சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதி காமரஜர் நகரில் ஆறு மாத குழந்தையுடன் வசித்துவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் […]
சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும், ஆகையால் நான் சாக போவதாகவும் தனது […]
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் கலாமின் சகோதரர் முத்து மீரா மரைக்காயர் உள்ளிட்ட உறவினர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஜனநாயக […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 114 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டிர்கள் என்று சுப ஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி பலியானார். இதையயடுத்து பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் […]
ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் […]
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ளிட்ட இடங்களில் திருடர்களை பல்வேறு கேமராக்கள் மூலம் கண்காணித்து பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை வடக்கு தெற்கு மற்றும் மேற்கு மாம்பல சாலைகள், ரங்கநாதபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாதாரண நாட்களிலே கூட்டம் அலைமோதும் பட்சத்தில் தீபாவளி நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். இதன் காரணமாக அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் போத்தீஸ் ரங்கநாதபுரம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை அடுத்த குப்புச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லாலான அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளி நேரத்தில் இந்த விபத்து […]
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் முதல் போக […]
வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக திருட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் வசிக்கும் தாமஸ்(40), இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து செல்ஃபோனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.அப்போது குழந்தை அழுத சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் எழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்விளக்கு […]
தேனி கோடாங்கிபட்டி தனியார் மசாலா நிறுவனத்தில் இரண்டவது நாளாக எறிந்து வரும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல் இருக்கக்கூடிய ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது 8 மணியளவில் தீடிரென தீ பற்றி எறிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர்.இதை தொடர்ந்து […]
சீமானின் சர்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் […]