Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13 வயது சிறுமி கர்ப்பம்” தாயின் இரண்டாவது கணவர் கைது…!!

கன்னியாகுமரியில் தாயின் இரண்டாவது கணவர் 13 வயது சிறுமியை கற்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார் 35 வயதான அந்தப் பெண். அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி பாத்ரூம்க்குள் உல்லாசம்…. ஆசிரியரை அடித்து துவைத்த பொதுமக்கள்… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் பகுதியில்  சத்துணவு ஊழியரிடம் தவறாக  நடந்ததாக கூறி ஆசிரியரை பொதுமக்கள்  அடித்து உதைத்தனர். நாமக்கல்லில் சத்துணர்வு பெண்ணிடம் ஆசிரியர் சரவணன் என்பவர் தனிமையில் இருந்தததை மாணவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ஊர் பொதுமக்களிடம் இந்த தகவலை மாணவர்கள் தெரிவிக்க ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணனை விசாரணைக்காக புதுச்சத்திரம் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பகுதி மக்களையும் காவல் நிலையத்திற்கு புதுச்சத்திரம் காவல்துறையினர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு- வாய் பேச முடியாத குழந்தை கொலை….!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக வாய் பேச முடியாத  பிஞ்சு குழந்தை அடித்து உதைத்து  கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 30 வயதான ரமேஷ் கூலி வேலை செய்துவரும் இவர் 4 ஆண்டுகளுக்கு முன் 25 வயதான பவானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் யாலினி என்ற மகளும் ,ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு முன் ரமேஷ் காச நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் குதித்து தற்கொலை…. காரணம் என்ன…?? போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிந்தி பேட்டை அருகில் உள்ள அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கூவத்தில் திடீரென்று குதித்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்மற்றும் தீயணைப்பு துறைக்கு .தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்திலிருந்து ஏணி மூலம் குளத்தில் இறங்கி தேடினார்கள். சேறும் சகதியும் இருந்ததால் ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்க ATM கார்டை தாங்க…. நான் எடுத்து தர்ரேன்… முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவன் கைது.!!

தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.     தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள  ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில்  அந்த ஏடிஎம்க்கு  கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கில் மோதிய பைக்…. பற்றி எரிந்த வேன்…. 1 நபர் மரணம்… 15 பேர் படுகாயம்…!!

அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத்  நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உணவில் புழு இருந்ததாக வாட்ஸ்அப் புகார்…. பிரபல முருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து.!!

அம்பத்தூரில் இயங்கி வரும் பிரபல முருகன் இட்லி கடையின் உரிமத்தை  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.   சென்னை மாவட்டத்தின்  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முருகன் இட்லி கடை ஓன்று இயங்கி வருகிறது. இந்த கடை அப்பகுதியில் மிகவும் பிரபலமானது இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கடையில் சாப்பிட்ட வழக்கறிஞர்  ஒருவர் உணவில் புழு இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறை பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ்அப் மூலம் அதனை புகைப்படம் எடுத்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மக்கள் அதிர்ச்சி… வானத்தில் இருந்து கீழே விழுந்த மர்மப்பொருள்…!!

வேலூரில் வானத்தில் இருந்து மர்மப்பொருள் ஓன்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.    வேலூர் மாவட்டத்தில் உள்ள கே வி குப்பத்தை  அடுத்த கவசம்பட்டு பகுதியில் திடீரென வானத்திலிருந்து இரவு நேரத்தில் ஒரு மர்ம பொருள்ஓன்று  கீழே விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். கீழே விழுந்த அந்த மர்ம பொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதில் 2 எல்.ஈ.டி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின்படி காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3-வது திருமணத்திற்கு திட்டம்… எங்களுக்கு என்னடா குறைச்சல்…. கணவனை விரட்டி விரட்டி அடித்த மனைவிகள்..!!

கோவையில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில்  ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூளுரை  சேர்ந்த அரவிந்தன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரையும் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பிரியா என்பவரையும் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இரண்டு மனைவிகளும் தன்னை  கொடுமைப்படுத்தியதாக கூறி அவர்களை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தற்போது மூன்றாவது திருமணத்திற்கு திட்டமிட இருப்பதை அறிந்த இரண்டு மனைவிகளும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96.3 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 11.81 அடி அணையின் நீர் இருப்பு 377. 89 மில்லியன் […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் இன்றைய விலை……!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 700 முதல் அதிகபட்சம் ரூ 850 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 350 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 300 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 130 வரை விற்கப்படுகின்றது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”மாணவி மீது ஆசிட் வீச்சு” காதலன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…!!

மாணவி மீது அசிட் வீசிய மாணவன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவி சுசித்ரா நடந்து வரும்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன்  முத்தமிழ்  இளைஞன் நீண்டநாள் காதலித்ததாக கூறப்படும் நிலையில் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசினார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுசித்ரா சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அண்ணாமலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் களைகட்டும் ஓணம்…. பள்ளி-கல்லூரி மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன.  கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண ஊஞ்சல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினர். இதில் மாணவர்கள் வேஷ்டி சட்டையுடன் மாணவிகள் கேரளா சேலையும் அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மக்களால் பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் விழா, பருவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணாமலை பல்கலைகழகம் முன் நேர்ந்த சோகம்… மாணவி மீது ஆசிட் வீசிய காதலன்..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் 2 -ஆம்  ஆண்டு படித்து வரும்  மாணவி மீது காதலன்  ஆசிட் வீசியதில் அவர் படுகாயமடைந்தார்.   இன்றைய சமூகத்தில் காதலுக்காக எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் செய்கின்றனர். அதே நேரத்தில் ஒருசிலர் காதலில்  ஏதாவது பிரச்னையோ, தாம் விரும்பும் பெண் கிடைக்காமல் போனாலோ கொலை செய்யவும் தயங்குவதில்லை. ஒருசில  ஆண்கள் முகத்தில் ஆசிட் வீசி தங்கள் கோபத்தை அடக்கி கொள்கின்றனர். அந்தவகையில்  சென்னை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  சுசித்ரா என்ற மாணவி மீது சக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைதறி கூடத்தில் வெடிகுண்டு வீச்சு….. விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… 2 பேர் பலி…. ஓசூரில் கோர விபத்து..!!

ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வளைவில் வாகனத்தை  இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருவள்ளுர் அருகே சோகம்”…. விஷவாயு தாக்கி பிறந்த நாளன்று இறந்த வாலிபர்…!!

திருவள்ளுர் அருகே விஷவாயு தாக்கி வாலிபர்  உயிரிழந்த நிலையில், நண்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.   திருவள்ளுர் அருகே பேரத்தூர் மாந்திப்பை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சம்பத்குமார் என்பவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சம்பத்குமார் தனது பிறந்த நாளையொட்டி நண்பர் நரேந்திரன் (வயது 31) என்பவருடன் ஓம்சக்தி நகரில் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரமத்தில் இருக்கும் போது  சந்தானம் குருஜி என்பவர்  கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் இருவரும் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திமுக வேண்டாம் ”காங்கிரஸ் தனித்து போட்டி” நாங்குநேரியில் KS அழகிரி ஆதங்கம்…!!

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்படும் நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்பாக ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசி வருகிறார். நாங்குநேரியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பரபரப்பு… வகுப்பறையில் +1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதன்படி இந்த மாணவி இன்று வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் யாரும் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த  சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘குற்றால அருவியில் வெள்ள பெருக்கு” இன்றும் குளிக்க தடை ….!!

அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று முதலே வந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலையில் இருந்தே இங்கு மேலும் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி , ஐந்தருவி , பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று மாலை முதல் வெள்ளபெருக்கு ஏற்பட கூடிய […]

Categories
கிருஷ்ணகிரி பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களா…? ”வங்கியில் வேலை” உடனே விண்ணப்பீர்கள்…!!

மாநில அரசின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டபட்டுள்ளது. 50  கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது :  இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி : இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பம் :  ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் ஆகஸ்ட் 19_ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாடி விட்டு மாடி தாவ முயற்சி…. தவறி விழுந்த திருடன் பலி!!

மயிலாடுதுறையில் திருடன் ஒருவன்  ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மாடிக்கு தாவிக் குதிக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தான்.  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கும்  சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்த ‘ஸ்டாண்டு மணி’ என்கிற மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் தனது திருட்டு வேலையை மீண்டும்  காட்டுவதற்கு காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின்  மொட்டை மாடியில் இருந்து அருகிலுள்ள மொட்டை மாடிக்கு  குதித்துள்ளார். சுமார்  15 அடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் நிரம்பி வழியும் அணைகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்ததால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே சோகம்”…. சாலை விபத்தில் தந்தை, மகள் பரிதாப பலி.!!

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மில்டன் ஜெயக்குமார் என்பவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் இவரது மகளான ரெனி லாரோசும்  காரில் சேலத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில்  கேரளாவிலிருந்து வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் […]

Categories
ஆன்மிகம் சென்னை மாநில செய்திகள் விழாக்கள்

3 கூடுதல் கமி‌ஷனர்…6 இணை கமி‌ஷனர்….12 துணை கமி‌ஷனர்….10,000 போலீஸ்… விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு..!!

விநாயகர் சதுர்ச்சி பண்டிகை பாதுகாப்பை யொட்டி நாளை சென்னையில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் இலங்கை தாக்குதல் நடத்தியவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவி கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார் படுத்தப்படுள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தலால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்தும்  விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் […]

Categories
ஆன்மிகம் இந்து சென்னை மாநில செய்திகள் விழாக்கள்

சென்னையில் 2600 சிலைகள்…. ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 2600 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை ( திங்கள்கிழமை )  விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம், தனி தனி குழுக்கள் என சார்பில் பொது இடங்களில் விதவிதமான வகைகளில் விநாயகர் சிலையை வைத்து  பூஜை செய்வார்கள்.கடந்த வாரம் முதல் தமிழக அரசு சார்பில் இப்படி விநாயகர் சிலையை வைப்பதற்கு  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

74 வயது மூதாட்டி ‘எஸ்கலேட்டரில்’ இருந்து தவறி விழுந்து பலி..!!

சென்னையில் 74 வயது மூதாட்டி எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஜக்டியானி  என்ற 74 வயது மூதாட்டியும்  அவரது நண்பரும் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு அங்கிருந்த  எஸ்கலேட்டரில் இவர்கள் இருவரும் ஏற முயன்றனர் அப்போது இவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த அடிபட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில்  அங்கு இருவரும் தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோறு திருடி தின்ற கொள்ளையர்கள் … காவல்துறையினர் வலைவீச்சு ..!!

வேலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இலக்கியநாயக்கன்பட்டியின்  கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். நேற்று இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் . அப்போது ,  கதவை உடைக்க முடியாத காரணத்தால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அதன்பின் ,  இந்த காட்சிகள் அருகே அருகே இருந்த  சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது. மேலும் , கொள்ளையர்கள்  இதற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சாமிர்த கடையில் பாய்ந்த வருமான வரித்துறை … கவலையில் மூடப்பட்ட கடை ..!!

பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு  ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ4,00,000க்கு ஆசைபட்டு டபுள் கேம் ஆடிய கடத்தல்காரர்கள்…. போலீசில் சிக்கி பரிதாபம்..!!

கன்னியாகுமரியில் கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தகுமாரின் மாமன் மகளான ஜெர்சியை வெட்டிக்கொன்ற சாஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமார் என்பவரை கொல்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி விட்டுள்ளார். ஆனால் சாந்தகுமாரை கொலை செய்யாமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு” 4 துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: சுங்க சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

ஏரியில் கேட்பாரற்று கிடக்கும் வெடிமருந்துகள்… அப்புறப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள்..!!

அனுமந்தபுரத்தில் கேட்பாரற்று கிடைக்கும் வெடிமருந்து பொருள்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த அனுமந்தபுரம் மலை பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவர். அதன்படி இந்த ஆண்டு அதற்கான பயிற்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் வெடிக்காத இரும்பு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து எடைகடைகளில் பணத்திற்காக எடைக்கு போட்டு வந்துள்ளனர். அந்தவகையில் சில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தறுப்பு… பெண் ஊழியரை தாக்கியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

கோவையில் ரயில் பெண் நிலைய மேலாளரை ஆஷா பிளேடு கொண்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சனா நிவாஸ் என்ற பெண் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு அஞ்சனா நிவாஸ் பணியில் இருந்த போது நள்ளிரவு 1 மணி அளவில் அவரது அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். கையில் வைத்திருந்த ஆஷா ப்ளேடை கொண்டு அவரை தாக்கியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அருவி போல் பொழிந்த பாராங்கல்… 3 பேர் படுகாயம்… குற்றாலத்தில் பரபரப்பு..!!

குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீது பாரங் கற்கள் விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய அருவி உள்ளிட்டவற்றில்நீர்வரத்து மிதமாக காணப்ட்டது.   இதையடுத்து ஐந்தருவியில் மட்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், ஓடையில் உள்ள பாரங்கல் நீரால் அடித்து வரப்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING: விலை உயர்வு… நாளை முதல் அமல்..!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பால் விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார்.  இதையடுத்து இன்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், விநியோகம் செய்யப்படும் பால் லிட்டருக்கு 6ரூபாயும் உயர்த்தி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 2014 ஐ அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் காயம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வடக்கு மயிலோடை அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழில் செய்துவரும் இவரும், இவரது மனைவியும்  சம்பவதினத்தன்று வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் மாற்றுத்திறனாளியான பால்ராஜின் மகன்  மகாராஜன்(20) தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மகாராஜனின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் இருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த மகாராஜன் கயத்தாறு […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அது கற்பனையே வேண்டாம் பின்பற்றாதே த்ரிஷாவின் அட்வைஸ் ..!!

நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் . பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள […]

Categories
சேலம் மாநில செய்திகள்

அட பாவிகளா…!! இப்படியா செய்விங்க…. தண்டவாள கொக்கி அகற்றல்…. தீடீர் திருப்பம்…!!

 சேலம் மாவட்டத்தின் இரயில்வே தண்டவாளத்தின் கொக்கிகளை அகற்றியது ஊழியர்கள் என்று இரயில்வே ஐ.ஜி வனிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமோ என்று விசாரணை நடைபெற்று நடைபெற்றது. மேலும் 40 கொக்கிகளை இல்லாத போது இரயில் வந்தால் கண்டிப்பாக இரயில் கவிழும் என்று […]

Categories
சேலம் மாநில செய்திகள்

BREAKING : சேலம் ரயிலை கவிழ்க்க சதி..?

சேலத்தில் இரயில் தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . மர்மமான முறையில் அகற்றப்பட்டது குறித்த விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“3 அம்ச கோரிக்கைகள்”5வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்…!!

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடமையாக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். மத்திய அரசால் மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து […]

Categories
கரூர் தஞ்சாவூர் திருச்சி மாவட்ட செய்திகள்

22,602 ஏக்கர் பாசன வசதிக்கு 137 நாள் நீர் திறப்பு… முதல்வர் உத்தரவு..!!

மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தவறான புரிதல்” அவசர கொலையால் ஆயுள்தண்டனை..!!

தேனியில் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாக எண்ணி கூலித்தொழிலாளியை கொலை செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின் காவல்நிலையத்தில் கொலை குற்றத்திற்காக சரணடைந்த  அவரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் தனது மனைவியுடன் தவறான தொடர்பு உள்ளதாக எண்ணி இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 4 மாதத்தில் கருத்து வேறுபாடு… தூக்கில் தொங்கிய காதலி… கதறும் காதலன்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூரை  சேர்ந்த பிரபாகரனும், வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த ஆஷாவும் வீட்டில்  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 மாதம்… 7,243 ஏக்கர் பாசன வசதி மேற்கொள்ள தண்ணீர் திறப்பு… முதல்வர் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதன்  காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு படி இன்று முதல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அடவிநயினார்  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கருகிய பருத்தி பயிர்கள்… வேதனையில் உருகிய விவசாயிகள்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வடபகுதிகளில் பெய்த மழையை விட தென்தமிழகத்தில் நடப்பாண்டில் போதிய மழை பெய்யாமல் கிணறுகள் வறண்டு பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீரின்றி கருகும் பருத்தி சாகுபடி செய்த நிலங்களில் கால்நடைகளை மேய விடும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை TO அரக்கோணம்” புதிய மின்சார ரயில் சேவை… மகிழ்ச்சியில் பயணிகள்..!!

சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் புதிய மின்சார ரயில் இயக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரக்கோணம் வரை நவீன வசதிகளை கொண்ட மின்சார ரயில் இயக்கப்பட்டது. 8 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயில் நவீன எலக்ட்ரானிக் முறையில் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான இருக்கை வசதிகள் சிசிடிவி கேமராக்கள் ஜிபிஎஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன பயோ-டாய்லெட் தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் நவீன வசதியுடன் செயல்படும் […]

Categories

Tech |