ஈரோட்டில் 15கோடி வரை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் […]
Category: மாவட்ட செய்திகள்
சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட […]
விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தால் 5000 சன்மானம் வழங்கப்படுமென்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்ட போது சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டில் சாலை விபத்து ஏற்படும் போது உடனடியாக அந்த பகுதியில் செல்லக் கூடிய பொதுமக்கள் அவர்களை கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களுக்கு உடனடியாக ரூ 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் , […]
கள்ளகாதலால் கணவனை கொன்ற மனைவிக்கும், கள்ள காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னையில் உள்ள நெற்குன்றம் பாடிகுப்பம் வண்டி கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் என்பவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி ஜெயபாரதிக்கும் பாடிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக கணவர் கார்த்திக் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மெரினா கடற்கரைக்கு ஜெய பாரதி அழைத்து வந்தார். அங்கே […]
சென்னையில் பெண்ணையும் 3 பெண் குழந்தைகளையும் கொலை செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை முத்து தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சின்னராஜ் பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து சின்னராஜ் உடனான தொடர்பை உடனே துண்டித்தார் பாண்டியம்மாள். இதனால் […]
திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த 7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]
பணிச்சுமை மன உளைச்சலை போக்கும் விதமாக ஆர்பிஎப் வீரர்களுக்கு யோகா பயிற்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற யோகா பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பணியில் இருக்கும் பொழுது ரயில் பயணிகளை கையாளும் முறை உடலை பேணிக்காப்பது மன நிலையை சீராக வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஎப் வீரர்களின் மன உளைச்சலை போக்கும் […]
காரைக்குடி அருகே வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது விக்னேஷ் என்பவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தேவகோட்டை மங்கல குடியைச் சேர்ந்த முகவர் அபூபக்கர் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாங்கிக் கொடுத்ததால் அவரை முழுவதுமாக நம்பிய விக்னேஷ் மேலும் 40க்கும் மேற்பட்டோரிடம்பணம் வசூலித்து ரூ40 லட்சம் ரூபாய் அபூபக்கரிடம் […]
நாமக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் துப்பாகியல் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் திமுகவின் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்தவர் டாக்டர் ஆனந்த். இவர் அதே பகுதியில் மருத்துவமனை அமைத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சில நாட்களாகவே ஆனந்த் மிகுந்த மன உளைச்சலுடன் சோகமாக இருந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் […]
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 புதிய மாவட்டங்களை புதிதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு மயிலாடுதுறை பகுதி மக்களும் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாகவே மயிலாடுதுறை கோட்ட மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குளைச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. காலையில் மீன்பிடிக்க […]
நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் முதிய தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 15 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கொள்ளையர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கல்யாணபுரம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]
பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் முதல் சம்பா நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 மாதங்களாக மழையானது பரவலாக பொலிந்து வந்தது. அந்தவகையில் ஆனைமலை சுற்றுவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் வயல்வெளிகளில் […]
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே நேற்று முன்தினம் இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்யும் போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்றை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் காயமடைந்த 5 பேரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
சென்னை ஆவடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஆவடி அடுத்துள்ள சேக்காடு அண்ணா நகரில் வசித்து வந்த 62 வயதான ராஜேஸ்வரி என்ற மூதாட்டி தனது கணவர் சுப்பிரமணி இறந்த பின்பு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் முருகன் என்பவர் அருகிலுள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்த மூதாட்டி மீது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து […]
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ஒரு கோயிலில் சுத்தம் செய்யும் போது மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கோயிலின் மேல் தளத்தில் ஒரு பை ஓன்று கிடந்தது. இதனை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர். அப்போது அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில்5 இளைஞர்கள் […]
கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]
பண்டிகைகள் மற்றும் தொடர் மழையின் காரணமாக முட்டை விலை சரிந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைமுன்னிட்டு நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், பண்டிகைகள் மற்றும் தொடர் கன மழையின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு அனுப்ப […]
19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்து ரூ.70 சம்பாதித்து அங்கேயே மூதாட்டி தங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ராம்நாடு பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறையில் 19 ஆண்டுகளாக கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் இருந்த மகள் கைவிட்டதால் எந்த உதவியும் இல்லாமல் இந்த பொதுக் கழிப்பறையை தினமும் சுத்தம் செய்வது வாழ்ந்து வருகின்றார். இதற்க்கு தினமும் ரூ.70 முதல் 80 வரை ஊதியமாக கிடைப்பதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து மூதாட்டி […]
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு சந்தையில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் பழங்கள் வாங்கி வருவதாகவும், இதனால் வியாபாரம் அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு படைக்கப்படும் பேரிக்காய், நாவல்பழம் உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ180க்கு விற்பனையாகும் ஆப்பிள் 120 ரூபாய்க்கும், ரூ100க்கு விற்பனையான ஆரஞ்சு […]
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]
கோவையில் பதுங்கி இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து […]
கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சார்ந்தவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை […]
திருவள்ளுர் அருகே கஞ்சா போதையில் இரண்டு குழந்தைகளை கடத்தி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரி மேட்டை சேர்ந்த வீரன் என்பவரது பிள்ளைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர் நேற்று வழக்கம் போல் அனுப்பம் பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் தான் உங்களை பள்ளியில் இறக்கி விடுகிறேன் என்று கூறி லிப்ட் கொடுத்துள்ளார். அதை நம்பி அந்த இரு குழந்தைகளும் […]
கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் என போலீஸ் 3 பேரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டு இருந்தது.இதையடுத்து கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் […]
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவதாக மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து கோவையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா தாக்குதல் எச்சரிக்கை என்பதால் கோவை மாவட்டம் முழுவதும் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]
கோவையில் 16 வயது சிறுமியை 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு பகுதியை சேர்ந்த சிறுமி (16 வயது) கடந்த 18-ஆம் தேதி காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தெருவான […]
நாகையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கையில் இரும்பு சங்கிலியால் கட்டி கொண்ட நிலையில் மற்றொரு கையால் 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர். சபரிநாதன் இரண்டாமாண்டு மாணவரான இவர் சிறுவயது முதலே நீச்சல் மீதான ஆர்வத்தால் பயிற்றுனர் மூலம் சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு கைகால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி நாகூரில் […]
கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேபாள நாட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி பயின்று வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விடுதிக் காப்பாளர் கணேசன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி […]
திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் ரூ37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திட்ட குடியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்டோர் சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது […]
ராமேஸ்வரத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக கடல் வளம் சார்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பன் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நாட்டு […]
சென்னை ராயபுரத்தில் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணுரை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து எண்ணுறை நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை ஸ்ரீனிவாசன் கவனித்ததால் அவரது கையை அந்த இளைஞர் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி, ஆட்டோவில் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். இதற்கிடையே ராயபுரம் மேம்பாலம் அருகே […]
சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்கிய பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அப்துல் ரகுமான் மற்றும் இப்ராகிம் இஷா ஆகிய இரு பயணிகள் நடுக்கத்துடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று உடமைகளை சோதனையிட்டனர். அதில், அவர்கள் இருவரும் மலக்குடலில் தங்கத்தை மறைத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் […]
பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களை சிறைபிடித்த விவசாயிகள் விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை […]
இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தஇளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கோவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் […]
தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சும் வகையில் காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் சிவகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், பல்வேறு நிலையில் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள தனது அண்ணன் முத்துக்குமார் அலுவலகத்திற்கு சென்று விட்டு சிவகுமார் திரும்பியுள்ளார். அப்போது […]
மதுரையில் பார் நடத்த அனுமதி வழங்கியதில் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வணிக வளாக உரிமை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் என்ற வணிக வளாகத்தில் பார் நடத்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகரன் முன்பணமாக 68 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வணிக வளாகத்தில் பார் நடத்தி வந்த சந்திரசேகருக்கு நஷ்டம் […]
திருச்சி லால்குடி அருகே உடையும் நிலையில் உள்ள பங்குனி அணைக்கட்டை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் பங்குனி அணைக்கட்டு காவிரி ஆற்றில் இருந்து வரும் நீர் மற்றும் உபரி நீரால் நிரம்புகிறது. சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் பங்குனி அணை கட்டு, தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை […]
கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்திக் கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் காரை கடத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது வசந்தகுமார் என்பவர் கோவையில் ரெட் டாக்ஸி என்ற பெயரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நபர்கள் இவரை அணுகி மதுரைக்கு கார் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். சூலூர் அருகே வந்தபோது ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்று நிறுத்த சொல்லியுள்ளனர். அப்போது திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்திக் கீழே தள்ளி விட்டு இருவரும் காரை கடத்திச் […]
கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மதுரையை அடுத்துள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு மனைவி விஜயலெட்சுமிக்கும் சரவணனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.தனது மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த சரவணன் அவனை வேலையிலிருந்து நீக்கி யுள்ளார். இதனால் […]
நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தனியார் தண்ணி லாரி உரிமையாளர்கள் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் 20 […]
சென்னையில் துணை நடிகையை அழைத்து வருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை திருடி சென்றுள்ளார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ஜாவித் என்பவர் தனது ஆட்டோவை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறிய ஒருவர் சாலிகிராமத்திற்கு போகும்படி கூறியுள்ளார். அவரும் சாலி கிராமம் நோக்கி சென்றுள்ளார். சாலிகிராமம் அருகில் வந்ததும் துணை நடிகையை அழைத்து வரவேண்டும் நான் மட்டும் போகிறேன் நீங்கள் வந்தால் அது சரியாக இருக்காது என்று ஜாவித்திடம் தெரிவித்துள்ளார். அதன்படி […]
ராமநாதபுரம் பரமக்குடி அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது 2 மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக் ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]
ராசிபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த புதுப்பட்டி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கரிய பெருமாள் கோவில், உப்புக்கள் தட்டு, உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்தது அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல், வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பங்களா சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து […]
புதுக்கோட்டை கடைமடை பகுதி வரை காவேரி நீரை கொண்டுவர தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,காவிரி கடைமடை பகுதிகளில் ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் கடைமடை பகுதி வரை காவிரி நீர் வந்து […]
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்திற்கு வர்ணம் பூசுதல், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், சிசிடிவி கேமரா அமைத்தல், உயர் கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் […]
பொது கணக்கு கமிட்டி மூலம் அரசு தொடர்புடைய துறைகளில் முறைகேடு நடைபெறுகிறதா என்று திமுக ஆய்வு மேற்கொண்டு வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று திமுக சார்பில் பொருளாளர் துறை முருகன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் சட்டமன்றத்தில் ஏராளமான கமிட்டிகள் உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்கு ஒரு எம்எல்ஏ சேர்மனாக இருப்பார். இந்த சேர்மன் பதவியில் எல்லா ஆளும் […]
கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். கோவை அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் பிரபல பொறியியல் கல்லூரி ஒன்று புதிதாக பிளாக் என்று சொல்லப்படும் பெரிய கட்டிடம் ஒன்றை கட்டி வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கான கட்டுமான பணிகள் இன்று நடைபெற்று வந்தன. அப்போது சிமெண்ட் கொண்டு நிரப்படும் மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. […]
விலைவாசி கூடும் நிலை ஏற்பட்டாலும் அதனை கூட விடாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் தமிழகத்தில் பாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாலின் […]