வேலூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஓப்புக்கொண்டதால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரின் மகன்சவூரணிஸ் கோஷ் என்பவர் இசிஇ 2 – ஆம் ஆண்டு படித்து வந்தார் . இவர் கடந்த 23 ஆம் தேதி ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]
Category: மாவட்ட செய்திகள்
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை கரன்ட்ரைட் காலணியைச் சேர்ந்த உஷா என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உஷாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துதனர் . உடனே உஷா சத்தம் போட ஆரம்பித்தார் . இதனால் கொள்ளைக்காரர்கள் உஷாவை தள்ளிவிட்டு வாகனத்தில் தப்பிச் […]
பேரையூர் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இக்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு வருகின்றனர். இதனால் சமூகம் சீர்கெட்ட நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் பச்சாபாளையம் அருகே ஒரு கும்பல் காரில் வந்த கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன்பின் எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் […]
நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்றவர்களுக்கு விழுப்புரம் இளைஞர்கள் விதை பந்துகளை வழங்கினர். ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை . இந்த படம் இன்றைய தினத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் அலையலையாய் படம் பார்க்க சென்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இளைங்கர்கள் மரம் நடுவது குறித்து ஊக்குவித்து வருகின்றனர். இதனால், விழுப்புரத்தில் விதை விருட்சம் அறக்கட்டளை மற்றும் வானவில் விதை பந்துகள் சார்பாக இளைஞர்கள் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை […]
கெங்கவல்லி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பொதுமக்கள் தேனீக்களுடன் தேன்கூடு வைக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தேடாவூரில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேன்கூடுகட்டி தேர் திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை இழுத்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர் தப்பாட்டம் முழங்க வாணவேடிக்கையுடன் விடிய விடிய வெகுவிமர்சையாக இத்திருவிழா […]
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் – விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 […]
சென்னை ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் சுற்றுச்சுவரில் சில பொறுப்பற்ற சுவரொட்டிகள் ஒட்டியும், அசுத்தம் செய்தும் வந்தனர். இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளான மாணவர்கள் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடித்து அழகான ஓவியங்களை வரைந்துள்ளனர். சுவற்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள், நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும் பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும், மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில் புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் […]
திருச்சி அருகே ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை ஏமாற்றிவிட்டு அலுவலர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். திருச்சி அருகே பூலாங்குடிகிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக அவ்வூரைச் சேர்ந்த தியாகலிங்கம் என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அவருக்கு வழங்க வேண்டிய தொகை 58 லட்ச ரூபாயை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய திருச்சி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றம் ஊழியர்களை வேறு ஒரு அறையில் அமர […]
கீழடியில் 5 வது கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு பழங்கால இரட்டை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்வில் இரட்டை சுவர்கள் ,வட்ட வடிவிலானபானை உறைகிணறு பெண்களின் அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் கட்டிட சுவர், எலும்பு, அம்மி,குழவி உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சுவர் இரட்டை சுவரின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று அகழாய்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு பகுதிகளிலும் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர் […]
அத்திவரதர் வைபவ நிகழ்ச்சி நடைபெறும் 3 நாட்கள் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் நாளிலிருந்தே அத்திவரதரை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 16_ஆம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இதற்காக […]
மதுரையில் பெண்களையே குறிவைத்து வழிப்பறி செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அழகுசிறை கிராமத்தில் வசித்து வரும் சிந்துஜா உடலில் ரத்தம் சொட்டும் சிராய்ப்பு காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார் . வழிப்பறியர்கள் கோரை பிடியால் ஏற்பட்ட கொடூரம் தான் இந்த இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம் தேதி கருமாத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவர் சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது […]
சென்னை கோடம்பாக்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மரக்கிளைகள் தீப்பிடித்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தால் மின்சார அங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் செல்லும் மின் கேபிள்கள் என்பதால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து […]
கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று அவர் பிறந்த ஊரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதிப் பேரணி நடத்தினர். தமிழகத்தின் அரசியல் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி அநடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த இடத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் […]
திருவண்ணாமலையில் பாஜகவினர் பிச்சைக்காரர்களை கட்டாயபடுத்தி பொது கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கேலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உறுப்பினர் சேர்க்கைக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு சென்றிருந்தார். வழக்கம் போல் பணம் கொடுத்தும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தினால், கட்சி நிர்வாகிகள் அங்கு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களை கட்டாய முறையில் அழைத்து வந்து பொது கூட்டத்தில் உட்கார வைத்து விட்டனர். இதையடுத்து பாஜக கொடியை ஏற்றிவிட்டு, பொதுக்கூட்டத்தில் பேச […]
அழகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசியப் பூங்கா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. தொடர் மழையால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பவானி மற்றும் மாயாறு ஆறுகளில் […]
சேலத்தில் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி பெருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் பூச்சாற்றுதளுடன் தொடங்கியது . இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி 100அடி உயரத்தில் பறந்தவாறும் நேர்த்திக்கடனை செலுத்தினர் .மேலும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர் . நாளை ஆடி பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் விழா நடை பெற இருப்பதால் சேலம் […]
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது. சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரும் திங்களன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்தது. சுமார் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் […]
ஆரணி மாம்பாக்கம் அருகே அரசு மருத்துமனையில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருங்கூர் கிராமத்தை சேர்ந்த அரிவிழிவேந்தன் மற்றும் ஜமுனா தம்பதியினர் . இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஜமுனாக்கு தலை பிரசவத்திற்கு மாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார் .இன்று காலை பிரசவவலி வந்தது . இதையடுத்து மருத்துவர்கள் அங்கு இல்லாததால் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை […]
தேனீ மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த கல்வி ஆண்டில் சட்ட கல்லூரி தொடங்க தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் வீரபாண்டியை அடுத்துள்ள சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் தற்காலிகமாக சட்டக் கல்லூரி வகுப்புகள் நடந்து வருகிறது. நிரந்தரமான சட்ட கல்லூரி கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு மாற்றம் செய்யப்படும் என […]
கோவை ஆற்றுப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் நீரின் மேற்ப்பரப்பில் நுரை பொங்கி வழிகின்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் கோவை ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஆத்துப்பாலம் அடுத்த காலவாய் நொய்யல் ஆற்று தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. ஆனால் தண்ணீரில் சாய கழிவு மற்றும் கழிவுநீர் கலந்து வருவதால் நீரின் மேற்பரப்பில் நீண்ட தூரம் நுரை தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில் இதனை நம்பியிருந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை […]
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மெஷின் காம்பொன்ட் குடியிருப்பு பகுதியில் கரடி புகுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரப்பகுதியான மெஷின் காம்பொன்ட் குடியிருப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக அடிக்கடி கரடி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பகல் நேரங்களில் தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் உள்ள ரெப்ட்டிக் கடைகளை உடைத்தும் வருகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தோட்டம் மற்றும் ரெப்ட்டிக் கடைகளின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு கொண்டு வந்து அதிகமாக நடமாட்டம் இருக்கும் பகுதியில் […]
வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் மேலும் இந்த முடிவுகளை மாற்ற வேண்டும் என்றும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது குறித்து போலீசார் அவர்களிடையே […]
தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் விதமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக 18 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனை கருத்தில்கொண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோரிடம் சி.பி.எஸ்.சி தரத்திற்கு இணையான தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்துள்ளனர். மேலும் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தின் […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போர்ராட்டம் நடத்திய 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கக் கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகளும் தொடர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்ட […]
சேலத்தில் போலீஸ் அதிரடியால் ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படையினர் மேட்டூர், கருமலைக்கூடல், ஜலகண்டபுரம், ஓமலூர் மற்றும் கெங்கவல்லி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளான பூபதி, பிரசாந்த், கோபி மற்றும் சசிகுமார், ரத்தினவேல்,பிரகாஷ் உள்ளிட்ட 52 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். மேலும் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து போலீசார் […]
விழுப்புரத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவா என்ற நபரை மர்ம நபர்கள் இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியை […]
கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக ஓடி காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரத்தன்ராஜ் என்பவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு கீழ் பி.ஹெச்.டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் புத்தன் சந்தை பகுதியைச் சேர்ந்த மாணவி கிளாடிஸ் பிளோரா என்பவரிடம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பணம் சான்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து மாணவி பணத்தை மார்த்தாண்டத்தில் வைத்து தருவதாக […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 5 நிறமாக மாறும் ஜப்பான் நாட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா 2-வது சீசனுக்கு தயாராக இருப்பதால் அங்கு மலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மினி படகு இல்லத்தின் ஓரங்களில் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ‘ஹைட்ராஞ்ஜியா ‘ ( Hydrangea ) எனும் தாவரவியல் பெயர்கொண்ட நிறம் மாறும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன. 7 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இச்செடிகள் நான்கு நாட்கள் செல்ல செல்ல […]
பிங்கி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண் தனது கணவரை பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் சென்னையிலுள்ள அண்ணா நகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். டாட்டூ வரைதல், சேலை விற்பனை போன்ற தொழிலை செய்து வந்த நிலையில், பிங்கி நேற்றிரவு வீட்டு குளியலறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு கிருஷ்ணபகதூர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடித்து […]
சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் கிழக்கு சிந்தாமணி அருகே உள்ள ப்ளூ வேல்ஸ் என்ற மசாஜ் மையத்திற்கு நேற்றிரவு இருவர் சென்று மசாஜ் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் நேரமாகிவிட்டதால் மையத்தை மூடப்போவதாக உரிமையாளர் கூறியதையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின், திரும்பி சென்ற அவர்கள் மேலும் 2 நபர்களுடன் மசாஜ் மையத்திற்குள் வந்து மையத்தின் உரிமையாளரை தாக்கினர். கைப்பிடி மற்றும் […]
நாமக்கல் மாவட்ட போலீசார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிடம் இருந்து 33 சவரன் தங்கத்தை மீட்டு, சேலம் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் சின்னார் பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிக்கிய நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது பள்ளிபாளையம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ரத்தின குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த துணிப் பையில் 17 சவரன் நகை […]
சென்னை தரமணி அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.பி. டூல்ஸ் ஜெக் போஸ்டில் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை சோதனையிட்டதில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த அபிஷேக் சிங்கா, குமார் ராஜா ஆகிய இருவரை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தினர். விசாரனையில் […]
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் மர்மக்கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இலப்பாக்கத்தை சேர்ந்த பூறாராம் என்பவர் இலப்பாக்கத்தில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர் ராமாபுரம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதில் தடுமாற்றம் அடைந்து பூறாராம் கீழே விழுந்துள்ளார். பின்பு பூறாராமை கத்தியால் லேசாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயின், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். இதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறப்பாக மற்றும் எண்ணிக்கையில் அதிகமாக செய்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த விதை பந்துக்களை ஏரிக்கரைகள், […]
சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளை தெருவில் சுற்றும் நாய்கள் கடித்து குதறுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் சென்னை ஊரப்பாக்கத்திற்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் ,அருள் நகர் மற்றும் ஐயன்சேரி உள்ளிட்ட இடங்களில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன . பள்ளி செல்லும் குழந்தைகளை வெறிநாய்கள் குறிவைத்து கடிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர் . தெருவில் சுற்றும் நாய்கள் மற்ற நாய்களை கடித்துவிடுவதால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையில் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்புச்சந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 98 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உணவில் பல்லி விழுந்து இந்நிகழ்வு நடந்து இருக்கலாம் என கூறினார்.
ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியின் காரணமாக , இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் அத்திவரதர் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படும் . பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என […]
நாளை ஆடி பெருக்கு திருவிழாவை முன்னிட்டு 2000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது . ஆடிபெருக்கு திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 11.30 மணிக்குமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடி திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மற்றும் கரூர் வரை செல்வதற்கான சார்த்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் டெல்டா மாவட்டமான கடையமடை வரை செல்வதற்கு வாய்ப்புயில்லை. ஏனென்றால் குடிநீர் தேவைக்காக கரையோர மக்கள் அணையில் இருந்து […]
பல்லாவரம் அருகே இருசக்கரம் மீது லாரி மோதியதில் ஒருவயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது . சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த ராஜா தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பம்மல் அருகே உள்ள சாலை சந்திப்பில் நின்ற போது தறிகெட்டு ஓட்டி வந்த தண்ணீர் லாரி அவர்களின் மீது மோதியது . இதில் ஒரு வயது குழந்தை சர்வேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . லாரியின் பின் […]
திருச்சியில் காவலர் ஒருவரை மிக தரக்குறைவாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை பறிமுதல் செய்துள்ளார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி மிக […]
கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான். வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார். அதேபோல் அன்றைக்கும் […]
புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் பழமை வாய்ந்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த ஜூலை 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். பின் சுவாமி தரிசனம் செய்த அவர் தேரை வடம்பிடித்து இழுத்து […]
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் பயிரிடப்பட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் ஆடிவெள்ளி ஆடிப்பெருக்கு பண்டிகை காரணமாக பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம் தற்பொழுது 600 ரூபாய் மல்லிகைப்பூ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல அரளிப்பூ 400 ரூபாய்க்கும் சம்மங்கி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், […]
சேலத்தில் இளம்பெண்களை வைத்து இளைஞர்களிடம் வழிப்பறி செய்த கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இளம்பெண்களை கொன்டு இளைஞர்களை கடத்தி வழிப்பறி செய்த இரு பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை வாழப்பாடி காவல் துறையினர் கைது செய்தனர். ஒரு கும்பல் சேலத்தில் இருந்து தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து பல்வேறு நூதன முறையில் பெண்கள் மூலம் கையாண்டு கொள்ளையடித்து வருவதாக புகார் எழுந்தது. மேலும் பலரிடமும் அந்த கும்பல் […]
புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கும் இங்கும் பார்த்த நிலையில் அந்த இளைஞர் வாகனத்தை […]
ஈரோட்டில் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச பட்டாவிற்கு அதிமுக நிர்வாகி ரூ 2000 பணம் கேட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு பயனாளிகளிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் 2000 பணம் கேட்டு மிரட்டும் செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே அரசருக்கு சேர்ந்த 10 ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை […]