வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண்ணின் கணவன் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர் . திருவாரூர் மருதப்படினத்தை சேர்ந்த அருண் என்பவரது மனைவி மைதிலி சென்ற வியாழக்கிழமை தீக்குளித்தார் . இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 80 % தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார் . ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வரும் மைதிலியிடம் மாவட்ட குற்றவியல் நடுவர் வாக்குமூலம் பெற்றார் .வாக்குமூலத்தில் தனது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு […]
Category: மாவட்ட செய்திகள்
பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் வழக்கம் போல் மதுரை- செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது .. மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பயணிகளின் இரயில் ( வண்டி எண் : 56734,56735 ) இரு மார்க்கங்களில் கடந்த 13 -ந் தேதியில் இருந்து தண்டவாள பராமரிப்பு பணிக்காக விருதுநகருடன் ரத்துசெய்யப்பட்டது .மேலும் இம்மாற்றம் 31- ந் தேதி வரை அமுலில் இருக்கும் […]
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் துறைப்பாடி டோல்கேட் அருகே இருக்கும் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்ச்சாக வரவேற்பு அளித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பிரச்சாரமானது இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்பது […]
சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது… சென்னையில் சமீபகாலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசியின் வாயிலாகவோ வரும் […]
2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (50). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளை 2018 ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முத்தையா என்பவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த புதுப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராயிருப்பு காவல்துறையினர் வீட்டினுள் இருந்த தங்கேஸ்வரன் என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களையும் பறிமுதல் […]
இனி தவறு செய்யமாட்டோம் என்று ரூட் தல என்ற பெயரில் இனி குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் முன்பு உறுதி மொழி எடுத்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அரசு பேருந்தில் கத்தியால் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை முழுவதும் ரூட்டு தல என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் […]
வேலூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் ரசீது கேட்ட இளைஞரை விற்பனையாளர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதற்காக விற்பனையாளரிடம் இளைஞர் ஒருவர் ரசீது கேட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதற்க்கு அந்த விற்பனையாளர் அந்த இளைஞருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இதனால் அந்த இளைஞரை எட்டி உதைத்து தாக்கும் சம்பவம் சமூக தளத்தில் வேகமாக பரவி வருகின்றன அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் அட்டூழியத் தாக்குதலில் மயங்கி விழுந்த இளைஞர் முகத்தில் தண்ணீர் […]
விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேலூர் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு போராட்டத்தில் ஈடுபட்டார். விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிலியில் உள்ள சந்தர் மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர் அய்யாக்கண்னு. ஆனால் இவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும் பலனும் இல்லை. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை நடத்தக் கூடாது என்று படுத்து புரண்டு அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மக்களவைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட […]
சேலம் மாவட்டம் வாழப்பாடி கொள்ளை காட்சியின் வீடியோவை போலீஸார் வெளியிட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தம்பம்பட்டியில் மர்மநபர் ஒருவர் மளிகை பொருள் குடோனில் தனது கைவரிசை காட்ட முற்பட்டார். இதனால் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதனால் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பின. நடந்த கொள்ளை முயற்சி குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை செய்து சிசிடிவி காட்சியை வெளியிட்டனர். இதன் மூலம் அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும் […]
A1 திரைப்படத்தை தடை செய்ய கோரி அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக A1 திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தணர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி நிர்வாகி துர்கா பேசுகையில்,A1 படத்தில் […]
கடலூரில் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார் கடலூர் மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்வருக்கு அமலா என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் அடிக்கடி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பொழுது விடிந்து வெகுநேரம் […]
மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் …..!!!! சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார். மறு நாள் காலையில் தனது வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா […]
வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் AC சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த […]
மதுரை ரயில் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண் பயணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர். மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பூர்ணிமா இறங்கவில்லை. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில் இயக்கப்படும் நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக இறங்க முற்பட்டபோது தவறி பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்து சிக்கி […]
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60 அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் அறுபது அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .பருவமழை பெய்யாத காரணத்தால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரிமலைப் பகுதிகளில் […]
ஒரத்தநாட்டில் முகநூல் காதலால் கால்நடை கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிர்இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது 20 வயது மகள் இந்துமதி இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரியில் 3ஆம் வருடம் கல்லுரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.எப்பொழுதும் மொபைலும் கையுமாக அலையும் இந்துமதி முகநூல் சார்டிங்கில் மூழ்கி கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை அடுத்த டி. புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது நட்பு […]
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம் 5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு […]
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கான எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் , அறநிலைய துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய துறை […]
சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]
சூரிய மின்சக்தி மூலம் மாதத்திற்கு ரூ10 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுவதாக மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் தெரிவித்துள்ளார். பசுமை நடவடிக்கையாக தேசிய விமான போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிலையங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சூரிய மின்சக்தி மூலம் 170 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலும் மின்சார உற்பத்தியை […]
கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார். கோவை மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் நிரப்பி விட்டு பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். மதுக்கரை அடுத்துள்ள ஈச்சனாரி எல்.அன்.டி பைபாஸ் அருகே லாரி சென்றபோது போது எதிரே சேலத்தில் இருந்து பாலக்காடு நோக்கி டைல்ஸ் லோடு […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான் கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் தேவி […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்தி துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்படுகிறது. […]
திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். […]
அத்திவரதர் மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில் 40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து செய்தியாளர்களிடையே […]
சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் தனது தோழியுடன் கைதாகி உள்ளார். சென்னை நெற்குன்றத்தை அடுத்த சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நாகராஜன் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு சண்டை ஏற்படவே, காயத்ரி […]
சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் டாக்டரிடம் 30 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த பெண் டாக்டர் (வயது 28). திருமணமான இவர் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கோரிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக்கொள்ளப்பட்டார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர். இதில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் தண்ணிர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். , மேலும் படகுசவாரி செய்தும்,குழதைகளுடன் […]
ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை […]
பக்தர்களின் தரிசன வசதிக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி […]
திருமங்கலத்தில் வாகன சோதனையின்போது 2 கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் கால்களில் ஆயுதங்களை கட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் தப்பி ஓட முயன்ற போது காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்களை மடக்கி பிடித்தார். தொடர்ந்து காவலர்கள் அவர்களிடமிருந்து சோதனை நடத்தியதில் பிச்சுவா கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் இருவரும் கமுதியில் உள்ள மணிகண்டன் என்ற மணியை […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன பரிசோதனையின் போது 2 கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரையும் வழிமறைத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். இதையடுத்து சோதனையை தீவீரப்படுத்திய போது கால்களில் கொடூர ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொலையாளிகள் தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் […]
நாகையில் பருத்திக் கொள்முதலின் போது திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டாலுக்கு 5,800 ரூபாய் வரை வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின் திடீரென்று வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பருத்தியை கொள்முதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு […]
சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். இந்த மாரத்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையில் உடல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால், உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் என நிகழ்ச்சி […]
மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் தாக்கப்பட்ட முகமது பைசான் சிகிச்சைக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். கடந்த 11-ம் தேதி இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு, அதனை புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பைசான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக தினேஷ்குமார், கணேஷ் […]
ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவி சாந்தியை கொலை செய்து விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில் இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் […]
சென்னையில் 60லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நந்தினி , அருள்ராஜ் தம்பதியினரின் 3 வயது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தம்பதியினர் பணிக்கு சென்று வருவதால் சிறுமியை பராமரிப்பதற்கு பணிப்பெண்ணாக அம்பிகாவை நியமித்துள்ளனர் . இந்நிலையில் பணிப்பெண் அம்பிகாவிடம் சிறுமியை விட்டுவிட்டு நந்தினி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் […]
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]
அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 18_ஆவது நாளான கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரண்டனர். லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டனர். அதிகரித்த பக்தர்களின் கூட்ட நெரிசலால் 3 […]
கோவையில் சந்தனகட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை […]
ஆரணியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் 8 அடி பாம்பு இருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி அருகே துலீப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை பள்ளி பேருந்து ஏற்றிக் கொண்டு வந்த நிலையில், ஓட்டுனர் இருக்கை அருகில் இருந்து பாம்பு ஒன்று வெளியில் வந்துள்ளது. அதனைக் கண்ட மாணவர்கள் பயத்தில் அலறினர். அதன்பின் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக […]
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதால் வேலூர் தேர்தலில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 11 முதல் 18 ஆம்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று […]
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில் நீர் வரத்து 2301 கன அடியாக உயர்ந்துள்ளது . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளிலும் […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் அதிமுக, திமுக, மற்றும் நாம் […]
தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]