சுகந்தலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு பனை மற்றும் தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் சுகந்தலை என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வறண்ட குளத்தின் காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் 2 மணியளவில் மர்மநபர் யாரோ தீ வைத்ததாக சொல்லப்படுகின்றது.காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் தீ மளமள வென பரவியது. சுற்றியுள்ள தென்னை , பனை மரங்களில் பரவிய தீ ஊரின் நடுவே இருக்கும் […]
Category: மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேனியை வறட்சி இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரங்களை நட வேண்டுமெனவும் ,திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பேரூராட்சி வாரியாக செயல்படுத்த வேண்டுமெனவும் திட்டமிட்ட அவர் , பேரூராட்சி செயல் அலுவலக அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வில் ஈடுபட்டார் . அதில் ,நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தேவைகள் குறித்து ஆய்வு செய்த அவர், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்றும் விழிப்புணர்வு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தொற்றும் நோய்கள் , தொற்றா நோய்கள் குறித்தும் மர்ம […]
தமிழக தென் மாவட்டங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில்வே துறை காவலர்கள் மோப்ப நாயின் உதவியுடன் மதுரை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையானது மதுரை ரயில் நிலைய காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் […]
என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வரும் கணவரை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வருபவர் நெய்வேலியை சேர்ந்த பழனிவேல். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் பழனிவேல் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் சடலம் கை கால் கட்டப்பட்ட நிலையில் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து நெய்வேலி டவுன்சிப் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அஞ்சலை 4 பேருடன் சேர்ந்து தனது கணவனை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
ராமநாதபுரத்தில் கள்ளுக்கடை ஒன்றில் காவலர் ஒருவர் போதையில் ரூ10,000 லட்சம் கேட்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம்குமார். இவர் அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கள்ளு கடையில் பனை மர கள்ளை வாங்கி குடித்து ருசி பார்த்து உள்ளார். பின்னர் மண்பானை குடத்தில் மீதம் இருந்த கள்ளை பாட்டிலில் நிரப்பியவாறு, சட்டவிரோதமாக கடை நடத்தியவரிடம் பத்தாயிரம் ரூபாய் தருமாறு லஞ்சம் கேட்டுள்ளார். […]
சென்னை நந்தனம் அருகே மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்கள் பேருந்தை […]
அடக்கும் செய்ய பணம் கொடுத்து விட்டு தூக்கில் தொங்கி அண்ணனும் , தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையதை சேர்ந்த துரைராஜ் இவருக்குகோபாலகிருஷ்ணன் என்ற மகனும் , செல்வி சாந்தி 2 மகள்களும் உள்ளனர். நேற்று இடுக்குவாய்பகுதியிலுள்ள சகோதரி சாந்தியின் வீட்டிற்கு சென்ற கோபால் கோபாலகிருஷ்ணன் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் ஏன் பணத்தை கொடுக்கிறாய் என்று சாந்தி கேட்டதற்கு அவசிய செலவு தேவைப்படும் என்று கூறிவிட்டு கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து […]
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில் இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]
சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வாடகைக்கு அரை ஒன்றை எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]
பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய 5 பேரின் நீதிமன்ற காவலை கோவை நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது. பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இக்கும்பலை கைது செய்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு,சபரிராஜன், வசந்த பாபு, […]
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தாம்பரம் அற்புதம் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் , இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற தாம்பரம் காவல்துறையினர் […]
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று இரவு சென்னை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் சில மர்ம கும்பல் பட்ட கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களை சரமாரிய தாக்கினர். இது குறித்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் அனைவரும் முகத்தில் துணி கட்டிருந்ததால் காவல்துறையினரால் அடையாளம் காண இயலவில்லை. இதையடுத்து சென்னையை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர பரிசோதித்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அய்யப்பா திரையரங்கம் […]
திருப்பூரில் குடிபோதையினால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகே நேற்று இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதையடுத்து ஒரு தரப்பினரை சேர்ந்த 6 பேரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் அருள் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 5 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. […]
கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , நான்கு […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர் ,படந்தால், கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக வைப்பாறு விளங்குகிறது. இந்நிலையில் வைப்பாற்றில் அதிக அளவிலான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் வைப்பாறு முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து […]
சேலத்தில் மழைநீர் சேகரிப்பு,மரம் வளர்ப்பு, போன்றவை குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உழவர் சந்தையில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டதோடு, பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் தவிர்க்குமாறும் […]
நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , போரட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலை பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு கிராம மக்களும் , இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகிய துறை சார்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நுண்துகள் மற்றும் பிரபஞ்ச யுக்திகளை கண்டறியும் ஆய்வாக இது அமைகின்றது. இந்த ஆய்விற்காக மலையை குடைந்து ஆய்வுமையத்தை தேனிமாவட்டத்தில் அமைக்கின்றனர். இது அங்குள்ள கிராமப்புரவாசிகள் மற்றும் இயற்கை […]
சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அறப்போர் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேளச்சேரி அருகே கல்லுக்குட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கு வந்த […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]
திருமுல்லைவாயலில் பொருட்களை புடவையில் மறைத்து வைத்து நூதன திருட்டு செய்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை சேலைக்கு உள்ளே பதுக்கி கொண்டு பொருட்களை திருடிய இரண்டு பெண்களை காவலர்கள் கைது செய்யதனர்.தர்மராஜ் என்பவருடைய கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு பெண்கள் பொருட்களை வாங்குவது போல பாவனை செய்து கடையின் தொழிலார்களின் கவனம் குறைந்த நேரத்தில் பொருட்களை புடவையின் உள்ளே வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றனர். அவர்களுடைய வித்தியாசமான […]
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சுற்றிலும் நோய்களை பரப்பும் வகையில் கொட்டபட்டுள்ள மருத்துவக் கழிவுகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பட்டுள்ளது .பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர் . ஆனால் இங்கு தினமும் வரும் மருத்துவக் கழிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் அங்குள்ள பிணவறை அருகிலும், மருத்துவமனை வளாகத்தினை சுற்றியுள்ள பல்வேறு இடத்திலும் கொட்டப்பட்டு […]
பணத் தேவைக்காக செயின் திருட முயன்ற கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறைனரிடம் ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ரமணா நகரில் தெய்வானை என்கிற பெண் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலி செயினை பறிக்க முயற்சி செய்தனர் .இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மடக்கி பிடித்து கைகளை கயிற்றால் கட்டி தர்ம அடி […]
மாட்டுக்கறி சூப் சாப்பிட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் பேரை போலீசார் கைது செய்துள்ளனர் வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான் என்பவர் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர். இவர் சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டது மட்டுமில்லாமல் பைசான் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட 4 பேர் ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் பலத்த பாதுகாப்புகளுடன் அத்திவரதரை தரிசனம் செய்த்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அத்திவரதரை காண அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை காண வருவதையொட்டி காஞ்சிபுரத்தில் 3 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்த குடியரசு தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகை […]
சீர்காழி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய கொடியம்பாளையம் கடற்கரை தீவை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பிச்சாவரம் அருகே தீவு போன்று காட்சியளிக்கும் கொடியம்பாளையம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் சீர்காழி தொகுதி MLA கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளையம் கடற்கரை தீவானது, […]
அத்திவரதரை தரிசிக்க தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை முன்னிட்டு கோவிலைச் சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியிலிருந்து […]
துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் இச்செயல்கள் மாநில அரசின் அதிகாரங்களில் […]
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட தண்ணீர் ரயில் 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில்,காலை 7 மணியளவில் மாலை அலங்காரங்களுடன் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னை […]
காஞ்சிபுரம் அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை முன்னிட்டு கோவிலைச் சுற்றி […]
ஜோலார்பேட்டையிலிருந்து 50 வேகனில் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில் மாலை அலங்காரங்களுடன் சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில் தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து அலங்காரங்களுடன் ரயில் […]
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார். வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் […]
வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது. வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட […]
சிங்கம்புணரி அருகே உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் பத்து வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.இதையறிந்த குமார் தப்பி ஓட, சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து […]
மர்மமாக உயிரிழந்த 5 மாடுகள் !!
அரக்கோணதில் விவசாயி வைத்திருந்த 5 பசுமாடுகள் நுறை தள்ளிய படி மர்மமாக இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம் கிராமத்தில் கோபி என்ற விவசாயி ஏழு பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனம் வைத்துள்ளார். தீவனத்தை உண்ட மாடுகளில் 5 மாடுகள் வாயில் நுரை தள்ளியது. இதனால் 5 மாடுகளும் கீழே விழுந்து இறந்தது, பின் இறத்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது . மேலும் பாதிக்கப்பட்ட […]
அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரின் வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின் எட்டாம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அதிகமானோர் […]
4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால் ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால், […]
குடிபோதையில் தகாரறு செய்த கணவனை ஊதுகுழலால் தாக்கி கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த முருகேசன் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் கல்பட்டிசத்திரத்தையடுத்த வத்தமணியகாரன்பட்டியில் வசித்து வருகிறார். கல் உடைக்கும் தொழிலை செய்துவரும் முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு .இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வர இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் போதை தலைக்கேறி தனது […]
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆணவ படுகொலை செய்யப்பட்ட சோலைராஜின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்த நிலையில் இன்று […]
தூத்துக்குடியில் காதல் தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் […]
அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இணையதள சேவையில் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொழுது போக்கு செயலி டிக் டாக் இதில் விளையாட்டாக வீடியோவை பதிவு செய்வது சில நேரங்களில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முதுகுளத்தூரில் […]
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் வெட்டிக் கொலை செய்யப்படட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்த மர்ம […]
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசின் அவசர திட்டங்களுக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த வெளிப்படைத்தன்மை,மறுவாழ்வு மற்றும் நியாயமான இழப்பீடு சட்டம் 105 ஆவது பிரிவின்படி புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசின் இச்சட்டத்தை தொடர்ந்து மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தும் வகையிலும் நெடுஞ்சாலைகள் சட்டம்,தொழில் பயன்பாட்டிற்கான சட்டம்,ஹரிஜன் நல சட்டம் போன்ற […]
உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்துவருபவர் உமா. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்டுவந்த பிரச்சனையின் காரணமாக கணவரை பிரிந்து, தனது 2வது மகன் அபிஷேக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பிய அபிஷேக் வீட்டின் படுக்கை அறையில் தன் தாயார் கழுத்து அறுப்பட்ட நிலையில் […]
வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில் வாழப்பாடியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே […]
தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கின்றார் என்று அதிமுகவில் இணையும் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். அமமுக_வில் இருந்து செந்தில்பாலாஜி , கலையரசன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் என பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக_வின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுக_வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் , அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டிடிவி […]
இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று விபத்துக்குள்ளானது. கோவை மாவட்டம் அடுத்துள்ள இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பெரும் சேதம் தவிரிக்கப்பட்டுள்ளது. தரையில் விழுந்த விமானத்தின் 1200 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதால் தரையில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. சம்பவ […]