சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் சென்னையில் பிரபல ரவுடி வல்லரசும் அவனது கூட்டாளிகளும் எம்.எம் கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் வல்லரசை பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர் பவுன்ராஜை வல்லரசு அரிவாளால் வெட்டினார். உடனே படுகாயமடைந்த காவலரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மாதவரம் […]
Category: மாவட்ட செய்திகள்
சென்னை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவன் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். கழுத்தில் காயம் பட்ட அப்பெண் கீழே விழுந்தார். இளம்பெண்ணை வெட்டிய பிறகு அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் […]
எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்ப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி நாகைப்பட்டினம் கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்ப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டனர். இதனால் மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை […]
தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தில் வெட்டிய சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை அடுத்த அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுபாஷினி மற்றும் மோகன் இவர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் இவர் தலைமைச் செயலக பணியாளர் மற்றும் சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் […]
மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]
நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய சீமானுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர் . சில நாட்களாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், இடதுசாரி இயக்கங்களும் அணுக்கழிவு மையம் அமைப்பதை தடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அழிவு மையமானது கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ள கிராம பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ள நிலையில்,நாம் […]
சென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் […]
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள கு. ராதாமணி உடல் நலக்குறைவின் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த கு. ராதாமணி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவரின் மரணத்தால் திமுக_வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் திமுக தலைமை கழகம் சார்பிலும் , திமுகவின் […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக NIA தரப்பில் சொல்லப்படுகின்றது. இதையடுத்து கோவை உக்கடம், […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IS அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சார்ந்தவர் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இலங்கை தாக்குதல் சம்பவத்தில் […]
வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் […]
கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீடிர் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் பகுதியில் அசாருதீன், குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் , போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்ற இந்த தீடிர் சோதனையால் கோவை மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிய கடந்த 2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான […]
ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளி கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த அருணும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றம் இருவரும் இணைந்து வாழ கால அவகாசம் கொடுத்ததால், மும்பையில் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை உதறி விட்டு, கணவருடன் சேர்ந்து வாழ ஆர்த்தி கோவை வந்துள்ளார். மேலும் கோவை வந்த ஆர்த்தியிடம் கணவர் அருண் வரதட்சணை […]
சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதே பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ பின்னால் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 […]
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஆனது 8 அடி உயர்ந்து 20.40 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதன்படி தற்போது அணையின் நீர்வரத்து 1153 கன அடியாக உள்ளது. மேலும் அதே நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென்காசி பகுதியில் சாரல் விழுந்து […]
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று உயிரியல் பூங்கா நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உயிரினங்களை காண வருகின்றனர். இதன் படி கோடை காலங்களில் அதிகப்படியான பார்வையாளர்களை கவரும் விதமாக ஒரு சில புதிய உயிரினங்களையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிமுகம் செய்தது. இதனை அடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சலுகை திட்டம் ஒன்றை வண்டலூர் உயிரியல் பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. […]
அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார். தொடர்ந்து […]
காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . தற்பொழுது ஹெல்மெட் கட்டாயமாக போடும் சட்டமானது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பது மக்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சென்னையில் காவல் துறையில் பிறர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹெல்மெட் […]
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]
சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால் இரு அணிகளாக செயல்பட்டு வந்த இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும் பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில […]
விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]
திருச்சியில், லைஃப் கேர் சென்டர் என்ற குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் , காவலர் உயிரிழந்த மர்ம சம்பவத்தால் அம்மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கே.கே.நகரில் உள்ள லைஃப் கேர் சென்டர் மையத்தில், கடலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் காவலராக பணிபுரிந்துவந்தார் . இந்நிலையில் மர்மமான முறையில் அவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனால் ,அரசு மருத்துவர்கள் குழு ஆய்வு […]
தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ சேர்க்ககைக்கு நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு சட்டமா இயற்றியது. இதற்க்கு தமிழகம் முழுவதும் மாணவரிடையே எதிர்ப்பு எழுந்து போராட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. நீட் நடைபெற்ற மூன்று ஆண்டுகளுமே மதிப்பெண் குறைவு என்பதால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது. தேர்வு முடிவு […]
அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது புதிய யுத்திகளை அவ்வபோது அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இன்று முதல் பயன்படுத்தப்பட உள்ளது. ஆதார் […]
தன்னுடைய அப்பா கடையில் கறி வெட்டி கொடுத்துக் கொண்டு MSC படித்து வரும் மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இன்றைய காலத்தில் அதிகளவிலான மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி செலவை தாங்களாகவே பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து பார்த்து கொள்கின்றனர். இதில் மாணவிகளும் தங்களால் முடிந்த வேலைக்கு சென்று படிப்பு செலவுகளில் பெற்றோர்களின் சிரமத்தை போக்குகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி கலக்கி வருகின்றார் ஒரு மாணவி. திருப்பூர் மாவட்டத்தின் L.R.G அரசு பெண்கள் கல்லூரியில் […]
புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர் பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாமல் […]
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் சீமான் பரபரப்பாக பேசியுள்ளார். திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார் அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று முடிந்தது தேர்தல் மட்டும்தான், நாம் தமிழர் கட்சிக்கான தேடுதல் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார் . நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் தேர்தளுக்கானவர்கள் அல்ல தேர்தலில் தோற்றாலும் […]
இரவில் அதிகமாக செல்போன் பேசிய தாயை மகன் சரமாரியாக தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு பரத் என்ற 20 வயது மகன் ஒருவர் உள்ளார். வெண்ணிலா இரவு நேரங்களில் அதிகமாக மர்ம நபர் ஒருவரிடம் செல்போன் பேசி வந்துள்ளார். இதனை சற்றும் விரும்பாத மகன் பரத் தாய் வெண்ணிலாவை கண்டித்துள்ளார். ஆனால் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் அதிகமாக செல்போன் […]
எட்டு வழி சாலைக்கு எதிராக நாழிக்கல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சென்னை to சேலம் எட்டு வழி சாலை மக்களுக்கு எதிரான திட்டம் என்றும் அதை செயல்படுத்துவதால் பல்வேறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்தனர். இந்நிலையில் தமிழக அரசானது மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை […]
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார். இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது […]
தஞ்சாவூரை சுற்றியுள்ள 13 கிராமத்து மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர் . மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆனது தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டமானது உறுதியாக செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான உபகரணங்களான குழாய்கள், இயந்திரங்கள் போன்றவை கிராமங்களுக்கு தினந்தோறும் […]
ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக கட்டாயமான முறையில் ஹெல்மெட் அணிந்து இருப்போருக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டத்தை ஜூன் 1 முதல் அமுல்படுத்த திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சொன்னபடியே ஹெல்மட் அணிந்திருப்பவருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்ற திட்டத்தை இன்று முதல் தொடங்கி வைத்துள்ளனர். திருச்செந்தூரில் […]
புகையிலை போடுவது குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார் . புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் போன்றவை வெளியிடப்பட்டன புகைப்பழக்கம் குழந்தை இன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறினார். இதை தடுக்க சுகாதாரம் மற்றும் கல்வி துறை […]
திருப்பூரில் 15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் ஒரு மீன்பிடித் தொழிலை செய்து வருபவர் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதை மீன் வியாபாரிகளிடம் சென்று விற்று வருகிறார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பும் பொழுது வீதியில் இருக்கக்கூடிய தெருநாய்கள் இவரைப் பார்த்து குறைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
சூறாவளிக்காற்றில் 70,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . திருவண்ணாமலையை அடுத்த சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, இரட்டை கார் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அடித்த சூறாவளி காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து வீணாகி உள்ளன. இவை அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.சூறாவளிக்காற்றில் சாய்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு தகுந்த இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் […]
ராகுல் காந்தி பதவி விலக கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதியின்றி பேரணி நடத்தியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மக்களவை தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின . இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக […]
ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் . மதுரை to தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் . இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் […]
நாமக்கல்லில் இறப்பு சான்றிதழ் வழங்க ருபாய் 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்னும் பகுதியில் சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் காந்திமதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 1995ம் வருடம் இறந்த தங்கம்மாள் என்பவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு ரூபாய் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு […]
திருநல்வேலி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலியை அடுத்த குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அடிக்கடி தனது மொபைல் போனில் டிக் டாக் வீடியோவை காட்டி ஆசை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் வீடியோ காட்டுவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சிறுவன் சத்தம் போட்ட காரணத்தினால் தலையில் […]
ஸ்ரீவைகுண்டம் பகுதி அருகே பனைமரத்தில் இருந்து வாலிபர் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்த மாரமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் முன்னீர்பள்ளம் அடுத்த கொத்தன் குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வெயிலின் தாகத்தைத் தணிப்பதற்காக நுங்கை வெட்ட பனை மரத்தில் ஏறியுள்ளார். திடீரென்று எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பனைமரத்தின் உச்சியில் இருந்து செல்வம் கீழே விழுந்துள்ளார். […]
மொய் பணத்தை செலவு செய்ததால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம் கொத்தப்பட்டி கிராமத்தின் மயானப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யனார் உடலில் காயங்களுடன் சடலமாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி மீட்கப்பட்டார் . இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதில் , திருமணத்தில் வந்த மொய் பணத்தை வீணாக செலவு செய்ததால் […]
கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள 50 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே சூறைக் காற்றில் சிக்கிய மரங்கள் சரிந்து விழுந்து உள்ளன. வீடுகளின் மீதும் மின்கம்பங்களில் மிகவும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார தடை என்பது சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ளது . மின்சார தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து விரைவில் […]
எளிதாக ஆங்கிலம் பேச சென்னையில் பிரபல ஆசிரமத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது . சென்னையில் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ஆங்கிலம் பேச வைப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஜூன் 13க்குள் தங்களது பெயரை உன் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 16 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த பயிற்சி […]
காஞ்சிபுர மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . திண்டிவனம் அருகே உள்ள ஓம்பு ஊரில் வசித்து வருபவர் செல்வமணி .இவர் மாந்திரீகம் செய்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வடமலை பாக்கம் என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார் . அங்கே இவரிடம் மாந்திரீகம் செய்ய வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இளம் பெண் காவல்துறையில் புகார் அளிக்க போலி […]
கோபிச்செட்டிப்பாளையத்தில் மந்தைக்குள் சிறுத்தை புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் மந்தைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகளை தாக்கியது. இந்த தாக்குதலில் சுமார் 11 வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அதன்பின் ஆடுகளின் உரிமையாளரான ரவி மந்தையில் உள்ள ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றதாக வனத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் இறந்த ஆடுகளுக்கு உரிய […]
சென்னை கோட்டூர்புரத்தில் பண பைகளை வீசி சென்றது மர்ம நபர் யார் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கோட்டூர்புரம் அருகேயுள்ள வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் சதேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சுற்றி வருவதாக சொல்லப்பட்டதைஎடுத்து போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்றிரவு சுமார் 2.30 மணியளவில் சந்தேகப்படும் அந்த நபர் போலீஸ் கண்களில் சிக்கியதால் அவரின் வாகனத்தை நிறுத்த போலீசார் முயன்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட அந்த நபர் போலீஸ் நிறுத்தியும் […]
நாகைபட்டினத்தில் கடல் சீற்றத்தால் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் வருத்தத்தில் உள்ளனர் . நாகப்பட்டினம் வேதாரண்யம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது .இதனை அடுத்து கடல் சீற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை . இதனால் கடற்கரை பகுதிகள் முழுவதும் 850-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு […]