சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ,மங்காம்பட்டி, கூட்டுறவுப்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் மிளகாய் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் .
Category: மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் , உதயகிரி கோட்டையில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும் உதயகிரி கோட்டையை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி பயணிகள் பலர் வந்துள்ளனர். இங்கு மான்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் உள்ளது .
ஆத்திகுளம் அருகில் கண்மாயில் குளிக்க சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆத்திக்குளத்தை சேர்ந்த அஜய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை காரணமாக தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை […]
திண்டிவன சாலையில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது மகன் கேரள மாநிலதில் வேலை பார்த்து வருகிறார். மாலதி அவரது மகனை பார்க்க செல்வதற்காக பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்த மாலதி திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது மோதியது. […]
சேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன் காரில், ஜலகண்டாபுரத்தில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் ஐவரும், காரில் இருந்து இறங்கி ஓடினர் . அதிஷ்டவசமாக இவ்விபத்திலிருந்து 5 பேரும் உயிர் தப்பினர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து போனது.
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள்,வேறுவழியின்றி கடற்கரையில் நின்றபடியே திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். மீண்டும் கடல் சீற்றம் குறைந்த உடன் படகு சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஒகேனக்கல் அருகில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்துள்ள ஜருகு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி.இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.ஈரோட்டில் இருந்து உறவுக்கார பெண் ஒருவர் பள்ளி விடுமுறையைகாக இவரது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று ஒகேனக்கலை சுற்றிப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர். ஒகேனக்கல் அடுத்த பண்ணப்பட்டி சாலையில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம […]
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் மக்களுக்கு சிரமமேற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையத்தில் இருந்து, புறவழிச்சாலைக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது . அணைப்பாளையம் வழியாக புறவழிச்சாலைக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. சாலையில் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோட்டில் கந்துவட்டி கொடுமையால், ஜவுளி தொழிலாளி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் , பழைய பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஈரோட்டில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் நாற்பதாயிரம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மொத்தம் வட்டித்தொகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் .இவர் 30 ஆயிரம் ரூபாயை முதலில் செலுத்திவிட்டார் .பின்னர் மீதமுள்ள பணத்தையும் உடனடியாக செலுத்துமாறு நிதி நிறுவனம் மிரட்டியதால் மனமுடைந்த ஸ்ரீதர் […]
விருதுநகர் மாவட்டம் ,சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண்பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிர்தா பவுன்டேசனின் நிறுவனர் உமையலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் . விருதுநகர், ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் பசுபதி அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார் .சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மக்களுக்கு கண்பரிசோதனை செய்து ஆலோசனைகளும் வழங்கினரர்கள் […]
கீரமங்கலம் பகுதியில் தன உயிரை கொடுத்து 10 தொழிலாளர்களை வேண் டிரைவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் குளமங்கலம் போன்ற கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வயல்வெளிகளுக்கு சென்று பணிபுரிந்து வருவது வழக்கம் இந்நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அப்பகுதிகளில் வரக்கூடிய சரக்கு வேனில் ஏறி சென்று பணியை முடித்துவிட்டு திரும்பி வருவர் இந்நிலையில் நேற்றைய […]
. திண்டுக்கல்லில், தக்காளி இறக்குமதி குறைந்ததால் ஒரு கிலோ ரூ.36க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் , நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு பகுதிகளில் 1,800 ஹெக்டேர் நிலப்பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து மதுரை, சேலம், கேரளா, ஆந்திராவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக ,வெயிலின் காரணமாக தக்காளி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் சாகுபடி குறைந்து வருகிறது.மேலும் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.28 க்கும் ,நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்றது. மேலும் நேற்று கிலோவுக்கு ரூ.6 […]
கொட்டாம்பட்டி அருகில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 60 வயதான இவர் விவசாயியாக உள்ளார் . சம்பவத்தன்று துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் துரைப்பாண்டி வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் […]
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு […]
கடுமையான வெயில் மற்றும் பலத்த காற்றின் விளைவால் நீண்ட நேரம் மின்சாரமின்றி தேனி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடைகால ஆரம்பநிலையிலேயே தேனியில் பலத்த காற்றும் கடுமையான வெயிலும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. காலையிலிருந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையில் இருந்த மணலும் காற்றோடு கலந்து , இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் கண்களில் விழுந்ததால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினார்கள். பலத்த காற்று வீசியதால் தேனியில் உள்ள கடைகளில் இருந்த பெயர் பலகைகள் அனைத்தும் தூக்கிவீசப்பட்டது .இதனால் காலையில் இருந்தே அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. […]
திருநெல்வேலி,பாளையங்கோட்டை அருகே சமையல் செய்தபோது உடையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பெருமாள்புரம், என்.எச்.காலனியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி 80 வயதான முத்தம்மாள்.இவர் சற்று மனநிலை பாதிக்கபட்டவர்.அவர் வீட்டில் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென உடையில் தீப்பிடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர். குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் . இதுவரை, வட்டக்கோட்டைக்குள் நுழைய கட்டணம் ஏதும் வசூலிக்கப் படவில்லை. ஆனால் தற்போது , மே மாதத்தில் இருந்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். ஆனால் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு உள்ளூர் மக்கள் […]
கீழ்வேளூர் அருகில் கஜா புயலால் பழுதான சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் அடுத்துள்ள நாகை-தேவூர் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பாக சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைந்ததன் மூலம் அந்த ஊராட்சி பகுதி மக்கள், லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சோலார் மின்கோபுரம் பழுதடைந்தில் சோலார் மின்விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது. […]
”எடப்பாடி ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே” என வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர் பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல் சென்னை வரை புதிய ரயில் […]
திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள விஸ்வநாதர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட பகுதிகள் மற்றும் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 வயது முதல் 50 வயது வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெற்றது 12 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி […]
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 100 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எம். செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் நேற்று மாலை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில், ஒரு ஆடு மட்டும் , அங்கிருந்த 100 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்தது.இதையடுத்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், இரவு நேரம் என்றும் பாராமல் , கடும் முயற்சி செய்து ஆட்டை உயிருடன் மீட்டனர். […]
திருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் இவர் விவசாயம் செய்து வருகிறார் நேற்றைய தினம் காலை ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து […]
செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும் கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் […]
ஓசூரில் திருமணமாகி ஓர் ஆண்டிற்குள் வடமாநில பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிஷோர் மற்றும் சௌந்தர்யா இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் முடிவடைந்து உள்ளது இவர்கள் இருவரும் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழி பண்ணை நிறுவனத்தில் தங்கி வேலை புரிந்து வருகின்றனர் இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது இந்நிலையில் […]
வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் கிராமமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சை மலை பகுதியில் 13 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றித்திரிகின்றன .மேலும் யானைகள் ஆந்திர மாநிலத்தின் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் வேப்பனப்பள்ளி பகுதிகளிலும் அதிகமாக வலம் வருகின்றன மேலும் அவ்வபோது வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த […]
கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் மாணவிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆண்டாள் சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளை கேலி செய்து வந்துள்ளனர் இதனை கண்ட ஆண்டாள் இருவரையும் கண்டிக்கும் விதமாக திட்டியுள்ளார் இதனால் கோபம் அடைந்த இருவரும் […]
கடலூர் மாவட்டம் ,வண்டிப்பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுது அப்பகுதியில் சாராயம் கள்ளதனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் டிராக்டர் குழாயில் சுமார் 1500 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராயத்தை விற்று வந்தவர் அப்பகுதியை சேர்ந்த சுந்தரி […]
சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது இதனையடுத்து தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் குறிப்பாக சென்னை மதுரை விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் மேலும் இலங்கையில் இருந்து வரக்கூடிய […]
விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு எதிராக ஒருங்கிணைத்துள்ளது என்று ஸ்டாலின் மற்றும் ttv தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புதிய ஆட்டோ சேவையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டோவை சிறிது தூரம் ஓடிச்சென்று தொடங்கிவைத்தார் இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது ஆனால் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர் ஒருவர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் கீழ் சாவடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதுக்கோட்டை மண்டல கந்தர்வக்கோட்டை பகுதியில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார் நேற்று முன்தினம் மதுரைக்குச் செல்லும் பேருந்தில் பணிக்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தம் வளாகத்தினுள் குளிப்பதற்காகச் செல்லும் பொழுது வழியிலிருந்த செடியிலிருந்து ஒரு பாம்பு வந்து அவரை கடித்துவிட்டது அதன்பின் அவரை […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதிக்கு அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது பக்கத்து தெருவில் வசித்து வந்த பாலன் என்பவர் மகனின் திருமணத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கியிருந்தார் இந்நிலையில் பாலன் பாதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணத்தை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சந்திரனுக்கும் பாலனுக்கும் இடையே […]
திருவாரூர் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் திருவாரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார் அதன்படி 44 கிராம ஊராட்சிகளில் கொசு உற்பத்தியை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதுகுறித்து அவர் கூறியதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுவீடாகச் சென்று சுத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]
தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 7 கிராமங்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மரங்கள் தென்னைகள் சேதமடைந்துள்ளது. தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பஞ்சாயத்து ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம்பட்டி, தேமங்கலம், குட்டூர், புதூர் சவுளுக்கொட்டாய், கோடியூர் ஆவாரங்காட்டூர் ஆகிய 7 கிராமங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்டுள்ளன. சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் மின் கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் […]
திருவாரூர் மாவட்டத்தில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அவருடைய உறவினர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சை பின்தொடர்ந்தார் ஹரிஹரன் . திருவாரூர் அருகே காட்டாறு பாலம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஹரிஹரனை காவல்துறையினர் வழிமறித்தனர் […]
வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. 57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும் அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]
கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில், கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு, பாண்டவையாறு ,தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலம், அகரகடம்பனூர், கீழ்வேளூர்,ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள […]
வேலூர் மாவட்டத்தை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி ஊழியர்கள் எடுக்கும் முயற்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது . வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக குப்பைகளை சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் 36 பேட்டரி வாகனங்கள் குப்பைகளை சேகரிக்க செயல்படுத்தப்பட உள்ளன மேலும் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் […]
ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். வருகை தந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி செய்தும், மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள பணம் மற்றும் மது பாட்டில்களை சூறையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு இருந்த 31 ,000 ரூபாய் பணத்தையும்,மதுபாட்டில்களையும் சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மனைவியை உயிருடன் கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சையது இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் முகமது சையது தனது இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் ஒருநாள் சண்டை தீவிரமடைய ஆத்திரமடைந்த முகமது தனது மனைவியை […]
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டையை […]
கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் திருடர்கள் திருடிய சம்பவம் ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியின் அருகே உள்ள லெப்பைக்குடிகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் மதினா என்பவர் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மதினா பானுவின் தந்தை வீடும் அருகாமையில் இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம் இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் தங்கி வந்தார் இதனை […]
உத்திரமேரூர் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா […]
மதுரையில் பெண்ணிடம் சில்மிஷம்செய்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவரின் மனைவி பாண்டியம்மாள். இவருக்கு 50 வயதாகிறது. இவர் விருதுநகரில் இருந்து நேற்று குராயூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிலையில் ,கரிசல் குளத்தைச் சேர்ந்த 32 வயதான சமையன், பாண்டியம்மாளிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதை தட்டிக்கேட்ட பாண்டியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் விசாரணை நடத்தி சமையனை அதிரடியாக […]
பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூரிலும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலை தேடி வரும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதாக அதிமுக பிரமுகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் என்பவர் கடந்த […]
உதகைமண்டல கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும் கோடைகால விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். 123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட […]
அரியலூர் மாவட்டத்தில் நிலத் தகராறால் சொந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை அடுத்த கோவிலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு இவரது இரு மகன்களான ராஜேந்திரன் ரவி ஆகியோர் திருமணம் முடிந்த நிலையில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர் அவர்கள் வீட்டிற்கு நடுவே வேலி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும் நீண்டகாலமாக ரவிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை இருந்து வருகிறது ரவி தனது வீட்டைச் சுற்றி […]
கன்னியாகுமரியில் , பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர் 16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான். அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் […]
அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் நூதன முறையில் தூங்கும் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசானது விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என 3 தவணையாக விவசாயிகளுக்கு 6000 செலுத்தப்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமம் அருகில் உள்ள பல விவசாயிகளுக்கு இந்தப் பணம் முறையாக வழங்கப்படவில்லை என்றும் ,ஒரு சிலர் மட்டுமே இந்தத் திட்டத்தின் […]
திருச்சியில் மனைவியிடம் இருந்து சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு நிரந்தர வேலை […]