Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சமையல் செய்து தருமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை குடி கிராமத்தில் டிரைவரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யா, கவியரசி, தீபிகா என்ற மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசி கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயக்கொடி பருத்திவயலுக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து சமைத்து தருமாறு கவியரசியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தாய் மற்றும் மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர்…. மின்சார ரயில் மோதி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீராசாமி இந்து கல்லூரி- ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் மோதி வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வீராசாமியின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகத்தை தலையணை உறை, பாலித்தீன் பையால் மூடி…. மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலதி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. செல்போனை ஆய்வு செய்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதால் பெற்றோர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அடிக்கடி சிறுமியுடன் செல்போனில் யார் பேசியுள்ளனர் என ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.. இதனையடுத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வருமானவரித்துறை அதிகாரி போல நடித்த நபர்…. சுதாரித்து கொண்ட சார் பதிவாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணன் பணியில் இருந்த போது அதிகாரி போல உடை அணிந்து வந்த ஒருவர் நான் வருமானவரித்துறை அதிகாரி என கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக ஒரு அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணன் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை ரெடியா இருக்கு”…. முதியவரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கந்தபொடிகார தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் புலியூர் புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கணேசனிடம் ஆனந்த் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தர முடியும் என கணேசனிடம் தெரிவித்தனர். இதனை நம்பி கணேசன் ஆனந்த் மற்றும் சரவணன் ஆகியோரிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்- டிராக்டர் மோதல்…. தபால் துறை பெண் ஊழியர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மதுமிதா கல்லடை தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல மதுமிதா இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதுப்பட்டியில் இருந்து குரும்பபட்டி சாலையில் சென்றபோது பின்னால் செல்வம் என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த மதுமிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தைக்கு திடீர் “மூச்சு திணறல்”… நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோதுக்கானபள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய மனோஜ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மனோஜ் குமார் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மனோஜ் குமாரை மீட்டு ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மனோஜ் குமாரை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. “இப்படி” செய்தால் கடும் நடவடிக்கை…. துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு….!!!

நாமக்கல் துணை போலி சூப்பிரண்டு சுரேஷ் சமீபத்தில் வெளியிட்ட செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் உட்கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்துள்ளனர். இதனையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் நகரின் முக்கிய இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பைக்ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் […]

Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல தான் என் வீடு இருக்கு… எப்போ வேணும்னாலும் என் வீட்டுக்கு வாங்க… தொண்டர்களுக்கு இபிஎஸ் அழைப்பு!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு பிறக்க இருக்கின்றது. இந்த ஆண்டு துவக்கமே மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. மேடையில் இருக்கின்றவர்களும் சரி, கழகத்திலே இணைகின்றவர்களும் சரி,  பார்த்த முகம். பார்த்த முகம் எல்லாம் இன்றைக்கு எங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பொழுது,  இனி எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எவராலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாவ் சூப்பர்…. !! அழகாய் ஜொலிக்கும் பழனி மலை…. நீங்களும் பாருங்க….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையையும், பழனி ஆண்டவரையும் தரிசனம் செய்வதற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். பழனி மலையின் அழகை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம் அடைகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் பழனி மலை கோவிலும், மலையடிவார கிரி வீதியும்,  மலையை ஒட்டிய பழனி நகரின் வீதிகளும் மின்னொளியில்  ஜொலிக்கிறது. இதனை பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன்”… ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தவர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு தெருவை சேர்ந்த தங்கமணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதி ராம் நகரைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஹாஜா மொய்தீன் தன்னிடம் பணத்தை கொடுத்தால் அதனை ஷேர் மார்க்கெட்டில் போட்டு அதன் மூலமாக பணத்தை இரட்டிப்பாகி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமணி காஜா மொய்தினிடம் ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்தை  கொடுத்துள்ளார். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி மன்ற கூட்டம்… ஜனவரி 15ஆம் தேதி வரை… சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம்  நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர்  மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 மாதத்தில் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கிய தம்பதி….. காரணம் என்ன….? தூத்துக்குடியில் பகீர்…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே தருவை குளத்தில் ஏ.எம் பட்டி பகுதி அமைந்துள்ளது.‌ இந்த பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் தங்க முனியசாமி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துவாரந்தை பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், அடிக்கடி கணவன்-மனைவி 2 பேரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ள நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாட தடை…. வெளியான புதிய அதிரடி உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை ஒரு முக்கிய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை தவறாக பேசிய நபர்…. பெயிண்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திகுளம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அக்பரும் தையல்காரரான சந்திரசேகர் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 25-ஆம் தேதி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரசேகர் அக்பரின் மனைவி சைனம்பூவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனை அக்பர் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சந்திரசேகர் அக்பரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அக்பர் மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய வாகனம்…. பாதயாத்திரையாக சென்ற 2 பக்தர்கள் பலி…. கோர விபத்து….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். இந்நிலையில் புல்வாய்ப்பட்டி விலக்கு பகுதியில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி, சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயராஜ் என்பவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமி தற்கொலை வழக்கில் தண்டனை…. நீதிமன்ற வளாகத்தில் அரளி விதைகளை தின்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல தேவதானம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தபோது வரதட்சணையாக செல்வம் வீட்டில் இருந்து அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதங்களில்…. புதுமண தம்பதி தற்கொலை…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்துவுக்கு முத்தம்மாள் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மாரிமுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததோடு, கோவில்களுக்கும் சென்றார். நேற்று முன்தினம் தம்பதியினரின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தேடி சென்ற தந்தை…. தோட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தையூர் பகுதியில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவப்பிரகாஷ் சென்றுள்ளார். அங்கு மின் மோட்டாரின் சிகிச்சை அழுத்துவதற்காக கிணற்றின் பக்கவாட்டு பகுதிக்கு சென்ற போது கால் தவறி சிவப்பிரகாஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த சுகப்பிரகாசின் தந்தை சின்னதுரை தோட்டத்திற்கு சென்று பார்த்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்”… போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்த ஊராட்சி மன்ற தலைவர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன்  என்பவர் இருந்து வருகிறார். 9 வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் தொடர்ந்து 32 வருடங்களாக தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன்  வெற்றி பெற்று பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் கூறியதாவது, “எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. அதனால் போலீஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாராய வியாபாரிகள் மோதல்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே கோட்டை கிராமத்தில்  பிஞ்சி என்கிற சரண்ராஜ் (33) என்ற சாராய வியாபாரி வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை சஞ்சீவி (25) அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கு தண்ணிர் பிடிக்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரியான ராமகிருஷ்ணன் என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனை அறிந்த சரண்ராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிரெடிட் கார்டு பயன்படுத்திய காவலாளி…. நூதன முறையில் ரூ.1 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் பகுதியில் பிரான்சிஸ் சேவியர்(49) என்பவர் வசித்து வருகிறார் இவர் மின்வாரிய அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரான்சிஸ் சேவியர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தி வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மர்ம நபர் பிரான்சிஸ் சேவியரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் மும்பை கிரெடிட் கார்டு பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிரெடிட் கார்டில் சர்வீஸ் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவர் கொலை வழக்கு…. பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லாவி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் போலீஸ் ஏட்டு. இந்நிலையில் செந்தில்குமாரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் அவரது மனைவி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மகன் ஜெகதீஷ் குமார், கமல்ராஜ், பெண் சாமியார் சரோஜா, கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், ராஜபாண்டியன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாவகல்லை சேர்ந்த சின்ன கிருஷ்ணன் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் பல்வேறு சாதனைகள்…. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண உதவி தொகை வழங்கியது, மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தது, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டது, 75- ஆவது சுதந்திர தினத்தன்று தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றியது உள்ளிட்ட பல நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் வெளியே சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள மாவனல்லா பகுதியில் காலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்ற போது திடீரென வந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாதனை பொதுமக்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய காரில் இருந்து 5 லட்ச ரூபாய் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து முகூர்த்த புடவை வாங்குவதற்காக 5 பெண்கள் உட்பட 6 பேர் காரில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் பங்களாமேடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதால் கீர்த்தனா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் காரில் இருந்து 5 லட்ச ரூபாய் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பத்திரமாக மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

7 ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் கடை மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்துகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து திருவாரூர் நேதாஜி சாலையில் இருக்கும் வணிக வளாகத்திற்கு சொத்துவரி கட்டவில்லை. இதனால் நகராட்சி அதிகாரிகள் பலமுறை கடிதம் அனுப்பியும், இரண்டு முறை நேரில் சென்றும் வரி கட்டுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் தற்போது வரை சொத்து வரி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் 7 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

25 நிமிடங்கள் தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிக்கு கோவையிலிருந்து தினமும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நீடாமங்கலம் வழியாக செல்கிறது. இந்நிலையில் வழக்கமாக காலை 6.25 மணிக்கு ரயில் நீடாமங்கலத்திற்கு வந்து விடும். ஆனால் நேற்று காலை 25 நிமிடங்கள் தாமதமாக 6.50 மணிக்கு ரயில் நீடாமங்கலத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

5 அடி உலோக அம்மன் சிலை மீட்பு…. கோவிலில் இருந்து திருடப்பட்டதா…? பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் இருக்கும் வீட்டில் பழமையான உலோக சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சரவணன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 1 1/2 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய சிவகாமி அம்மன் உலோக சிலையை கைப்பற்றினர். இந்நிலையில் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த சிலை தொன்மையான தோற்றத்துடன் இருப்பதால் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழமாங்காவனம் ரயில்வே கேட் தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

2 லட்ச ரூபாய் மோசடி…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.குச்சிபாளையம் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். அதே பணிமனையில் சிவதாஸ் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சிவதாஸ் குடும்ப செலவுக்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலையாவிடம் 2 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். இதுவரை அந்த ரூபாயை பாலையாவுக்கு திருப்பி கொடுக்காமல் சிவதாஸ் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பாலையா வளவனூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த போது பனிக்குல்லா அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் தேவகியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது கண்விழித்த தேவகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனாலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட பெண்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனூர் கிராமத்தில் ராசாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட முனியப்பன் சில மாதங்களிலேயே இறந்து விட்டார். இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் உயிரிழந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 11 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது. அதன் பிறகு ராசாத்தி 11 லட்சம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குன்றி-கடம்பூர் சாலையில் யானைகளின் நடமாட்டம்…. ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்…. எச்சரிக்கும் வனத்துறையினர்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புதூர்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் உறவினருடன் குன்றியிலிருந்து கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது திடீரென வந்த காட்டு யானை பழனிச்சாமியை தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. அவருடன் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அஞ்சனைப் பிரிவு அருகே யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. அந்த வழியாக செல்பவர்கள் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் நின்ற காட்டு யானை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மேற்கு மலை மணியாச்சி பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் சாலையின் இரு புறமும் அணிவகுத்து நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 1 1/2 மணி நேரம் கழித்து காட்டு யானை தானாகவே காட்டுக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்…. காதல் தம்பதி தற்கொலை…. தூத்துக்குடியில் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் அனந்தமாடன் கச்சேரி காலனி தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தங்க முடியை சாமி அப்பகுதியில் இருக்கும் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்க முனியசாமி சீதாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் அவர்களது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முதல் மனைவி தொடர்ந்த வழக்கு…. ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதி அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலை பார்த்த போது முருகன் அவரது மனைவி செண்பகத்திடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். பின்னர் முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து செண்பகம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க மீண்டும் எதிர்ப்பு… போலீசார் குவிப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பாதை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 -ஆம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி நிர்வாகிகள் இடிக்க சென்ற போது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வீடுகளை தாமாக இடிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நகர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்…. போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்டறை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை பத்மகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றூர் மங்களா அருகே சென்ற போது எதிரே இன்னொரு அரசு பேருந்து வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே புகுந்து செல்ல முயன்ற போது நிலைதடுமாறி அவர் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தது. அப்போது பத்மகுமார் மோட்டார் சைக்கிள் வந்தவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டி…. கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்…!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டி வருகிற ஜனவரி மாதம் 9, 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவிலிருந்து மட்டும்150-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரதீப் 800 மீட்டர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரை கல்லூரி முதல்வர் கௌசல்யா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து வாலிபர் வெட்டி கொலை…. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி கரிசல்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பூமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் நுழைந்து பூமிநாதன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பூமிநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் கூறியதாவது, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு…?? தீக்குளிக்க முயன்ற தாய்-மகள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இவரது பெயரில் 12 சென்ட் நிலம் இருக்கிறது. இந்நிலையில் லட்சுமி பிரபா பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று தனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட இடத்தை சர்வேயர் பிரசாத், திருமங்கலம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் லிங்கசாமி மற்றும் போலீசார் உதவியுடன் அந்த நபர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்…. 2ஆம் கட்ட பணிக்கு ரூ. 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி முதல் மாதவரம் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி  3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழித்தடங்கள் என்பது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் 3 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: 31-ம் தேதி இரவு போக்குவரத்து மாற்றம்…!!

சென்னையில் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமானது மிக விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில்,  சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் –  நிபந்தனைகளை விதித்து தமிழக காவல்துறை மட்டுமல்லாமல்,  சென்னை காவல்துறை ஆணையர் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடுகள் செய்த பெற்றோர்…. இளம்பெண்ணின் திடீர் முடிவு…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பாரதிநகரில் விவசாயியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்கு செல்ல வேண்டாம் என பிரியங்காவிடம் தெரிவித்தனர். மேலும் பிரியங்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. கடந்த 24-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சி.ஐ.டி போலீஸ் என கூறி…. முதியவரிடம் பணம், நகையை “அபேஸ்” செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிக்களூர் அண்ணாநகரில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி கந்தசாமி மோத்தக்கல்லில் இருக்கும் வங்கி ஒன்றிலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 3 கிராம் தங்க மோதிரம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்துக்கொண்டு மொபட்டில் திருவண்ணாமலை- நரிப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் தன்னை சி.ஐ.டி போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து வாகனத்தின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 மகள்களையும் காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மான்விழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 7 வயது உடைய நிதிஷா, 5 வயதுடைய அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்ட நிதிஷாவுக்கு தினமும் தம்பதியினர் இன்சுலின் ஊசி செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் அக்ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. இன்ஜினியரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இன்ஜினியரான ராஜ்குமார் ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ராஜ்குமாரும், ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகநூலில் குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு…. பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்ஸப்பில் முகப்பு புகைப்படமாக தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை வைத்துள்ளார். இவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது குடும்ப புகைப்படத்தை ஒருவர் எடிட் செய்து அவதூறாக முகநூலில் பதிவிட்டார். அதனை நீக்க என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு செல்ல பாண்டியன் […]

Categories

Tech |