சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன் என்பவர் குடும்பத்தினருடன் காரில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் சென்ற போது மஞ்சுநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ரமணா என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது மோதி கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ரமணாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]
Category: மாவட்ட செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திப்பட்டி பள்ளம் கிராமத்தில் விவசாயியான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னராஜ் தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த கத்திரி செடிக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அவர் கிணற்றின் ஓரம் இருக்கும் வரப்பில் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த சின்னராஜ் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
தர்மபுரி மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஈச்சம்பாடி கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவர் சீனிவாசா தெருவில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வசூல் செய்த பணத்தை திரும்ப கொடுக்காமல் சிவகுமார் மோசடி செய்ததாக அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தீபாவளி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேருந்து நிலையம், எம்.ஜி ரோடு, தக்காளி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருக்கும் சில்லி சிக்கன் மற்றும் துரித உணவு கடைகள், தள்ளுவண்டி கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது செயற்கை நிறம் ஏற்றிய சில்லி சிக்கன், பல முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். பின்னர் இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு தயாரிக்க பயன்படுத்தும் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் பாரதி ஹோம் என்ற கட்டுமான நிறுவனம் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறது. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள 8 அடி ஆழ பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் மண் சரிந்து விழக்கூடாது என்பதற்காக பள்ளத்தை சுற்றி பலகை பொருத்தும் பணி நடந்தது. அப்போது சரோவர் ஷூசைன் என்ற தொழிலாளி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதி இதன் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 5-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாள் எனவும் கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகளான பிரதீபாவுக்கும், ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பிரதீபா நேற்று முன்தினம் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருப்பதாகவும் ராணிக்கு ஜேம்ஸ் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த காமராஜர் என்பவரும், வெண்ணிலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பபாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் காமராஜர் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழம்பு சரியில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் காமராஜர் வேலைக்கு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றனர். கண்டக்டராக உதயகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இரண்டு பேர் பேருந்தில் ஏறி ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததால் சக பயணிகள் முகம் சுழித்தனர். இதனை கவனித்த ஓட்டுநரும், கண்டக்டரும் பேருந்தில் அமைதியாக பயணிக்கும்படி இருவரிடமும் கேட்டுக் கொண்டனர். அதனை கண்டு கொள்ளாமல் இரண்டு பேரும் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் நெகமம் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு முன்பு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த கார் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகளிலிருந்து, டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது, அன்பார்ந்த பெரியோர்களை, தாய்மார்களே பாரதிய ஜனதா கட்சியில தமிழகத்தில் 1,260 மண்டல் இருக்கு, ஒன்றியம். அந்த 1,260 ஒன்றியத்தில் இது ஒரு ஒன்றியத்துடைய நிகழ்ச்சி. இந்த அளவுக்கு நம்முடைய கட்சி வளர்ந்து இருக்கு என்பதற்கு இது ஒரு சான்று. இது ஒரு மாவட்ட நிகழ்ச்சி இல்ல, இது திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய வீரபாண்டிய ஒன்றியத்தின் உடைய நிகழ்ச்சி. அதுவும் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை […]
பூவிருந்தமல்லி நசரத்பேட்டை சந்திப்பில் இருந்து நேரு சிலை கார் மோதியதில் சுக்கு நூறாய் உடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதியதில் சிலை உடைந்தது. கார் ஓட்டுனர் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 15 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இன்று அதிமுக சார்பில் பந்து அறிவிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணிகள் காலியாக இருக்கும் நிலையில் அதை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதன்படி மாற்றம் வாரியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் 40 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்ற 4-ம் தேதி நடைபெற்றதில் 1762 பேர் விண்ணப்பித்தார்கள். ஆனால் 411 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தார்கள். இந்த நிலையில் வேலூர் தாலுகா […]
உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை புதுப்பிக்க 31-ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் பெயர் பலகைகளை தமிழில் கட்டாயமாக வைக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் எழுத்துக்களின் அளவு 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி முதலிலும் ஆங்கிலம் அடுத்ததாகவும் பிற மொழி அதற்கு அடுத்ததாகவும் […]
சவுதி அரேபியாவில் வேலை செய்த தனது கணவரின் உடலை மீட்டு தர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு சாமி நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி ஜெயமாரி முள்ளக்காட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் ஜெயமாரிக்கு தனது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்திருக்கின்றது. ஆனால் அவரின் உடல் அனுப்பி வைப்பது பற்றி எந்த விதமாக […]
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. […]
செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், அப்துல்லா, செல்லா, சித்திக் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள மலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருக்கும் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து இவர்களின் வீடு மற்றும் கடமைகளில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்று […]
சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் இரண்டு ஏக்கர் அளவில் கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் சென்ற இரண்டு நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனிடையே சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பந்தம் பாளையம் பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரக்கிளைகள் உடைந்து […]
ராட்சத அலையில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் இரும்பு தகடால் ஆன கூடாரம் அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களில் சுமார் 25 பேர் ராமகிருஷ்ண நகரில் இருக்கும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார்கள். இதில் எட்டு பேர் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். எட்டு பேரும் அலையில் சிக்கினர். இதில் நான்கு பேர் தப்பித்து கரை வந்தார்கள். […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் இருக்கும் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடைக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காதல் ஜோடிகள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். நேற்று ராணிப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தனது மகளுடன் கடைக்கு சென்று உலர் பழ வகை ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது முந்திரி தூள்களுடன் புழுக்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் அதன்படி கடைக்கு […]
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னைக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இரவு 07.50 மணி முதல் ஒரு மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிக்குண்டு எதுவும் இல்லை. […]
நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவ நாயக்கன்பட்டி பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லை என கூறினேன். இதனையடுத்து வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறியதை நம்பி எனது […]
சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை உள்கொம்பை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பசு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த நடராஜன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுவை கயிறு கட்டி பத்திரமாக […]
திருச்சியில் இருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக பாலமுருகன் மெதுவாக சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அறிவொளி, அசார், யாஸ்மின் ஆகிய 3 பேரும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொம்மாடிமலையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வைக்கோல் போர் உள்ளது. இந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து 12 நீளமுள்ள மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் கேரள மாநிலத்தில் உள்ள அம்பலவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை கட்டுமான பணி முடிந்ததும் ஐந்து தொழிலாளர்கள் ஜீப்பில் எருமாடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அம்பலவயல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் பி.ஜி அக்னி பாலம் என்ற பெயரில் ஆனந்தன், தனசேகரன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் அமுதா என்பவர் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார். மேலும் தனசேகர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அமுதா 20 பேரை சேர்த்து விட்டு பணம் கட்ட வைத்ததாக தெரிகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு வரை 1 3/4 கோடி சீட்டு பணம் கட்டியதாகவும், நிதி நிறுவனத்தினர் குறிப்பிட்ட காலம் முடிந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் வேகமாக சென்றது. அந்த காரில் இருந்த 5 வாலிபர்களும் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அச்சத்தில் 5 வாலிபர்களும் போலீசுக்கு பயந்து காரை அங்கேயே விட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜடையம்பாளையம் பகுதியில் விவசாயியான முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(55) கடந்த 21-ஆம் தேதி வீட்டில் கழுத்து அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் காணாமல் போனது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற கல்லூரி மாணவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒசட்டி கிராமத்திற்குள் நுழைந்து நெற்பயிர்களை நாசப்படுத்தியது. இதனை அறிந்த கிராம மக்கள் டார்ச் லைட் அடித்தும், சத்தம் போட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சுமார் 1 மணி நேரமாக யானை பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒற்றை காட்டு யானை […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெகனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வேலை பார்க்கும் 13 ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு மூணாறுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை கடந்து வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமன், சரவணன், சந்திரலேகா, இந்திரா உட்பட 11 ஆசிரியர்கள் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவில் கண்ணதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென கண்ணதாசன் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கண்ணதாசனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கண்ணதாசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கி யசோதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் ரம்ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவரது மருமகன் இம்ரான் என்பவரும் தள்ளு வண்டியில் மாட்டு இறைச்சி வருவல் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அண்ணன் தம்பிகளான சாதிக் பாஷா, முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வறுவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முஸ்தபா கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருவரும் தற்போது […]
சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிகவும் தொன்மை வாய்ந்த கட்டிடமாகும். இங்கு தினம்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 442 புறநகர் ரயில்கள் என 562 ரயில்கள் கையாளப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஐந்து ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி ரூ.734.91 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு மணிகள் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி பகுதியில் இருக்கும் ஹோட்டல் முன்பு சிலர் கடந்த 21-ஆம் தேதி காரை நிறுத்தியுள்ளார். இதற்கு வெங்கடாசலம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெங்கடாசலம் மீது காரை ஏற்றி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜா, நவீன் குமார், விக்ரம் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஹோட்டலுக்கு சென்று ஊழியர்களுடன் தகராறு செய்து ஹோட்டல் சூறையாடிவிட்டு சென்றனர். இது குறித்து ஹோட்டல் வேளாளர் […]
மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் மினி வேனில் கும்பகோணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த வேனில் பத்து பெண்கள், சிறுவன் உட்பட 24 பேர் இருந்துள்ளனர். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு பத்மநாபனின் குடும்பத்தினர் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 16 […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் பகுதியில் ஸ்ரீ ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலி தொழிலாளியான ஹரிஹரன் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ஹரிஹரன் காவிரி ஆற்றில் தவறி விழுந்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பேரிடர் மீட்பு குழு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கவரத்திரை பகுதியில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோபி கடந்த 15 வருடங்களாக வீட்டுக்கு செல்லாமல் கூலி வேலை பார்த்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சோமண்டார்குடியில் இருக்கும் தடிக்கார சாமி கோயில் அருகே இருக்கும் மரத்தில் கோபி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு பகுதிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொகுசு காரில் திற்பரப்புக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அருவிக்கு செல்லும் நுழைவாயில் அருகே அந்த குடும்பத்தினர் இறங்கி விட்டதால் டிரைவர் மட்டும் காரை நிறுத்துவதற்காக ஓட்டி சென்றுள்ளார். அப்போது இட நெருக்கடி காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் நெல்லியார் கோணம் குழிவிளை பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சஞ்சய் என்பவர் அறிமுகமானார். நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணியை அவரது நிறுவனம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கட்டிட வேலையை முடிக்க வேலையாட்கள் காண்டிராக்டை எனக்கு தருவதாகவும், அந்த […]
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரையடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் கீழ் இந்த கொடூர செயலை செய்த நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதுகுறித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கீழே புதுச்சேரி விளை பகுதியில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி ஞான சௌந்தரி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது தங்கை வனஜாவை பிரான்சிஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு மனைவிகளுக்கும் தலா 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பிரான்சிஸ் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் பட்டணம் கால்வாய் கரையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பழைய பகுதியில் இருக்கும் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அஸ்வின் விஜய் உறவினரான சஜிகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லுக்குட்டி குருமாணி விளை முந்திரி ஆலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக […]
கரூர் மாவட்டத்திலுள்ள வடிவேல் நகர் பகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், ஸ்ரீ அம்மன் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு இடத்தில் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த குப்பை கிடங்கில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், குடியிருப்பு வாசிகளும் சுவாச கோளாறு கண் எரிச்சல் ஆகியவற்றால் மிகவும் […]
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விலத்தூர் மேல தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது மகன் ஹரிகிருஷ்ணன்(16), தங்கை மகன் பாரதி(10) ஆகிய இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரளயம் ஏலஞ்சிபுதூர்காரர் தோட்டத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பழனிச்சாமி குன்றி பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மக்காச்சோள அறுவடை பணிக்கு எந்திரத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து பழனிச்சாமியும் அறுவடை இயந்திர ஓட்டுநர் நாகேஷ் […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தாழ்குனி பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் 2 பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ராஜாமணியை மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து […]