Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹோம் தியேட்டரில் பாட்டு கேட்டதால் தகராறு….. பெரியப்பாவை கொலை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உடையாண்டஅள்ளி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மொபட்டில் ராயக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் குடங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை-எச்சம்பட்டி சாலையில் பெருமாள் நின்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடந்த 6 மாத காலமாக…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோவில் வாலிபர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பென்சப்பள்ளி கிராமத்தில் டிரைவரான சந்தோஷ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் காரப்பள்ளி பகுதியில் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 6 மாதமாக சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷத்தை கைது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேன்- 4 கார்கள் அடுத்தடுத்து மோதல்…. டாக்டர் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலில் தனியார் கல்லூரி முன்பு இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கார்கள் மற்றும் ஒரு சுற்றுலா வெண் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா வானில் பயணம் செய்த டாக்டர் நவீன் குமார், அவரது மனைவி அருணாழ் தீபிகா, பிரபுதேவாழ் ராஜம்மாள், விஜயா, மீனா உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 10 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் போதிய வருமானம் இல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கா நகரில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகைப்படக் கலைஞரான பாலமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் தனது தாய் அன்னலட்சுமியிடம் திருச்சி சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அன்னலட்சுமி தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அன்னலட்சுமி அப்பகுதியில் இருக்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கடனால் வீட்டை விற்ற மகன்…. வாசலில் விஷம் குடித்து மயங்கிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மோகன்ராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மோகன் ராஜ் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மோகன்ராஜ் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் புது வீடு கட்டுவதற்கும் மோகன்ராஜ் சிலரிடமிருந்து கடன் வாங்கி உள்ளார். இதனால் கடனை செலுத்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை அருகே நடமாடிய கரடி….. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையத்திற்காக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மருத்துவமனை ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு பகுதியில் தெரு நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி நடமாடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் கரடி புதருக்குள் சென்று மறைந்தது. கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்த கார்… பெரும் பரபரப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பொள்ளாச்சி உடுமலை சாலையை சேர்ந்த டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் உள்ள ஒரு கேஸ் விற்பனை நிலையத்தில் தனது காருக்கு கேஸ் நிரப்ப வந்துள்ளார். அங்கு அவரது காருக்கு ஊழியர்கள் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீ  கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இந்நிலையில் கார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டருக்கு சரமாரி வெட்டு”… மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு…!!!!!!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கவுதம்(26) என்பவர் பல் மருத்துவராக இருக்கிறார். இவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமான மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவுதம் நேற்று மருத்துவமனையில் இருந்தபோது அங்கு கஞ்சா கர்ணா என்ற கருணாகரன் மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் 3 பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் கவுதமின் தலை, கழுத்து, கை பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மருத்துவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்துவரி செலுத்துபவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள்…. இதை இணைக்க வேண்டும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் தங்களின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேரனோடு இருந்த பெண்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் மெயின் ரோடு பகுதியில் செல்லதுரை-பூமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டில் பூமணியும், அவரது பேரன் விக்ரமும் இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின் வயரில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பூமணி தனது பேரனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தாய்…. பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நதியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி தர மறுத்த பெண்…. தாக்குதல் நடத்தி நகையை பறித்து சென்ற கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனை புதூர் முல்லை நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகமணி என்ற மனைவி உள்ளார். இருவரும் சேர்ந்து அறக்கட்டளையின் பெயரில் மகளிர் சேவை மையம் நடத்தி வருகின்றனர். அதன் மூலம் மகளிர் குழுவினருக்கு கடன் வாங்கி கொடுக்கின்றனர். இந்நிலையில் பிரியா என்பவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மீண்டும் கடன் கேட்டுள்ளார். அப்போது லோகமணி கடன் வாங்கி தர மறுத்ததால் பிரியாவும் அவருடன் வந்த சிலரும் இணைந்து லோகமணியிடம் தகராறு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை…. புதுப்பெண் அளித்த புகார்…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆதிப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகேயனுக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு அழைத்து செல்கிறேன் என கார்த்திகேயன் பிரியதர்ஷினியிடம் கூறியுள்ளார். ஆனால் விசா கிடைக்கவில்லை என கூறி அவர் மட்டும் சென்று விட்டார். இதனையடுத்து பிரியதர்ஷினி தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த வாரிசுகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் காளியப்பன் தனக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ஊர்காவல் படை வீரருக்கு பத்திரம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் மகன்களும், மகள்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலையில் இருந்த காளியப்பன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சித்தன்னவாசலுக்கு சென்ற சிறுவன்…. சுற்றி வளைத்த 5 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊனையூர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் சித்தன்னவாசல் பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளான் அப்போது 5 பேர் கொண்ட கும்பல் சிறுவனை சுற்றி வளைத்து செல்போனை பறித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவன் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர்களான அஜய், அதிபதி, மாரிமுத்து, காந்தி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் செல்போனை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் கூலி தொழிலாளியான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 21 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாக பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜானகிராமனிடம் கூறியுள்ளார். அப்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து ஜானகிராமன் இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக இளம்பெண் கீரனூர் அனைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தந்தை வாங்கிய கடன்…. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மகன்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியில் அழகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அழகுராஜை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அழகுராஜ் கூறியதாவது, கடந்த 2002-ஆம் ஆண்டு எனது தந்தை சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாணவிகளை கேலி, கிண்டல் செய்த ஆய்வக உதவியாளர்…. சரமாரியாக தாக்கிய பெற்றோர்….. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம் பாடியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வீரவேல் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீரவேல் மாணவிகளை கேலி கிண்டல் செய்வதுடன் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் வீரவேல் குறித்து புகார் அளித்தனர். பின்னர் கோபத்தில் பெற்றோர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உங்களிடம் பேச வேண்டும்”…. பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மனோஜிப்பட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு தயார் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் நான் உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் அவரது செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு மிரட்டி சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த பெண் நடந்தவற்றை தனது உறவினர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவன்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னப்புளியம்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவேந்திரன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யுவந்திரன் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இதனையடுத்து அரவக்குறிச்சி+சின்ன தாராபுரம் சாலையில் இருக்கும் எலவனூர் பிரிவில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுவேந்திரன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொத்தனூரில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவனேஷ் என்ற மகனும் லோகேஸ்வரி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் திடீர் தீ விபத்து…. கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்து மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அனுமன் ஜெயந்தி விழா…. 10 கிலோ எடையில் கேக் வெட்டி கொண்டாடிய பக்தர்கள்….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி இருக்கிறது. நேற்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கு 108 வட மாலை சாத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் 10 கிலோ எடையில் கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூழையன்காடு பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு…. வருமானவரித்துறை ஊழியர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். தற்காலிக ஊழியரான அந்த பெண் கணவரை இழந்து தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 5 வருடங்களாக வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு மூத்த வரி உதவியாளராக வேலை பார்க்கும் ரேக்ஸ் கேப்ரியேல் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 7 மாத குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் சாம்சங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை குழந்தை விளையாட்டி கொண்டிருந்த போது புஷ்பராணி சமையலறையில் நின்று கொண்டிருந்தார். அப்போது டிவி அருகே இருந்த மின்சாரப்பட்டியை குழந்தை தொட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குழந்தையை புஷ்பராணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடலில் மின்சாரம் பாய்ச்சி…. தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகரில் முத்துகுமரகுரு(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா(42) என்ற மனைவியும், குரு சஞ்சனா(18), குரு அவந்திகா(14) என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் முத்துகுமரகுரு வங்காளதேசத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்காக வந்த முத்துக்குமரகுரு வீடு மற்றும் நகைகளை விற்று வேறு இடத்தில் புதிதாக வீடு மற்றும் கார் வாங்கலாம் என தெரிவித்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து…. திருட முயன்ற வாலிபருக்கு தர்மஅடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபேட்டை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மின்னல்கன்னி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபாஷ் சந்திரபோஸ் என்ற மகனும், அனிதா என்ற மருமகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று மின்னல்கன்னி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக கூறி மின்னல்கன்னியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என அவர் கேட்டதால் மின்னல்கன்னி சமையலறைக்கு தண்ணீர் எடுப்பதற்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணறு…. நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட வாலிபர்கள்…. கிராம மக்களின் கோரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.அகரம் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தினர் பழுதான மின் மோட்டாரை பழுது நீக்குவதற்காக எடுத்தனர். அதன் பிறகு ஆழ்துளை கிணறு மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய் குட்டிகள் எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் தவறி விழுந்து சத்தம் போட்டது. இதனை பார்த்த வாலிபர்களும், சிறுவர்களும் கயிறு கட்டி நாய் குட்டிகளை 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை…. “ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்”.. அதிர்ச்சியில் பயணிகள்…!!!!!

வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக அனைத்து மக்களும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதிலும், இந்தியாவில் உள்ளிட்ட  சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டது. இதனால் பயணிகள் தற்போது விமான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இது எனக்கான களம் அல்ல”… தி.மு.க இளம்பெண் கவுன்சிலர் தீடிர் ராஜினாமா….!!!!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க பிரமுகரான கந்தசாமி என்பவர் மகள் நர்மதா வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரே நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக என்னால் இந்த பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான் வகிக்கும் நகர மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காங்கயம் நகராட்சியில் 117 மெட்ரிக் டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள்… அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைப்பு..!!!

காங்கயம் நகராட்சியில் 117 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் இருக்கும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் நகராட்சியில் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள் இந்த குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றது. இதில் மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாய பணிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதில் மக்காத கழிவுகளில் ஒரு பகுதியான பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்காக அரியலூரில் உள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனு அளிக்க சென்ற விவசாயி…. நுழைவு வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரகுடி மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ராஜதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக ராஜதுரை சென்றுள்ளார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மனு எழுதிவிட்டு அதனை நகல் எடுப்பதற்காக நடந்து சென்ற போது திடீரென ராஜதுரை மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை தாயாக்கிய வாலிபர்…. 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனாங்குப்பம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. இந்நிலையில் தாய், தந்தையை இழந்து பாட்டி வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பெருமாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020- ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பெருமாள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் பெருமாளை கைது செய்தனர். இதற்கிடையில் கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை”…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோலார் லக்காபுரம் பகுதியில் சிவபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொற்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அவருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இன்னும் 4 மாதங்கள் மட்டுமே கல்லூரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயிடம் அழுத 4-ஆம் வகுப்பு மாணவி….. முதியவர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜன் சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ.70 லட்சம் மோசடி…. நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்…. பெண்களின் பரபரப்பு புகார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கீழபுத்தேரி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் சிவாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வடசேரி கீழ புத்தேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நடத்தி வந்த சுய உதவி குழுவில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அந்த குழு தலைவி பெண்களின் கையெழுத்தை பயன்படுத்தி, ஆவணங்களை காண்பித்து 70 லட்ச ரூபாய் வரை பல்வேறு வங்கிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆருத்ரா தரிசன விழா – ராமநாதபுரத்தில் ஜன.,6ம் தேதி உள்ளூர் விடுமுறை.!!

உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை எனும் கிராமத்திலுள்ள மங்களநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இந்த விழாவை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருகிறேன்”.. 140 பேரிடம் மோசடி செய்த நபர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடி அடுத்த பருத்திப்பாட்டு சாந்தா டவர் சி -பிளாக்கில் ரவி (64) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவுரி ராஜ் பிரிட்டோ- புனிதா தம்பதியினர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய ரவி தனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கூறி சவுரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு… வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறப்பு…!!!!!!!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், மேலும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டனூர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல்  மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சொத்து வரியுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு இணைப்பு”…. கோவை மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய ‌ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும். […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: மல்லிகைப்பூ கிலோ ரூ. 3600: வியாபாரிகள் செம மகிழ்ச்சி…!!

சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு,  சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து,  3,600 க்கு […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் அறிவிப்பு…! ஜன. 3ல் உள்ளூர் விடுமுறை…. ஜன. 21ல் வேலை நாள்….!!

உலகப் புகழ்பெற்ற நாகூர்  தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது,  அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு  தொடங்கப்படும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாகையில் ஜன. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை …!!

நாகையில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது விடப்பட்டிருக்கிறது. நாகூர் பெரிய கந்தூர் விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிறித்துமஸ் கொண்டாட்டம்…. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை…. அரசு அறிவிப்பு…..!!!!

கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி பொது விடுமுறையும் அதற்கு முதல் நாளான இன்றும் டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 11ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்… பள்ளி மாணவர்களுக்காக மனநல நல்லாதரவு மன்றம்.. தொடங்கி வைத்த முதல்வர்..!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றங்களை காணொளி மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் வகையில் மனநல ஆதரவு மன்றங்கள் மற்றும் நட்புடன் உள்ளங்களோடு மனநல சேவை செய்யும் தொடக்க விழாவானது நடந்தது. இதனை முதல்வர்  தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதன் பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

#BREAKING : தேனி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து கோர விபத்து…. 7 ஐயப்ப பக்தர்கள் பரிதாப பலி…. சிகிச்சையில் 3 பேர்..!!

தேனி மாவட்டம் குமுளி அருகே ஏற்பட்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 7  பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தற்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கார் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக் குமார் என்ற மகன் உள்ளார். கூலி தொழிலாளியான அசோக் குமார் கடந்த 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழ்மால் பாளையம் கீழூர் வடக்கு தெருவில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் சரண்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சுகிசிக்காக அனுமதித்தவர். அங்கு சிகிச்சை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் மது பாட்டில்களை அடுக்கி வைத்த நபர்…. எச்சரித்து அனுப்பிய போலீசார்…. பின் நடந்த சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பள்ளிவாசல் தெருவில் கூலி வேலை பார்க்கும் அக்கீம்(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சாலையோரம் இருந்த திண்ணையில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே மது பாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்துள்ளார். இதனை தட்டி கேட்டவர்களிடம் அக்கீம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்து அக்கீமிடம் விசாரித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். […]

Categories

Tech |