Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவர் வீட்டு முன்பு…. பெண் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலுக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயது மற்றும் 5 மாதம் என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 2-வது பிரசவத்திற்காக தூத்துக்குடியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்ற பபிதாவை சக்திவேல் பார்க்க சென்றுள்ளார். அதன் பிறகு 5 மாதமாகியும் அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு பேசவில்லை. வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…. சிங்கம்புணரி வீரர் தேர்வு…!!!

ராஜஸ்தானில் தேசிய அளவிலான கூட்ஸ் பீகார் டிராபிக் கோப்பைக்கான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற உள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இந்நிலையில் தமிழக அணியில் பொன்னாடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சைலேந்தர் தேர்வாகியுள்ளார். இடதுகை பஞ்சாயிச்சாளரான சைலேந்தர் பேட்டிங் செய்வார். இந்நிலையில் அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, விதர்வா அணிகள் மோதுகின்றன.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மெய்ஞானபுரத்தில் கிறிஸ்தவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்”… பெரும் பரபரப்பு…!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரத்தில் பரி.பவுலின் ஆலயத்திற்கு முன்புறமுள்ள இடத்தில் டேனியல் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் பா.ஜனதா கட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து  அறிந்த மெய்ஞானபுரம் கிறிஸ்தவ பொது மகிமை சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டால் தங்களது வழிபாட்டிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கேலி செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபர் ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து போலீசா நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. ஆற்காட்டில் இருக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. வேறு பெண்ணை நியமித்து பாடம் நடத்தியதால் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன் பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் முரளிந்திரன் என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் வெளியே சென்று விடுகிறார். அதற்கு பதில் தனக்கு தெரிந்த வேறு ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்து முரளிந்திரன் பாடம் நடத்த சொல்வதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அறிந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இனி இந்த தொல்லை இல்லை…. திடீரென அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 25 வருடங்களாக இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கும்பகோணம், பூம்புகார், சிதம்பரம், சென்னை, மணல்மேடு போன்ற மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த காமராஜர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று வரவும், பேருந்துகள் எளிதாக பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கும் சிரமம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோதுவது போல் வந்த தனியார் பேருந்து…. கோபத்தில் எட்டி உதைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜமுனா தனது மகனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற உதவி தொகை கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை அடுத்து ஜமுனா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே இருக்கும் சாலையை கடக்க முயன்ற போது தனியார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயது பெண்ணுடன் கவியரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்த கவியரசன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் ஏற்காடு காவல் நிலையத்தில் கவியரசன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பள்ளி நிர்வாகத்திடம் மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்”… பணியிடை நீக்கம்… டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு…!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சேந்தங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சீனிவாசன் (38) என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகாத இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், அதே பள்ளியின் மாணவர் விடுதியையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரிடம் ஆசிரியர் சீனிவாசன் தகாத உறவுக்கு வலியுறுத்தியுள்ளார். இதனை அறிந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் மகளிர் போலீஸ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலம் சம்பந்தமாக முன்விரோதம்…. பெண்ணை தாக்கிய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கும், மரியமதலேயம்மாள் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மரியமதலேயம்மாள், அவரது கணவர் இம்மானுவேல் ராஜ் இருவரும் இணைந்து சசிகலாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தம்பதி மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முதியவர் மீது தாக்குதல்…. மகன், மருமகள் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் சின்னபிலவேந்திரன்(85) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயராஜ் என்ற மகனும், செல்வராணி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முதியவரை சகாயராஜ், செல்வராணி, மரிய செல்வத்தின் மனைவி மரிய ஸ்டெல்லா ஆகிய மூன்று பேரும் இணைந்து ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சி வாகனத்திற்கு அடியில் படித்து கொண்ட வியாபாரி…. 1 மணி நேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பார்வதிபுரம் பாலம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பழக்கடை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் பழ கடையை அப்புறப்படுத்த முயன்ற போது வியாபாரியான சுதீர்தீன் என்பவர் மாநகராட்சி டெம்போவின் கீழ் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஊழியர்களால் வாகனத்தை இயக்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டி…. 8-ஆம் வகுப்பு மாணவிக்கு குவியும் பாராட்டுகள்….!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தினக்குடி கிராமத்தில் ராமு-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8- ஆம் வகுப்பு படிக்கும் லக்ஷனாதேவி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பதோடு, விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த சிறுமி உறை வாள் சண்டை கலையையும் கற்று வந்துள்ளார். இந்நிலையில் கும்பகோணத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெடரேஷன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற லக்ஷனாதேவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

30 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பேக்கரி, கடை, ஹோட்டல்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பயன்படுத்திய 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடமிருந்து 3,200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் விற்பனை செய்தாலும் கடுமையான நடவடிக்கை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. இன்சூரன்ஸ் பணம் தர மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்…. நீதிமன்றம் அதிரடி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பூஞ்சேரி-தண்டரை பகுதியில் ரஹத் அகமது கான் என்பவர் வசித்து வருகிறார் இவரது மோட்டார் சைக்கிள் கடந்து 2019-ஆம் ஆண்டு காணாமல் போனது. அதனை கண்டுபிடித்து தருமாறு ரஹத் கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 6 மாதம் கழித்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் இழப்பீடு கேட்டு ரஹத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருடு போனதற்கு இழப்பீடு வழங்க முடியாது என அந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. காப்பாற்ற சென்ற வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவனூர் பஜனை கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரங்கநாதன் அவென்யூ பகுதியில் மணிகண்டன் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பசு மாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதனால் மாடு மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் மாட்டை காப்பாற்ற முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பெற்றோரின் கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்  வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  உயிரிழந்த மாணவி செல்போனை  பயன்படுத்தவில்லை எனவும்,  பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை  செல்போனை ஏதும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உரிமம் பெறுவது கட்டாயம்”…. கடைகளில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட், பேருந்து நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு இருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பகீர்…!! வளர்ப்பு நாய்களை “சிறுத்தைக்கு” உணவாக விட்டு சென்ற நபர்…. போலீஸ் விசாரணை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விலங்குகள் நல பாதுகாப்பு செயல்பாட்டாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து 2 வளர்ப்பு நாய்களையும் மீட்டு சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது 8 வயது சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அஜித் குமார் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணி…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

கேரளாவில் தென் மண்டை அளவிலான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக அணியில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சோனாரேசலின் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். இதில் தமிழக அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. மேலும் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெற இருக்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது. அந்த அணியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் இருந்து விழுந்த தீப்பொறி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பூங்கா ரோடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் இருக்கிறது. இங்கிருந்து வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மாரில் இருந்து தீப்பொறி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது மரத்தில் இருந்து கம்பு டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து தீப்பொறி ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பணியாளர்கள் டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி காரணமில்லை”…. பச்சிளம் குழந்தை திடீர் இறப்பு…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் ஆட்டோ டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரித்வீர் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு குருபிரசாத் என பெயரிட்டனர். நேற்று முன்தினம் சுகன்யா பிள்ளையார் நத்தம் அங்கன்வாடி மையத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு சென்றார். அங்கு குழந்தையின் 2 தொடைகளில் தலா ஒரு ஊசியும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை மாசிலாமணி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 3-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிந்தது. இந்த விபத்தில் மாசிலாமணி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வாகனம் சாலையோரம் கவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மரத்தில் உட்கார்ந்திருந்த சிறுத்தை…. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்…. வைரலாகும் புகைப்படம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 19-ஆம் தேதி பண்ணாரி சோதனை சாவடி அருகே சிறுத்தை சாலையை கடந்து சென்ற வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதனால் வனத்துறை சோதனை சாவடி மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் ஒருவித பயத்துடன் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் இருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக “ரூ.1 கோடி மோசடி”…. முன்னாள் ஊழியர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் தபால் நிலையத்தில் வேலை பார்த்தார். அப்போது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதிய பணத்தை தானே எடுத்து கொண்டு மோசடி செய்ததால் ரவி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தபால் துறையில் வேலை பார்ப்பது போல சுற்றி வந்த ரவி வேலை தேடி வருபவர்களை குறி வைத்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பெயரில் வழக்குபதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து…. ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள உப்பரபாளையம் பஜனை கோவில் தெருவில் எல்லப்பபிள்ளை, குணசுந்தரி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 56 சென்ட் இடம் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் குப்பன், சாந்தி, இந்திரா, சேகர், எல்லம்மாள், ராமச்சந்திரன் ஆகியோர் ஆள்மாறாட்டம் மூலம் சதி செய்து போலி ஆவணம் தயாரித்துள்ளனர். இதனையடுத்து கோதண்டம் என்பவருக்கு அந்த இடத்தை அதிகார பத்திரம் செய்து கொடுத்துள்ளனர். பின்னர் கோதண்டம் அந்த இடத்தை போலி ஆவணங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காபி போடுவதற்காக சென்ற பெண்…. தீப்பிடித்து எரிந்த நிலையில் மாடியிலிருந்து விழுந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் 1-வது தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் அமைந்துள்ளது. இங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்த ஜெயந்தி என்பவர் கடந்த 10 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது மாடியில் இருக்கும் சமையலறைக்கு காபி போடுவதற்காக ஜெயந்தி சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது. அதனை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி…. கையும், களவுமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மெயின் ரோட்டில் ராஜ் என்பவர் அடகு கடை வைத்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் 3 பவுன் நகையை ராஜின் கடையில் அடமானம் வைத்து 75 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நகையை பரிசோதித்த ராஜ் அது போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வெங்கடேசன் நகையை அடகு வைப்பதற்காக ராஜின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது ராஜ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி…. பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி சென்னியப்பன் வீதியில் ஆனந்தி, பாபு, செல்வி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் இணைந்து நடத்திய ஏலச்சீட்டில் 10-க்கு மேற்பட்டோர் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தவணை காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு சீட்டு தொகை வழங்காமல் 3 பேரும் காலம் தாழ்த்தி வந்தனர். சுமார் 40 லட்ச ரூபாய் வரை 3 பேரும் இணைந்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கனடாவில் வேலை ரெடி…!! முதியவரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகரில் ஹரிக்குமார் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்த போது சென்னையை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் உங்களது மகனுக்கு கனடாவில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என நவாஸ் அகமது கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு தவணைகளாக ஹரிகுமார் ரூ. 7,56,200 பணத்தை நவாஸ் அகமதுவிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் தற்கொலை வழக்கு….. காதல் கணவர்-மாமியாருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபுதூர் பகுதியில் யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு யோகேஸ்வரன் தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவர் வீட்டில் இருந்தபோது மாமியார் கிருஷ்ணவேணி தேவியை அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் யோகேஸ்வரன் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் குடியேறினார். இதனையடுத்து வரதட்சணையாக 5 லட்ச ரூபாய் வாங்கி வருமாறு யோகேஸ்வரனும், கிருஷ்ணவேணியும் தேவியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு தேவி தூக்கிட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவரை அடித்த அரசு பள்ளி ஆசிரியர்…. ஆதரவாக பேசிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கூடுவேலி சாவடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கண்ணகி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரியாக படிக்கவில்லை என கூறி 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் தலையில் கண்ணகி அலுவலக பயன்பாட்டிற்காக இருக்கும் பைல் போல்டரில் வரும் பிளாஸ்டிக் குச்சியை வைத்து அடித்து திட்டியுள்ளார். இதனை ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனை அறிந்த போலீசார் மாணவனின் பெற்றோரை அழைத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட கல்லூரி மாணவி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி படித்து வருகிறார். அந்த மாணவி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடை அருகே இருக்கும் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது சத்ரியன் என்பவர் தனது மனைவியை தரக்குறைவாக பேசி திட்டியதாக தெரிகிறது. இதனை கல்லூரி மாணவி தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சத்ரியன் கத்தியை காட்டி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றம் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிபேட்டை கிராமத்தில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று சபரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சபரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 28ல் பந்த்: அதிமுக அறிவிப்பு …!!

புதுச்சேரியில் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த கோரிக்கையை சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான்,  எங்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் செயல்பட முடியும் என்று தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமியின் கருத்து புதுச்சேரியில் மிகுந்த  அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையிலே முதல்வருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவும் இதற்கு ஆதரவளித்திருக்கின்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்…. திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது..!!

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்திய புகார் தொடர்பாக  திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்திற்கு சென்ற நிலையில், இதனை பயன்படுத்தி வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளின் கழுத்தை இறுக்கி கொன்று “தாய்” தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினம்பட்டி கிராமத்தில் கொத்தனாரான ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய பிரகன்யா என்ற மகள் இருந்துள்ளார். பிறந்ததிலிருந்து உடலுக்கு குறைவால் அவதிப்பட்ட தனது மகளை சங்கீதா அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. கடந்த 20-ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜெயராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட லோடு வேன் டிரைவர்கள்… 193 பேர் கைது..!!!

போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் லோடு வேன் டிரைவராக இருக்கின்றார். இவர் வேனில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக சென்று கொண்டிருந்த போது போலீசார் நிறுத்தி அபராதம் பிடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து அவர் வேனுக்கு அடியில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக கூறப்பட்டு சப்-இன்ஸ்பெக்டரின் புகாரின் பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பட்டி கிராமத்தில் தியாகராஜ கேசரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜ கேசரி தான் வாங்கி இருக்கும் புது வீட்டில் இருந்து பழைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தியாகராஜன் கேசரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பிக்கு திதி கொடுத்த அண்ணன்…. ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜகீழ்பாக்கம் பகுதியில் டாக்டரான கற்பகவாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுசுதன், சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மதுசுதன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் டாக்டரான சீனிவாசன் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சீனிவாசனுக்கு திதி நடந்தது. தம்பிக்கு திதி கொடுத்த மதுசுதன் மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மண்டல விளையாட்டு போட்டி… தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு…!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவை மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான 39 வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு தொல்லியல் பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன், நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வகுமார், வ.உ.சி துரைமுக ஆணைய மேற்பார்வை இன்ஜினியர் வேத நாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகவரி கேட்பது போல் நடித்து…. சங்கிலி பறித்த மர்ம நபர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு சென்று முகவரி கேட்பது போல் நடித்து வயதான பெண்களிடம் சிலர் தங்க சங்கிலியை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்து விசாரித்த போது முகவரி கேட்பது போல் மற்றும் சிலிண்டர் சர்வீஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்து…. நூதன முறையில் ரூ.3 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெய்கணேஷ் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பீளமேடு உள்ளிட்ட இடங்களில் எங்கள் வங்கியின் ஏ.டி.எம் மையங்கள் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மர்ம நபர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார். இதனையடுத்து பணம் வரும் நேரத்தில் அந்த நபர் எந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் ஏ.டி.எம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முத்திரையிட படாத 36 எடை அளவுகள் பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர், உதவி ஆணையர்  க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சி.ஹெர்மஸ் மஸ்கரனாஸ்  ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல் பொருட்கள் விதிகளின் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் இந்த ஆய்வு குழுவினர் கூட்டாய்வு  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வரும் நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பகுதியாக நிலவி  வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். அதன் பின் மேற்கு ,தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் […]

Categories
மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய கார்….!! பலியான ஐயப்ப பக்தர்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!!

கார் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ராயர்பாளையம் பகுதிகள் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது தாஸ் சபரிமலை  ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு  தனது காரில் காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து வந்த அரசு பேருந்து திடீரென கார் மீது மோதியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

குழியை ஏன் மூடவில்லை…. திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சு வார்த்தை….!!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம்-பழையகோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். ஆனால் மாலை ஆகியும் குழி மூடாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்… ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு மனு..!!!

300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைபட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சி அனைத்து டிரைவர்களும் மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50-க்கும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 16 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி…. 6 பேர் படுகாயம்..!!

தூத்துக்குடி அருகே புல்லாவெளியில் கார் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது லாரி மோதியதில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி சென்ற பால் முத்து பிரபு (39) பாண்டியம்மாள் தேவி (69) சற்குண லில்லி (37) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |