Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்..! கோரிக்கைகளை வலியுறுத்தி… வக்கீல்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதியதாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தை திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகுத்தார். சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் குன்னத்தில் புதிதாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் இதை பயன்படுத்திகோங்க..! பேருந்துகள் இயக்கப்படும் நேரம்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழக அரசு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு இரவு நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளியில் தலை காட்ட முடியல..! 104 டிகிரியாக உயர்ந்த வெப்பம்… பொதுமக்கள் புலம்பல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் 104 டிகிரி கொளுத்தியதால் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். பெரம்பலூர் மாவட்ட பொது மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வெயிலின் அளவு 102.2 டிகிரி செல்சியஸ் என பதிவானது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் 104 டிகிரி கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! மாணவருக்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஜலபதி நகரில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகாந்த் (16) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ கெமிக்கல் என்ஜீனியரிங் முதலாமாண்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் வெங்கடேசபிரசாத்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளா இப்படி தான் நடக்குது..! அவங்கள கண்டுபிடிங்க… பொதுமக்கள் பரபரப்பு போராட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட தெற்குமாதவி, கூத்தூர், இலுப்பைக்குடி ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் வயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து திருடிச் செல்லும் சம்பவம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு எங்களுக்கு அனுமதி குடுங்க..! நாட்டுப்புற கலைஞர்கள்… முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாட்டுப்புற கலைஞர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் மனுக்களை கொண்டு வந்து பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேஷ், தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆசைமுத்து ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேடமிட்டு வந்த நாட்டுபுற கலைஞர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 8 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! விவசாயி எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் ராஜேந்திரன் (46) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் கடந்த 17-ம் தேதி யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சமூக வலைதளங்களில் இதை வெளியிடாதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… வனவர் எச்சரிக்கை..!!

வன உயிரினங்களை திருவிழா என்ற பெயரில் வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவர் எச்சரித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா மற்றும் பல்வேறு பகுதிகளில் முயல் வேட்டை திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அப்போது வனத்துறைக்கு பலரும் முயல்களை வேட்டையாடுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரையடுத்து வனவர் பாண்டியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயல்வெளி பகுதிகள் மற்றும் வன காப்பு காடுகளில் வன […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற பிரமுகர்… வழியில் நேர்ந்த சோகம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் வாகனம் மோதி மொபட் விபத்துக்குள்ளானதில் வி.சி.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையில் பதவி வகித்தார். இந்நிலையில் இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நேற்று அதிகாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சீனிவாசன் சென்று கொண்டிருந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடாம வந்ததுக்கு இப்படியா..? பயந்து ஓடும் பொதுமக்கள்… அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்..!!

பெரம்பலூரில் கொரோனா விதிமுறையை மீறி முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் பொது மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் செல்கின்றனர். இதனால் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், நகராட்சி, உள்ளாட்சி, வருவாய்துறையினர் அபராதம் விதித்தும் முக கவசம் அணியாமலேயே பெரும்பாலானோர் செல்கின்றனர். பெரம்பலூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… அதிகரித்து வரும் பாதிப்புகள்… பெரம்பலூரில் உறுதியானவை..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,398 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 22 பேர் […]

Categories
பெரம்பலூர்

சித்திரை வந்தாலே விமர்சியாக இருக்கும்… தடையை மீறி நடத்தப்பட்ட திருவிழா… அம்மனுக்கு சிறப்பு படையல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 13 கிராமங்களில் நேற்று முன்தினம் தடையை மீறி முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். கொரோனாவால் கடந்த வருடம் முயல் வேட்டை கொண்டாடப்படவில்லை. இந்த வருடத்தில் விழாக்களுக்கு கொரோனாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 13 கிராமங்களில் நேற்று முன்தினம் தடையை மீறி திருவிழா நடைபெற்றது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை… தனியார் ஊழியருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் வசித்து வரும் சண்முகவேல் என்பவரது மகன் மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பங்களா பேருந்து நிலையம் அருகே சென்ற போது அதே பகுதியில் வசித்து வரும் செங்கமலை என்பவரது மனைவி சந்திரா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு காரணம் என்ன..? விவசாய எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினர் அவர் தற்கொலை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று அச்சுறுத்தல்… பொதுமக்களுக்கு இது கட்டாயம்… சுகாதாரத்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பொது மக்கள் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முககவசம் அணிவது தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.200 முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் திருமாந்துறை டோல்கேட் பகுதியில் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் சுகாதாரத் துறையினர் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரையும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க இதையெல்லாம் பின்பற்றுகிறார்களா..? பிளஸ் 2 செய்முறைத் தேர்வில்… கல்வி அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் கல்வி அதிகாரி சசிகலா பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் முதல் அரசு பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது. வருகின்ற 23-ஆம் தேதி வரை இந்த செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த செய்முறை தேர்வு இரண்டாவது நாளான நேற்றும் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சசிகலா குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வினை பார்வையிட்டு ஆய்வு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர விபத்து..!!

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி துருவம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர்கள் துரைசாமி மகன்கள் வீராசாமி, கணேசன். வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு மொபட், ஒரு மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது மொபட்டும், எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அது இருந்ததால தப்பிச்சாங்க… எதிர்பாராமல் மோதிய கார்… 2 பேருக்கு லேசான காயம்..!!

பெரம்பலூரில் கார், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் சோலை.ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூராட்சி முன்னாள் தலைவர். தற்போது பெரம்பலூரில் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது காரில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய காரில் அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சக்திவேல் என்பவர் உதவி கேட்டு ஏறிக்கொண்டார். கார் கிருஷ்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து இப்படி பண்ணிட்டான்..! விசாரணையில் சிக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

பெரம்பலூரில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் மிரட்டி கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வயலில் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர். இதுகுறித்து மாணவியின் தந்தை அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நமக்கு போதுமான அளவு இருக்கு..! அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி போதுமான அளவு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அனைத்து பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், இரண்டு தனியார் மருத்துவமனைகள், 15 மினி கிளினிக்குகள் மற்றும் 23 சிறப்பு முகாம்கள் என […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஒரே நாளில் தலா மூன்று பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் ஒருவரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 4 பேரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் ஒரே நாளில் தொற்று பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,384 ஆக அதிகரித்துள்ளது. அதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… மாவட்ட நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. குன்னம் தாலுகா பகுதியில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாகி வரும் 2-வது அலை… இதை கட்டாயம் போட்டுக்கோங்க… மீறினால் அபராதம்..!!

கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக முக கவசம் பொதுமக்கள் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மணி குழுவினர் லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் பொதுத்தேர்வு… பிளஸ் 2 மாணவர்களுக்கு… செய்முறை தேர்வு தொடக்கம்..!!

பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத்தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் அடுத்த மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் செய்முறைத்தேர்வு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், பெரம்பலூர் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. சுழற்சி முறையில் இந்தக் கல்வி மாவட்டங்களில் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன் பின் கைகளை கிருமிநாசினி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! உயர்நீதி மன்றத்தை ஈர்க்கும் வகையில்… வக்கீல்கள் உண்ணாவிரதம்..!!

பெரம்பலூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி குன்னம் பகுதியில் வருகிற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்க உத்தேசித்துள்ளது. அதனை கைவிடக்கோரி 9-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் தொற்று… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனானால் நேற்று 14 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,384 ஆக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. அதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளா இங்க தான் இருக்கு..! மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்கணும்… விவசாயிகள் கோரிக்கை..!!

பெரம்பலூரில் கொள்முதல் செய்யப்படாமல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டத்தில் ஒகளூர், அகரம்சீகூர், துங்கபுரம், மண்டபம், காடூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திறக்கப்பட்டன. இதையடுத்து அங்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 20 நாட்களாக முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை… திடீரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக இறந்த உயிர்கள்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 5 ஆடுகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முப்பது ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் குன்னம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அசூர் கிராமத்தின் எல்லை பகுதியான சித்தளிக்கு செல்லும் சாலையில் ராமகிருஷ்ணன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அதில் தனியாக 5 ஆடுகள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதை கேட்டா குடுக்க மாட்டியா..! தாயை கொடூர கொலை செய்த மகன்… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்..!!

பெரம்பலூரில் பணம் தராத கோபத்தில் மகன், தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி கிராமத்தில் கைலாசம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு மலர்கொடி, புஷ்பா என்ற 2 மகள்களும், செல்வராஜ் உட்பட மூன்று மகன்களும் உள்ளனர். இதில் செல்வராஜ் கடைசி மகன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கைலாசம் ஏற்கனவே இறந்த நிலையில் சோலையம்மாள் புறநகர் அரணாரை பிரிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்… வழியில் நேர்ந்த துயரம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் புதுக்கோட்டை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்தார். இவர் குளிர்பான கடை ஒன்றை லெப்பைக்குடிக்காட்டில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அகரம்சீகூரிலிருந்து அத்தியூர் புதுப்பேட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் அகரம்சீகூர் தடுப்பணை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு ஓரமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வைக்கோல் ஏற்றி சென்ற வண்டி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… பரிதாபமாக இறந்த உயிர்..!!

பெரம்பலூரில் லாரி மோதி மாட்டுவண்டி விபத்துக்குள்ளானதில் மாடு பரிதாபமாக உயிரிழந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்திற்கு மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றி வருவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மாட்டுவண்டி மீது ராட்சத லாரி ஒன்று திடீரென மோதியது. அதில் மாடு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… என்ஜினீயருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே என்ஜினீயர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசியலூரில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்த்தியாசன் என்ற மகன் உள்ளார். இவர் என்ஜினீயரிங் பட்டதாரி. இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் வசித்து வரும் முத்து ராஜேந்திரன் என்பவரது மகன் சுபாஷும் அமிர்த்தியாசனும் பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு அதன் பின் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே மோட்டார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த வருடம் பிறை ஏதும் தென்படல..! சமூக இடைவெளியை கடைபிடித்து… நோன்பை திறந்த முஸ்லீம்கள்..!!

பெரம்பலூரில் சமூக இடைவெளியை பின்பற்றி முஸ்லீம்கள் ரமலான் நோன்பினை திறந்தனர். ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் 30 நாட்கள் நோன்பிருப்பர். மேலும் நோன்பு இருந்து ஐந்து வேளையும் தொழுகை செய்வார்கள். ரம்ஜானுக்கு வானில் தோன்றும் பிறையை வைத்து நோன்பு தொடங்குவது வழக்கம். பிறை தென்படாத நிலையில் நோன்பை ரமலான் மாதத்தின் முதல் தேதியில் முஸ்லிம்கள் தொடங்குவார்கள். இந்த வருடம் சில மாநிலங்களில் கடந்த 12-ஆம் தேதி வரையில் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதுவும் தென்படவில்லை. எனவே நோன்பு ரமலான் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் உயிரோட விற்குறாங்க..! வனத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்..!!

பெரம்பலூரில் வனவிலங்குகளை உயிருடன் விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் உயிருடன் பிடித்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஷ்புரம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வனவிலங்குகள் உயிருடன் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயிருடன் இருந்த நாளில் 4 கானாங்கோழிகள், 7 முயல்கள், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு… தீ தொண்டு நாளை முன்னிட்டு… மலர் வளையம் வைத்து அஞ்சலி..!!

பெரம்பலூரில் பணியிலிருந்து இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நாளை முன்னிட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தீ தொண்டு நாள் வாரம் பெரம்பலூர் தீயணைப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் கடைபிடிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, நிலைய அலுவலர் உதயகுமார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி… போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை..!!

பெரம்பலூரில் கொரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செல்லக்கூடாது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு… தண்டாயுதபாணி கோவிலில்… சிறப்பு படி பூஜை விழா..!!

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் நேற்று முன்தினம் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு படி பூஜை விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் மலையில் சிறப்பு வாய்ந்த பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. மற்ற முருகன் கோவில்களில் முருகப்பெருமானின் கையில் வேல் இருக்கும். ஆனால் இந்த தலத்தில் வேலுக்கு பதிலாக முருகர் செங்கரும்பு ஏந்தி நிற்கிறார். இதனால் “செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர்” என்ற சிறப்பு பெயரும் உண்டு. இங்கு தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நேற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி… மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!!

பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வல்லாபுரம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். பெரியம்மாள் கடந்த 12-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் ராணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க சித்திரை மாசம்னா இது தான்..! கிராம மக்களின் வினோத திருவிழா… அம்மனுக்கு சிறப்பு படையல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம், லாடபுரம் கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா ஊராடங்கால் கடந்த வருடம் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படவில்லை. இந்த வருடமும் கொரோனாவினால் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முயல் வேட்டை திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் அனுமதி மறுக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதனால் அம்மாபாளையம், லாடபுரம் ஆகிய கிராமங்களில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தற்போது 2-வது அலை பரவி வருகிறது… இங்க இது இல்லாம வராதீங்க… நிர்வாக அலுவலர் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டம் உழவர் சந்தையில் முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. கொரோனா தொற்று 2-வது அலை தற்போது பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு போயிருந்தேன் சார்..! பெண் பரபரப்பு புகார்… போலீஸ் வலைவீச்சு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள அம்மன் நகர் பகுதியில் காமீல்பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதாபானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமீல்பாஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருக்கிறார். இதனால் தனது குழந்தைகளுடன் பரிதாபானு மேட்டு தெருவில் உள்ள மாமனார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்பு… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 11-ஆம் தேதி 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… தாய்க்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீச்செருவாய் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற தாய் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவரும் சின்னாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை தடுக்க தான் அவ்ளோ போராட்டம்… பொதுமக்கள் கொஞ்சம் கூட பொருட்படுத்தல… அதிகாரிகள் தகவல்..!!

பெரம்பலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலரும் பின்பற்றுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை, காவல்துறையினர், நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. மேலும் பலரும் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் பயணம் செய்வதை காண […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்… இதுவரை விதிமுறைகளை மீறியவர்கள்… அபராதமாக வசூலிக்கப்பட்டவை..!!

பெரம்பலூரில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்ற இரண்டு பேரிடம் ரூ.500 வீதம் 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் முதல் கவசம் அணியாமல் சென்ற 211 பேரிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்… இதை கட்டாயம் கடைப்பிடிக்கணும்… மீறினால் அபராதம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை காவல்துறையினர் மற்றும் நகராட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ம் தேதி தலா ரூ.200 வீதம் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 166 பேரிடம் ரூ.33 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதே போல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 8 பேரிடம் தலா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… அரை மணி நேரம் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

குன்னம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் அரை மணி நேரம் பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு கடந்த 11-ஆம் தேதி 98.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. மேலும் வெயில் பகல் நேரத்தில் வாட்டி வதைத்தது. ஆனால் பல்வேறு இடங்களில் மாலையில் கோடை மழை திடீரென பெய்தது. சுமார் அரை மணி நேரமாக காற்றுடன் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். குன்னம் பகுதியில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் நடக்குது..! விவசாயி எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் குடும்பத்தகராறு காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு அதன் பின் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சூர்யாவுக்கும், இருவருக்கும் இடையே குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயராமன் மன வேதனையில் […]

Categories

Tech |