பெரம்பலூரில் சட்டவிரோதமாக புகையிலை மூட்டைகளை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் குபேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் பறக்கும் […]
Category: பெரம்பலூர்
பெரம்பலூரில் மதன கோபால சுவாமிவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி தினமும் வாகனங்களில் புறப்பாடு நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான உதய கருட சேவை நேற்று காலை நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]
பெரம்பலூரில் அலுவல் நேரத்தை ஓய்வு தினமாக கடைபிடிக்கும் காத்திருப்பு போராட்டத்தை எல்.ஐ.சி. முகவர்கள் நடத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எல்.ஐ.சி. முகவர்கள் அலுவல் நேரத்தை ஓய்வு தினமாக கடைபிடிக்கும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், எல்.ஐ.சி.யில் அன்னிய முதலீடு மற்றும் தனியார் மயமாக்கல் செய்வதை கைவிட கோரியும், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கியுள்ளார். தலைவர் அகஸ்டின், மாவட்ட செயலாளர் துரைசாமி, நிர்வாகிகள், பொருளாளர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் இதர பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் சேம நல நிதி, […]
பெரம்பலூரில் நேற்று மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று நோயால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
பெரம்பலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டைப்பாடியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் ராமசாமி என்பவருக்கும் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகன் தரப்பினருக்கும், ராமசாமி தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் […]
பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 68,600 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்டையன்குடிகாடு […]
பெரம்பலூர் நான்கு வழி சாலையில் வாகன சோதனையின்போது காரில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 910 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணங்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் […]
பெரம்பலூரில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரம்பலூரில் சிறப்பு வாய்ந்த மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக பங்குனி உத்திர திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் தாமதமாக பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தை […]
பெரம்பலூரில் மின் மோட்டார் தொட்டியில் குளிக்கச் சென்ற முதியவர் கால் தடுமாறி கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கலம் கிராமத்தில் பெரியசாமி என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சௌந்தரராஜன் என்னும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றில் மின்மோட்டார் தொட்டியும் குளிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி அந்த மின்மோட்டார் தொட்டியில் குளிப்பதற்காக […]
பெரம்பலூரில் ஒரே நாளில் கொரோனா வைரஸால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும்ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் பெரம்பலூர்-எளம்பலூர் சாலை பகுதியில் ஒரே வீட்டில் ஆசிரியர்களின் […]
பெரம்பலூரில் வீட்டின் ஜன்னல் கம்பியை பெயர்த்தெடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் சாம்சன் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாதிரியார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கெத்சியா, சோபியா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான சோபியாவிற்கு சென்ற பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவருடன் திருமண […]
பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாமியப்பா நகர் 7-வது குறுக்குத் தெருவில் ஆரிப்ஹான்என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஹீராபானு. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஆரிப்ஹான் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஹீராபானு மாமியார் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஹீராபானு தனது குடும்பத்தினரை அழைத்துக் […]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர் கனிமொழி தலைமையில் எசனைக் காட்டு மாரியம்மன் கோவில் பகுதி அருகில் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.5 லட்சம் பணம் […]
பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதி அருகே வாகன சோதனையின் போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதி அருகே வட்ட வழங்கல் அலுவலர் திலகவதி தலைமையில் பறக்கும் படையினரும், காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் ஆவணமில்லாமல் ரூ.1 லட்சம் […]
பெரம்பலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 816 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்களில் 20,400 […]
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,271 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா […]
பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரியில் பறக்கும் படையினர், சிறப்பு காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், போலீஸ் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை […]
பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே வாகன சோதனையின்போது லாரி டிரைவரிடம் இருந்து ஆவணமில்லாத ரூ. 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உடும்பியத்தில் கனிம வளத்துறை துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு தஞ்சாவூர் நோக்கி சேலத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. அதனை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.80 ஆயிரத்து 100 […]
பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அருண் பாண்டியன் என்ற மகன் உள்ளார். அருண்பாண்டியன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காசி நேற்று முன்தினம் குடும்பத்துடன் வயலுக்கு சென்றுள்ளார். காசியின் மகன் அருண்பாண்டியன் பள்ளிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மதிய உணவு […]
பெரம்பலூரில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சென்ற 142 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடப்பதால் அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்பவர்களுக்கு ரூ. 500-ம், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. […]
இரண்டு தொகுதிகளை மட்டுமே கொண்ட சிறிய மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள ரஞ்சன்குடி கோட்டை முன்பு காவல் கோட்டையாக இருந்ததாகவும், அங்கிருந்து பல போர்கள் நடைபெற்றதாகவும் வரலாற்றாளர்கள் கூறுகின்றன. மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த காப்புக் காடுகள் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. சோழர்கால வாலீஸ்வரர் ஆலயம், வெங்கனூர் விருதாச்சலேஸ்வரர் ஆலயம், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி ஆலயம் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 5 […]
பெரம்பலூர் அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினாலோ, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மங்களமேடு உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தல், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு முறை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மங்களமேடு துணை போலீஸ் […]
பெரம்பலூர் அருகே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துறை மங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் கலையரசி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாரியம்மாள், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். […]
பெரம்பலூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டியில் வேலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் என்ற மகன் உள்ளார். கனகராஜ் விவசாயம் செய்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. […]
அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 676 பேர் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பல்வேறு இடங்களில் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியும் ஆங்காங்கே செலுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார அரசு மருத்துவமனைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இரண்டு தனியார் மருத்துவமனைகளிலும், பெரம்பலூரில் […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாதலை கண்டித்து பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை கண்டித்து பல்வேறு இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. 350 வங்கி ஊழியர்கள் […]
பெரம்பலூர் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொடுக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை கிராமத்தில் சென்ற 12-ஆம் தேதி அன்று திடீரென மின்மாற்றி வெடித்து மின் தடை ஏற்பட்டுள்ளது. அந்த மின்மாற்றியை மின் ஊழியர்கள் சரி செய்யாமல் இருந்ததால் அரணாரை கிராமத்தில் நேற்று முன்தினம் மின்சாரம் இல்லாமல் அப்பகுதியே இருளில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சரக்கு வாகனத்தில் […]
பெரம்பலூர் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒரு வயதுடைய பெண் மான் பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே ரஞ்சன்குடி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான்கள் கூட்டமாக வசித்து வருகின்றது. இந்நிலையில் ஒரு வயது உடைய பெண்மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி வி.களத்தூர் தைக்கால் பிரிவு பகுதியில் சாலை அருகே நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கூட்டமாக வந்த தெருநாய்கள் மேய்ந்து கொண்டிருந்த மானை துரத்தி […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூரில் இளைஞர்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூரில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் இயக்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் இயக்கத்தின் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் அருகே மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து […]
பெரம்பலூர் அருகே காத்தாயி அம்மனுக்கு நாட்டார்மங்கலத்தில் வீதி உலா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் ஈஸ்வரன்-பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூமுனி, காத்தாயி அம்மன், ராயமுனி, செம்முனி, வேதமுனி ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. அதன்பின் காத்தாயி அம்மனுக்கு, பச்சையம்மன் கோவிலை சுற்றி […]
பெரம்பலூர் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் சங்கர் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி சென்றார். லாரி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி டிரைவர் திடீரென லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் பொருட்களை வாங்கிவிட்டு லாரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். […]
சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன […]
பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோனேரிபாளையம் அருகே நான்கு ரோடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆத்தூர் […]
பெரம்பலூர் அருகே வேப்பமரத்தில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தீபக் என்பவர் வசித்து வந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வேப்பமரம் ஒன்றில் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் […]
பெரம்பலூர் அருகே அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சூரை திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் சுவேத நதிக்கரையில் உள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று இந்த கோவிலில் சூரை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து காளி புறப்பாடு நடைபெற்றது. அதன் பின் 10 மணிக்கு குடல் பிடுங்கி மாலையிடுத்தல் நிகழ்ச்சி, வள்ளால ராஜன் கோட்டை மிதித்தல் போன்றவை நடைபெற்றது. அதனை […]
பெரம்பலூரில் வாகன சோதனையின் போது 155 மதுபாட்டில்களை மொபட்டில் வந்த மர்ம நபரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் உடனடி பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த […]
பெரம்பலூர் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின் போது காரில் வந்தவரிடமிருந்து ஆவணமில்லாத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் […]
பெரம்பலூரில் வாகன சோதனையின்போது சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 110 ஆவணமில்லாத பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் பரிசு பொருட்கள், வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் ஆகியவை எடுத்து செல்லப்படுகிறதா ? என்று தேர்தல் கண்காணிப்பு குழுவினரும், […]
பெரம்பலூரில் குப்பை கொட்டுவதற்கு சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் சுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கவிதா சம்பவத்தன்று வீட்டில் இருந்த குப்பைகளை கொட்டுவதற்காக எளம்பலூர் பிரதான சாலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் […]
பெரம்பலூரில் பெற்றோர்கள் வைத்திருந்த மாத்திரையை சிறுவன் விளையாட்டுத்தனமாக தின்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து வயதேயான நிவாஸ் என்ற மகன் இருந்தார். இவர் சென்ற புதன்கிழமை அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு பெற்றோர்கள் வைத்திருந்த மாத்திரை, மருந்துகளை எடுத்து அந்த சிறுவன் தின்றுள்ளான். இதையடுத்து மயங்கி விழுந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
பெரம்பலூரில் கொரோனா தொற்றால் நேற்று புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தும், சில இடங்களில் அதிகரித்தும் வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் பல்வேறு இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. பெரம்பலூர் […]
பெரம்பலூர் அருகே ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பணத்தை வாகன சோதனையின்போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் சுரங்கம் மற்றும் கனிம துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் […]
பெரம்பலூரில் மகளிர் சுய உதவி குழுவினர் 100% வாக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகிலிருந்து புறப்பட்டது. ஊர்வலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீ வெங்கட பிரியா, துணை மாவட்ட […]
பெரம்பலூரில் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் செல்லும் வழியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. அது அப்பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்ற விவசாயிக்கு சொந்தமான கிணறு. அந்த கிணற்று தண்ணீரில் ஆண் மயில் ஒன்று நேற்று காலை தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து பெரம்பலூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் […]
பெரம்பலூரில் ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம்-விராலிபட்டி சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் […]
பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தீபா இரவு அவருடைய பெரியம்மா ராஜலட்சுமியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ இருக்கும் அறைக்கு […]
பெரம்பலூரில் குடி பழக்கத்தை தாய் கண்டித்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரமணி என்ற மகன் இருந்தார். சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி, மகன் வீரமணியுடன் வசித்து வந்தார். வீரமணி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி வீட்டுக்கு மது அருந்தி வந்துள்ளார். […]
பெரம்பலூரில் மருந்தக குடோனை உடைத்து ரூ.76 ஆயிரம் பணம் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் சிவனேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்தக குடோன் வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். அந்த குடோனில் இருந்து பெரம்பலூரில் உள்ள மருந்தக கடைகளுக்கு மருந்து பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பெரம்பலூரில் வசித்து வரும் இளங்கோ, மருந்தக குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். […]