Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையில் பெரும் பரபரப்பு…! அதிமுக EX MLA, மாநில செயலாளர் உட்பட 17 பேர் கைது: போலீஸ் அதிரடி !!

புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 15 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இன்று அதிமுக சார்பில் பந்து அறிவிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 28ல் பந்த்: அதிமுக அறிவிப்பு …!!

புதுச்சேரியில் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த கோரிக்கையை சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான்,  எங்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் செயல்பட முடியும் என்று தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமியின் கருத்து புதுச்சேரியில் மிகுந்த  அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையிலே முதல்வருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவும் இதற்கு ஆதரவளித்திருக்கின்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… சாலையோரங்களில் பேனர் வைப்பதற்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்அப் டிபியில் ஆளுநர் தமிழிசை”…. அமேசான் கூப்பன் ரீசார்ஜ்…. திடீர் மெசேஜால் பதறிப்போன அமைச்சர்….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா என்பவர் இருக்கிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதன் பிறகு மெசேஜ் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் டிபியில் ஆளுநர் தமிழிசையின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அமைச்சர் சந்திர பிரியங்கா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி வேலைக்காக மெசேஜ் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகள் முன் சீன்….. நடு ரோட்டில் அலப்பறை செய்த 2k ப்ளூ சட்டை…. தொல்ல தாங்க முடியலப்பா….!!!!!

புதுச்சேரி அடுத்த காலப்பட்டு பகுதியில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளின் முன் சாலையில் தண்டால் எடுத்து சாகசம் செய்யும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி காலப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடும் நேரத்தில் சாலையில் சாகசம் செய்யும் வாலிபர்களின் ரகளை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு எதிரே இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக தண்டால் எடுப்பது போன்ற பல்வேறு சாகசங்களை காட்டியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள்…. வலைதளத்தில் போலி வதந்திகள் பரவுவதாக பரபரப்பு புகார்…!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போடு செம!…. “மருத்துவம், பொறியியல், சட்டம்”…. இனி அனைத்து படிப்புகளும் தாய்மொழியில்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

புதுச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் Modi @ 20: Dreams meat Delivery என்ற புத்தக கருத்தரங்கு கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியின் போது வேல்முருகன் பிரதமர் மோடியின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், குடிமை பொருள் வழங்கல் துறை […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி… சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்… காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

புதுச்சேரியில் ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பிள்ளை சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பிலிருந்து காப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் தமிழக மீனவ பகுதியில் கடல் நீர் உட்பகுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியிலும் கற்கள் கொட்டப்பட வேண்டும் என தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது” அலங்கோலமான ஆட்சி விரைவில் கலைக்கப்படும்…. EX. முதல்வர் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது அதிகரித்ததோடு பணவீக்கம் குறைந்து வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியானது 9 சதவீதத்திலிருந்து தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82-ஐ தாண்டி விட்டது. இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை படியானது அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படியானது பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மின்சாரத்துறை தனியார் வசம் போகாது” அரசின் உறுதியால் போராட்டம் வாபஸ்….!!!!

புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு…”மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்”.. வெளியான தகவல்…!!!!

மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை  ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் அரசியல் பரபரப்பு…! முற்றும் பாஜக – என்.ஆர் காங்கிரஸ் மோதல்… சபாநாயகருடன் MLAக்கள் திடீர் சந்திப்பு …!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”என்ஆர்” காங்கிரஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு எந்த வித உதவியும் முதலமைச்சர் செய்து தரவில்லை என தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கிருந்தார்கள. கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த போராட்டம் என்பது வலுத்து வருகின்றது. முதலமைச்சருக்கு எதிராகவும் பாஜகவினர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மணல் திருட்டு வழக்கு –  திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது ..!!

விழுப்புரம் திருக்கனூர் புதுச்சேரி பகுதியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலர் சரவணனை  புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். திமுகவைச் சேர்ந்த இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல வருடங்களாகவே இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீப காலமாகவே புதுச்சேரிகளில் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் பெரும் பதற்றம்…! ஆ.ராசாவை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் – 3பேருந்து மீது தாக்குதல்…!!

இந்துக்களை பற்றி இழிவாக பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்களைப் பற்றியும் தவறாக பேசிய திமுக எம்பி ராசா மீது மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும்,  அவரை கண்டித்தும் புதுச்சேரியில் ஒரு நாள் முழு  அடைப்பு போராட்டம் ஆனது இந்து முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெறுகின்றது.காலை ஆறு மணியிலிருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மாமியார்-மருமகள் சண்டை” மரணத்தில் முடிந்த விபரீதம்…. உயிருக்கு போராடும் மகன்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: தி.க – இந்துமுன்னணி மாறிமாறி தாக்குதல் – பெரும் பரபரப்பு …!!

திமுக எம்.பி ஆ.ராசா இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்துக்களுக்கு எதிராகவும்,  பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில்  நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ் சி/ எஸ் டி மக்களை பஞ்சமர்கள்  என்றும்,  எம்பிசி / ஓபிசி மக்களை சூத்திரர்கள் என்றும், பெண்களை விபச்சாரிகள் என்றும் கூறும் மனுதர்ம  […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி” 38 பேர் பாலியல் உறவு…. ப்ரோக்கர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த 13-ஆம் தேதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது விபச்சாரம் நடப்பது உறுதியானதால், அங்கிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, 1 இளம் பெண்ணையும் மீட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ப்ரோக்கர் பால்ராஜ் என்பதும், வாடிக்கையாளராக வந்திருந்த பச்சையப்பன் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டிலிருந்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. கேக் என்று நினைத்து எலி மருந்து சாப்பிட்ட சிறுமி பலி…. அதிர்ச்சி சம்பவம்….!!!

காரைக்காலில் கேக் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சலேத் நிதிக்‌ஷனா உயிரிழந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்டதால் இப்போது வரை அவரால் சரியாக நடக்க முடியவில்லை. நோய் பாதிப்பு காரணமாக இவரால் சரியாக நடக்க இயலாமல் சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடப்பார். இந்நிலையில் திடீரென்று நேற்று வாந்தி எடுத்துள்ளார். இதனை விசாரித்த போது கேக் என்று நினைத்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூழாங்கள் படத்திற்கு குவியும் விருது….. குஷியில் விக்கி-நயன்….. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கூழாங்கல் படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் 3 நாட்கள் இந்திய திரைப்பட விழா நடைபெறும். இவ்ழிழா வருகிற செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வழங்கி கௌரவிப்பார். இந்நிலையில் சிறந்த திரைப்படத்திற்காக வருடம்தோறும் சங்கரதாஸ் சுவாமிகள் என்ற விருதுகள் வழங்கப்படும். இந்த விருது கூழாங்கல் திரைப்படத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூழாங்கல் திரைப்படத்தை பி.எஸ் வினோத் ராஜ் இயக்க, நயன்தாரா […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தாயின் அருகே படுத்து கொண்டு…… சாகும் தருவாயில் மாணவன் கூறிய கடைசி வார்த்தைகள்….. நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…..!!!!

மாணவனின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் ராஜேந்திரன்-மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய 2-வது மகன் பால மணிகண்டன் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு படிப்பின் மீது உள்ள மிகுந்த ஆர்வத்தினால் எப்போதுமே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மாணவனுடன் படிக்கும் அருள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மத்திய‌ அரசு தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு…. கண்டிப்பாக இத ஃபாலோ பண்ணனும்…. மாநில அரசின் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு படை பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான தேர்வு மையங்களில் புதுச்சேரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை 3 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு லாஸ்ட்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செல்ல பெருமாள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சண்டே மார்க்கெட் செயல்படுவதற்கு தடை….. காரணம் என்ன….? அரசு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் தற்போது குறைந்ததால் கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த பிறகு 3 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு பிறகு சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்… பழங்குடியின மற்றும் நரிக்குறவ மக்களுக்கு இலவச வீடுகள்…. முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தடுக்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூறியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது திமுக எம்எல்ஏ செந்தில்குமார் தனது தொகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் வீடு இல்லாமல் சிரமப்படுவதாகவும், பல மதங்களாக முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே! இது வேற லெவல்…. முதியோர் உதவித் தொகையை உயர்த்திய முதல்வர்…. எவ்வளவு தெரியுமா…..? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

முதியோர் உதவி தொகையை அதிகரிக்கப் போவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது எதிர் கட்சி தலைவர் சிவா முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவி தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. உதவித்தொகை கிடைக்காமல் பலர் சிரமத்திற்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை அரசு பொது விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. மொகரம் பண்டிகையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…. சிறுவன் உட்பட 4 பேர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவிபி நகர் அருகே மாணவர்களிடம் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர்கள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை” கூடிய விரைவில் அறிமுகம்…. ஆளுநர் அறிவிப்பு….!!!

புதிய கல்வி கொள்கை திட்டம்  கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என ஆளுநர் கூறியுள்ளார். புதுச்சேரியில் கூடிய விரைவில் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதிய கல்வி கொள்கை திட்டத்தை பொருத்தவரை எந்த ஒரு மொழியையும் திணிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நம்முடைய தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பம்…… வாலிபர் வெறிச்செயல்….. பெற்றோர் அதிர்ச்சி….!!!!

புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் விசாரணை செய்ததில், முருகன் என்ற வாலிபரே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி…. புதுவை கவர்னர் புதிய அறிவிப்பு….!!!

ஆளுநர் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இவர் பள்ளிகளின் தரம், சிறப்பு மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறார். இவர் தற்போது 2 நாள் சுற்றுப்பயணமாக காரைக்காலுக்கு சென்றுள்ளார். இந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவ […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு ….!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை  நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 4-ஆம்  வகுப்பு சிறுமியை  கடந்த 2020 -ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள்…. 10 நாட்களுக்குள் தொடங்கப்படும்…. கவர்னர் புதிய அறிவிப்பு….!!!

மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் கூடிய விரைவில் இயக்கப்படும் என கவர்னர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பள்ளிகளுக்கு செல்ல இருக்கிறேன். இன்று 5 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களோடு சேர்ந்து மதிய உணவு அருந்துவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார். இதனையடுத்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் செல்ல இருப்பதால் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை தெரிந்து கொண்டு சரி செய்ய முடியும். அதன் பிறகு சுகாதாரத் […]

Categories
புதுச்சேரி

மூன்று நாட்கள் பள்ளி….. கல்லூரிகளுக்கு விடுமுறை….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலராவுக்கு இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக் கூடங்களில் ஆய்வு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“தமிழ்த்தாய் வாழ்த்து” விழாவை விட்டு வெளியேறிய முதல்வர்…. அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு….!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பல்வேறு பகுதிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு மற்றும் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துவது போன்ற பல்வேறு விதமான சம்பவங்கள் அரசு விழாக்களில் நடந்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிலம்பம் போட்டி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டுக்கள்….!!!!!!!

புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மூன்றாவது ஆல் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப்  இந்தியா  அண்ட் – 2022 சார்பில் மூன்று நாட்கள் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி  இந்த கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம் வருட மாணவன் ஆசிக் உடுமன் ஸ்டிக் பென்சிங்  என்னும் சிலம்பம் போட்டியில் 3 தங்கப் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” அமைச்சர் தகவல்….!!!

சிறப்பாக நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தொழில் முனைவோருக்கான  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என கூறியுள்ளார். அதன்படி பிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

“புதுச்சேரி மது பிரியர்களே உஷார்”…. தீவிர ரோந்து பணியில் போலீசார்….!!!!!!

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் வீக் எண்ட் பார்ட்டி  என்ற பெயரில் இளைஞர்கள் பலரும் குவிகின்றன. இந்நிலையில் புதுச்சேரி வரும் நபர்கள் கடற்கரை ஆரோவில், சுண்ணாம்பாறு படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பலரது விருப்பமாக உள்ள புதுச்சேரி சாராயம், […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம்…. இயக்குனர் அதிரடி உத்தரவு…!!!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறார். புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஜிப்மரில் புதுவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெளிமாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். சில காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரை விநியோக தன்மை தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊசி பாசி வாங்க வந்த குறவர் இன சிறுமியிடம் சில்மிஷம்….போக்சோ சட்டத்தில் கைது…!!!!

புதுச்சேரி  மாநிலம்  சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (42). இவர், புதிய பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி, பாசி, மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக்கமாக உள்ளது. அதுபோல் கணவரை இழந்த நரிக்குறவ பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன், சங்கர்லால் கடைக்கு சென்று ஊசி, பாசி, மணிகள் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற  14-ஆம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மறுநாள் ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் அரசு பொது விடுமுறை. ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம். இடையில் ஏப்ரல் 16-ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள், இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் சனிக்கிழமை அரசு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

“என்னடா லைன் கட்டி நிக்கிறிங்க”…. சிறுவனுடன் விளையாடும் அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!!

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. இவர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே!…. இது என்ன வித்தியாசமா இருக்கு?…. இப்படி ஒரு பட்டாம்பூச்சியா?!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேடுவார்நத்தம் என்ற பகுதியில் வேலன், ஆனந்த் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் இன்று மாலை ஆனந்த் காயவைக்கப்பட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது உருவத்தில் வித்தியாசமான பூச்சி ஒன்று அங்கிருந்த செடிகளில் இருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அதன் அருகில் சென்று பார்த்தபோது அது உருவத்தில் பட்டாம்பூச்சி போல தெரிந்துள்ளது. ஆனால் சாதாரண பட்டாம்பூச்சியை விட […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

பேயாக மாறி குழந்தையை அடித்து தாக்கும் கொடூர தாய்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெற்ற தாய்,தன் குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் கணேஷ். இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணம்  நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது .மேலும்  மனைவி சாந்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் திடீரென கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் சண்டையிட்டு இருவரும் பிரிந்து,தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குபேர் மீன் மார்க்கெட்”…. அரசு விதித்த தடை…. 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டம்…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!

திடீரென மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநகராட்சியின் நகரப் பகுதியில் குபேர்‌ மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் பிரஞ்சு காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட் கட்டப்பட்டு 5 வருடங்கள் ஆகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு இதுவரை மீனவர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் நகரப் பகுதியில் மீன் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஏப்ரல் 11-ம் தேதி”…. பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 2 வருடங்களுக்குப் பிறகு திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டனர். அதாவது பக்தர்கள் பாதயாத்திரை, பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள். இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலில் ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

திடீர் மின்கட்டணம் உயர்வு… பாஜக அரசு ஆதரவு…!!!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி பாஜக தொடக்க நாள் மற்றும் சாதனை நாள் விழா விழா நடைபெற்றுவருகிறது. அன்றைய தினம் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களுடன் பேசயிருக்கிறார். இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பாஜக நிர்வாகிகள் பிரதமரின் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேசியபோது, நாடு முழுவதும் முதன் முறையாக ஏப்ரல் 16-ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி விழா […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

இன்று முதல் இவர்களுக்கு ஊதிய உயர்வு…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு…!!!!

புதுச்சேரியில் அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவ பணியாளர்களுக்கு இன்று (ஏப்ரல் 1)-ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் ரூபாய் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாகவும், மருத்துவ பணியாளர்களுக்கு 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
புதுச்சேரி

1 மணி நேரம்…. போனுடன் விளையாடிய குரங்கு…. வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம்….!!

புதுச்சேரி மாவட்டத்தில் தாவரவியல் உழவர்சந்தை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் சந்தையின் அருகே இளநீர் கடையை பெண் வியாபாரி ஒருவர் நடத்தி வந்தார். அந்த பெண் வியாபாரி சிறிது அசந்த நேரத்தில் அருகில் வைத்திருந்த செல்போனை குரங்கு ஒன்று எடுத்து சென்றது.  செல்போனை எடுத்து மரத்தின் பொந்தில் வைத்துவிட்டு அதை அடிக்கடி எடுத்து பட்டனை அழுத்தி பார்த்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பெண் வியாபாரிக்கு வேறொரு வியாபாரி போன் செய்திருந்தார். அதன் சத்தம் கேட்டு குரங்கு செல்போனை காதில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களுக்கு இப்படியொரு வசதி…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

மதுகுடிக்க வருபவர்களுக்கு சிறப்பு வசதி செய்து கொடுத்ததால் உரிமையாளரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள செப்ப்பட்டி கிராமத்தில் தனியார் சாராயக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு மதுகுடிக்க வருபவர்கள் சங்கராபரணி ஆற்றைக் கடந்துதான் வரவேண்டும். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் கிராமத்துக்கு குடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனால் கடை உரிமையாளருக்கு வருமானம் குறைந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர் சங்கராபுரம் ஆற்றை கடப்பதற்காக தெப்பம் அமைத்து கொடுத்துள்ளார். இந்த தகவலை அறிந்த மதுபிரியர்கள் பலர்  […]

Categories

Tech |