Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பள்ளி மாணவி…. இவன் தான் காரணம்…. தாயின் குற்றசாட்டு….!!

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் ரூபிசகாய சாந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார் இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. ஆதலால் இச்சம்பவம் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வருக்கான பாதுகாப்பு வாபஸ் ….!!

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நாராயணசாமிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தனது முதலமைச்சர் பொறுப்பை நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் அவர் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தையும் திரும்ப ஒப்படைத்தார். குறிப்பாக தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டபோது தனது இரண்டு கான்வாய் வாகனங்களில் ஒன்றை வேண்டாம் என தெரிவித்திருந்தார். ஒரு வாகனத்தை மட்டுமே அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவையின் ராஜினாமா கடிதம் ஏற்பு ?

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும் அமைச்சரவை ராஜினாமா பெறுவதற்கான கடிதத்தையும் கொடுத்ததாக செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சரவை ராஜினாமா தொடர்பாக கொடுத்த கடிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்கிரஸ் அதிரடி …! ”1இல்ல… 2இல்ல” எல்லாரும் ராஜினாமா ?…. பரபரப்பாகும் அரசியல் களம் …!!

புதுவையில் ஆளும் அரசு கவிழந்ததால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று காலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை என்று நாங்கள் சொன்னோம். அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டு ஆளுநரை சந்தித்து  அமைச்சரவை ராஜினாமா செய்யும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவை அமைச்சரவை ராஜினாமா…! ஆளுநர் முடிவெடுப்பார்…. மக்கள் தண்டனை கொடுப்பாங்க …!!

புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து மாநில அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு செய்த […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Big Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி…. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது ….!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புறக்கணிக்கப்பட்டவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி – முதல்வர் நாராயணசாமி …!!

புதுவை சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகின்றார். அதில், கொரோனா காலத்தில் அரசு செய்த பணி பாராட்டுக்குரியது. புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு.கண்டனத்தை என்.ஆர் காங்கிரஸ் அரசின் விட்டு சென்ற பணிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றினோம். பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் கட்சி சார்பில் 14 […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

விடிய விடிய மழை வெள்ளக்காடான புதுச்சேரி… வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..!!

கனமழையால் தத்தளித்து வரும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீருக்குள் புகுந்து உள்ளது. பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் நகரப்பகுதி, கோரிமேடு, புதிய பேருந்து நிலையம், காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கிராமப்பகுதிகளில் வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

FlashNews: நாளை காலை இறுதி முடிவு – முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வர் பதவி ராஜினாமா ? வெளியான முக்கிய தகவல் …!!

புதுவை காங்கிரஸ் – திமுக கூட்டணி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நிற்கும் நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினரை விட ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் குறைந்துள்ளது. எதிர்கட்சியினர் பலம் 14 ஆக இருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் இன்றைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும், திமுகவில் இருந்து MLA ஒருவரும் விலகியிருக்கிறார். இதனால் காங்கிரஸில் 9 சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி அரசுக்கு வாழ்வா ? சாவா ? போராட்டம் …!!

புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகி உள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி இருக்கிறார். ஆனால் இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன்பாக முதலாவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தொடர்ச்சியாக ராஜினாமா செய்திருக்கிறார். புதுச்சேரியில் மொத்தம் மூன்று திமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

மக்களுக்கு ஒண்ணுமே செய்யல…! ஓட்டு கேட்க எப்படி போறது…. வேதனைப்பட்ட திமுக எம்எல்ஏ …!!

புதுவை அரசியல் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்து திருப்பமாக புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதலில் காங்கிரஸ்…. இப்போ திமுக…. கூட்டணி ஆச்சி காலி… புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என கூறி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற இருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தலைமையிலான அரசு தான் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் அரசு…! புதுவையில் பெரும் பரபரப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகியுள்ளார். இதனால் புதுவை சட்டப்பேரவையில் பலம் 27 ஆக குறைந்துள்ளது. அதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ள லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
கடலூர் புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

அடேங்கப்பா…! இது மழை காலமா ? புதுவை, கடலூரில் ”இம்புட்டு பெய்ந்திருக்கு”…!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்திருக்கிறது. நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் சர்சை…! வசமாக சிக்கிய ஆளுநர்.. புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வட மாநில ஊழியர்களை கடைசி நேரத்தில் பணி நிரந்தரம் செய்து துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்த போது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் நற்பெயர் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். இதனால் ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுவதாகவும், அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.இதனால் பல ஊழியர்கள் அவர்களது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் அதிர்ச்சி…! ”1இல்ல… 2இல்ல”… 10க்கும் மேற்பட்ட பெண்கள்.. இளைஞனின் பகீர் வாக்குமூலம் …!!

புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் ஆபாச படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கூவத்தூர் காரன் குப்பத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக், சமையல் வேலை செய்து வருகிறார். இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து ஆசை காட்டி மாணவியை காதல் வலையில் விழவைத்த கார்த்திக், வற்புறுத்தி ஆபாச புகைப்படங்களை பெற்று செல்போனில் பதிவு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

எஸ்.பியை அழ வைத்த கிரண்பேடி….! நெகிழ வைத்த சம்பவம் …!!

கிரண் பேடியின் பிரிவை தாங்க முடியாததால் புதுச்சேரி கிழக்கு எஸ்.பியான ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுதார் . புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தற்போது மாற்றப்பட்டதையடுத்து கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் அவரை நேரில் சந்தித்தார் . அப்போது கிரண்பேடி பதவியில் இருந்து விடை பெறுவதை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ரவுடியை வெட்டி சாய்த்த கும்பல்…. போலீசின் அதிரடி வேட்டை…. இருவர் கைது….!!

வில்லியனூரில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மணவெளி காசிவிசுவநாதர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வரந்தார். பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருந்துள்ளன. இந்நிலையில் இவர் இரவில் வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அரசு சாராய ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று மதனின் மோட்டார் சைக்கிளை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2கையெழுத்து போட்டேன்…! மக்கள் தலையெழுத்தை மாற்றும்… அதிரடி காட்டிய தமிழிசை …!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், புதுவையில் முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே SC/ST பிரிவினரை  சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை தான் நான் முதல் முதலில் போட்டேன் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கையெழுத்து நான் மருத்துவராக இருப்பதனால், எய்ட்ஸ் கண்ட்ரோல்  அதற்காக ஒரு உதவி தொகை கொடுக்கின்ற  கையெழுத்தாக இருந்தது. அதனால் ஒன்று […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

உடனே ”அந்த” இடத்துக்கு கிளம்புறேன்…! மக்களை ஊக்க படுத்தனும்… தமிழிசை செம அறிவிப்பு ….!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை, புதுச்சேரி மக்களுக்கு நேற்றைய தினம் வந்ததிலிருந்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு எந்த வகையில் ஒரு துணை நிலை ஆளுநராக செயலாற்ற முடியும் என்பதை முதல் நாள் இரவு அதிக நேரம் உட்கார்ந்து நான் ஆலோசனை செய்தேன். முதல் முதலில் நான் பெருமையாக இங்கே கருதுவது, நம்நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியை நம் நாட்டு மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு நம் நாட்டு விஞ்ஞானிகளும், நம்மை ஊக்கப் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

நான் மகப்பேறு மருத்துவர்…! ஏன் புதுவைக்கு வந்தேன் தெரியுமா ? நச்சுனு விளக்கிய தமிழிசை …!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கனா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக நேற்று பதவி ஏற்றார். பின்னர் பேசிய அவர், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநர் ஆக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் ஒரு சகோதரியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்பதை இறைவன் அருளால், ஆண்டவரின் அருளாலும், மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவரின் ஆசீர்வாதத்தாலும், என்ன ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், நான் வணங்கும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தாலும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், புதுச்சேரி மக்கள் ஆசீர்வாதத்தாலும், தமிழக மக்களின் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

இதற்காகதான் தமிழிசையை அனுப்பியுள்ளனர் – கே.எஸ்.அழகிரி

செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் கட்சியினுடைய செயற்குழு கூடி எவ்வளவு தொகுதிகள் என்று முடிவு செய்வோம். பாண்டிச்சேரியில் மீண்டும் மோடி அரசாங்கம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை…. நாராயணசாமி தலைமையிலான அரசாங்கத்தை செயல்பட விடாமல் செய்வதற்காக கிரண்பேடியை அனுப்பினார் மோடி. இப்போ அந்த அரசாங்கத்தையே சிதைத்து விடுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆளுநர் தமிழிசையை அனுப்பியிருக்கிறார் .மோடி இரண்டு பெண்களை அனுப்பி புதுவை மாநிலத்தை வீழ்த்துவது, சிதைத்து விடுவது என்று முடிவு செய்து செய்திருக்கிறார் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே…! இப்படி ஒரு தலைவரா ? அண்ணனாக மாறிய ராகுல்…! புத்துயிர் பெறும் காங்கிரஸ் …!!

தமிழகத்தை போல புதுவைக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர். நேற்று கூட புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பிறகு அங்குள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். My Name […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

சார் என்று சொல்ல வேண்டாம்: call me Rahul… புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி …!!

தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநிலக் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகளின் பார்வை தேர்தல் நடைபெறும் மாநிலங்களை நோக்கி விழுந்துள்ளது. கடந்த வாரம் நடந்த மத்திய பட்ஜெட்டில் கூட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,  பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய கட்சியின் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வெற்றிலாம் இல்ல…! எல்லாமே அரசியல் ஆதாயம்…. ரங்கசாமி கருத்து …!!

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது தொடர்பாக கருத்து கூறிய புதுவை முன்னாள் ரங்கசாமி, மரியாதைக்குரிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுத்திருப்பது என்று மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல நிர்வாக திறன் மிக்கவர், நல்ல முடிவுகளை எடுக்க கூடியவர். இங்கு கூடுதலாக பொறுப்பேற்று வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநில மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பார் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

கிரண்பேடி சூப்பர் தான்…! ஆனால் ”அது ஒன்னு” தான் தப்பு…. அதிமுக MLA சொன்னது இதான் …!!

புதுவை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் ஆளுநர் பொறுப்பாக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து பேசிய புதுவை அதிமுக சட்டமன்ற அன்பழகன், ஏற்கனவே இருந்த துணைநிலை ஆளுநர் நீக்கப்பட்டு, தமிழ் தெரிந்த, தமிழ் சமுதாயத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அதிமுக சார்பில் மனதார வரவேற்கின்றோம். புதுவை முதலமைச்சராக நாராயணசாமி இருந்ததில் இருந்து மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

நாங்களாம் யாரு ? சும்மா விட்டுருவோமா… தூக்கி விசிட்டோம்ல … மாஸ் காட்டும் நாராயணசாமி …!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, தொடர்ந்து நானும், மதசார்பற்ற மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் பலகட்ட போராட்டங்களை கிரண்பேடி அம்மையார் அவர்களுக்கு எதிராக நடத்தினோம். புதுச்சேரி மாநிலத்தில் அராஜகமாக நடந்து கொள்கிறார்,   விதிமுறைகளுக்கு மீறி செயல்படுகிறார், புதுச்சேரி மாநில மக்களுடைய உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறார், சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை, அமைச்சரவையை மதிப்பதில்லை, […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை – கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு …!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா ஆளுநர் இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குடியரசுத்தலைவர் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார் என்றும், கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ராகுல் நாளை புதுச்சேரிக்கு வருகை… கலைக்கப்படுமா….? காங்கிரஸ் ஆட்சி..!!

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி  தேர்தல் பிரசாரத்துக்காக நாளை புதுச்சேரி வர இருக்கும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் தற்போது முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக  இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவை ராஜினாமா இல்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது 10 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் என்று ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. இதேபோல எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்கள், பாஜக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

ஒரு நிமிடம் கூட தகுதியில்லை…! உடனே பதவி விலகனும்…. காங்கிரஸ் அரசுக்கு திடீர் சிக்கல் ..!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது. புதுவை அரசியல் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான NR காங்கிரஸ் கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் தற்போதைய நிலையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா…? அரசியலில் பரபரப்பு..!!

புதுவையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் ரஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் சமிபத்தில் காங்கிரஸில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ மேலும் இரண்டு பேர் ராஜினாம செய்தார். இதையடுத்து புதுவையில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணை மகிழ வைத்து… இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்… குவியும் பாராட்டுக்கள்…!!

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்திற்கு ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் அனைவரும் பரிசு வழங்கிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.  புதுச்சேரி மாவட்டம் கோபாலன் கடை என்ற பகுதியைச் சேர்ந்த கீர்த்திக்கா என்ற பெண் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஆதரவற்று இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் போன்ற இணையதளங்கள் வாயிலாக கீர்த்திகா சார்பாக வெளியிடப்பட்டு உதவி கோரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

5கோடி ரூபாய் கொடுங்க…! கொலை செய்ய ரெடி ? பிரதமருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது …!!

புதுச்சேரியில் சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடியை கொலை செய்ய ஐந்து கோடி ரூபாய் கேட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2ஆம் தேதி வாட்ஸப் மற்றும் சத்திய என்ற பெயரில் உள்ள பேஸ்புக் மூலம் புதுச்சேரியில் உள்ள சில ஜாதி தலைவர்களை கொல்ல வேண்டுமென பதிவிட பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு 5 கோடி ரூபாய் தரவேண்டும் என்று பதிவிட்டிருந்தது. இது தொடர்பாக அரியாங்குப்பத்தை  […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

4 மணி நேர கேம்….. மூளை நரம்பு பாதித்து….. பள்ளி சிறுவன் மரணம்…..!!

புதுச்சேரியில் நான்கு மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தி கேம் விளையாடிய சிறுவன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… தொடர்ந்து 4 மணி நேரம் ஆன்லைன் கேம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!!!

புதுச்சேரியில் 16 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன பெற்றோர் இரவு 11 மணிக்கு சிறுவனை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிப்பு..!!

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார். மக்கள் மத்தியில் இந்த ஆண்டு பட்ஜெட் நிதி நிலை அறிக்கையில் நிறைய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக  அரசு ஊழியர்களுக்கு வரி சலுகை எதுவும் கொடுக்க படவில்லை. மிக […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஹெட்செட் போட்டு போனில் மூழ்கிய சிறுவன்…! பிறகு நடந்த அதிர்ச்சியால் உறைந்து போன குடும்பம் …!!

புதுச்சேரியில் காதில் ஹெட் செட் மாட்டி கொண்டு நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதில் மயக்கமடைந்த 16 வயது சிறுவன் உயிரிழந்தான். வில்லியனூர்  அருகே உள்ள வீ.மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பனின் 16 வயது இளைய மகன் தர்சன் தனது மொபைல் போனில் ப்யர்வால் என்னும் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளான். தொடர்ந்து  4 மணி நேரம் காதில் ஹெட் செட் வைத்து கொண்டு  அதிக சத்தத்துடன் ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மணிக்கணக்கில் வீடியோ கேம்”… மயங்கி விழுந்த 16 வயது சிறுவன்…. உயிரை குடித்த விளையாட்டு..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தர்ஷன். இவர் செல்போனில் பயர்வால் என்னும் ஆன்லைன் கேமில் மணிக்கணக்கில் விளையாடி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று காதில் ஹெட் போன் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென்று சுய நினைவின்றி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அவரை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பேருந்தின் குறுக்கே வந்த மாடு… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

அச்சரப்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கடமை புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அதனால் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநர், அந்த மாடு மீது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.54,00,000…. “வெளிநாட்டு பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு”…. பணத்தை இழந்த ஐ.டி பெண்…!!

புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் அறிமுகமில்லாத நபர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தருவதாக நம்பி 54 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த சுனைனா என்ற மென்பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் நண்பர் ஆகியுள்ளார். வெளிநாட்டில் உரிய வேலையில் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணும் அவர் கூறுவதை உண்மை என்று நம்பி வந்துள்ளார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு வெளிநாட்டில் இருந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் புதுச்சேரி மாநில செய்திகள்

பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி… அதனை விரட்டி அடிப்போம்… வெகுண்டெழுந்த நாராயணசாமி …!!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி என்று  புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் நாராயணசாமி, “டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தேன். அப்போது அவர் புதுச்சேரிக்கு பரப்புரைக்கு  வருவதாக கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்திக்கு புதுச்சேரியின் மீது  ஒரு தனிப் பற்று உள்ளது. […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஆளுநரை சும்மா விடக்கூடாது…! டெல்லிக்கு பறந்த அமைச்சரக்கள்… புதுவையில் அரசியலில் பரபரப்பு …!!

புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். விவசாயிகளுக்கான […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சும்மா விட்டுருவோமா ? போராடி சாதித்த முதல்வர்… வழிக்கு வந்த ஆளுநர் …!!

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தோடு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடுவதாக முதலமைச்சர் திரு நாராயண சாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுசேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் திரு.நாராயண சாமி துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி அத்துமீறல்கள் மற்றும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காததை கண்டித்து அமைச்சர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து 17 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார். புதுசேரியின் வளர்ச்சி திடங்களை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

தவிக்க விட்டுப்போன மனைவி…. மகள்களோட திருமணம்…. பொறுப்பை உதறிவிட்டு தந்தை எடுத்த முடிவு…!!

கூலிதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள முத்து நகரை சார்ந்தவர் வேலாயுதம்-விஜயா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு விஜயா இறந்துவிடவே கூலித் தொழிலாளியான வேலாயுதம் மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாத காரணத்தினாலும் மனைவி இறந்து போன வேதனையாலும் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று மனைவியின் ஞாபகம் வந்ததால் வேதனையடைந்த வேலாயுதம் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

மனைவி இல்லாமல் தவிப்பு…. விரக்தியில் கணவர் எடுத்த முடிவு… தனித்துவிடப்பட்ட மகள்கள்…!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மடுகரை முத்து நகர் பகுதியில் வேலாயுதம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து மனைவியை இறந்த வேதனையில் இருந்த வேலாயுதம் தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மிகவும் மனவேதனையுடன் தவிர்த்துள்ளார். இந்நிலையில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“மனைவியின் மரணம்” வேதனையை தாங்க முடியல…. கணவர் எடுத்த முடிவு…. கதறும் மகள்கள்….!!

மனைவி இறந்த சோகம் தாங்காமல் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகிலுள்ள மடுகரை முத்து நகரில் வசிப்பவர் வேலாயுதம். கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் விஜயா. மேலும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பதாக விஜயா இறந்துவிட்டார். எனவே மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் மனைவி இறந்து வேதனையும் தாங்காமல் இருந்துள்ளார் வேலாயுதம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி நினைவு வரவே, […]

Categories
ஆன்மிகம் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்‍தர்கள்…!!!

புகழ்பெற்ற திருநள்ளார் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு            தற்பாரணி ஈஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த டிசம்பர் மாதம்  27-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந் நிலையில் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்லைனில் பதிவு […]

Categories

Tech |