புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக எம்.பி கோகுல கிருஷ்ணன் பேசிய போது தனது முகக்கவசத்தை தலையில் அணிந்துள்ளார். புதுச்சேரியில் ரூ.3.17கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ள லாஸ் பேட்டை காவல் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா ஈசி.ஆர். சாலையில் நடைபெற்றது.இந்த விழாவில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன் மேடையில் பேசும்போது தனது முகக் கவசத்தை தலையில் அணிந்துள்ளார். இதைக் கண்டவர்கள் எம்.பி. […]
Category: புதுச்சேரி
புதுச்சேரியில் வாழ்க்கையை வெறுத்த இரண்டு குழந்தைகளின் தாய் தலையில் தடவும் ஹேர்டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை முருகம்பக்கம் நாடார் வீதியில் பாலமுருகன் மற்றும் சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அரியாங்குப்பத்தில் இருக்கின்ற மிட்டாய் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் கடையில் பணியாற்றும் மற்றொரு ஊழியருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் பத்தாம் தேதி திடீரென சுதா மாயமானார். அதன்பிறகு […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும். ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில […]
நேற்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் 10 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்த இருப்பதாக தெரிவித்த அவர், அமைச்சரவை கூட்டத்தின் முடிவை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தைப் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுகுறித்து இன்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை செயல்படுத்த முடிவு செய்யப்படும் தெரிவித்திருக்கின்றார். நீட் தேர்வை பொருத்தவரை […]
ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாக பதிவிட்ட எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறையினர் தனது கருத்தைத் திரித்துக் கூறுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
திருமாவளவனின் முழுப் பேச்சையும் பார்த்துவிட்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். ஒருவர் சொல்லும் கருத்தை திசைதிருப்பி பழி சொல்வதை பாஜக சாதுரியமாக செய்யும் என குற்றம் சாட்டிய அவர் அரசியல் தலைவர்கள் மீது பழி சுமத்துவதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளதாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 34,336 ஆக உயர்ந்துள்ளது. 29,990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி வி.சி.க ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் நூலை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு தொல் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பொருளாதார நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசும் மாநிலத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தற்போது நாளை முதல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்து அரசு செயலாளர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதித்து இருந்த […]
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]
புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்துகளின் சங்கத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்து உள்ளார். பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ளூர் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேசமயம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருவாய் குறைந்து உள்ளதால் சாலை […]
புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சாலைவரி தொடர்பாக அரசு முடிவு செய்யாததால் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் 2 காலாண்டிற்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்று தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின.
புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகை தந்ததால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மதகடிப்பட்டு சந்தை வாரம்தோறும் செவ்வாய் கிழமை மட்டும் செயல்படும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இந்த சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. சந்தையில் எதிர்பார்த்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர் மழையால் தந்தை முழுவதும் மழைநீர் தேங்கி சுகாதாரமற்ற […]
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறி உள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்க, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 38 லட்சம் ரூபாயை இழந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டார். இது ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக தமிழகத்தில் நடைபெறும் நான்காவது தற்கொலையாகும். ஊரு ஒதுக்குப்புறத்தில் அல்லது மதுபான […]
புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியான இளைஞர் ஒருவர் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி கோர்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் சிம்கார்டு விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாததால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்து உள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையானவர் பலரிடம் கடனாகப் பணம் பெற்று ரம்மியில் விளையாடி தோல்வியடைந்துள்ளார். கடன் தொல்லையால் குடும்பத்தில் […]
புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த தேங்காய் தட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் தேங்காய் தட்டு பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டிற்கு முன் கொட்டி இருந்தார். வீதியில் கொட்டியதற்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை இளந்திரையினர் அணுகியபோது அவர் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது கடைப் பிடிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக […]
புதுச்சேரியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமில் சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கடற்கரை சாலையில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை […]
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த […]
புதுச்சேரியில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற ஜிம்மர் ஊழியரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் காக்கையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயதாகும் சுப்பிரமணி என்பவர் ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் […]
இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டில் சரிந்தது என கிராம மக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கெட்டிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 6.30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட படுகை அணை மூன்றே மாதங்களில் சேதமடைந்துள்ளது. இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அக்டோபர் 8 முதல் மீண்டும் வகுப்புகள் துவங்கின. கடந்த 5 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான இருக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில் வியாழக்கிழமை முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்கள், 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 3 நாட்கள் என வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் 1 […]
புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க பாஜக முயல்வதாக குற்றம் சாட்டிய முதல்வர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜகவினர் மனு தந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசும்போது, “புதுவையைத் தமிழகத்தோடு இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனை […]
புதுச்சேரியில் சட்டவிரோதமாக முதுநிலைப் படிப்பில் சேர்க்கப்பட்ட 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த மருத்துவ கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் அவர்கள் பெற்ற முதுநிலை மருத்துவப்பட்டம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பார்க்காமலேயே 65 பேர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. இது பற்றி விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில் 65 பேரின் மாணவர் […]
புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் துப்பு ராயப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் நரசிங்கன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திப்பு ராயப்பேட்டையைச் சேர்ந்த திப்ளான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த திப்ளான் பெயிண்டராக வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதிக்கு திப்ளான் […]
ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி விட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருக்கிறார். நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியிருப்பது பலனளிக்காது என்று அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியிடமிருந்து மாநிலங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கடன் வாங்க முடியும் என்பதை சுட்டி காட்டியிருக்கும் நாராயணசாமி பல மாநிலங்கள் ஏற்கனவே இந்த அளவை எட்டி விட்டதாக கூறியிருக்கிறார். எனவே […]
மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு மக்களை மதிப்பதில்லை என புதுச்சேரி முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தும் முடக்கப்படுகிறது. புதுவையில் நாம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அதை தடுக்க மத்திய அரசு இங்கு ஒருவரை அனுப்பியுள்ளது. அந்த நபர் புதுச்சேரியின் நலத்திட்டங்களை முடக்குவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் […]
புதுச்சேரியில் சக்கரபாணி ஆற்றில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த கிளீனரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வில்லியனூர் சக்கரபாணி ஆற்றில் கிளீனர் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது ஐய்யங்குட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பதும், காரைக்காலில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி என்பது […]
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் மஹிலா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியில் முதலமைச்சர் திரு நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய […]
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் போராட்டம். புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை தாக்கிய காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரத்தை கைது செய்யக்கோரி மூன்றாவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மூடப்பட்ட பழமையான சுதேசி பாரதி ஏ.எஃப்.டி பஞ்சு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க பஞ்சாலைகளான சுதேசி, பாரதி மற்றும் ஏ.எஃப்.டி பஞ்சாலைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இதற்கான அறிவிப்பை பஞ்சு ஆலையின் மேலாண் இயக்குனர் வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மூடப்பட்ட பஞ்சாலைகள் திறக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]
பல மாதங்களாக ஏசியில் தங்கி இருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சாமி என்பவரது வீட்டில் உள்ளே ஏசியில் பாம்பு இருப்பதாக அந்த குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர். இதனால் வனத்துறையினருக்கு புகார் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூன்று அடி நீள பாம்பை ஏசியின் உள்ளே இருந்து மீட்டனர். இதுபற்றி வனத்துறை ஊழியரான கண்ணதாசன் கூறுகையில், “பல மாதங்களாக இந்த பாம்பு […]
புதுச்சேரியில் பஞ்சு ஆலைகளை மூடும் அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஏ.எஃப்.டி சுதேசி மற்றும் பாரதி பஞ்சு ஆலைகள் இயங்கி வந்தன. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் பஞ்சு ஆலைகளை இயக்க சிரமம் ஏற்பட்டதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.எஃப்.டி பஞ்சு ஆலையை முற்றிலும் மூட அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் […]
பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்த்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடி உலகப்புகழ் பெற்றவர் எஸ்.பி.பி.கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட அவர் அதற்குப் பின் உடல்நலக்குறைவால் காலமானார். திரை உலகத்தினர் மட்டுமின்றி அவர் இறப்பிற்கு இந்த நாடே கண்ணீர் விட்டது . அவர் ஆத்மா ஆத்மா சாந்தி அடைய […]
அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கருத்தாய்வு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதன் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் […]
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிகிச்சை பெற்று வரும் நபர் பலத்த காயம் அடைந்தார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா வார்டியின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரின் தலையில் மேற்கூரையின் ஒருபாகம் விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரியில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அக்டோபர் 1 முதல் குழுக்களின் அடிப்படையில் […]
புதுச்சேரியில் தனியார் கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 கடத்தல் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள தனியார் கட்டடத்தில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டது. எழுபத்து நான்கு […]
புதுச்சேரியில் டாட்டூ நிலையத்தில் விலை பேசுவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் சரவணன் காமராஜ் நகர் சாலையில் டாட்டூ மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரவணன் மற்றும் ஊழியர்கள் 4 பேர் நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாட்டூஸ் போடுவதில் விலை நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை செய்தன. இதனால் […]
ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சுற்றுலா வாகனங்களுக்கான போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி போராட்டம். கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் ஓட்ட படாததால் போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாயில் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில் பயிற்சி பள்ளி நிர்வாகத்தில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதுச்சேரியில் நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் கங்காதரர். இவர் வீடு முன்பு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக பெரியகடை காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பார்த்த போது கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பெரியகடை காவல்துறையினர் வழக்குப் […]
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு படி நேற்று வழங்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப் பட்டதால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும், […]
புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி காந்தி வீதி சாலையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் காந்தி வீதியில் பல ஆண்டுகளாக சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளும் கடைகளை போட்டு விற்பனை செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில். சண்டை மார்க்கெட்டையும் […]
ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்னர் அதாவது…. நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தினால் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நீட் தேர்வை […]
புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணிக்குள் செயல்படத் தொடங்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி ஒரு சில அதிகாரிகள் பணிக்கு வராததால் அது […]