Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து” நடுங்கும் நாராயணசாமி ….!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உத்தரவை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
சினிமா புதுச்சேரி மாநில செய்திகள்

நடிகர் ஆனந்தராஜ் தம்பி தற்கொலை திடீர் திருப்பம்..! இருவர் கைது.!!

பிரபல நடிகர் ஆனந்தராஜ்யின்  தம்பி கனகசபை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை(50) இவருக்கு திருமணம் ஆகவில்லை. நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் தம்பி கனகசபை ஆவார். தொழிலதிபரான  இவர் ஏல சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த கனகசபை கடந்த 5- தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“ULTIMATE OFFER” 100 திருக்குறள் சொன்னால்….. மெகா அசைவ விருந்து இலவசம்….!!

புதுச்சேரியில் 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் மெகா அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் ரகுமான் நிருபர்  என்பவர் அசைவ சாப்பாடு கடை வைத்து நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த கடை அங்கு ஓரளவுக்கு பிரபலமானது தான். இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக கடை உரிமையாளர் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி 100 திருக்குறளை பிழையில்லாமல் ஒப்பித்தால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சுக்கா, பொரித்த கறி என மெகா […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கவுன்சிலிங் நடத்த உத்தரவு..ஆத்திரமடைந்த மாணவர்கள்..!!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம், கவுன்சிலிங் கொடுக்க சுற்றறிக்கை.. ஆத்திரமடைந்த மாணவர்கள்..! குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் நலத் துறை அதிகாரி இஷாவின் சுல்தானா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை கண்டனத்திற்கு ஆளாக்கியுள்ளது. சுற்றறிக்கையை கண்டு ஆத்திரமடைந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றறிக்கை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”அரிசிக்கு பதில் பணம் – ஆளுநர் உத்தரவு செல்லும்” நீதிமன்றம் அதிரடி …!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரிசிக்குப் பதில் பணம் வழங்க அங்குள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணைநிலை ஆளுநர் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆளுநரின் உத்தரவை எதிர்த்து முதல் அமைச்சர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் , மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு முதல்வருக்கு அடிப்படை உரிமை கிடையாது என்று […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டை தாக்குதலுக்குக் கண்டனம்……. புதுச்சேரியில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் …!!

வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர், நேற்று தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து, புதுச்சேரியின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் புதுச்சேரி புறநகர் பகுதிகளிலும், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து இஸ்லாமியர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, புதுச்சேரி வில்லியனூர் எம்ஜிஆர் சிலை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : சி.ஏ.ஏ.வுக்கு எதிராக புதுச்சேரியில் தீர்மானம் ….!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் வெளிநடப்பு சேதனர். இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்கும் வகையில் அதிமுக , […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பைக்கில் படு மோசமான வசனம் ”ரிவிட் அடித்த போலீஸ்” குவியும் பாராட்டு …!!

இன்றைய காலகட்டத்தில் இளசுகளின் பெரிய கனவே ஒரு பைக்-கை சொந்தமாக்கி கொள்வது என்பதோடு நின்று விடுகிறது. அதனை தாண்டி பலரும் சிந்திப்பது கூட கிடையாது. ஆனால், அந்த பைக்கை வாங்கி விட்டு அவர்கள் செய்யும் அளப்பரைக்கு இது தான் அளவு என்று இல்லை. இது என்ன பைக் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்வது. கண்டகண்ட வசனங்களை எழுதிக்கொள்வது, ரேஸ் என்ற பெயரில் பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் சர்…விர்.. என வேகமாக செல்வது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

காரைக்காலில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் விக்ராந்த் ராஜா வெளியிட்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி திருபட்டினம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, அனைத்துக் கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மாவட்டத்தின் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் 72,549 ஆண்கள், 84,185 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,56,751 […]

Categories
புதுச்சேரி

கல்வி கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாணவர்கள் போராட்டம்!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம், கலைப் பிரிவிற்கு 16,000 ரூபாயில் இருந்த கட்டணம் 28,000 ரூபாயாகவும், அறிவியல் பிரிவிற்கு 21,000 ரூபாயில் இருந்து 43,000 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், இலவசப் பேருந்து சேவைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரி வைத்தனர். இதை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய மக்களுக்கு ஏதுமற்று, பணக்காரர்களுக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் எதுவுமில்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்கிரஸ் எம்எல்ஏவை தகுதிநீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா மனு

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு தவறான கருத்தைக் கூறிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்., எம்.எல்.ஏ-வை தகுதிநீக்கம் செய்ய காங்., எம்.எல்.ஏக்கள் போர்கொடி!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களே கடிதம் அளித்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஊர்வலமாகச் சென்று துணைநிலை ஆளுநரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினார். இச்சூழலில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நீத்தி சீடர் கொலை… காருக்குள் சடலமாக மீட்கப்பட்டார் ….!!

புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல். இவர்  நித்தியானந்தா பெயரில் பேக்கரி நடத்திவருகிறார்.  இவர்  புதுச்சேரியில் உள்ள நித்தியானந்தாவின்  முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.நித்தியானந்தா ஆசிரமம் ஏம்பலம் பகுதியில் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரி தேர்தல் ஆணையர் விவகாரம் – நேரில் ஆஜரான தலைமைச் செயலர்

மாநில தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் அஸ்வனி குமார் சட்டப்பேரவை உரிமை மீறல் குழு முன்பு ஆஜரான சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் பாலகிருஷ்ணனை மாநில தேர்தல் ஆணையராக அரசு நியமித்தது. இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில் தலைமைச் செயலரின் உத்தரவுப்படி, உள்ளாட்சித் துறை இயக்குநர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் சார்பிலும், இன்று பல்கலைக்கழக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மாணவர்கள் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. இலங்கை-அருகே காற்றழுத்த தாழ்வு நிலை….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை  பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், வெப்பம் அதிகளவு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுவை மாநிலம் காரைக்கால் 2 […]

Categories
அரசியல் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நூற்பாலை குறித்து முடிவெடுக்க கிரண்பேடிக்கு அதிகாரமில்லை – நாராயணசாமி திட்டவட்டம்…!!!

புதுசேரில் உள்ள பழமையான ஏ ஐ ப் நூற்பாலை,  மூடும் முடிவை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக எடுத்திருப்பது அதிகாரத்தை மீறிய செயல். அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறை கைதிகளுக்கு செல்போன் விற்ற காவலர்கள் ……சிறை நிர்வாகம் அதிரடி உத்தரவு….!!!!

புதுசேரியில் சிறை கைதிகளுக்கு செல்போன் விற்பனை: நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள்  செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது.  தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக  சிறை காவலர்களே கைதிகளிடம்  செல்போன் விற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறை காவலர்களான சபரி, சங்கர், சீனு, ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து , சிறை  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு சிறை கைதி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறைக் கைதிகளுக்கே செல்போன் விற்பனை செய்த காவலர்கள்

புதுச்சேரியில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்ததால் நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக சிறைக்காவலர்கள் கைதிகளிடம் செல்போன் விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறைக்காவலர்கள் சபரி சீனும் சங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ள.து இரண்டு தினங்களுக்கு முன்பு சிறைக்கைதி ஷர்மா செல்போன் மூலம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“முதல் முறை” ரூ9,00,000 செலவில் தாய் பால் வங்கி….. ரோட்டரி சங்கம் நன்கொடை…!!

புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் முதல் முறையாக ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி  ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில்  ரோட்டரி கிளப் சார்பில் 9 லட்சம் ரூபாய் செலவிலான தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறு மருத்துவமனைகளில் இருந்து தாய்ப்பால் தேவை என்று கேட்டாலும் தாய்ப்பால் வழங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ19 லட்சம் ரூபாய் செலவில் கருவில் இருக்கும் குழந்தைகள், பிறந்த குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை உள்ளிட்ட இயந்திரமும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கலைமாமணி எஸ்.எம்.உமர் காலமானார்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த கலைமாமணி எஸ்.எம். உமர் (95) திங்கள்கிழமை  காரைக்கால் அவரது இல்லத்தில் காலமானார். காரைக்காலை பூர்வீகமாகக் கொண்ட இப்ராஹிம் மரைக்காயர் மகன் எஸ்.எம். உமர்.  முதலில்  நியூட்டோன் ஸ்டூடியோவின் பங்குதாரரான,பின்னர்  எஃப். நாகூரிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, தனது விடாமுயற்சியால் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற  உயர்த்த நிலையை எட்டினார். அதுமட்டும் அல்ல  வியத்நாம் சென்ற அவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏறத்தாழ 600 இந்திய மொழிப் படங்களை வியத்நாம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

”ரேஷன் கார்டுக்கு ரூ.900” புதுவை மக்களுக்கு கொண்டாட்டம் ….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்குப் பதிலாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 900 வங்கியில் செலுத்தப்படும் என புதுச்சேரி சமூகநலத் துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி சமூகநலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி மாநில ஆளுநர், முதலமைச்சர் ஒப்புதலோடு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச துணிக்குப் பதிலாக, ரொக்கப்பணம் அளிக்கப்படுகிறது. சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு 900 ரூபாயும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு 450 ரூபாயும் அவரவர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு!

வெங்கட்டா நகர் தமிழ் சங்க கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். புதுச்சேரி வெங்கட்டா நகர் தமிழ் சங்க கட்டடத்தில் நான்கரை அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்புவிழாவில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரி மாநிலம் சார்பாக திருவள்ளுவர் புகழை பரப்புவதற்காகவும் உலகமெங்கிலிருந்தும் புதுச்சேரி வரும் சுற்றுலாப்பயணிகள் திருவள்ளுவர் புகழை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் திருவள்ளுவர் சிலை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மீது அடுக்கடுக்கான புகார்: காங்கிரஸ் எம்எல்ஏ தற்காலிக நீக்கம்!

காங்கிரஸ் பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்‍கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தன் தொகுதிக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்துவருவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார். பத்திரிகை வாயிலாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்த அவர் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதலமைச்சர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டிக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து – தொழிலாளி காயம்

குப்பைத் தொட்டிக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி காயம் அடைந்தார். புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டிலிருந்து பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி செல்வம் என்பவர் பிளாஸ்டிக், பேப்பர்களை சேகரித்து கடையில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை குப்பை தொட்டியிலிருந்த பேப்பர்களை எடுத்துக்கொண்டிருந்த போது, அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“கடன் பாக்கி” அமைச்சருக்கு பெட்ரோல் தர மறுத்து பேருந்தில் ஏற்றிவிட்ட பிரபல பெட்ரோல்பங்க் நிறுவனம்…..!!

புதுச்சேரியில் கடன் பாக்கி வைத்ததால் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு தெரிவித்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு  சொந்தமான பெட்ரோல் பங்குகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள்களை  நிரப்பி வருகின்றனர். இதற்கான தொகையை புதுச்சேரி அரசு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் இரண்டரை கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்ததால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் எந்த அரசு வாகனங்களுக்கும்  எரிபொருள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு …!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் இருந்து கர்நாடக வரையிலான நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது . சென்னையை பொறுத்தவரையில் வானம் […]

Categories
செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் பால் விநியோகம் தடை..!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் 5 மணிநேரம் தடைபட்டது. புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனம் குருமாம்பட்டில் இயங்கிவருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். நாளொன்றுக்கு காலையில் 60 ஆயிரம் லிட்டர் பாலும் மாலையில் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து புதுச்சேரி முழுவதும் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதுமட்டுமல்லாது ஐஸ்கிரீம், நெய், பன்னீர் போன்ற […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புர்கா அணிந்ததால் வெளியேற்றம்; தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திருப்பி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தைச் சேர்ந்தவர் ரபியா. இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தங்கப்பதக்கம் பெற இருந்தார். இதற்காக அவர் பல்கலைக்கழக நேரு ஆடிட்டோரியத்தில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
புதுச்சேரி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் …!!

புதுச்சேரியில் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் . பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்,செல்வி தம்பதியருக்கு 8மாத குழந்தை இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வி .திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்த செல்வி தனது கவனக்குறைவால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்ததாக  கூறப்படுகிறது .மொட்டைமாடியில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ25,00,000….. போலி மதுபாட்டில்களுக்கு வீட்டோடு சீல்….. 2 பேர் கைது….. புதுச்சேரி போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன்  காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]

Categories
Uncategorized புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மதுபான விடுதியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு…..போதை இளைஞர்கள் அட்டூழியம் !!!

புதுச்சேரி திருபுவனையில் ஒரு மதுபான விடுதியில் நேற்று இரவு சுமார்  9.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். அவர்கள் மது அருந்தியதற்கான பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்  ஒருவர் அவர்களிடம்  கேட்டுள்ளார்.  அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர் . ஊழியர் இது குறித்து காசாளரிடம்  கூறியுள்ளார். பின்னர் காசாளர்  அந்த இளைஞர்களிடம்  பணம் கேட்க அந்த மூன்று இளைஞர்களும் பண கொடுக்க மறுத்ததோடு அவரையும் மிரட்டியஉள்ளனர் ,  அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்!

மீனவர் கொலையில் குற்றவாளிகளை, உடனே கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி குருசுகுப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். நேற்று காலை, இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இன்று காலை குருசுகுப்பம் மீனவர்கள், லோகநாதனின் உறவினர்கள் பட்டேல் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தூக்குங்கய்யா… தூக்குங்க….. பெண் காவல் அலுவலரை தூக்கிச்சென்ற காவலர்கள்…!!

காவல்துறை பெண் உயரலுவலரை நாற்காலியில் அமர வைத்து காவல் துறையினர் தூக்கிச்சென்றனர். புதுச்சேரியில் வடக்கு பகுதி சட்டம் ஒழுங்கு கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ரச்சனா சிங் (ஐ.பி.எஸ்). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதிக்கு கண்காணிப்பாளராக பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஏனாம் பகுதியிலிருந்து மீண்டும் புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ரச்சனா சிங்-ஐ ஏனாமில் இருக்கும் காவலர்கள் நாற்காலியில் அமரவைத்து அவருடைய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சு முதல்வருக்கு….. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி…!!

முதலமைச்சர் நாராயணசாமி அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமிதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பல நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். அவருக்கு கணுக்காலுக்கு கீழ் சவ்வு சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து நடக்கும் போது வலி இருந்து வந்தது. மருத்துவரை அணுகியபோது அவருக்கு நிவாரணிகள் அளித்துள்ளனர். ஆனால், மருத்துவர்களின் நிவாரணிகள் பயனளிக்காத காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். இதையடுத்து, நேற்றிரவு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டார். […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

”எஸ்.ஐ தூக்கிட்டுத் தற்கொலை” புதுவையில் பரபரப்பு …!!

நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர், காவல் குடியிருப்புக் கட்டடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விமல்குமார் பணியாற்றி வந்தார். வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இன்று மதியம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமல்குமார் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை……. புதுவையில் பரபரப்பு….!!

புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவர் வெடிகுண்டு வீசியும் தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புதுசேரி சுப்பையா நகரை சேர்ந்த பாண்டியன் என்கின்ற ரவுடி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர். நேற்று மாலை பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவரை குறுகலான சந்தில் வழி மறித்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் தலையை துண்டித்தும் கொலை செய்து விட்டு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

செல்போனில் படமெடுத்து தொடர் பாலியல் சீண்டல்……. போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது….!!

புதுச்சேரியின் முதலியார்பேட்டை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த அலெக்சாண்டர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்த சிறுமியின் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

”இந்த வெற்றி எங்களுக்கு தீபாவளி பரிசு” புதுவை முதல்வர் பேட்டி …!!

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை ஜான்குமார் பெற்றார் …!!

காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தலை நடத்தும் அலுவலரிடம் பெற்றார். காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

BREAKING : காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஓட்டு போடுங்க…. ”டோக்கன் கொடுத்த காங்கிரஸ்”….. அதிமுகவினர் போராட்டம் …!!

புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,  புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது.   புதுவை மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மற்றும் அதிமுக கூட்டணி […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : 9 மணி நிலவரம்…. காமராஜ் நகர் 9.66 % வாக்குப்பதிவு ….!!

புதுவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கே வாக்குப்பதிவு சற்று மந்தமாக நடைபெற்று வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் இன்று இந்த மூன்று தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் காங்கிரஸ் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணமான 1 மாதத்தில் படுகொலை…… பாஜக நிர்வாகி மரணம்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி கைகளை முன்பே பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

‘டீக்கடையில் சண்டை’ – முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை….!!

முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர். புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வெளியேறுங்கள் ….. ”சுட்டு விடுவோம்” மீன கிராமத்திடையே மோதல் …..!!

புதுச்சேரி_யில் இரண்டு மீனவ கிராம மக்களிடையே சண்டை உண்டாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் சுருக்கு வலை பயப்படுத்துவதில் அருகில் உள்ள  மீனவ கிராமத்துடம் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக இரன்டு மீனவ கிராம மக்களுக்கிடையே தகராறு இருந்துள்ளது. இதனால் ஒருதரப்பு மீனவர்களின் வலையை மர்மநபர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள் எனவே இந்த இரு கிராமங்களுக்கு இடையே தற்போது சண்டை மூண்டுள்ளது.இது தொடர்பாக இருக்கிராமத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“இந்த ஆண்டுக்குள் 25 TARGET” WHATSAPPஐ இப்படியும் USE பண்ணலாம்…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு….!!

புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய  குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி […]

Categories
பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

வெப்பச்சலனம் இருக்கு….. தமிழகம் , புதுவைக்கு மழைக்கு வாய்ப்பு……!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம் மற்றும் புதுவையில்வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே வட தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் , நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

#Breaking : அக்.21-ஆம் தேதி ”புதுச்சேரி இடைத்தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதே போலபுதுச்சேரியின் காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அக்டோபர் […]

Categories

Tech |