காரைக்காலில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதிய தொகை வழங்காததை கண்டித்து இன்று அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பணிமனையில் இருந்து சுமார் 10 பேருந்துகள் மட்டுமல்லாது புதுச்சேரி […]
Category: புதுச்சேரி
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பால் விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார். இதையடுத்து இன்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், விநியோகம் செய்யப்படும் பால் லிட்டருக்கு 6ரூபாயும் உயர்த்தி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 2014 ஐ அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு […]
விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தால் 5000 சன்மானம் வழங்கப்படுமென்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்ட போது சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டில் சாலை விபத்து ஏற்படும் போது உடனடியாக அந்த பகுதியில் செல்லக் கூடிய பொதுமக்கள் அவர்களை கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களுக்கு உடனடியாக ரூ 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் , […]
புதுச்சேரியில் உள்ளூர் இளைஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதுசேரி, வீராம்பட்டினம் கடற்கரை அருகே உள்ள அய்யம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாகவும், இதனை தினேஷ் தட்டிக் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞர்களிடம் விசாரணை செய்யாமல், தினேஷை தாக்கி அவர் […]
புதுச்சேரி அருகே கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடும் CCTV காட்சி வெளியாகியுள்ளன. புதுச்சேரி நகர் பகுதியில் சமீப காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் கோவில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.மேலும் அங்கிருந்த CCTV-வில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் பழமை வாய்ந்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த ஜூலை 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். பின் சுவாமி தரிசனம் செய்த அவர் தேரை வடம்பிடித்து இழுத்து […]
புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கும் இங்கும் பார்த்த நிலையில் அந்த இளைஞர் வாகனத்தை […]
துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் இச்செயல்கள் மாநில அரசின் அதிகாரங்களில் […]
புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]
தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ சேர்க்ககைக்கு நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு சட்டமா இயற்றியது. இதற்க்கு தமிழகம் முழுவதும் மாணவரிடையே எதிர்ப்பு எழுந்து போராட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. நீட் நடைபெற்ற மூன்று ஆண்டுகளுமே மதிப்பெண் குறைவு என்பதால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது. தேர்வு முடிவு […]
புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர் பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாமல் […]
புதுவையில் கூலித்தொழிலாளி, இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, குமரகுருபள்ளத்தை சேர்ந்த 35 வயதான கீதா, தனது 2 குழந்தைகளுடன் கணவனை பிரிந்து, கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் மற்ற மாநிலங்களோடு […]