மருத்துவ பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நச்சாந்துபட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் இருக்கும் கட்டிடத்தில் மருத்துவப் பொருட்கள், நப்கின், கொசு மருந்து போன்றவற்றை மருத்துவத்துறை அதிகாரிகள் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைந்திருக்கும் பின்புற கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த மருத்துவத்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு […]
Category: புதுக்கோட்டை
மூன்று மாதம் சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் சங்க தலைவரான விடுதலை குமரன் என்பவர் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 3 மாத […]
குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் சின்னத்துரையின் தம்பியான ரவிச்சந்திரன் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் சின்னதுரைக்கும் மீனாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கம்போல் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மீனா மன உளைச்சலுக்கு […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதனையடுத்து விஜய் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதன்பின் விஜய் சில நாட்களாக அந்த பெண்ணை சந்திப்பதையும், அந்த பெண்ணிடம் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் […]
கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் மணிகண்டன் இருவரும் […]
சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பகுடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், மதுமித்ரா, ஜெய்ஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்த ராஜேஷ் கடந்த 2019 – ஆம் வருடம் சவுதி அரேபியாவிற்கு தனது வீட்டின் வறுமை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் […]
கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் […]
தகாத வார்த்தைகளால் பேசிய வியாபாரியை கட்டி வைத்து அடித்த ஊராட்சி தலைவர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் துணி வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேல் என்பவரை வெங்கடேஷ் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சக்திவேல் வெங்கடேஷை ஏதாவது செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் அவரது தரப்பினரான காசிமுத்து, மணிகண்டன் ஆகியோருடன் வெங்கடேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வெங்கடேஷ் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் களமாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக வாசுதேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாசுதேவன் மிகவும் பலத்த காயமடைந்தார். அதனால் அருகில் உள்ளவர்கள் வாசுதேவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு […]
சாலை விபத்தில் 2 விவசாயிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறம்பக்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் வந்த லாரி டீசல் டேங்கர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனால் கோவிந்தன் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் கோவிந்தனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் […]
மனைவியின் வங்கி கணக்கில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் மற்றும் அவரின் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் சரவணன் – ரேவதி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார். இவரின் மனைவியான ரேவதி அப்பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் சேமித்து வைப்பதற்காக எந்திரம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் எந்திரத்தில் சேமிப்பு தொகையை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அப்போது […]
மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மடிக்கணினி காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் மாணாக்கர்களுக்கு வழங்குவதற்காக 35 மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வேதியியல் ஆய்வகத்திற்கு கண்காணிக்க சென்ற தலைமை […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், நாகஜோதி என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் மேலக்கொத்தக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கடையக்குடி பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இதனை அடுத்து எதிர்பாராதவிதமாக வினோத்குமாரின் மோட்டார் சைக்கிள் நாகஜோதியின் இருசக்கர […]
புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் ஜெம்புலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் திருமண விழாவிற்கு தேவையான சமையல் பாத்திரங்கள். ஒலிபெருக்கி மற்றும் பந்தல் போன்ற பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் வினோத் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வினோத்குமார் அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் […]
காரில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டியா வயல் ஜங்ஷன் பகுதியில் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த கார் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் […]
கைக்குழந்தையுடன் டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏனாதி கரம்பை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆவனம் கைகாட்டியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்குவதற்கு தனது மோட்டார் சைக்கிளில் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் கைக்குழந்தையுடன் மது வாங்க சென்ற சங்கரை பார்த்துள்ளனர். இதனை அடுத்து ஊர்க்காவல் படை வீரரான ராஜகோபால் என்பவர் சங்கரிடம் கைக்குழந்தையுடன் […]
இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள் கருப்புக்குடிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் அழகன் – வள்ளி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் 4 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அழகன் கடந்த 18 – ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இதனை அடுத்து கணவர் இறந்த துக்கம் தாளாமல் இறுதிச் சடங்கின்போது அழுது கொண்டிருந்த மூதாட்டியும் திடீரென உயிரிழந்துவிட்டார். இவ்வாறு கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் கந்தர்வகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து தெற்குப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]
மணல் அள்ளிய குற்றத்திற்காக 4 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குருன்பி வயல், திருமணஞ்சேரி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து தாசில்தார் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். மேலும் இது குறித்து […]
2 – வது திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகவான்பட்டி கிராமத்தில் முத்தழகன் – சுகன்யா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் முத்தழகனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணை தனக்கு 2 – வது திருமணம் செய்து வைக்குமாறு முத்தழகன் தனது மனைவி சுகன்யாவிடம் […]
மின் வயர் உரசியதால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாகோட்டை கிராமத்தில் விவசாயியான முத்துச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துச்செல்வம் தனது வயலில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வைக்கோல் போர் மீது மின் வயர் உரசியதால் வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
வைக்கோல் போரில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ரங்கசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு வைக்கோல் போர் உள்ளது. இந்நிலையில் திடீரென இந்த வைக்கோல் போரில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து […]
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்திக் புதுக்கோட்டைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மது போதையில் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் புதுப்பட்டி செட்டி ஊரணிகரை அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திக் […]
தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் இணைந்து ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வ்ல்லாரோடை கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது சரஸ்வதிக்கும், அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரது மனைவியான வேலுமணி என்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை […]
இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் காவல்துறையினர் மேலும் 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒலியமங்களம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் தனது இருசக்கர வாகனத்தில் கொங்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வினோத்தை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அதன்பின் வினோத்தை அவர்கள் அரிவாளல் சரமாரியாக […]
நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். இதனை அடுத்து சுருல் பூச்சி என்பது புழு வகையை சேர்ந்தது. இது முதலில் இலைகளை துளையிட்டு, பின் நடுநரம்புகளில் சில நாட்கள் வாழும். அதன்பிறகு இந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அரசு உத்தரவின்படி பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிலிருந்து கல்விக்கூடங்கள் திறக்கப்படவில்லை. அப்போது கல்வியானது ஆன்லைன், வாட்ஸ்அப், கல்வி தொலைக்காட்சி போன்ற செயலிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அதன்பின் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கல்விக் கூடங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் […]
கள்ள காதலி புது மாப்பிள்ளை மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கரையப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமாரின் மனைவியான ராதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது. தற்போது சதீஷ்குமாருக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் தனது கள்ளக் காதலியான ராதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதை நினைத்து மன உளைச்சலில் […]
மணல் கடத்தியதால் டிரைவரை கைது செய்ததோடு, காவல்துறையினர் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளம் குறிச்சி பகுதியில் கரம்பக்குடி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டரான பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த டிராக்டர் வண்டியில் மணல் கடத்தி சென்றது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து டிராக்டர் டிரைவரான முருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை […]
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா முன்னிலையில் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இலவசமாக தட்டுப்பாடுகளின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களை அதிக அளவில் பணியில் நியமிக்க […]
அறந்தாங்கி அருகில் பெற்றோரை இழந்து தவிக்கும் 4 சிறுவர்கள் அரசு உதவியை எதிர்பார்த்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவற்றக்குடி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஆனந்தன்- மகமாயி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு கபிலன், மதுபாலன், மதுஸ்டன், மதுபிரியன் ஆகிய 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மதுபாலன், மதுஸ்டன், மது பிரியன் ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆவர். இந்நிலையில் கட்டிட வேலையில் பணி புரிந்து வந்த ஆனந்தன் கடந்த 201 ஆம் ஆண்டு மாரடைப்பால் […]
மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டப்பள்ளம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சுயநினைவை இழந்து வண்டியுடன் கீழே தவறி விழுந்து விட்டார். இதனால் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து நடத்திவந்த 12 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு […]
அரசிற்கு சொந்தமான நிலத்தில் இருந்த மணல் கடத்திய குற்றத்திற்காக இருவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் விவேகானந்தர் நகர் அருகே அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளது. தற்போது அங்கு ஜே.சி.பி எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் மணல்களை கடத்தியதால் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி மாத்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிய கொலை செய்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 7ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து வினோத்தை அந்த மர்ம […]
அரசின் உத்தரவை மீறி மறைமுகமாக திறக்கப்பட்ட ஜவுளி கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மளிகை, காய்கறி, இறைச்சி, மருந்தகம் மற்றும் பழக்கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சலூன், தேனீர் மற்றும் பெரிய […]
6 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதான வினோத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனையடுத்து வினோத் இருசக்கர வாகனத்தில் கொக்குப்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வினோத்தை சுற்றி […]
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிணற்றிற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகமாயிபுரம் கிராமத்தில் முத்துலட்சுமி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி வசித்து வந்துள்ளார். தற்போது நமணசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் தனது மகளின் வீட்டில் மூதாட்டி இருந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற மூதாட்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து வலையன்வயல் பகுதியில் இருக்கும் கருப்பையா என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து […]
பாழடைந்து கிடக்கும் மருத்துவர்கள் குடியிருப்பை சரி செய்து தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பட்டமரங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் நோயாளிகள் பயத்துடனே அங்கு சென்று வருவது வழக்கம். மேலும் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என அங்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாக இந்த கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்படுவதால் அங்கு யாரும் […]
கமிஷன் கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அணவயல், பனங்குளம், குளமங்கலம், கீரமங்கலம் போன்ற பல சுற்றுவட்டார பகுதிகளில் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதனை அடுத்து கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தொழிலில் நிலையான வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கொத்தமங்கலம், கீரமங்கலம் […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். கொரோனா தொற்றின் 2 – வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் சலூன், தேநீர் மற்றும் டாஸ்மார்க் கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடக்கு வாணக்கன்காட்டு பகுதியில் வசிக்கும் சந்திரமோகன் என்பவர் தனது வீட்டில் இருக்கும் பேரல்களில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
புதுக்கோட்டை புதிய பேருந்து லிட்டில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் தமிழக அரசு, தமிழகத்தில் சில தளர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 21 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் 19 பேர் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் அதே பகுதியில் 2 பேர் அரசின் உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்தது விற்பனை செய்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இருசக்கர […]
ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி குதிரைகளுக்கு உணவு அளிக்க முடியாமல் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சில பகுதியில் திருமண வைபோகம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்காக குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் குதிரை ஊர்வலத்திற்காக, குதிரைகளில் சாரட் வண்டிகள் கட்டியும், நாட்டிய குதிரைகளுக்கு பயிற்சியும் அளித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. இதனால் சுபகாரியங்களுக்கும், மற்ற நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பிட்ட […]
கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறி தந்தையின் கண்முன்னேயே சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமருதூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற 14 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கிடங்கு பகுதிக்கு கதிர் அறுக்கும் அறுவடையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹரிஹரனை அமர்த்திவிட்டு அவரது தந்தையான ராஜமாணிக்கம் அருகில் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து தந்தை […]
வீட்டிற்குள் மர்மமான முறையில் தையல் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாலங்குடி பகுதியில் ராசு என்ற தையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ராசுவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி தாசில்தார் பொன்மலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராசு வீட்டிற்குள் சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர். […]
டாஸ்மார்க்கில் திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாரியாபட்டி பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. தற்போது முழு ஊரடங்கு என்பதால் அரசின் உத்தரவுப்படி இந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மதுபான கடையில் வெளிச்சம் தெரிவதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்த போது சில மர்ம நபர்கள் […]
நவீன வசதிகளுடன் சமையல் கூடத்தை போலீஸ் சூப்பிரண்ட் திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் உணவு கூடம் ஒன்று அமைந்துள்ளது. தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் பார்சல்கள் மூலம் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த உணவுக் கூடத்தை புதுப்பித்து உள்ளனர். இதனை அடுத்து நீராவி மூலம் நவீன முறையில் சமையல் தயாரிக்கும் புதிய சமையல் கூடம் அங்கு அமைந்துள்ளது. […]
மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் விவசாய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் மதியழகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீரடிப்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனை அடுத்து வீரடிப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த பால் நிறுவனத்தின் வேன் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]